18 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-32

யார் சதிசெய்பவன்!
யார் எம் கனவினுள் மலத்தை எறிபவன்!
                                                     வா.ஜ ச..ஜெயபாலன்!!

முக்கிய போராளிகளின் வாகனம் பல பாலம் தாண்டிப் பின் நகர்ந்து சென்ற வேளையில்!
 பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த.

 அதில் போனவர்களில் சோதி மாமாவும் ஒருவர் !அவரின் பெயர் மாற்றம் கண்டு இருந்தது அந்த இயக்கத்தின் சட்டத்திற்கு அமைவாக.

 அப்போது பார்த்த மாமாவைப் பின்னால் பார்க்கணும் என்ற ஆசையே இருந்தது இல்லை ராகுலுக்கு.

 உறவுகள் விட்டுப்போனவரை ஏன் தொந்தரவு ?

.வழிகள் எங்கும் உறவுகள். யார்வீட்டில் தங்குவது? இனி என்ன செய்வது? என கையறு நிலையில் பலர் வீதியில் இருந்த நிழற்குடையின் கீழ் இருந்தார்கள்.

எங்கள் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதற்க்கு இடையில் எத்தனை சிறுகிராமங்கள் இருக்கு .

என நடந்தும் ஓடியும் தெரிந்துகொண்டோம்.!

மூளாயில் இருந்து சுழிபுரம் வந்து சில நாட்கள் குடியிருந்தோம்.
ஒரு முகம் தெரியாதவர்கள் முன்பக்கத்தில் வாடகைக்கு இருங்கோ என்றதில் .

"எங்க போனாலும் மூலதனம் கல்வி என்பது யாழ்பாணத்தவனின் முதுசகம் என்பார் எஸ்.பொ "

அதையும் அகதியான போது சுழிபுரத்தில் பிரபல்யமான பாடசாலையில் பின்னேரம் படித்தான் ராகுல் .

அப்போது என்ன படித்தோம் என்று ஞாபகம் இல்லை !

பள்ளிவகுப்பில்  இருந்தது நான்கு பேர் ராகுலுடன்.

 அதில் மேனகா மற்றவள் மீனா அடுத்தவள் சாந்தி .இவர்கள் எல்லாம் உறவுக்காரிகள் என்பதால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள் பள்ளிக்கு .

அந்தப்பள்ளியில் நானும் படித்தேன் என்பதே கெளரவம் ஆகும் என நினைக்கையில் !

மறுபுறத்தால் மாதகளில் இருந்து வந்த ஷெல் அடியால் எல்லோரும் இன்னும் ஒரு பக்கம் முன்னேறினோம் .

வடக்கொம்பரை தாண்டி சங்கானை, சித்தங்கேணி ,மானிப்பாய் என பரதேசியாக திரிந்தோம் .

இண்டையில் இரண்டுநாள் மெய்கண்டானில் பின்னேரம் படிக்கும் போது பார்த்த சாந்தி பின்னாளில் போராளியாகி விட்டாள் என்று செவி வழியாக செய்தி வந்தது .

அப்போதும் ராகுல்  அருகில் இருந்து படித்தாள் மேனகா!
" எப்படா எங்கட ஊருக்குப் போவம் ராகுல்"

" எனக்கு என்ன தெரியும் சின்னத்தாத்தா விரைவில் போவம் என்று சொல்லுகின்றார் "

எனக்கும் பாட்டியில்லாமல் இந்தக்கிழமை வீட்டில் கோப்பி கிடைக்கவில்லை!

 ஊத்தைத் தேயிலையில் விட்டா மில்க் கலந்து தந்த அம்மாவோடு இன்று  காலையில் எனக்கு  சீனியுடன் கோப்பி வேண்டும்.

 என்ற போது.

 சங்கக்கடையில் இன்னும் சீனி வரவில்லை என்று சொன்னதையே சொன்னா!

எனக்கும் ஊருக்கு போய் விட்டால் பழையபடி விளையாடலாம்! கணக்கு வாத்தியார் கருக்கு மட்டையால் அடிக்க மாட்டார் 13 வாய்ப்பாடு இப்ப எனக்குப் பாடம் என்று சொன்ன போதே அடுத்த ஷெல் வந்த திசைப்பக்கம் கேட்டது .

ஹெலியின் சத்தம் ஒடுங்கோ பங்கருக்குள் என்று ஓடி ஒளிந்தோம் .

அதன்பின் பள்ளிக்கூடம் யாழில் போகவில்லை!

 கோட்டை மீதான போராளிகளின் தாக்குதல்கள் வெற்றியை நோக்கிப் போகும் தருணத்தில் .

இராணுவம் பல இடங்களில் தரைவழியாக முன்நகர்ந்தது வந்தது அதில்  மாதகல் மற்றும் தீவின் மறுகரைகளில் இருந்து ஆவேசமாக முன்னேறியது.

ஒரே யுத்த மழைl

இனி இங்கிருக்க(யாழ்ப்பாணத்தில்) முடியாது! என்று வன்னிக்குப் போனோம் குடும்பங்கள்  சூழ சேர்ந்து கூட்டமாக.

 பல அயல் வீடுகள் எல்லாம் கூடவந்தார்கள்!

 இடையில் யாழ்ப்பாணத்தார் எங்களுக்கு இருக்க வீடு தராமல் நெஞ்சில் சூடு வைத்தார்கள் .வார்த்தையால் !!

"தீவாருக்கு திண்ணையில் கூட இடம் தரமாட்டோம் "

என்று சொன்ன பாட்டிக்குத் தெரியவில்லை சின்னப்பிள்ளைக்கள் முன் பெரியவர்கள் எப்படிப்பேசணும் என்ற சபை மரபு.

 எந்தப்பாட்டி எகத்தாளமாக பேசினாவோ !அந்த வீட்டையே பின்னாலில் தீவானுக்கு வித்துப் போட்டு. கடல் தாண்டி அகதியாகி விட்டா என்ற போது அனுதாபம் தான் வந்தது.

.
வன்னி போகும் போதும் ரூபன் மச்சான் சண்முகம் மாமியுடன் கைபிடித்து வந்தான்.

 சின்னத்தாத்தாவிடம் முத்தாச்சிப்பாட்டி தன் மச்சாள் என்று உறவு கொண்டாடிய பாட்டி வீடு வட்டக்கச்சியில் ஒன்று இருந்தது.

 அந்த வீட்டில் இடம் கிடைத்தது எல்லோருக்கும்.

 .அங்கேயும் ஒரு பாடசாலையில் அதிகாலையில் படித்தான் ராகுல்.அது சில்வா ரோட் என்று இருந்தது பின் மணிவண்ணன் வீதி என்று மாற்றிவிட்டது பின் நாட்களில்!

பின் ஐயா கடை திறந்து கிளிநொச்சியில் .
அங்கே இரு  பாட்சாலையில் படித்தான் ராகுல்..(இதில் ஒன்றில் பதிவுலக நண்பர்கள் தம்பி ராச் முதல் காதல் தொடங்கியது)


.அப்போதும் மேனகா கூட இருந்தாள் !

இரணைமடுக்குளம் ,கனகாம்பிகைக்குளம் என பார்த்ததும் வாய்க்காலில் குளிர்த காலங்கள் இனி யுத்தம் வராது என்ற நம்பிக்கை தந்தது.

 ஏன்னா ?இங்கு ஆமிக்காம் அருகில் இல்லை

.சின்னத்தத்தா அன்று ஐயாவிடம் வந்தார்!

