01 April 2012

நிஜம் சொல்லும் கதை

குளிர்கால பின்னிரவில் போட்டிருக்கும் கம்பளிச் சால்வையையும் மீறிய குளிர் காதினை விறைக்கும் அளவுக்கு நடுங்கி கொண்டிருக்க, நண்பர்களின் வாடகை அறைக் கதவினைத் திறந்து உள்ளே வந்தான் ராஜ். மற்ற நண்பர்கள் எல்லாம் அதிகாலை 4.30 எழும்புவதால் நல்ல நித்திரை. சத்தம் இல்லாமல் தனது சப்பாத்தைக் கழற்றியவன் தனது  கைபேசி அழைப்பதை உணர்ந்து கொண்டான் .. உதறும் வண்ணம் ஆழைப்பு மணியினை வைத்திருப்பதால் மற்றவர்கள் நித்திரைக்கு சங்கடம் வராது. எடுத்தவன், மறுமுனையில் அழைத்தது அக்காள் லண்டனில் இருந்து.
என்ன தம்பி வேலைமுடிந்து வந்தாச்சா?
ஓம் அக்கா!
என்னாச்சு வீட்டு அலுவல்..? என்று எடுத்த விடயத்திற்கு வந்தாள்.

ஒரு மாதிரி இந்தவீடு சரிவந்திட்டுது. வங்கியும் வீட்டுக் கடன் தாறன் என்று சொன்னதில் உடனேயே முதல் ஒப்பந்தம் போட்டாச்சு.

இந்த தொடர்மாடி வீடு எடுக்க நான் எத்தனை அலைச்சல்.

. உதைவிட ஊரிலேயே யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடிவந்திட்டு மீண்டும் போய் இருந்தது போல உழைச்சுக் கொண்டு ஊரில் போய் இருந்திருக்கலாம்!

இங்கால வந்தப்பிறகு தத்துவம் பேசி வேலையில்லை மனிசி வார நேரம் வீடு சரிவந்திட்டுது என்று சொல்லு . உனக்கு எப்பவம் உன் மச்சாளைத் தூக்கி வைக்கனும்.

சரி வீட்டுக்கு எழுத்துக்கூலிஎவ்வளவு ஈரோ ?

15000! என்ர உழைப்பு இந்த எழுத்துக்கூலிக்குப் போதாது நண்பன் சேகரிடம் கடன் வாங்கியிருக்கின்றன்!

ஏண்டா முட்டாள், வேலை செய்யிற வந்து 10 வருசமா உழைச்சகாசு எல்லாம் என்ன செய்தனி? எழுத்துக்கூலிகூட மிச்சம் பிடிக்கத் தெரியல வெளியில் சொன்னால் வெட்கக்கேடு..!

என்ன அக்காள் நீயும் மற்றவங்க மாதிரி கேட்கிறாய்?

வந்து 5 வருசம் அகதி விசா எடுக்க எத்தனை சத்தியக்கடுதாசி மொழிமாற்றல் கடிதம்.. மூன்று முறை வழக்காட நீதிமன்றத்தில் சட்டதரனிக்கு கொடுத்த காசு.. எல்லாம் முதுகு நோக சட்டி கழவி உழைத்தது! தெரியாதா? அப்ப எல்லாம் உயிரோடு இருக்கிறனா இல்லையா என்று தெரியாத உதவக்கரையைத் தேடி மாப்பிள்ளை என்று வரும் மாமா, மாமி, மச்சான்கள் என்று, இப்ப வரும் சொந்தக்களுக்கு கொடுத்த எத்தினை ஆயிரம் ஈரோ.. இதுக்கெல்லாம் கணக்குச் சொன்னதில்லை உனக்கு.!!

டேய் நீ மட்டுமா?  இங்க வந்த எல்லாரும் அப்படித்தான் கஸ்ரப்பட்டு முன்னுக்கு வந்தாங்க, வாராங்க! வரும் போது யாரும் வேட்டி மடிப்பில் முடிஞ்சு கொண்டு வரல.. உனக்கு மிச்சம் பிடிக்கத் தெரியல ஊர் சுற்றினது தான் அதிகம்!

