10 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-29

பதுங்குக் குழியிலும்
நாங்கள்
ஒதுங்கமுடியாத மழையில்
நடக்கிறது யுத்தம்!
      (பழனிபாரதி) தனிமையில் விளையாடும் பொம்மை.
///:
...அடுத்த ஊரில் குடியிருந்தோம்!.கல்வீட்டில்  வாழ்ந்து விட்டு ஒரே நாளில் ஓடியந்து இன்னொரு வீட்டின் கோடியில் படுத்திருக்கும் அவலத்தை எங்க ஆத்தா தந்து விட்டா என்று பங்கஜம் பாட்டி அழுத போது சண்முகம் மாமிதான் தேற்றினா !எல்லாரும் தானே எழும்பி விட்டோம் மாமி .கொஞ்ச நாளில் போய் விடலாம் எங்கட இடத்திற்கு என்று..

அதுவரை பாட்டியின் மடியும், மாமியின் மடியும் தலையணியாக இருந்த காலம் போய் யூரியா பாக்  தலையணையானது .
                                                   யூரியா பாக் இந்தப்படத்தில் இருக்கும் வெள்ளைநிறப்பை!

தேவையான உடுபுடவை அதனுள் தான் இருந்தது

.மாமியின் கையால் பசி எடுக்கும் போது சாப்பிட்ட எள்ளு உருண்டை,பயத்தம் உருண்டை பறி போய் சங்கக்கடையில் கியூவில் நின்று வெள்ளை அரிசுக்கும் ,விட்டாமில்க் பால்பைக்கட்டுக்கும் பட்ட வேதனையை நினைக்கும் போதெல்லாம் !தங்கக் கரண்டியில் ஒட்ச் குடித்தோம் என்று சொல்வோரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பரிகாசம் வருகின்றது.


உங்களுக்கு இது வேணும் எங்களுக்கு தண்ணீர் அள்ளவிடாமல் அநியாயம் செய்தனீர்கள் .என்று அடுத்த ஊரில் இருந்த ஒரு பாட்டி சொன்னது இன்னும் நினைவு இருக்கு .

அந்த பாட்டிக்குத் தெரியவில்லை தனக்கும் அப்படி ஒரு ஓட்டம் வரும் பின்நாட்களில் வரும் என்று!

அதுவரை காலையில் இருந்த பள்ளிக்கூடம் அருகில் இருந்த கிராமத்தில் மாலையில் தொடங்கினார்கள்.

 அந்த கிராம பள்ளிக்கூடம் முடிந்த பின் எங்கள் பாடசாலை ஆரம்பமாகியது.மதியம் வீட்டில் சாப்பிட்டுப் போவதால் நல்ல நித்திரை வந்து விடும் .

அப்போதெல்லாம் என்னத்தை ஆசிரியர் படிப்பித்தார் என்று ஞாபகம் இல்லாமல் போனது .

அதுவரை யாரோடு எல்லைச் சண்டை பிடிக்கணும் என்று ராகுல் ஆசைப்பட்டானோ! இப்போது அவளே அவன் அருகில் இருந்த வாங்கில் வந்துவிட்டாள்.

ராகுல் இன்று என்ன சாப்பிட்டாய்?எனக்கு இந்த வெள்ளைச்சோறு பிடிக்கவில்லையடா !
அவளுக்கு மட்டுமா ?

?புழுங்கள் தாண்டா ரூசி.
 வீட்டில் அரிசி இல்லடா ராகுல் .

உங்கவீட்டில் சாப்பிட வரவாடா என்று அவள் கேட்ட தருணங்கள் .மறக்கமுடியாத நாட்கள் .

காரணம் இந்தியன் ஆமி வந்த நாட்களில் கூட எங்கள் கிராமத்தில் புழுங்கல் அரிசியைத் தவிர வெள்ளை அரசியோ! கோறா அரிசியோ,வெள்ளப்பச்சை அரிசியோ  கேள்விப்பட்டதும் இல்லை சாப்பிட்டதும் இல்லை .

ஏன் என்றால் நாங்கள்
விவசாயிகள்.