 இப்போதுதான் நாங்கள் வேற இடத்தில் முதல் முறையாக  முத்தாச்சிப்பாட்டி,சண்முகம் மாமி,புனிதா மாமி,என எல்லாரையும் விட்டுட்டு இங்கு வந்திருந்தோம் !

..சின்னத்தாத்தா தன்னுடன் இரண்டு அண்ணாமார்களையும் கூட்டி  வந்திருந்தார் .அவர்களும் எங்களோடு கேரதீவு சங்குப்பிட்டியால் தாண்டிவந்தவர்கள்.!!

தொடரும்///


சங்கக்கடை-ரேசன்கடை.
விட்டாமில்க்-ஒரு பால்மா பாக்கட் விற்பனை மார்க்கு!
பங்கர்-பதுங்குகுழி

144 comments :

ஹேமா said...

இண்டைக்கும் பால்க்கோப்பி எனக்கோ நேசன்.தாங்கோ தாங்கோ நேசன்.பதிவு வாசிக்கவேணும் !

ஹேமா said...

நேசன்...படங்கள் எல்லாம் உங்கள் சொந்தப்படங்களா இல்லை கூகிளில் எடுப்பீங்களா ?

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா. ஒரு பால்க்கோப்பி சூடாக் குடியுங்கோ வெளியில் நல்ல மழை பெய்கின்றது மனமோ உங்களின், மலையடிவாரத்தோழியின் பின்னே போகின்ற்து.ம்ம்ம்

தனிமரம் said...

நேசன்...படங்கள் எல்லாம் உங்கள் சொந்தப்படங்களா இல்லை கூகிளில் எடுப்பீங்களா ?

18 April 2012 11:18 //இந்தக் காட்சியில் வருவது எல்லாம் கூகில் ஆண்டவர் தயவு ஹேமா. ஆனால் இனி வரப்போகும் படங்கள் நண்பரின் கைவ்ண்ணம்

ஹேமா said...

அப்பா...நேற்றே ஒற்றைத்தலவலி என்றார்.இண்டைக்கு வேலையும் கூடுதலாக இருக்கும்.அப்பா...இடையில் ஒருக்கா வந்து ஹலோ சொல்லிட்டுப்போங்கோ !

கருவாச்சியும் காணேல்ல.அம்பலம் ஐயா எப்பவும் லேட்.பின்வாங்கில்லதான் இனி ஏத்தவேணும்.ரெவரி வருவார் கொஞ்சம் பிறகு !

ஹேமா said...

இங்கயும் 2 கிழமையா ஒரே இருளும் மழையும்தான் நேசன்.குளிர்காலம்போல இருக்கு.தாங்கோ கோப்பியை.தனியத்தான் குடிக்க விசர்.கருவாச்சி வந்தால் சண்டைபிடிச்சுக் குடிச்சால்தான் சந்தோஷம் !

தனிமரம் said...

அப்பா...நேற்றே ஒற்றைத்தலவலி என்றார்.இண்டைக்கு வேலையும் கூடுதலாக இருக்கும்.அப்பா...இடையில் ஒருக்கா வந்து ஹலோ சொல்லிட்டுப்போங்கோ !//நேரம் இருந்தால் நிச்சயம் யோகா ஐயா வருவார்.

கருவாச்சியும் காணேல்ல.அம்பலம் //அம்பலத்தார் இன்று அதிகம் இங்கே இருந்தார் ஹேமா.அவரின் புரிதல் எனக்கு தெம்பு தருகின்றது இந்த தொடரை நகர்த்த.

தனிமரம் said...

இங்கயும் 2 கிழமையா ஒரே இருளும் மழையும்தான் நேசன்.குளிர்காலம்போல இருக்கு.தாங்கோ கோப்பியை.தனியத்தான் குடிக்க விசர்.கருவாச்சி வந்தால் சண்டைபிடிச்சுக் குடிச்சால்தான் சந்தோஷம் !

18 April 2012 11:24 //கலைக்கு இன்று கடுப்பூ ஏத்தப் போகின்றீர்கள்!ஹீ

கலை said...

aaaaaaaaaaaaaaaaa vanthutteennnnnnnnnnnn

தனிமரம் said...

வாங்க கலை கலிங்க நாட்டு இளவரசியே நலமா..

ஹேமா said...

//"எங்க போனாலும் மூலதனம் கல்வி என்பது யாழ்பாணத்தவனின் முதுசகம் என்பார் எஸ்.பொ //

முற்றிலுமான உண்மை நேசன்.அகதி வாழ்வானாலும் கௌரவமாக இந்தக் கல்வியும் கல்வி தந்த தென்பும்தான் வாழவைக்கிறது !

கலை said...

நான் பதிவை படித்துக் கொண்டு இருந்தேன் ..அந்த நேரம் பார்த்து ஒருக் காக்கா என் பால் காப்பியை பிடுங்கி விட்டு இப்போ சீனு podubavai ...

ஹேமா said...

ஆகா...காக்காக்கு வாசம் அடிச்சிட்டுது.கோப்பி வேணுமோ கருவாச்சி !

கலை said...

அயியோஒ சண்டையா ...அம்மாடி எனக்கு பயமா இக்குதே ..oru kavithaayini yidam நான் poi sandai poda mudiyumaa

தனிமரம் said...

முற்றிலுமான உண்மை நேசன்.அகதி வாழ்வானாலும் கௌரவமாக இந்தக் கல்வியும் கல்வி தந்த தென்பும்தான் வாழவைக்கிறது !//உண்மைதான் ஒருகாலத்தில் ஆனால் இன்று கொஞ்சம் ஜோசிக்க வைக்கும் சமுகம் போல இருக்குது யுத்தம் இல்லாத போது!என் பார்வையில்!

ஹேமா said...

கலிங்க நாட்டுக் கருவாச்சியே....இல்லாட்டிக் காக்காவே வாங்கோ வாங்கோ.இப்பிடிச் சொன்னாத்தான் வடிவு நேசன் !

ஹேமா said...

உண்மைதான் நேசன்.முன்னைய காலத்தைவிட கல்வியில் பின்தங்கித்தான் இருக்கிறது ஈழம் !

கலை said...

kalinga நாட்டு இளவரசி மிக்க நலம் அண்ணா ....

மார்வீய்ச்டுகளின் தொல்லை தான் konjam இருக்கு ...இருந்தாலும் என் பேரைச் சொன்னால் பயந்து போயி viduvinam ...
நேட்ட்று magendran அண்ணா ezuthiyathu paarththeergallo anna ...avvv enga oorrai pattri

தனிமரம் said...

கலைக்கு இன்னும் சில அங்கம் தாண்டின பின் பதிவைப்படிப்பா ஹேமா முகாரி முடிய ராகுல் மாயமாளகெரியில் சொல்லுவான்! தொடரும் .போது!

தனிமரம் said...

நேட்ட்று magendran அண்ணா ezuthiyathu paarththeergallo anna ...avvv enga oorrai pattri//ஆஹா வாசியா ! ஹீ

கலை said...

ஹேமா said...
ஆகா...காக்காக்கு வாசம் அடிச்சிட்டுது.கோப்பி வேணுமோ கருவாச்சி !///

aahaa என் paalk kaappiyai pidungik கொண்டு enakkee vaa ....

தனிமரம் said...