அக்காள் இன்று இருப்பேன், நாளை என் படம் லங்காசிறியில் வருமா என்று தெரியாத அவசர உலகில் ஆனந்தமா சில இடத்தைப் பார்த்தேன். சரி சரி உனக்கு காலையில் பள்ளிக்கு என்ர மருமகன்களை கூட்டிக் கொண்டு போகனும் நித்திரையைக் கொள் நான் பிறகு கதைக்கிறன்.

"இல்லை கொஞ்சம் இரு, மச்சான் கதைக்கப் போறாராம்" என்று கைமாற்றியது பெரிய மச்சானிடம்.

சவா மச்சான்!

சவா மச்சான், என் வீட்டு அலுவல் சரியாச்சா ?

ஒம் மச்சான், அடுத்த மாதம் முதல் தனிக்குடித்தனம் போகலாம் என நினைக்கின்றேன்.

நல்ல விடயம்!

ஒரே வீட்டுக்குள் பலர் சொந்தக்காரங்களுடன் ஒன்றாக இருந்து சண்டை பிடிக்காமல் தனியாகப் போவது நல்லது மச்சான்.
உங்கபோல இங்க (பிரான்ஸு)மூன்று நாலு குடும்பம் ஒன்றாக இருப்பது பிரெஞ்சில் மிகக்குறைவு. சொந்த வீடோ வாடகை வீடோ எல்லாரும் தனித்தனியாகத்தான் மச்சான் இங்க இருந்திட்டுப் போகனும் உங்களுக்கு நான் சொல்லனுமா?
"வீனா கடன் அதிகம் பாடாத வீட்டுக்குத் தேவையான சின்னச்சின்ன தட்டு முட்டுக்களை பார்த்துப் பார்த்து வாங்கலாம். ஒன்றாக எல்லாத்தையும் கடனுக்கு வாங்கிப் போட்டு அதற்கு கடன் கட்ட அதிகம் ஓடி ஓடி உழைத்தால் பின் வாற பொண்டாட்டி உன்ர வேலையைக் கட்டிக் கொண்டு இரு என்று விட்டு ஓடிவிடுவாள்!"

என்ன மச்சான் இப்ப வீட்டில் நிற்பது இல்லை என்றதைக் குத்திக்காட்டிக் கடிக்கின்றீங்க என்று புரியுது.
கொஞ்சம் கடன் இருக்கு சின்ன மச்சானை நீங்க சொல்லியும் கேட்காமல் கடன் பட்டு ஊரில் இருந்து இறக்கி விட்டன். அவன் வெள்ளைத் தோலைத் தேடிக்கொண்டு ஓடிவிட்டான். கொடுத்த காசுக்கு நான் தானே வட்டிகட்டி முடிக்கனும். உதவிக்கு இருக்கட்டும் என்றால் ஊதாரியாகிப் போட்டான். என்ன செய்வது மாமாவுக்காக செய்த உதவி இனிமேல் யாரையும் நாட்டில் இருந்து இறக்க என்னால் முடியாது. இப்பவே இரண்டு வேலை செய்ய முடியாமல் நானே மூச்சு வாங்கிறன். மனிசி வந்தால் அவளுக்கும் இடம் வலம் காட்டிவிடனும், பாசை படிக்க விடனும் என் குடும்பம் என்று ஓடவே காலம் சரி வேற என்ன விசேசம் மச்சான்? என்னடா விடிந்தால் வேலை அவ்வளவுந்தான் கையில் ஒரு ஸ்டேல்லா பீர் இருக்கு நீதான் வீடு வேண்டினதுக்கு பார்ட்டி தரல!

சும்மா போங்க மச்சான் என் பாட்டி இருந்தால் நானும் 25 வயசில் கலியாணம் கட்டியிருப்பன்.

நீ பிரெஞ்சுக்காரிக்கு காத்திருந்ததுக்கு நாங்க என்ன செய்ய முடியும்.

மச்சானுக்கு பீர் கூடிப்போச்சு அடுத்த விடுமுறைக்கு லண்டன் வரும் போது வைனோட வாறன், இப்ப படுக்கப் போறன் மச்சான்.

சரி மச்சான் சந்திப்போம்!