 எங்கள் தேவைக்கு வைத்துவிட்டுத்துத் தான் எத்தனை பறை விற்பது என்று முடிவே செய்வோம்.

பறை பற்றி திருவொம்பாவையில் மாணிக்கவாசகர் அழகு தமிழில் சொல்லி இருக்கின்றார்,

 பத்தாயம் என்று யுகபாரதி தமிழக மொழியில் கவிதையில் சீராட்டி இருக்கின்றார்!

எத்தனை வசதியிருந்தாலும் ஒரு வேளை சாப்பாடு எத்தனை முக்கியம் என்பதைச் சொல்லித் தந்த நாட்கள்.

 எப்ப பார்த்தாலும் கீரியும் பாம்பாக இருந்த நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

 காரணம் பலர் படிக்க பள்ளிக்கூடம் வாரது இல்லை .

செல் அடி அதிகம் எந்த நேரம் நேவி இன்னும் முன்னேறுவான் என்ற ஒரு பயம் எல்லோரிடமும் குடிகொண்டிருந்தது

.இப்படி கிராமத்திலேயே நாண்கு பள்ளிக்கூடம் மாறி மாறிப் படித்தோம் நானும் மேனகாவும்.

எங்களுடன் படித்தவர்களில் அவள் தான் அப்போது பாப்கட்டு முடி வெட்டியிருந்தால் !முடிவளர்த்துப் பார்த்ததில்லை ராகுல் அவளை .

ஐந்தடிக்கு குஞ்சத்துடன் அவளை ஒரு புகைப்படத்தில் பின்னாட்களில் பார்த்த போது நம்ப முடியவில்லை அவளா இவள்?

எனக்காக முதல் வாங்கு பிடித்துத் தந்தவள் இன்று !!ஒரு கட்டத்தில் ராகுல் ஒருவனைத்தவிர வேற ஆண்களே வராத போது பள்ளிக்கூடம் போகவே கூச்சமாக இருந்தபோது வாடா சேர்ந்து போவம் என்று பள்ளிக்கூட உடையில் வீட்ட வந்து கூட்டிச் சென்றவள்.

ஒரு பென்சிலில் இருவர் பங்கு போட்டோம்! எழுதுவதற்கு

. அப்போது யுத்தம் ஒரு மந்தகதியில் இருந்ததால் அதிகம். வலிக்கவில்லை .

தேவாரம் பாடும்போது" தோடுடைய செவியன் நீ யாருடை பொடியன் என்று மாற்றிப்பாடிய போது தலையில் குட்டியவள் .தேவாரம் பாடும் போது பயபக்தியுடன் பாடனும் என்று சொல்லித் தந்தவள்.

 ராகுலோடு நீண்ட பயணம் வந்தவள்.

ஊரில் என் நேரத்திலும் நேவி வெளிக்கிடலாம் என்ற பயத்தில் பலர் தூரத்துக் கிராமங்களுக்கு இருட்டுப் பட்டதும் மூட்டைமுடிச்சுக்களுடன் போய் படுத்தோம் .

பல வீடுகள் படலை திறந்து விட்டிருந்தார்கள் யாராவது வந்து திண்ணையில் படுக்கட்டும் என்று சிலர் உள்வீட்டு விறாந்தையில் இடம் கொடுத்தார்கள்.

.அதிகாலை 4.45 எல்லாம் அரத்தூக்கத்துடன் மீண்டும் எங்களின் குடிசைக்குத் திரும்பிய நித்திரைகெட்ட வலியை சுமந்த போதெல்லாம் மனதில் ஒரு வெறி வரும் எப்போது எங்கள் சொந்த வீட்டில் நிம்மதியாக நித்திரைகொள்வோம் என்று.

 10வயது கிழவனை  நடக்கவிடாமல் தூக்கிக்கொண்டு வாரீங்க மாமி என்று புனிதா மாமி திட்டிய போது பாவம் என் பேரன் என்று பங்கஜம் பாட்டி சொல்லியது இன்னும் மறக்கவில்லை!!