இல்லாட்டிக் காக்காவே வாங்கோ வாங்கோ.இப்பிடிச் சொன்னாத்தான் வடிவு நேசன் !//ஹீ வடிவுக்கரசி என்று சொல்லி காக்காவை கருவாச்சி அழுவாச்சி ஆக்குவதோ !

கலை said...

நான் பதிவை படித்துப் pottinam அண்ணா ..

தனிமரம் said...

நான் பதிவை படித்துப் pottinam அண்ணா ..

18 April 2012 11:50 //hii அப்ப அழுவச்சி!

தனிமரம் said...
This comment has been removed by the author.
கலை said...

முற்றிலுமான உண்மை நேசன்.அகதி வாழ்வானாலும் கௌரவமாக இந்தக் கல்வியும் கல்வி தந்த தென்பும்தான் வாழவைக்கிறது !///

unmai தான் அக்கா..

தனிமரம் said...

உண்மைதான் நேசன்.முன்னைய காலத்தைவிட கல்வியில் பின்தங்கித்தான் இருக்கிறது ஈழம் !//மொத்த தேசமும் தான் அனுராதபுரம் .மலையகம் என முக்கியம் கல்கமுவ இப்படி ....

18 April 2012 11:54

தனிமரம் said...

unmai தான் அக்கா..//ஹீ அதுக்குத்தான் விசில் கூட்டங்களே விட்டுவுடுங்கோ உசுப்பேத்த வேண்டாம் என்போம் யோகா ஐயா சொல்லுவார் கலை இன்னும் ப்க்குவமாக. ஏன்னா என்னை கண்டால் ஓடுவோர் அதிகம்! அதில் கலை இல்லை.

கலை said...

இல்லாட்டிக் காக்காவே வாங்கோ வாங்கோ.இப்பிடிச் சொன்னாத்தான் வடிவு நேசன் !//ஹீ வடிவுக்கரசி என்று சொல்லி காக்காவை கருவாச்சி அழுவாச்சி ஆக்குவதோ !////

கருவாச்சி நாலவே இல்லை ,,,நானும் அழகா mordern ஆ ஸ்டைலி ஆ பேஷன் ஆ எனக்கு பெயர் வைக்க போரினம் ...பாமா ,ரீமா ,ஜோமா ,leee மா எண்டு ஏதாவது வைத்துக் கொள்ளுரணன் ...அப்புரமேன்னை கருவாச்சி எண்டு ல்லாம் கோப்பிடக்கூஓடது ..

ஹேமா said...

ச்ச....கருவாச்சி.அதுவும் கிராமத்துக் கருவாச்சி.எவ்வளவு வடிவான பெயர்.அதைவிடக் கலை அழகோ அழகு.ஹேமா தமிழ்ப்பெயரே இல்லை தெரியுமோ !

கலை said...

யோகா மாமா இண்டைக்கு velaiyil பிஸி ஆகி tiredஆகி விட்டினம்

தனிமரம் said...

கருவாச்சி நாலவே இல்லை ,,,நானும் அழகா mordern ஆ ஸ்டைலி ஆ பேஷன் ஆ எனக்கு பெயர் வைக்க போரினம் ...பாமா ,ரீமா ,ஜோமா ,leee மா எண்டு ஏதாவது வைத்துக் கொள்ளுரணன் ...அப்புரமேன்னை கருவாச்சி எண்டு ல்லாம் கோப்பிடக்கூஓடது ..//நல்ல குந்தவை, ஒவ்வையார் .வசந்த வல்லி என வையுங்கோ!ஹீ

கலை said...

ஹேமா அக்கா உங்க பெயர் தான் வடிவா இருக்கு ..உங்கட பெயர் எனக்கும் என் பெயரை உங்களுக்கும் மாத்திக்கலமா ...

தனிமரம் said...

ச்ச....கருவாச்சி.அதுவும் கிராமத்துக் கருவாச்சி.எவ்வளவு வடிவான பெயர்.அதைவிடக் கலை அழகோ அழகு.ஹேமா தமிழ்ப்பெயரே இல்லை தெரியுமோ !

18 April 2012 12:04 //ஹேமா த்மிழ் இல்லை என்று தெரியும் ஆனால் ஆங்கால ஒரு எழுத்தைக்கூட்டினால் ஒரு பல்தேசியக்கம்பனி பெயர் வரும் அதில் என் நண்பன் வேலை செய்தான் விற்பனைப்பிரதிநிதியாக.

தனிமரம் said...

ஹேமா அக்கா உங்க பெயர் தான் வடிவா இருக்கு ..உங்கட பெயர் எனக்கும் என் பெயரை உங்களுக்கும் மாத்திக்கலமா ...//ஐயோ வேண்டாம் பிறகு கவிதாயினி இடம் பட்டம் வாங்க முடியாது பட்ம் வைத்திருக்கின்றேன் வலையில் பார்க்கவில்லைப்போல கலை!

கலை said...

குந்தவை, ஒவ்வையார் .வசந்த வல்லி இது எல்லாமே நம்ம ஹேமா அக்கா பெயர் ..அதை வைக்க முடியாது அண்ணா ...

கலை said...

ஹேமா அக்கா ஒரு கவிதாயினி எண்டால் நான் ஒரு குட்டிக் கவிதாயினி அன்றோ ...ஹ ஹா ஹா ..

பார்த்துப் போட்டினம் அண்ணா உங்கட ப்லொக்கில் ரே ரீ அண்ணா ப்ளொக்கிலும் நாளை பாருங்கோ என் ப்லொக்கில் வைக்கிரணன் ...

ஹேமா said...

கலை....என்ர பேர் பாக்கவும் கூப்பிடவும்தான் வடிவு.அது ஒரு இராகத்தின் பெயர்.ஆனாலும் தமிழ் இல்லை.கலை...உங்கட பேர் அழகான பெயர்.அப்பா அம்மா ரசனையோட வச்சிருக்கினம் !

Yoga.S.FR said...

எல்லோருக்கும் இரவு வணக்கம்!நான் நலம்,நீங்கள் நலமா?தலையிடி போயே போய் விட்டது.கோப்பியை பெரியமகள்,கலையுடன் பங்கிட்டுக் குடிக்கட்டும்.வெளியே சென்று வந்தேன்.பிள்ளைகள் விடுமுறையில் நிற்பதால் கணனிக்குப் போராட வேண்ண்டியுள்ளது,ஹி!ஹி!ஹி!!!!!

ஹேமா said...

//குந்தவை, ஒவ்வையார் .வசந்த வல்லி இது எல்லாமே நம்ம ஹேமா அக்கா பெயர் ..அதை வைக்க முடியாது அண்ணா ...//

காக்கா...கொத்தக்கூடாது.அச்சாப்பிள்ளையெல்லோ.அக்கா பாவம்.

தனிமரம் said...

எல்லோருக்கும் இரவு வணக்கம்!நான் நலம்,நீங்கள் நலமா?தலையிடி போயே போய் விட்டது.கோப்பியை பெரியமகள்,கலையுடன் பங்கிட்டுக் குடிக்கட்டும்.வெளியே சென்று வந்தேன்.பிள்ளைகள் விடுமுறையில் நிற்பதால் கணனிக்குப் போராட வேண்ண்டியுள்ளது,ஹி!ஹி!ஹி!!!!!//இரவு வணக்கம் யோகா ஐயா தலைவலி போனால் போதும்.

Yoga.S.FR said...

கலை said...