கைபேசி துண்டிகப்படும் போது அடுத்த அறையில் படுத்திருக்கும் நண்பனுக்கு ஊரில் இருந்து அழைப்பு வருகின்றது. அவன் வீட்டுக்காரன் ரிங்டோன் போர்த்திக் கொண்டு படுத்துக்கவா பாட்டு பலதடவை அடிக்கின்றது! அவனோ யாழ்தேவி போல புகைவிடாமல் கொறட்டை... என் அறை நேரம் இப்போது நள்ளிரவு 1.30 காட்டுகின்றது.(யாவும் கற்பனை) /

////
சாவா-பிரெஞ்சில் நலமா.

84 comments :

கணேஷ் said...

அக்காவும் மச்சானும பேசுகிற விதத்தில்தான் எத்தனை வித்தியாசம், அருமையான, எளிமையான, மனதைத் தொட்ட கதை. நன்று.

கணேஷ் said...

இப்பத்தான் (லேட்டா) கவனிச்சேன்... தமிழ்மண நட்சத்திரத்திற்கு என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் தனிமரம் சார்..
இனிய தமிழ்மண நட்சத்திரவார வாழ்த்துக்கள்!

பாலா said...

எதார்த்தமான உரையாடல்.

பாலா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Yoga.S.FR said...

காலை வணக்கம் நேசன்!சகோதரிகள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!சவா பியான்?ஐ,நேசன் வீடு வாங்கீட்டார் !ராப்பகலா நிக்க,இருக்க நேரமில்லாம அலையப் போறார்,ஜாலி!!!!!!!

Yoga.S.FR said...

நிரூபன் said...

வணக்கம் தனிமரம் சார்..
இனிய தமிழ்மண நட்சத்திரவார வாழ்த்துக்கள்!////அடடே!!!பப்பாவில "உங்களையும்" ஏத்திப் போட்டாங்களோ,ஹி!ஹி!ஹி!!!!!!!!சொல்லவேயில்ல?தெரியும்,உங்களுக்கு விளம்பரம் புடிக்காதெண்டு.

Yoga.S.FR said...

அப்ப இந்தக் கிழம முழுக்க காலங்காத்தால ஒரு அலம்பலை எதிர்பாக்கலாம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

Yoga.S.FR said...

கணேஷ் said...

இப்பத்தான் (லேட்டா) கவனிச்சேன்... தமிழ்மண நட்சத்திரத்திற்கு என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்.////வாங்க சார்!நேசன் வீட்டுக்கு முதல்,முதலா வந்திருக்கிறீங்க!சூடா ஒரு பால் கோப்பி சாப்பிடுங்க!(அவரும் வந்து ஒன்று தருவார்!)

Yoga.S.FR said...

இந்தப் படத்தில இருக்கிற கட்டிடத்தில தான் வாங்கினனீங்களோ?சார்ஜ் கூடவா இருக்கும் போலயிருக்கே?அதுக்குப் புறம்பா உழைக்கோணும்!

Yoga.S.FR said...

வரும் போது யாரும் வேட்டி மடிப்பில் முடிஞ்சு கொண்டு வரல.. உனக்கு மிச்சம் பிடிக்கத் தெரியல ஊர் சுற்றினது தான் அதிகம்! ////அச்சா,அச்சா!என்னை மாதிரியே!!!!என்ன,அந்தக் கிணத்துக்கை(வீடு வாங்கிறது)நான் விழயில்ல,ஹி!ஹி!ஹி!!!!!

சென்னை பித்தன் said...

நட்சத்திர வாழ்த்துகள்!

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கதை... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் சகா !!! எந்நாளும் பொன்னாளாகட்டும்....

Esther sabi said...

எளிய முறையில் நல்லதோர் கதை... தமிழ் மணத்தில் ஏதோ நீங்கள் நட்சத்திரம் என்று பலர் வாழ்து கூற கேட்டு தமிழ் மணம் சென்று பார்த்தேன் ஆமாம் வாழ்த்துக்கள்.......

Anonymous said...

அவ்வவ் ..இண்டு கொஞ்சம் வேலை அப்புறம் வந்து படித்துப் போட்டு கமெண்ட் போடுவினம் அண்ணா ..

ஹேமா அக்கா ஆளையேக் காணும் ...

என்னது நட்சத்திரமா ...அவ்வ ..வாழ்த்துக்கள் ரீ ரீ அண்ணா

Anonymous said...