தொடரும்!
///////

//இந்தப்பகுதி தொடருக்கு சம்மந்தம் இல்லை என்றாலும் ராகுலின் பின்பகுதியில் ஒரு சம்பவம்.
. இப்படிப் நித்திரைக்குப் போன வீட்டில் ஒரு உறவைக்காத்த கிளி காத்திருந்தது என்று அப்போது தெரியாது ராகுலுக்கு !அப்ப இருந்தே இவன் உன்ற மோளை கண்ணடித்திருக்கின்றான் மருமகன் என்று ஒரு மாமி கலியாணத்தில்  இன்னொரு மாமியின் காதோடு பேசிய போது தலைகுனிந்தது மாமி மகள் மட்டும்மல்ல மாப்பிள்ளையும் தான். அந்தப்பாட்டியையும் பின் நாட்களில் அழவைத்தானே!என்கின்றபோது !!!
பாசம்!
அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா. (என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய  ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.
 !(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

 அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில். போகும் பாதையில் பாசம் தடுத்தது. விலக்கிவிட்ட உறவு.
 அது வேண்டாம்  பேரா வீட்டுக்கு. விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு தேயவில்லை நினைவலைகளில்!
 இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது விடையில்லாத உறவாக! மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!!

இது ஹேமாவின் தளத்தில் தனிமரம் கிறுக்கியது ராகுலின் எண்ணத்தை பிரதி பலித்து!!
மோள்- மகள்
கண்ணடித்தல்- காதல் மொழி கிராமிய பேச்சுவழக்கு!


38 comments :

Yoga.S.FR said...

iravu vanakkam,nesan!

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம் வர இருப்போர் அனைவருக்கும்.படித்துவிட்டு,சாப்பிட்டு விட்டு தொடர்வேன்!

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா நலமா!

தனிமரம் said...

நன்றாக சாப்பிட்டு வாங்கோ காத்திருக்கின்றேன் கொசுத்தொலையுடன்! ஆவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

ஹும்...................என்ன எழுத?வலிகள் தொடர்கிறது,விடியும் என்று நம்புவோம்!நம்புவதென்ன,விடியலைக் காண்போம்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

நன்றாக சாப்பிட்டு வாங்கோ காத்திருக்கின்றேன் கொசுத்தொலையுடன்! ஆவ்வ்வ்வ்///இப்போதுமா?ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!!

தனிமரம் said...

ஹும்...................என்ன எழுத?வலிகள் தொடர்கிறது,விடியும் என்று நம்புவோம்!நம்புவதென்ன,விடியலைக் காண்போம்!//ம்ம்ம் இப்படித்தானே! இன்னும் சொலுகின்றேன் விரைந்து!!!!!!!!

Yoga.S.FR said...

A Tout a l'heure!

தனிமரம் said...

நன்றாக சாப்பிட்டு வாங்கோ காத்திருக்கின்றேன் கொசுத்தொலையுடன்! ஆவ்வ்வ்வ்///இப்போதுமா?ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!!//இன்று வேலை நேரத்திலும் உங்களின் யோக மறக்க முடியாவில்லை!!

Yoga.S.FR said...

என்னத்தை ஆசிரியர் படிப்பித்தார் என்று ஞாபகம் இல்லாமல் போனது.////பின்ன?பக்கத்தில பென்சில் கடன் தாறதுக்கும் "ஆள்" இருக்கைக்கை,வாத்தியார் என்னத்தப் படிப்பிச்சாத்தான் என்ன,ஹி!ஹி!ஹி!

தனிமரம் said...

கடன் தாறதுக்கும் "ஆள்" இருக்கைக்கை,வாத்தியார் என்னத்தப் படிப்பிச்சாத்தான் என்ன,ஹி!ஹி!ஹி!

10 April 2012 12:53 //ஹீஹீ!

தனிமரம் said...

/பின்ன?பக்கத்தில பென்சில் கடன் தாறதுக்கும் "ஆள்" அதுவும் கூர் மார்த்தும் பென்சில் அந்தக்காலத்தில்! அவ்வ்வ்

ஹேமா said...

வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !

தனிமரம் said...

வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !// வாங்க ஹேமா.நலமா தனிப்பட்ட வேலை வரபிந்திவிட்டது! கலை வந்த போது வீட்டில் இல்லை!

Yoga.S.FR said...

10வயது கிழவனை நடக்கவிடாமல் தூக்கிக்கொண்டு வாரீங்க மாமி.///இப்படித்தான் எனக்கும் ஒரு அனுபவம்!எட்டு வயதிருக்கும்.நல்லூரில் திருவிழா முடிந்து வீடு வரும்போது உறங்கியதால் அம்மா மாறி பெரியக்கா மாறி(என்னை)தூக்கி வரும்போது,கள்வர் பயத்தினால் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை கைலேஞ்ச்சியில் முடிந்து கொண்டு வந்தார்கள்!என்னைக் கைமாறிய நேரத்தில் தெருவில் தவற விட்டார்கள்!அப்போதைய பெறுமதி ஐநூறு ரூபா.இன்று????????????

தனிமரம் said...

.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !//நல்ல சுகம் ஹேமா நீங்க!

ஹேமா said...

" தோடுடைய செவியன் நீ யாருடை பொடியன்....மேனகாவுடனான நினைவுகள் நெகிழ்வு நேசன் !

பாரீசிலயும் நுளம்போ.பாவம்தான் நீங்கள்.இல்லாட்டி காட்டான் மாமாவைத்தான் நுளம்பு எண்டு சொன்னீங்களோ !

தனிமரம் said...

10வயது கிழவனை நடக்கவிடாமல் தூக்கிக்கொண்டு வாரீங்க மாமி.///இப்படித்தான் எனக்கும் ஒரு அனுபவம்!எட்டு வயதிருக்கும்.நல்லூரில் திருவிழா முடிந்து வீடு வரும்போது உறங்கியதால் அம்மா மாறி பெரியக்கா மாறி(என்னை)தூக்கி வரும்போது,கள்வர் பயத்தினால் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை கைலேஞ்ச்சியில் முடிந்து கொண்டு வந்தார்கள்!என்னைக் கைமாறிய நேரத்தில் தெருவில் தவற விட்டார்கள்!அப்போதைய பெறுமதி ஐநூறு ரூபா.இன்று????????????

10 April 2012 13:07 //அந்தக்காலத்தில் அதே பெரியகாசு! ம்ம்ம்

Yoga.S.FR said...

ஹேமா said...

வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !////இரவு வணக்கம் மகளே!நல்ல சுகம்.நான் கூட காணவில்லை பதிவு வந்ததை!வரோ தளம் சென்றதால் பார்த்தேன்.எல்லோருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.களைத்திருப்பஈர்கள்,கொஞ்சம் ஓய்வெடுங்கள்,காலையில் /மாலையில் பார்க்கலாம்!இரவு வணக்கம்,நேசன்&ஹேமா!

தனிமரம் said...

பாரீசிலயும் நுளம்போ.பாவம்தான் நீங்கள்.இல்லாட்டி காட்டான் மாமாவைத்தான் நுளம்பு எண்டு சொன்னீங்களோ !//ஹீ பாரிசில் நுளம்பு இல்லை ஆனால் காட்டான் அடிக்கடி கடிப்பார் என் பதிவுகள் பற்றி தனிப்பட!

Yoga.S.FR said...

ஹேமா said...

" தோடுடைய செவியன் நீ யாருடை பொடியன்....மேனகாவுடனான நினைவுகள் நெகிழ்வு நேசன் !

பாரீசிலயும் நுளம்போ.பாவம்தான் நீங்கள்.இல்லாட்டி காட்டான் மாமாவைத்தான் நுளம்பு எண்டு சொன்னீங்களோ !///நுளம்பில்லாமல் உலகம் உண்டோ?இது வேற நுளம்பு!சொன்னா.........................!இல்ல,வேணாம்!அது வந்து ............................சீச்சீ வேணாம்............!!!!

தனிமரம் said...

வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !////இரவு வணக்கம் மகளே!நல்ல சுகம்.நான் கூட காணவில்லை பதிவு வந்ததை!வரோ தளம் சென்றதால் பார்த்தேன்.எல்லோருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.களைத்திருப்பஈர்கள்,கொஞ்சம் ஓய்வெடுங்கள்,காலையில் /மாலையில் பார்க்கலாம்!இரவு வணக்கம்,நேசன்&ஹேமா!