ஹேமா அக்கா ஒரு கவிதாயினி எண்டால் நான் ஒரு குட்டிக் கவிதாயினி அன்றோ ...ஹ ஹா ஹா ..////இத்தப் பார்றா!ஹேமா நேற்று சொன்னது சரியாகத்தான் இருக்கிறது!பட்டம் எல்லாம் "நாங்கள்" கொடுக்க வேண்டும்,ஹி!ஹி!ஹி!!!!!!!!

Esther sabi said...

இடப் பெயர்வுகளின் ரணம் என்னும் என் கண்களுக்குள் உள்ளது நேசன் அண்ணா.

தனிமரம் said...

கலை....என்ர பேர் பாக்கவும் கூப்பிடவும்தான் வடிவு.அது ஒரு இராகத்தின் பெயர்.ஆனாலும் தமிழ் இல்லை.கலை...உங்கட பேர் அழகான பெயர்.அப்பா அம்மா ரசனையோட வச்சிருக்கினம் !// ஜன்னிய ராகத்தின் பெயர் போல ஹேமா !ஹீ

ஹேமா said...

அப்பா....வாங்கோ வாங்கோ.அங்க பிள்ளைகள் எண்டா இங்கயும்தானே உங்களுக்காக பிள்ளைகள் நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம்.இண்டைக்கு நல்ல மரக்கறிச் சாப்பாடு.எங்க எங்களுக்கும் தாங்கோ !

தலையிடி சுகமோ.அம்பலம் ஐயா சொன்னதுபோல அடிக்கடி வந்தா அக்யூப்ஞ்சர் செது பாருங்கோ.எனக்கு முழங்கை வலி.செய்தேன்.இப்ப ஓரளவு சுகம் !

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா...நேற்றே ஒற்றைத்தலவலி என்றார்.இண்டைக்கு வேலையும் கூடுதலாக இருக்கும்.அப்பா...இடையில் ஒருக்கா வந்து ஹலோ சொல்லிட்டுப்போங்கோ !////I Am All Right,Now!

தனிமரம் said...

இடப் பெயர்வுகளின் ரணம் என்னும் என் கண்களுக்குள் உள்ளது நேசன் அண்ணா.

18 April 2012 12:17 //இரவு வண்க்கம் எஸ்தர்-சபி . நலமா!

தனிமரம் said...

இடப் பெயர்வுகளின் ரணம் என்னும் என் கண்களுக்குள் உள்ளது நேசன் அண்ணா.

18 April 2012 12:17 //ம்ம்ம் யாரால்தான் மறக்கமுடியும் அந்த் வலியை சபி!

ஹேமா said...

அது 58 வது மேளகர்த்தா இராகமாம்! எந்த நேரத்திலும் பாடக்கூடிய இராகமாம்.தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் போன்ற பல பாகவதர்கள் இந்த இராகத்தில பாடியிருக்கினமாம்.சினிமாப்பாடல்கள் மிக மிகக் குறைவு !

கலை said...

வாங்கோ மாமா ...இரவு வணக்கம்

தனிமரம் said...

அது 58 வது மேளகர்த்தா இராகமாம்! எந்த நேரத்திலும் பாடக்கூடிய இராகமாம்.தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் போன்ற பல பாகவதர்கள் இந்த இராகத்தில பாடியிருக்கினமாம்.சினிமாப்பாடல்கள் மிக மிகக் குறைவு !

18 April 2012 12:20 //ம்ம்ம் புதிய தகவல் 72 ராகம் ஞாபகத்தில் இல்லை இப்போது. .

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா....வாங்கோ வாங்கோ.அங்க பிள்ளைகள் எண்டா இங்கயும்தானே உங்களுக்காக பிள்ளைகள் நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம்.இண்டைக்கு நல்ல மரக்கறிச் சாப்பாடு.எங்க எங்களுக்கும் தாங்கோ !////உங்களுக்கு என் சமையல் பிடிக்குமோ என்னவோ?இன்று,கரணைக் கிழங்கு பொரித்த குழம்பு,சோஜா குழம்பு,மரவள்ளி வெள்ளைக் கறி ,கீரை,பாகற்காய் குழம்பு,மரவள்ளி&வாழைக்காய் பொரியல்.கூடவே மோர் மிளகாய்&அப்பளப் பொரியல் !இரசம்,தயிர்!குழைத்து சாப்பிடுங்கள்,எல்லோரும்!

தனிமரம் said...

எந்த நேரத்திலும் பாடக்கூடிய இராகமாம்.தியாகராஜ //எனக்கு முஹாரிதான் பிடிக்கும் ஹேமா!முத்துச்சாமி தீட்சர் பாடியிருப்பார் அந்தக்காலத்தில்! சில வேளை.

கலை said...

அக்கா ஹேமா பெயர்ல என்னோட காலெக் யுஜி ல அவ பெஸ்ட் பிரிஎந்து ...அதே மாறி ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை ஹேமா வதி எண்டு இன்னொரு ஒரு நண்பி இருந்தால் ...அவவுக்கு அம்மா அப்பா கிடையாது ...மிக வடிவு...இப்போ எங்க இருக்காள் என்தேதேரியாது .பாவம் அவ ...

தனிமரம் said...

குழம்பு,சோஜா குழம்பு,மரவள்ளி வெள்ளைக் கறி ,கீரை,பாகற்காய் குழம்பு,மரவள்ளி&வாழைக்காய் பொரியல்.கூடவே மோர் மிளகாய்&அப்பளப் பொரியல் !இரசம்,தயிர்!குழைத்து சாப்பிடுங்கள்,எல்லோரும்!//கத்தரிக்காய் வெள்ளைச் சம்பல் செய்யவில்லைப்போல அதுதான் எனக்கும் பிடிக்கும்.

ஹேமா said...

அப்பா...நான்தான் முதல்ல கை நீட்டினனான்.எனக்குத்தாங்கோ.கையை இடிச்சுத்தள்ளுறா காக்கா !

அப்பா...பாருங்கோ....எனக்கு என்ன பெயர் எல்லாம் அண்ணாவும் தங்கச்சியுமா வைக்கினமெண்டு !

Esther sabi said...

நான் நலம் நேசன் அண்ணா நீங்க..??

கலை said...

உங்களுக்கு என் சமையல் பிடிக்குமோ என்னவோ?இன்று,கரணைக் கிழங்கு பொரித்த குழம்பு,சோஜா குழம்பு,மரவள்ளி வெள்ளைக் கறி ,கீரை,பாகற்காய் குழம்பு,மரவள்ளி&வாழைக்காய் பொரியல்.கூடவே மோர் மிளகாய்&அப்பளப் பொரியல் !இரசம்,தயிர்!குழைத்து சாப்பிடுங்கள்,எல்லோரும்!///////////////


மாமாஆஆஆ வாயில எச்சி ஊறி விட்டது ..... ரொம்ப ஆசையா இருக்கு எல்லாத்தையும் சாப்பிட ....ஹெமாஆ அக்கா பால்க்காப்பி இப்போ தான் சாப்பிடினம் ..அக்காக்கும் சேர்த்து நானே சாப்பிட்டு போறேன் மாமா ...

தனிமரம் said...

சோஜா குழம்பு//சோஜாமீட்டிலும் மாமிசம் இருக்குமே. ஆனாலும் கைப்பக்குவம் பலருக்கு வாரது இல்லை

ஹேமா said...

முகாரி இராகம் எண்டா கவலையெல்லோ நேசன்.ஆனாலும் கேக்க இனிமைதான் !