ஹேமா said...
யோகா அப்பா பாவம் எங்கட கருவாச்சிக் கலை பயந்தே போய்ட்டாபோல.எங்கட குறூப்ல சின்னக்குட்டி அவதானே.அதிரா இல்லாடியும் பாருங்கோ எவ்வளவு கெட்டித்தனமா சமாளிக்கிறா.நல்ல ஒரு புத்திசாலிக் குட்டிச் செல்லம்.எனக்கு நிறையை பிடிச்சிருக்கு.காக்கா செல்லக் காக்கா !////////

ஹேமா அக்கா நீங்க சொன்னது மாமாக் காதில் விழ வில்லையாம் ...எங்க இன்னொரு முறை சொல்லுங்க ..சொல்லுங்க ...

அவ்வவ் நான் புத்திசாலிக் குட்டிச் செல்லம் ஹ ஹ ஹா ...அக்கா இதை கேட்டு வானத்திலே பறந்து விட்டணம் ...ரெண்டு நாளைக்கு அலம்பல் பண்ணிப் போடுவேன் இதை வைத்தே ...

ஹேமா அக்கா அன்புக்கு நன்றிச் சொல்லப் பிடாது ...அதனால் நான் சொல்ல மாட்டினம் ...

ஹேமா அக்கா உங்கட எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அஅஅஅஅஅஅஅஅஅ பிடிச்சி இருக்கு ....உங்க கூட செல்ல சண்டை போடுறது ஜாலி ஆ இருக்கு ...

ஹேமா said...

சொல்லாம விட்ட நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் இந்தக்கிழமை முழுக்க.ஜொலிக்க வைப்போம்மெல்லோ.ரீரீ புகழ் தமிழ்மணத்தில் !

வீடு வாங்கிட்டீங்கள் நேசன்.பெரிய அறை எனக்கு.அந்தக் குட்டி அறை கருவாச்சிக்குப் போதும்.வருவா பாருங்கோ சண்டைக்கு !

ஹேமா said...

இண்டைக்கு கோப்பிக்கும் வழியில்லாமல் போச்சு.ஃப்ரெண்ட் கணேஸ் முந்திட்டாரே.சரி பாவம் வெயில்ல களைச்சு வந்திருப்பார்.

என்ன...யோகா அப்பாவுக்கு பால்கோப்பி இப்ப கிடைக்கிறதேயில்லை.

கருவாச்சிக்குட்டி இனி ஒவ்வொரு நாளும் காவல் இருக்கப்போறா அண்ணாச்சின்ர கோப்பிக்கு.நானும் நித்திரை முழிச்செண்டாலும் கோப்பி வாங்கிக் குடிப்பன் !

ராஜ நடராஜன் said...

தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹேமா அக்கா வந்து சென்றார்கள் தானே ...ஒரேப் புகைச்சல் வாசனை வீசிட்ட்று ...

Anonymous said...

நிஜம் சொல்லுற கதை எண்டு சொல்லிப் போட்டு அப்புறமென்ன யாவும் கற்பனை எண்டு ...

Anonymous said...

கற்பனை என்றாலும் நிதர்சனம்...
வாழ்த்துக்கள் நேசரே....ஜமாயுங்கள்..

Seeni said...

suvaraasyam!

தனிமரம் said...

வாங்க கணேஸ் அண்ணா!
முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!
நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நன்றி நிரூபன் வாழ்த்துக்கு. குருநாதர் வந்ததில் சிஸ்சயனுக்கு மகிழ்ச்சி!

தனிமரம் said...

நன்றி பாலா வருகைக்கும் ,கருத்துரைக்கும் .வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம் நேசன்!சகோதரிகள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!சவா பியான்?ஐ,நேசன் வீடு வாங்கீட்டார் !ராப்பகலா நிக்க,இருக்க நேரமில்லாம அலையப் போறார்,ஜாலி!!!!!!!

1 April 2012 22:39 
// வணக்கம் யோகா ஐயா! ஓடிவதைப்பார்ப்பதில் யோகா ஐயாவுக்கு ஒரு சந்தோஸம் .ம்ம்ம் வீட்டை வாங்கிப் போட்டுச் சொல்லுகின்றேன்!ஹீ கற்பனை நிஜமாகுமா??? ?

தனிமரம் said...

நிரூபன் said...