10 April 2012 13:12 //இனிய இரவு வணக்க்ம் யோகா ஐயா .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பாரீசிலயும் நுளம்போ.பாவம்தான் நீங்கள்.இல்லாட்டி காட்டான் மாமாவைத்தான் நுளம்பு எண்டு சொன்னீங்களோ !///நுளம்பில்லாமல் உலகம் உண்டோ?இது வேற நுளம்பு!சொன்னா.........................!இல்ல,வேணாம்!அது வந்து ............................சீச்சீ வேணாம்............!!!!

10 April 2012 13:15 //ம்ம்ம்ம் !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

சரி நேசன்,அப்பா.இனி வேலை அடிதடியாய்த் தொடங்கிட்டுது.பரவாயில்ல நேசன்ர தமிழ்மண நட்சத்திர நேரம் கொஞ்சம் லீவா இருந்தன்.சந்திக்காலாம் நாளைக்கும் கொஞ்சம்.வாறன் நேசன் !

விக்கியுலகம் said...

பல விஷயங்கள் மறக்க முடியாத ரணங்கள் ஆகிப்போகிறது வாழ்கையில்...அப்படி ஒரு அழுத்தம் இந்த தொடரில்..

Esther sabi said...

ஜயோ நேசன் அண்ணா மீண்டுமாய் பதங்கு குழிகள் என் ஞபகத்தில் வருகின்றது. முகமாலையில் நாங்கள் இடம் பெயர்ந்து இருக்கும் போது என்க்கு 05 வயதே ஆகும் அப்படியிருக்க அந்த நினைவுகள் இன்னும் எனக்குள் இருக்கின்றது.

Yoga.S.FR said...

காலை வணக்கம்!Bon Jour!

Anonymous said...

தொடர் ரணங்களை கிளறிவிட்டுக்கொண்டே தொடர்கிறது நேசரே...தொடருங்கள்..

Anonymous said...

ஹேமா said...
வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !
//

அலுவலகத்தில் மீட்டிங்...நலம் தானே...மீண்டும் சந்திப்போம்...என் வந்தனங்கள்...

Anonymous said...

ஹேமா said...
வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !///

அண்ணன் ரொம்ப கஷ்டமா எழுதுறாங்க அக்கா...போன தரம் படிச்சது அப்புடியே சேப்பல்ஸ் என்ற குறும்படம் கதை இருந்துச்சு
அந்த படம் பார்த்தபோதே கண்ணீர் வந்துப் போச்சி ... நேட்ட்று படிக்கும் போதே அதே கதை கண் முன்னேவந்துச்சி ..ரீ ரீ அன்ன இந்தப் பதிவை நான் படிக்க வில்லை ....

Seeni said...

sumaiyaana sokam!

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி- வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!

தனிமரம் said...

நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹேமா said...
வணக்கம் அப்பா,நேசன்.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன்.பதிவு இப்பத்தான் போட்டனீங்களோ நேசன்.கருவாச்சி,அம்பலம் ஐயா,ரெவரி ஒருத்தரையும் காணேல்ல.நீங்கள் ரெண்டு பேரும் சுகம்தானே !///

அண்ணன் ரொம்ப கஷ்டமா எழுதுறாங்க அக்கா...போன தரம் படிச்சது அப்புடியே சேப்பல்ஸ் என்ற குறும்படம் கதை இருந்துச்சு 
அந்த படம் பார்த்தபோதே கண்ணீர் வந்துப் போச்சி ... நேட்ட்று படிக்கும் போதே அதே கதை கண் முன்னேவந்துச்சி ..ரீ ரீ அன்ன இந்தப் பதிவை நான் படிக்க வில்லை ....
//கலை ராகுல் சொன்னதை இயன்றளவு எழுதுகின்றேன் துயரம் என்பதற்காக மாற்றிவிடமுடியாது நிஜத்தை.சில அங்கம் தாண்டி வாசியுங்கோ .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.