கலை said...

சோஜா குழம்பு எண்டால் என்ன மாமா ...

தனிமரம் said...

நான் நலம் நேசன் அண்ணா நீங்க..??//நலம் சகோதரி எஸ்தர். யாழில் வெய்யில் அதிகம் என்று செய்தி வந்தது. நன்றி

கலை said...

எஸ்தர் அக்கா எப்புடி இருக்கீங்க ...அது என்ன ரீ ரீ அன்னக்கிட மட்டும் சுகம் விசாரிகீங்க ,,,நான்கோலும் இங்கதானே இருக்கினம் ...எங்களையும் கேளுங்கோ சுகமா எண்டு ஓகே

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா...பாருங்கோ....எனக்கு என்ன பெயர் எல்லாம் அண்ணாவும் தங்கச்சியுமா வைக்கினமெண்டு !அங்கே வைத்திருக்கிறார்களே??/// கலா said...

ஹேமா,பொண்ணுக்கு என்ன பெயர் சூட்டலாம்? ஸ்ரீராகினி பரவாயில்லையா ஹேமா?////??????????????

தனிமரம் said...

முகாரி இராகம் எண்டா கவலையெல்லோ நேசன்.ஆனாலும் கேக்க இனிமைதான் !

18 April 2012 12:31 //ஏனோ தெரியாது சின்னக்காலத்தில் இருந்து பிடிக்கும்.இன்று வரை.

கலை said...

அப்பா...பாருங்கோ....எனக்கு என்ன பெயர் எல்லாம் அண்ணாவும் தங்கச்சியுமா வைக்கினமெண்டு !////
OKEY அக்கா KAVALAIP படதிங்கோ
என்ற குரு அண்டார்ட்டிக்கவிளிருது வரும் போது நல்லக் கடையில் சுப்பர் பெயர் வாங்கி வரச் சொல்லி மெயில் பன்னுரணன் ..குரு வந்து சுப்பெறாய் உங்களுக்கு பெயர் வைப்பம்

தனிமரம் said...

எஸ்தர் அக்கா எப்புடி இருக்கீங்க ...அது என்ன ரீ ரீ அன்னக்கிட மட்டும் சுகம் விசாரிகீங்க ,,,நான்கோலும் இங்கதானே இருக்கினம் ...எங்களையும் கேளுங்கோ சுகமா எண்டு ஓகே

18 April 2012 12:34 //கலை மட்டுமா ஹேமா. யோகா ஐயா எல்லாரும் இருக்கினம் எஸ்தர் சபி கலை கொத்தினாலும் நல்லா கலாய்ப்பா .இப்ப கண்ணாடி படம் பார்த்ததைச் சொல்லுறா்!அவ்வ்வ்

கலை said...

ஏன்னா மாமா சொல்லுரிங்க ...ஸ்ரீ ராகினியா

Yoga.S.FR said...

கலை said...

சோஜா குழம்பு எண்டால் என்ன மாமா?///அது வந்து........... சோயா அவரையை அரைத்து உருண்டைகளாக்கி காய வைத்து பாக்கட்டுகளில் அடைத்து விற்கிறார்களே,அது!இந்தியாவிலும் உண்டே?சீனாவிலிருந்து தான் முன்பெல்லாம் இறக்குமதியானது!இப்போதெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது!சைவ இறைச்சி என்பார்கள்!

தனிமரம் said...

என்ற குரு அண்டார்ட்டிக்கவிளிருது வரும் போது நல்லக் கடையில் சுப்பர் பெயர் வாங்கி வரச் சொல்லி மெயில் பன்னுரணன் ..குரு வந்து சுப்பெறாய் உங்களுக்கு பெயர் வைப்பம்

18 April 2012 12:36 //குருவிடம் மாம்பழயூஸ் கேட்டேன் கண்டி தெப்பக்குளத்தில் டூயட் பாடப்போறன் என்று அதோட ஓடிவிட்டா! ஹீ

கலை said...

.எங்களையும் கேளுங்கோ சுகமா எண்டு ஓகே.......கலை மட்டுமா ஹேமா. யோகா ஐயா எல்லாரும் இருக்கினம் எஸ்தர் சபி கலை கொத்தினாலும் நல்லா கலாய்ப்பா .இப்ப கண்ணாடி படம் பார்த்ததைச் சொல்லுறா்!அவ்வ்வ்///

அண்ணா அதான் எங்களை எண்டு சொன்னேன் அல்லோ அதிலேயே அக்கா மாமா அங்கிள் ரே ரீ அண்ணா ரீ ரீ அண்ணா எல்லாரும் அடங்குவர் ...


பாவம் எஸ்தர் அக்கா ..பயந்துடப் போறாங்க ...சும்மா சொன்னினம் அக்கா ...

ஹேமா said...

http://www.youtube.com/watch?v=8Z71qhXz3HA&feature=related

இதுதான் மெலேனா படத்தின்ர லிங்க்.பாருங்கோ அப்பா,நேசன்,கலை.அந்தக் கதையின் யதார்த்தம்தான் எனக்குப் பிடிச்சது.வயதைவிட மனசுக்கு மதிப்பு !

தனிமரம் said...

ஏன்னா மாமா சொல்லுரிங்க ...ஸ்ரீ ராகினியா

18 April 2012 12:37 //ஹீ தோடி ராகம் பாடப்போறார் கலை ராகினியுடன் சினிமாவில். லொல்லு.

Yoga.S.FR said...

உங்கள் குரு அண்டார்டிக்காவிலிருந்து வரும் பொது என்னென்னவெல்லாமோ கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறா!பூசாருக்குத்தான் நல்ல பெயர் வாங்கி வாறாவோ தெரியேல்ல,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

இதுதான் மெலேனா படத்தின்ர லிங்க்.பாருங்கோ அப்பா,நேசன்,கலை.அந்தக் கதையின் யதார்த்தம்தான் எனக்குப் பிடிச்சது.வயதைவிட மனசுக்கு மதிப்பு !

18 April 2012 12:42 //வார இறுதியில் தான் பார்க்கலாம் ஹேமா.

ஹேமா said...

அப்பா கலா கலாய்ச்சிருக்கிறா ஸ்ரீராகினி எண்டு.அதோ இது.ஸ்ரீயும் தமிழ் இல்லைத்தானே !

அண்டாட்டிக்காவில காக்கான்ர குருவுக்கு கடையில பெயர் விக்கினமாம்.என்ன கொடுமையடா சாமி !

கலை said...

ஓஓஓ அதுவா ...சோயா எண்டு சொல்லுவோம் மாமா நாங்கள் ...சோயா குழம்பு எல்லாம் வீட்டில் அம்மா செய்ததில்லை ..அனால் நோர்த் இன்டியாவினர் அதிகம் பயன்படுத்துறாங்க ..இங்க சாப்ப்டயுரணன்

கலை said...

ஹீ தோடி ராகம் பாடப்போறார் கலை ராகினியுடன் சினிமாவில். லொல்லு.///

ஹா ஹா ஹா காமெடி பன்னதிங்கோ அண்ணா ...

தனிமரம் said...

அண்டாட்டிக்காவில காக்கான்ர குருவுக்கு கடையில பெயர் விக்கினமாம்.என்ன கொடுமையடா சாமி !//கடையில் வாங்கி உலையில் போடும் பட்டண ம்வாழும் காலத்தில் பெயரும் வேண்டலாம் விரைவில்.ஹீ

கலை said...

அக்கா அது பிரெஞ்சு படம் எண்டு தானே சொன்னேங்க ....ஆங்கிலப் படமே புரியாது ..இதுல பிரஞ்சு வேறயா ..அவ்வ்வ்வவ்வ்வ் ...

இருந்தும் நாளை பார்ப்பினம் ...

லிங்க் கொடுத்தமைக்கு நன்றி

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஏன்னா மாமா சொல்லுரிங்க ...ஸ்ரீ ராகினியா

//ஹீ தோடி ராகம் பாடப்போறார் கலை, ராகினியுடன் சினிமாவில். லொல்லு.///சார் சார் நான் ஒண்ணுமே சொல்லல சார்!"அங்க" யாரோ சொன்னத இங்க கொண்டு வந்து தொடுத்து விட்டேன் சார்!(கிழவா,சொன்னாக் கேக்கிறியா?கைய வச்சுக் கொண்டு ஒரு இடமா இருக்க வேண்டியது தானே?மோள் வீடு,அயல் வீடு எண்டு மாறி மாறி அலைஞ்சா?வேணும் உனக்கு நல்லா வேணும்,ஹும்.....இப்ப புலம்பு,ஹி!ஹி!ஹி!!!)

ஹேமா said...

நேசன்,கலை உங்கட கவிதைகளை ஏன் இன்னும் உங்கட பதிவில போடேல்ல. விருது போடேக்க கவிதையையும் சேர்த்துப் போடுங்கோ !

அப்பா...கலா சொல்ற”கவிதை தந்த விருது”பிழையாம்.கவிதை கொடுத்த விருதெண்டு இருக்கவேணுமாம்.பிழையோ?

தனிமரம் said...

ஸ்ரீயும் தமிழ் இல்லைத்தானே !//இந்த ஸ்ரீ தான் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆரம்பம் ஹேமா.

கலை said...

ஹேமா said...
அப்பா கலா கலாய்ச்சிருக்கிறா ஸ்ரீராகினி எண்டு.அதோ இது.ஸ்ரீயும் தமிழ் இல்லைத்தானே !////

அக்கா என அக்கா நீன்கோலும் மாமாவும் பேசுறிங்க ..

ஒண்ணுமே புரியல

ஹேமா said...

அப்பா...இதுதான் தமிழின் அழகும் அவதியும்.சொல்லை விடேக்க கவனமா விடவேணும்.இல்லாட்டி உங்களைப்போல மாட்டிக்கொண்டு முழுசவேணும் !

கலை said...

Yoga.S.FR said...
தனிமரம் said...

ஏன்னா மாமா சொல்லுரிங்க ...ஸ்ரீ ராகினியா

//ஹீ தோடி ராகம் பாடப்போறார் கலை, ராகினியுடன் சினிமாவில். லொல்லு.///சார் சார் நான் ஒண்ணுமே சொல்லல சார்!"அங்க" யாரோ சொன்னத இங்க கொண்டு வந்து தொடுத்து விட்டேன் சார்!(கிழவா,சொன்னாக் கேக்கிறியா?கைய வச்சுக் கொண்டு ஒரு இடமா இருக்க வேண்டியது தானே?மோள் வீடு,அயல் வீடு எண்டு மாறி மாறி அலைஞ்சா?வேணும் உனக்கு நல்லா வேணும்,ஹும்.....இப்ப புலம்பு,ஹி!ஹி!ஹி!!!)

MAMAA MAAMAAAAAAAAAAAA HAAAAAAAAAAAAA HAAAAAAAAAA HAAAAAAA

ஹேமா said...

அம்பலம் ஐயா முகப்புத்தில கலக்கிக்கொண்டிருக்கிறார்போல காட்டான் மாமாவோட.எனக்கு மெயில் லிங்க் வருது !

ரெவெரி said...

எல்லோருக்கும் இரவு வணக்கம்...

கொஞ்சம் கூடுதலாய் பணி இருப்பதால் பிறகு வந்து கலந்து கொள்கிறேன்...

கோப்பியை பிரிட்ஜில் வைங்க நேசரே...

அடியோஸ் அமிகோஸ்...

கலை said...

அக்கா நான் நாளை போடுவினம் பாருங்கோ ..ரீ ரீ அண்ணா ப்ளோகில் விருதை வைத்து விட்டினம் பாருங்க

ஹேமா said...

கலா has left a new comment on your post "இவள்....மெலேனா !":

அதற்குள செய்தி அனுப்பிவிட்டாளா?"களளி. இதைத்தான் சுடச்சுட என்கிறதோ!
கவனம் கை சுடப்போகிறது

டைப் மாறி விட்டதே\\\\
நானா?மாற்றினேனா? என்ன{னை}மாதிரி?நீங்களும் மாறிவிட்டீர்களா?
ஹேமா.பொண்ணுக்கு என்ன பெயர் சூட்டலாம்? ஸ்ரீராகினி பரவாயில்லையா ஹேமா?

தனிமரம் said...

நேசன்,கலை உங்கட கவிதைகளை ஏன் இன்னும் உங்கட பதிவில போடேல்ல. விருது போடேக்க கவிதையையும் சேர்த்துப் போடுங்கோ !
//ஹேமா யோகா ஐயா கருக்கு மட்டை கேட்பார் பாருங்கோ. நான் இப்ப ஒன்னொரு கொசுவைக்கூட்டி வர்னும் என்ற அவசரத்தில் ராகுலை விரட்டிக்கொண்டு இருக்கின்றேன். அவனின் சிலஇடங்களில் அந்தக்கவிதை சேர்க்க இருக்கின்றேன் பார்க்கலாம் இந்த வாரம் பதிவாக. போடுகின்ற்ன் ஹேமா.

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா கலா கலாய்ச்சிருக்கிறா ஸ்ரீராகினி எண்டு.அதோ இது.ஸ்ரீயும் தமிழ் இல்லைத்தானே !/////ஓ......அப்பிடியெண்டா கலா ஏன்டா பேர் வச்சிருக்கிற ஆக்களெல்லாம் க......பினமோ????ஸ்ரீ தமிழ் இல்லைதான்!அந்தக் காலத்தில "அவையள்"தார் பூசி அழிச்சவை,ஹோ!ஹோ!ஹோ!!!!!!

ஹேமா said...

ரெவரி வாங்கோ வாங்கோ கோப்பி இல்லை இண்டைக்கு.கலை வெறும் சுடுதண்ணி தருவா.குடியுங்கோ.அப்பா நல்ல மரக்கறிச்சாப்பாடு குழைச்சுத் தந்தவர்.உங்களுக்கும் ஒரு உருண்டை.பிடியுங்கோ !

தனிமரம் said...

வாங்க் ரெவெரி அண்ணா! ஓலா கொமிதாஸ் .

ஹேமா said...

நேசன்...இல்லையில்லை.தனிப்பதிவாக அந்தக் கவிதைகள் என்ர விருதோட போடவேணும்.ராகுலிட்ட சொல்லுங்கோ.ஹேமா அக்காள் சொன்னென் எண்டு.ஞாபகங்களைக் கலைக்காதேங்கோ.இந்தக் கவிதைகளும் விருதும் காலகாலத்துக்கும் என்ர ஞாபகங்கள் !

கலை said...

ஓலா ரே ரீ அண்ணா ..

தனிமரம் said...

அடியோஸ் அமிகோஸ்...

18 April 2012 12:54 // அப்பாடா ஸ்பெயின் வரவில் எத்தனை ஆனந்தம் பிரெஞ்சுக்காரனுக்கும்.ஹீ ஸ் ம்ம்ம்

ஹேமா said...

//ஸ்ரீ தமிழ் இல்லைதான்!அந்தக் காலத்தில "அவையள்"தார் பூசி அழிச்சவை,ஹோ!ஹோ!ஹோ!!!!!!//

விளங்கிச்சு விளங்கிச்சு !

தனிமரம் said...

நேசன்...இல்லையில்லை.தனிப்பதிவாக அந்தக் கவிதைகள் என்ர விருதோட போடவேணும்.ராகுலிட்ட சொல்லுங்கோ.ஹேமா அக்காள் சொன்னென் எண்டு.ஞாபகங்களைக் கலைக்காதேங்கோ.இந்தக் கவிதைகளும் விருதும் காலகாலத்துக்கும் என்ர ஞாபகங்கள் !// ஹேமாவிடம் ஏன் சண்டை விரைவில் பதிவாக போடுகின்றேன் ஆனால் அந்தப்போட்டோவை சுட்டு வுடுவேன் பிறகு உள்குத்துப்போடக்கூடாது காப்பி அதிகாரம் பெற்வில்லை என்று!ஹீ

தனிமரம் said...

அவையள்"தார் பூசி அழிச்சவை,ஹோ!ஹோ!ஹோ!!!!!!//தார் மட்டுமா! ஹீ ம்ம்ம்

ஹேமா said...

இல்லையில்லை சண்டை வராது.கவிதைக்கான படங்கள் அவைதானே.தாராளமாகப் போடலாம் !

Yoga.S.FR said...

ஹேமா said...
அப்பா...கலா சொல்ற”கவிதை தந்த விருது”பிழையாம்.கவிதை கொடுத்த விருதெண்டு இருக்கவேணுமாம்.பிழையோ?///இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் சொல்வது கடினம்.கவிதை எழுதியவர்களுக்கு அந்தக் கவிதை விருதைப் பெற்றுத் தந்தது./கவிதை எழுதியதால் அந்தக் கவிதையைப் பாராட்டி நீங்கள் விருது கொடுத்தீர்கள்.அதனால் கவிதை கொடுத்த விருதாகி விட்டது!அவ்வளவு தான்!

கலை said...

ஸ்ரீ தமிழ் இல்லைதான்!அந்தக் காலத்தில "அவையள்"தார் பூசி அழிச்சவை,ஹோ!ஹோ!ஹோ!!!!!!//

விளங்கிச்சு விளங்கிச்சு //


ENAKKU VILANGALA

அம்பலத்தார் said...

ஹேமா said...


கருவாச்சியும் காணேல்ல.அம்பலம் ஐயா எப்பவும் லேட்.பின்வாங்கில்லதான் இனி ஏத்தவேணும்.ரெவரி வருவார் கொஞ்சம் பிறகு !//
ஹேமா தூரத்தில் வரும்போதே உங்க பேச்சுக்கேட்டது அதுதான் வந்ததும் பேசாம பெஞ்சுமேல ஏறிவிட்டேன். எல்லாரும் இறங்கச்சொன்னால் இறங்குகிறேன்

ஹேமா said...

காக்கா...இண்டைக்கு வேகம் போதாது.நான் இண்டைக்கு உஷார இருக்கிறன்போல !

தனிமரம் said...

கவிதை தந்த விருது”// தந்தது தான் நல்லது ஹேமா அதுவே ஒரு கவிதை தொக்கி நிற்குது.

கலை said...

கவிதை தந்த விருது தான் கேட்பதற்கு அழகா இருக்கு அக்கா ..

தனிமரம் said...

ENAKKU VILANGALA//இது வரலாறு கலை புரியாது .

ஹேமா said...

அம்பலம் ஐயாவை இப்பத்தான் காட்டான்மாமாவோட முகப்புத்தகத்தில கண்டன்.இண்டைக்குத் தப்பிட்டீங்கள்.பின்வாங்கு காவல் இருக்கு உங்களுக்காக !

தனிமரம் said...

வாங்க அம்பலத்தார் நலமா .ஓய்வு நாள் போல இன்று.

கலை said...

இல்லை அக்கா தூக்கம் வருது ...தூங்கிக் கொண்டே கதைக்கிரணன் ..மணி இங்கு இரவு1.45. அதன்

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,ரெவெரி!!!!

தனிமரம் said...

அம்பலம் ஐயாவை இப்பத்தான் காட்டான்மாமாவோட முகப்புத்தகத்தில கண்டன்.இண்டைக்குத் தப்பிட்டீங்கள்.பின்வாங்கு காவல் இருக்கு உங்களுக்காக !

18 April 2012 13:09 // கருக்கு மட்டையால் அடியுங்கோ ஹேமா.அமபலத்தாருக்கு பிந்தி வந்துவிட்டார். ஹீ

ஹேமா said...

கலா சொல்றா.”கவிதை தந்த விருது”எண்டால் நான் யாரிடமோ வாங்கி மற்றவைக்குக் கொடுக்கிறதுபோல இருக்காம்.சரி..இனி மாத்தப்போறதில்லை.எண்டாலும் என்ர ஒரு மன அவதியைக் கேட்டேன்.அவ்வளவுதான் !

கலை said...

வணக்கம் அங்கிள் வாங்கோ

அம்பலத்தார் said...

"எங்க போனாலும் மூலதனம் கல்வி என்பது யாழ்பாணத்தவனின் முதுசகம் என்பார் எஸ்.பொ "//
போராட்டம் அதையும் கொஞ்சம் தகர்த்துவிட்டது. போர்க்காலத்தில் தாயக்கத்தில் பிறந்தவர்களிடம் அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது.

அம்பலத்தார் said...

"எங்க போனாலும் மூலதனம் கல்வி என்பது யாழ்பாணத்தவனின் முதுசகம் என்பார் எஸ்.பொ "//
போராட்டம் அதையும் கொஞ்சம் தகர்த்துவிட்டது. போர்க்காலத்தில் தாயக்கத்தில் பிறந்தவர்களிடம் அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது.

தனிமரம் said...

இல்லை அக்கா தூக்கம் வருது ...தூங்கிக் கொண்டே கதைக்கிரணன் ..மணி இங்கு இரவு1.45. அதன்//போய் நித்திரை கொள்ளுங்கோ கலை நாளை நல்லதாக விடியட்டும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

ஓடிப்போய் படுங்கோ செல்லக்குட்டி.நாளைக்குக் கதைப்பம்.ஓ...இனி இந்த நேரத்தில நான் இருக்கமாட்டன்.வேலையால வரப்பிந்தும்.பாக்கலாம்....கவலையாவும் இருக்கு.அடுத்த செவ்வாய்தான் இனிச் சரிவரும்.லேட்டா வந்தாலும் ஹலோ சொல்லி வைப்பன் !

அம்பலத்தார் said...

எல்லொருக்கும் அன்பு வணக்கங்கள். யோகா உங்க விரதச்சாப்பாடில் எனக்கும் ஒரு பங்கு தாங்கோ

தனிமரம் said...

போராட்டம் அதையும் கொஞ்சம் தகர்த்துவிட்டது. போர்க்காலத்தில் தாயக்கத்தில் பிறந்தவர்களிடம் அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது.

18 April 2012 13:13 //ம்ம்ம் வெளியேறலுக்கு காரணம் தெரிந்த வேந்தே வாழ்க்.

கலை said...

ஹேமா said...
கலா சொல்றா.”கவிதை தந்த விருது”எண்டால் நான் யாரிடமோ வாங்கி மற்றவைக்குக் கொடுக்கிறதுபோல இருக்காம்.சரி.. !////


அப்புடீல்லாம் ஒண்டும் இல்லை அக்கா ...

கவிதை தந்த விருது தான் ரீ reeஅண்ணா சொன்னமாரி கவிதை மாறி இருக்கு

Yoga.S.FR said...

இரவு வணக்கம் அம்பலத்தார்!யார் உங்களை வாங்கு மேல் ஏற்றியது?இறங்குங்க!யாருக்கோ கருக்கு மட்டை கேட்கிறது போல் இருக்கு!///கலை மணியாகிறது,போய் தூங்குங்கள்!காலையில் ஆபீசில் தூங்க முடியாது/கூடாது!நாளை பார்க்கலாம்,இரவு வணக்கம்!

அம்பலத்தார் said...

ஓ கலை 1.45 ஆகிவிட்டுதா குட்னைட் ஓடிப்போய் படுங்கோ

தனிமரம் said...

ஓடிப்போய் படுங்கோ செல்லக்குட்டி.நாளைக்குக் கதைப்பம்.ஓ...இனி இந்த நேரத்தில நான் இருக்கமாட்டன்.வேலையால வரப்பிந்தும்.பாக்கலாம்....கவலையாவும் இருக்கு.அடுத்த செவ்வாய்தான் இனிச் சரிவரும்.லேட்டா வந்தாலும் ஹலோ சொல்லி வைப்பன் !

18 April 2012 13:15 // நன்றி ஹேமா நானும் விடைபெறுகின்றேன் விடியல் பொழுது நல்லதாக அமையட்டும்.

கலை said...

ஹேமா அக்கா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ,மாமா ,அங்கிள் டாடா டாடா டாடா

Yoga.S.FR said...

அம்பலத்தார் said...

எல்லொருக்கும் அன்பு வணக்கங்கள். யோகா உங்க விரதச்சாப்பாடில் எனக்கும் ஒரு பங்கு தாங்கோ.///ஹேமா,அம்பலத்தாருக்கு ஒரு உருண்டை,பிளீஸ்!

அம்பலத்தார் said...

உங்கட மூத்தமகள்தான் யோகா. "அம்பலத்தார் பாவம் வயசானவர் மெதுவாகத்தான் வருவார்" என்று சொல்லிவையுங்கோ

தனிமரம் said...

இரவு வணக்கம் அம்பலத்தார்!யார் உங்களை வாங்கு மேல் ஏற்றியது?இறங்குங்க!யாருக்கோ கருக்கு மட்டை கேட்கிறது போல் இருக்கு!///கலை மணியாகிறது,போய் தூங்குங்கள்!காலையில் ஆபீசில் தூங்க முடியாது/கூடாது!நாளை பார்க்கலாம்,இரவு வணக்கம்!// அம்பலத்தார் ஐயா, யோகா ஐயா என் பெரியவர்கள் ஏன்ர வட்டம் தாண்டி பழகிவிட்டார்கள் உரிமையோடு!

ஹேமா said...

அப்பா...ஆர் அம்பலம் ஐயாவை ஏத்தினது பின்வாங்கில.நான் சும்மா பயமுறுத்தினன் தவிர ஏதேல்லையே.கருக்குமட்டை முடிஞ்சுபோச்சு.நேசனும் படுக்கப்போய்ட்டார்.ஒற்றைப்பனை மரம் இனி நாளைக்குத்தான் !

Yoga.S.FR said...

இன்று போல் நாளையும் விடியட்டும்,கலகலப்பாக!இரவு வணக்கம் எல்லோருக்கும்!!!!!

தனிமரம் said...

உங்கட மூத்தமகள்தான் யோகா. "அம்பலத்தார் பாவம் வயசானவர் மெதுவாகத்தான் வருவார்" என்று சொல்லிவையுங்கோ// அவாவுக்கு யாழ்தேவியில் போன அனுபவம் இல்லைப்போல எஸ்பிரஸ் அனுபவம் ஹீ

ஹேமா said...

டாட்டா கருவாச்சி.சுகமா சந்தோஷமா படுக்கப்போங்கோ.சந்திக்கலாம் !

நேசன்...இரவும் அழகு விடியலும் அதேபோல உங்களுக்கு !

தனிமரம் said...

இன்று போல் நாளையும் விடியட்டும்,கலகலப்பாக!இரவு வணக்கம் எல்லோருக்கும்!!!!//நன்றி யோகா ஐயா நாளை சந்திப்போம்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...

கருக்கு மட்டையால் அடியுங்கோ ஹேமா.அமபலத்தாருக்கு பிந்தி வந்துவிட்டார். ஹீ//
ஹீ ஹீ ஹேமாவுக்கு கருக்குமட்டை எடுத்துக்கொடுத்தவரை கையும் மெய்யுமாக பிடிச்சுப்போட்டன். செல்லம்மாவிட்டை கட்டாயம் இதை போட்டுக்கொடுக்காமல்விடமாட்டன்.

தனிமரம் said...

நேசன்...இரவும் அழகு விடியலும் அதேபோல உங்களுக்கு !//நன்றி ஹேமா விடியட்டும்.

ஹேமா said...

அப்பா...படுக்கப்போறார்.நானும் இனித்தான் சாப்பிடப்போறன்.சந்திக்கலாம்.போய்ட்டு வாறேன் அம்பலம் ஐயா.மாமிக்கும் சுகம் சொல்லுங்கோ !

தனிமரம் said...

ஹீ ஹீ ஹேமாவுக்கு கருக்குமட்டை எடுத்துக்கொடுத்தவரை கையும் மெய்யுமாக பிடிச்சுப்போட்டன். செல்லம்மாவிட்டை கட்டாயம் இதை போட்டுக்கொடுக்காமல்விடமாட்டன்.//ஐயோ அவங்களிடம் சொல்லாதீங்கோ காலில் விழெஉகின்றேன் பிறகு கஞ்சியில்....

ஹேமா said...

கருக்குமட்டை மாட்டிவிட்டிட்டு ஒரு ஆள் நேரத்துக்குப் படுக்கப்போகுது.வரட்டும் வரட்டும் !

தனிமரம் said...

அப்பா...படுக்கப்போறார்.நானும் இனித்தான் சாப்பிடப்போறன்.சந்திக்கலாம்.போய்ட்டு வாறேன் அம்பலம் ஐயா.மாமிக்கும் சுகம் சொல்லுங்கோ !

18 April 2012 13:24 //நானும் விடைபெறுகின்றேன் அமபலத்தார் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். மீண்டும் சந்திப்போம் நேரம் இருக்கும் போது...இனிய இரவாக அமையட்டும் .

கணேஷ் said...

நான் இன்னும் கவிதை தந்த விருதை என் ப்ளாக்கில் வைக்கலியே... இப்பவே வெச்சுடறேன் என் ஃப்ரெண்ட் குட்டறதுக்குள்ள... நீங்க அவங்கட்ட ‌சொல்லிடாதீங்கோ நேசன்...!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா!

தனிமரம் said...

நன்றி கணேஸ் அண்ணா.வருகைக்கும் கருத்துக்கும்.