வணக்கம் தனிமரம் சார்..
இனிய தமிழ்மண நட்சத்திரவார வாழ்த்துக்கள்!////அடடே!!!பப்பாவில "உங்களையும்" ஏத்திப் போட்டாங்களோ,ஹி!ஹி!ஹி!!!!!!!!சொல்லவேயில்ல?தெரியும்,உங்களுக்கு விளம்பரம் புடிக்காதெண்டு.

1 April 2012 22:43 
//அதுதான் சொல்லவில்லை யோகா ஐயா! ஹீஹீ

தனிமரம் said...

அப்ப இந்தக் கிழம முழுக்க காலங்காத்தால ஒரு அலம்பலை எதிர்பாக்கலாம்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

1 April 2012 22:45 
-/அப்படிச் சொல்ல முடியாது நேரம் கிடைக்கும் போது தான் !

தனிமரம் said...

கணேஷ் said...

இப்பத்தான் (லேட்டா) கவனிச்சேன்... தமிழ்மண நட்சத்திரத்திற்கு என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள்.////வாங்க சார்!நேசன் வீட்டுக்கு முதல்,முதலா வந்திருக்கிறீங்க!சூடா ஒரு பால் கோப்பி சாப்பிடுங்க!(அவரும் வந்து ஒன்று தருவார்!)
/:யோகா ஐயா  கணேஸ் அண்ணா பலதடவை வந்து இருக்கின்றார் இன்றுதான் முதல் பால்க்கோப்பி கிடைத்திருக்கு இரட்டிப்பாக உங்க கையால் ஒன்றும் என் கையாள் இன்னொன்றும்!

தனிமரம் said...

இந்தப் படத்தில இருக்கிற கட்டிடத்தில தான் வாங்கினனீங்களோ?சார்ஜ் கூடவா இருக்கும் போலயிருக்கே?அதுக்குப் புறம்பா உழைக்கோணும்!

1 April 2012 23:00 
// இப்படி ஒரு அமைப்பில் தான் வேண்டியிருக்கின்றேன் உழைப்போம் !ஓடியோடி !

தனிமரம் said...

வரும் போது யாரும் வேட்டி மடிப்பில் முடிஞ்சு கொண்டு வரல.. உனக்கு மிச்சம் பிடிக்கத் தெரியல ஊர் சுற்றினது தான் அதிகம்! ////அச்சா,அச்சா!என்னை மாதிரியே!!!!என்ன,அந்தக் கிணத்துக்கை(வீடு வாங்கிறது)நான் விழயில்ல,ஹி!ஹி!ஹி!!!!!

1 April 2012 23:05 
//தப்பி விட்டீர்கள் ஐயா!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையான கதை... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் சகா !!! எந்நாளும் பொன்னாளாகட்டும்....

2 April 2012 00:00 
// நன்றி அமுதன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

அவ்வவ் ..இண்டு கொஞ்சம் வேலை அப்புறம் வந்து படித்துப் போட்டு கமெண்ட் போடுவினம் அண்ணா ..

ஹேமா அக்கா ஆளையேக் காணும் ...

என்னது நட்சத்திரமா ...அவ்வ ..வாழ்த்துக்கள் ரீ ரீ அண்ணா

2 April 2012 03:23 
// வாழ்த்துக்கு நன்றி கலை. பிறகு
வந்து படியுங்கோ!

தனிமரம் said...

ஹேமா அக்கா உங்கட எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அஅஅஅஅஅஅஅஅஅ பிடிச்சி இருக்கு ....உங்க கூட செல்ல சண்டை போடுறது ஜாலி ஆ இருக்கு ...// அக்காளும் தங்கையும் சண்டை போடுங்கோ நாங்க விடுப்புப் பார்க்கின்றோம் சரிதானே யோகா ஐயா!

தனிமரம் said...

சொல்லாம விட்ட நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் இந்தக்கிழமை முழுக்க.ஜொலிக்க வைப்போம்மெல்லோ.ரீரீ புகழ் தமிழ்மணத்தில் .
//நன்றி ஹேமா வாழ்த்துக்கு துசியின் கும்மிப்பதிவில் பொதுவாகச் சொல்லியிருந்தேனே அக்காள்!

வீடு வாங்கிட்டீங்கள் நேசன்.பெரிய அறை எனக்கு.அந்தக் குட்டி அறை கருவாச்சிக்குப் போதும்.வருவா பாருங்கோ சண்டைக்கு !
//தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கோ நாங்க விறாந்தையில் இருப்போம் அதிகாலை போனால் படுக்கைக்கு மட்டும் தானே வீட்டை வாரது.ஹீ
2 April 2012 04:38 

தனிமரம் said...

இண்டைக்கு கோப்பிக்கும் வழியில்லாமல் போச்சு.ஃப்ரெண்ட் கணேஸ் முந்திட்டாரே.சரி பாவம் வெயில்ல களைச்சு வந்திருப்பார்.

என்ன...யோகா அப்பாவுக்கு பால்கோப்பி இப்ப கிடைக்கிறதேயில்லை.

கருவாச்சிக்குட்டி இனி ஒவ்வொரு நாளும் காவல் இருக்கப்போறா அண்ணாச்சின்ர கோப்பிக்கு.நானும் நித்திரை முழிச்செண்டாலும் கோப்பி வாங்கிக் குடிப்பன் !

2 April 2012 04:39 
//எல்லோருக்கும் கொடுப்போம் பால்க்கோப்பி!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ராஜ நடராஜன் அண்ணா முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

ஹேமா சாம்பிரானிப் புகை போட்டாங்களோ கலை எழும்பட்டும் என்று.ஹீ

தனிமரம் said...

தலைப்பு நிஜம் சொல்லும் கதை கலை ஆனால் இது ஒரு கற்பனைதான்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி அண்ணா. வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா. வருகைக்கும் கருத்துரைக்கும் .

Anonymous said...

வீடு வாங்கிட்டீங்கள் நேசன்.பெரிய அறை எனக்கு.அந்தக் குட்டி அறை கருவாச்சிக்குப் போதும்.வருவா பாருங்கோ சண்டைக்கு !//////////////////////என்னது பெரிய அறை உங்களுக்கா ...ஆசை தோசை அப்பள வடை தான் ஹேமா அக்கா .....

கல்யாணம் கட்டிக் கொடுத்திட்டோமல்லோ இனிமேல் விருந்தாளிதான் ...விருந்தாளியா ரெண்டு ஒரு நாளைக்கு வேணா தங்கிட்டுப் போங்கோ ...எனக்குத் தான் வீடு முழுசா உரிமையாக்கும் ...

தனிமரம் said...

கல்யாணம் கட்டிக் கொடுத்திட்டோமல்லோ இனிமேல் விருந்தாளிதான் ...விருந்தாளியா ரெண்டு ஒரு நாளைக்கு வேணா தங்கிட்டுப் போங்கோ ...எனக்குத் தான் வீடு முழுசா உரிமையாக்கும் ... //ஹா ஹா கலை ஹேமாவைக் கலாய்க்குதே!

அம்பலத்தார் said...

தமிழ்மண நட்சத்திரம் நேசன் அவர்களே வாழ்த்துக்கள்

ஹேமா said...

பாருங்கோ பாருங்கோ கருவாச்சி எப்பிடியெல்லாம் மூளையாக் கதைக்குது.அப்ப நான் காக்கா எண்டு சொல்லுவனோ இல்லையோ.தனக்குத்தானாம் முழு வீடும்.யோகா அப்பா....!

அம்பலத்தார் said...

நேசன் தமிழ்மணம் இப்பொழுது உங்களை இந்தவார நட்சத்திரமாக தெரிவு செய்திருக்கு ஆனால் நீங்க அன்றும் இன்றும் என்றும் ஒளிர்விடும் நட்சத்திரம்தான். நேசன் நீங்க மேலும் பல சிறப்புக்களையும் உச்சங்களையும் காண வாழ்த்துகிறேன்

அம்பலத்தார் said...

அட பாவமே நேசன்ரை வீட்டை கலையும் ஹேமாவும் ஆளுக்கு ஆள் பங்குபோட்டால் நேசனுக்கு மிஞ்சுறது வீட்டுக்கு எடுத்தகடன் மட்டுந்தானோ?

ஹேமா said...

அம்பலம் ஐயா செல்லம்மா மாமி சுகமா இருக்கிறாவோ.சமைச்சுக் குடுத்தீங்களோ.உங்களுக்குக் கஞ்சி தந்தவ எண்டு ஏலாத நேரத்தில நீங்க கஞ்சி காய்ச்சிக் குடுக்காதேங்கோ.வடிவாச் சமைச்சுக்குடுங்கோ.

களைக்கிற நேரத்தில ஓடிவாங்கோ.நாங்கள் இருக்கிறம் பால்க்கோப்பி,பிளேன்டீ தர இருக்கிறம்.தமிழ்மண நட்சத்திர நாயகன் இந்தக்கிழமை முழுக்க எல்லாருக்கும் ஒவ்வொருநாளும் பால்கோப்பி தருவாராம் !

அம்பலத்தார் said...

அநேகமாக ஒவ்வொரு புலம்பெயர் குடும்பங்களிலும் இந்தக்கதையும் கதாபாத்திரங்களும் வாழ்ந்துகொண்டிருக்கினம்.

Anonymous said...

ஹேமா அக்கா உங்களிடம் ondu சொல்ல மறந்தேப் போயி விட்டினம் ..உங்கட தம்பி உங்களுக்காய் ஒரு பதிவு போட்டவை ..உங்கட சார்பில் நானே நன்றி தெரிவித்துவிட்டினம் ...

http://www.thamilnattu.com/2012/04/blog-post.html

ஹேமா said...

கருவாச்சி நான் நிரூன்ர பதிவு பாத்தனான்.அவரும் சேர்ந்தெல்லோ கலாய்ச்சிருக்கிறார்.

ஊரில சொல்லுவினம்.ஒல்லியா காக்கா மாதிரி இருக்கிற ஆக்களுக்கு வினையாம்.உடம்பு வைக்காதாம்.நாங்கள்ல்லாம் குண்டா இருந்தாத்தான் வடிவு!

காக்கா யோசிக்குது.தண்ணி தரவோ கொஞ்சம் குடிக்க !

Anonymous said...

ஹேமா said...
பாருங்கோ பாருங்கோ கருவாச்சி எப்பிடியெல்லாம் மூளையாக் கதைக்குது.அப்ப நான் காக்கா எண்டு சொல்லுவனோ இல்லையோ.தனக்குத்தானாம் முழு வீடும்.யோகா அப்பா....!/////////

sollungo hemaa அக்கா உங்களுக்கு இல்லாத உரிமையா காக்கா,குருவி ,குயில் ,மயில் ,பூற ,அன்னம் எப்புடீல்லாம் தோணுதோ அப்புடி எல்லாம் கூப்பிடுங்கோ ...அப்புடி எல்லாம் ஒண்டும் தோணலை
கழுதை எண்டு கூப்பிடத் தான் ஆசை அப்புடி எண்டு உங்க மனம் நினைக்குது ..ஓகே அப்புடிக் கூட நீங்கள் என்னச் சொல்லலாம் ...நான் கோவிச்சிக்க மாட்டினம் ...ஹ ஹ ஹா ...

யோகா மாமா வந்து நியாயம் aarup பக்கம் எண்டு sollungo

Anonymous said...

ஹேமா said...
கருவாச்சி நான் நிரூன்ர பதிவு பாத்தனான்.அவரும் சேர்ந்தெல்லோ கலாய்ச்சிருக்கிறார்.

ஊரில சொல்லுவினம்.ஒல்லியா காக்கா மாதிரி இருக்கிற ஆக்களுக்கு வினையாம்.உடம்பு வைக்காதாம்.நாங்கள்ல்லாம் குண்டா இருந்தாத்தான் வடிவு!////////////

சும்மா தான் பிட்டு போட்டினம் ஹேமா அக்கா குண்டு எண்டு ..அவ்வவ் அதான் உண்மையா ...குண்டா வடிவா நம்ம குண்டுமணி மாறி இருப்பேல் அல்லோ ...

Anonymous said...

காக்கா யோசிக்குது.தண்ணி தரவோ கொஞ்சம் குடிக்க !//////////////////////

காக்காக்கு மூளை இருக்குது அதனால யோசிக்குது ...அவ்வ்வ்வ் பொறமை படாதீங்கோ ....ஹ ஹ ஹாஹா ...குருவே இந்த ஹேமா அக்கா எப்புடி எல்லாம் காலயிக்கிறாங்க ...அவ்வ்வ்வ்

Anonymous said...

ஹேமா said...
அம்பலம் ஐயா செல்லம்மா மாமி சுகமா இருக்கிறாவோ.சமைச்சுக் குடுத்தீங்களோ.உங்களுக்குக் கