02 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-27

"யுத்தம் செய்யமாட்டேன், எதிர்பக்கத்தில் இருப்பது என் உறவுகள்" என்றான் ஆர்சுணன் பாரதப் போரில்!

"யுத்தம் இல்லாத பூமி வேண்டும்" வைரமுத்து!

என்று சொன்னாலும், யுத்தம் தேவையாகிப் போனது இனவாத அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, ஆயுத விற்பனையாளருக்கும் தான்!

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு இருக்கும்! அஸ்தினாபுரத்தின் சிறப்பை கம்பன் சொல்வான்! சீர்காழியின் பெருமை சம்மந்தர் பாடிய பதிகம் சொல்லும்! கோடாம்பக்கம் எப்படி என்று இயக்குனர் ஆகும்  கனவில் ஏறி இறங்கியவர்சொல்வார்கள்! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்..

யுத்தம் பற்றியும், அதன் போர்க்கால நூல்கள் எழுதுவோரும் ஸ்டாலிங்கிராட் எப்படி என்று சொல்வார்கள்! எங்கள் ஊரும் இலக்கியம், சமயம் என்று தடம்பதித்தாலும், ஈழத்தில் யுத்தம் வெல்லப்படாமல் போன தளங்கள் என்று ஆராய்ந்தால் எங்கள் ஊர் கடற்படைத்தளமும் உள்ளடங்கும்!

எந்த இயக்கத்தாலும் வெற்றிக் கொள்ளப்படமல் இருந்தது! காரணம் தளஅமைப்பு! இது வடக்கே இரண்டாவது பெரிய கடற்படைத்தளம்! அதனை வெல்வது அதிக இழப்புக்களைக் கொடுக்கும் என்று இயக்கத்துக்குத் தெரிந்திருக்கும்! ஆனாலும் ஒரு யுத்தகளம் அன்று காலை 10.25 திறக்கப்பட்டது! முன்னால் இருந்த அரண்கள் துப்பாக்கிச் சன்னங்களையும் முன்னேற்றத்தையும் தொடங்கிய போது, கடற்படைக்கு ஆதரவாக தரைப்படையும்  திட்டமிட்டபடி முன்னகர்ந்தது! எங்கும் ஒரே துப்பாக்கிச் சத்தங்கள்!

"நேவி வெளிக்கிட்டுவிட்டான் ஓடுங்கோ" என்று எதிரே வந்தவர்களைப் பார்த்து கரையோர மக்கள் ஓடிவந்த போது குமரேசனும் வந்தான் எதிரே..

"டேய் அங்கால நேவி வாரன்! நீ எங்க போற மச்சான்?"

"ரூபனும் மாமியும் செக்குக்காரவீட்டை போனவர்கள் வரவில்லை! அம்மா கூடியரச் சொன்னா..!"

"அங்கால போகாத! வெடிவிழுகிறது. என்னோட வா இந்தப் பொட்டுக்கால போய் விடலாம்." என்று என்ர சைக்கிளைத் தள்ளிவிட்டு, அவன் என்னை இழுத்துக்கொண்டு ஓடும் போதே குமரேசன் தம்பி தீபன் பின்னால்.

"அம்மாட்டப் போகணும் அண்ணா.."

"அம்மா வருவாடா, நீ வா நாங்க பள்ளிக்கூடம் காண ஓடுவம். அங்கபோய் பார்ப்போம்" என்று சொல்லிய சில கணங்களில் காதை கிழித்தது ஸெல் சத்தம்! 'டேய் ஓடுடா செல் அடிக்க வெளிக்கிட்டுட்டாங்க! இங்க விழாது இது பக்கம் தூரத்தில தான் விழும், பள்ளிக்கூடத்துக்குள் போவம்; எப்படியும் எல்லாரும் அங்க வருவினம்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் பின்னால் எமன் துப்பாக்கிச்சன்னமாக வந்ததை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை!

இன்று அமெரிக்காவில், பன்னாட்டு நாணய நிதியத்தில் கண்ணியமான கணக்காளர் பதவியில் இருக்கும் நண்பன் மறந்து போய் இருக்கலாம், அவர்கள் வீட்டுக்கழிப்பறையில்  என்ன கதவு போட்டு பினைச்சல் பூட்டி வைத்தார்கள் என்று! ஆனால் அந்த கழிப்பறைக் கதவில் கண்கள் செருக இரத்தோட்டத்தில் செத்துப்போன குமரேசனைப் பார்த்து  கண்ணீரும், காற்சட்டையில் சிறுநீரும் கழித்த தீபனும் ராகுலும் மறந்திருக்கமாட்டார்கள்!!

இந்த சீவன் போன சில நிமிடங்கள் பற்றிய வேதனையையும் துயரத்தையும் எந்த வார்த்தை கொண்டு  சொல்வது.

பின்னால் வந்த எதிர் வீட்டு ஏகாம்பரம் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்! 'எங்காவது எரிக்கலாம் பிடியுங்கோ அவன் காலை'

இருப்பக்கமும் இருவருமாக ஓடி வந்தாலும், பொட்டுக்குள் பூரமுடியாமல் வேலியைப் பிய்த்து எறிந்து வந்து சேர்ந்த்தோம்!

எங்களுக்கு இறுதி வாங்கு தந்து இருக்க வைத்த பள்ளிக்கூடத்திற்கு அதில் இருந்து சித்தப்பிரமை பிடித்து நின்றானே தீபன், அவன் துயரம் எந்த இனவாதிக்குத் தெரியும்? அன்று அழுதான்.. பின் முள்ளிவாய்க்காலில் அவன் அழுதபோது யாரும் இல்லை அவனோடு!! இன்றும் நடைப்பிணமாக இருக்கின்றான் என் கிராமத்தில் என்று ராகுலுக்குத் தெரியும்.!!

அயலில் இருந்து ல செஸ் வந்து கொண்டிருந்தது சைக்கிள் கடை சின்னராசு மாவின் கடையில் விழுந்த போது கேட்ட ஒலியில் ஐய்யோ அம்மா... !!!!!

                  தொடர் வரும் விரைந்து!
/////////////////////////////

பொட்டு-வேலியைப்பிரித்துப் போகும் சிறிய உள்நுழைவு வழி யாழ் வட்டாரமொழி.
/////
இது ஒரு நண்பனின் கடந்து வந்த வாழ்க்கைப்பாதையைச்  சொல்லும் தொடர்  உறவுகளே  தனிமரம் நேசன். கதை அல்ல! அல்ல !!அல்ல!!

43 comments :

Anonymous said...

paalk kaappi vayungo...

padichip pottu varen

Rathi said...

Congratulations for Star Week. Sorry to write in English, at work.

Kalakkungo :)

தனிமரம் said...

வாங்கோ கலை பால்க்கோப்பி காத்திருக்கின்றது!

தனிமரம் said...

வாங்கோ ரதி அக்காள்! நீங்கள் எந்தமொழியில் வாழ்த்தினாலும் பரவாயில்லை! நன்றி என் வலைக்கு வந்ததுக்கு!

Anonymous said...

அண்ணா பதிவு ரொம்ப கஷ்டமா போச்சி ...

Anonymous said...

அண்ணா நான் இப்போ உங்களைப் பார்த்துப் போட்டேன் ...இப்போ தமிழ் மனம் கிளிக் செய்திணன் ..உங்கட படம் kandinam நீங்கள் ரொம்ப ரொம்ப வடிவா இருக்கீங்க அண்ணா ...

தனிமரம் said...

அண்ணா பதிவு ரொம்ப கஷ்டமா போச்சி ...//இன்னும் கொஞ்ச கஸ்ரம் இருக்கு ராகுலுக்கு!

தனிமரம் said...

அண்ணா நான் இப்போ உங்களைப் பார்த்துப் போட்டேன் ...இப்போ தமிழ் மனம் கிளிக் செய்திணன் ..உங்கட படம் kandinam நீங்கள் ரொம்ப ரொம்ப வடிவா இருக்கீங்க அண்ணா // ஹீ கருக்கு மட்டை இல்லை ஹேமாட்ட வேண்டனும்! கொஞ்சம் பொறுங்கோ! பிரெஞ்சுக்காரியைக் கூட்டியாரன் விரைவில்! ஹீ

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் முதலில்..

மகேந்திரன் said...

இன்றைய பதிவு வெகுவாக மனம் கனக்கச் செய்தது நேசன்.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா வாழ்த்துக்கு!

தனிமரம் said...

இன்றைய பதிவு வெகுவாக மனம் கனக்கச் செய்தது நேசன்.

2 April 2012 12:57 
//கடந்து போனதைச் சொல்ல வேண்டியது அந்த சமுகத்தில் இருந்து வந்தவன் கடமை.அதை உள்வாங்கி எழுதுகின்றேன். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

நேசன்...ஒரு உண்மை தெரிஞ்சாகவேணும் எனக்கு இப்ப.கருவாச்சிக்கு எப்பிடி மனக்குது உங்கட பதிவு ?

தனிமரம் said...

சத்தியமா எனக்குத் தெரியாது ஹேமா அக்காள்.என் தொழில்நுட்ப அறிவு உங்களுக்குத் தெரியும் தானே!

ஹேமா said...

எங்கட அவலைங்களை மறக்கமுடியுமோ நேசன்.நான் நினைப்பன் அடிக்கடி விசராக்கிட்டுதெண்டா நல்லமெண்டு.ஏனெண்டா எல்லாத்தையும் மறந்திடலாம் !

தனிமரம் said...

விசர் ஆக்கினால் நல்லம் தான் ஆனால் இன்னொருத்தருக்கு கடமை ஆகனுமே! 

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

அம்பலத்தார் said...

கலை said...

அண்ணா நான் இப்போ உங்களைப் பார்த்துப் போட்டேன் ...இப்போ தமிழ் மனம் கிளிக் செய்திணன் ..உங்கட படம் kandinam நீங்கள் ரொம்ப ரொம்ப வடிவா இருக்கீங்க அண்ணா ...//கலை உங்க நேசன் அண்ணன் அழகிலமட்டுமல்ல குணத்திலும் best.

அம்பலத்தார் said...

கதை கனத்த சோகத்துடன் நகர ஆரம்பித்துவிட்டதே.

கணேஷ் said...

நேசன்! ‘மலையகத்தில் முகம் தொலைத்தவன்’ நான் விட்டு விட்டு கொஞ்சம் படித்திரு்க்கிறேன். என்ன கருத்துச் சொல்றதென்று தெரியாமல் பேசாமல் போயிடுவேன. இதைப் படிக்கையில் உண்மையில் மனம் கனத்துப் போனது. எத்தனை எத்தனை சோகங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள் எம் தமிழ்ச் சகோதர சகோதரிகள்...

Seeni said...

எவ்வளவு தூரம் ஓடினாலும்-
இனவெறி மட்டும் மாறவில்லை-
மனிதனுக்கு !

ஆயுதம் கொண்டவனை -
எதிர்ப்பது-
யுத்தம் எனலாம்!
அப்பாவியை கொல்வது-
போர் எனலாமோ!!?

நல்ல எழுத்து நடை!

yathan Raj said...

Akathiya odinathu appadiye kannukkula

ஹாலிவுட்ரசிகன் said...

இன்று பதிவு கொஞ்சம் சோகம் அதிகமாகவே இருக்கிறது. எழுத்துநடை உணர்வுகளை இன்னும் கூட்டுகிறது.

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் !!!

Esther sabi said...

இப் பதிவு மீண்டும் என் யுத்தகால உணர்வுகளை மீட்டுகின்றன... மொழி நடையில் உணர்ச்சி தெரிகிறது.

Yoga.S.FR said...

காலை வணக்கம் நேசன்!நாங்கள் பார்த்தறியாத,அனுபவித்திராத நிகழ்வுகள்!படிக்கவே மயிர்கூச்செறிகிறது!அனுபவித்தவர்கள்?தொடருங்கள்,உங்கள் எழுத்தின் மூலமாவது கண்ணீரைக் காணிக்கையாக்குவோம்!

மாலதி said...

எத்தனை எத்தனை சோகங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள் ?

சென்னை பித்தன் said...

மனம் கனக்கச் செய்த பகிர்வு.

சென்னை பித்தன் said...

நட்சத்திர வாழ்த்துகள்.

சிட்டுக்குருவி said...

விசுவல் பார்த்தமாதிரி ஒரு பீலிங் மாப்லே....

தனிமரம் said...

கலை said...

அண்ணா நான் இப்போ உங்களைப் பார்த்துப் போட்டேன் ...இப்போ தமிழ் மனம் கிளிக் செய்திணன் ..உங்கட படம் kandinam நீங்கள் ரொம்ப ரொம்ப வடிவா இருக்கீங்க அண்ணா ...//கலை உங்க நேசன் அண்ணன் அழகிலமட்டுமல்ல குணத்திலும் best.
// அம்பலத்தாரிடம் இப்படி இந்த சின்னவன் பற்றிய எண்ணமா?? நன்றி அம்பலத்தார் ஐயா.

தனிமரம் said...

கதை கனத்த சோகத்துடன் நகர ஆரம்பித்துவிட்டதே.

2 April 2012 14:36 
//நிஜத்தைச் சொல்லும் போது கடந்து வந்த பாதையைச் சொல்வது ராகுலின் கட்டளை. நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன்! ‘மலையகத்தில் முகம் தொலைத்தவன்’ நான் விட்டு விட்டு கொஞ்சம் படித்திரு்க்கிறேன். என்ன கருத்துச் சொல்றதென்று தெரியாமல் பேசாமல் போயிடுவேன. இதைப் படிக்கையில் உண்மையில் மனம் கனத்துப் போனது. எத்தனை எத்தனை சோகங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள் எம் தமிழ்ச் சகோதர சகோதரிகள்...

2 April 2012 16:59 
// என்ன செய்வது கணேஸ் அண்ணா. ஈழத்தில் தமிழ் இனத்தில் பிறந்துவிட்டோமே! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எவ்வளவு தூரம் ஓடினாலும்-
இனவெறி மட்டும் மாறவில்லை-
மனிதனுக்கு !

ஆயுதம் கொண்டவனை -
எதிர்ப்பது-
யுத்தம் எனலாம்!
அப்பாவியை கொல்வது-
போர் எனலாமோ!!?

நல்ல எழுத்து நடை!
// என்ன செய்வது சீனி அண்ணா நம்நிலமை அப்படியிருக்கு. நன்றி தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

Akathiya odinathu appadiye kannukkula 
//என்ன செய்வது கவிக்கிழவன் ஓடி ஓடியே வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இன்று பதிவு கொஞ்சம் சோகம் அதிகமாகவே இருக்கிறது. எழுத்துநடை உணர்வுகளை இன்னும் கூட்டுகிறது.

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் !!! 
// நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம் நேசன்!நாங்கள் பார்த்தறியாத,அனுபவித்திராத நிகழ்வுகள்!படிக்கவே மயிர்கூச்செறிகிறது!அனுபவித்தவர்கள்?தொடருங்கள்,உங்கள் எழுத்தின் மூலமாவது கண்ணீரைக் காணிக்கையாக்குவோம்! // வணக்கம் யோகா ஐயா. விதி என்று மட்டும் சொல்வதா நம்மை சீரலித்த வாழ்வைப்பற்றி. ம்ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

எத்தனை எத்தனை சோகங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள் ? 
//என்ன செய்வது மாலதி அக்காள் ஈழத்தவனாக பிறந்து விட்டோமே! நன்றி தனிமரம் தளத்திற்கு முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சென்னைபித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நன்றி சிட்டுக்குருவி  வருகைக்கும் கருத்துரைக்கும் .

Riyas said...

தமிழ்மனம் நட்சத்திர வாழ்த்துக்கள் நேசன் அண்ணா..

உங்களின் இந்த தொடர் கதைக்கு கருத்துக்கள் இடாமைக்கு காரணம்,, நான் பொதுவாக தொடர்கதைகள் விரும்பி படிப்பதில்லை..

மன்னிக்கவும்..

தனிமரம் said...

வாழ்த்துக்கு நன்றி ரியாஸ்!
தொடர் படிப்பது தனிப்பட்ட விருப்பம் அதற்கு ஏன் மன்னிப்புக்கேட்பான் ரியாஸ்.தனித்தனி விருப்பம் ஒவ்வொருத்தருக்கும் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.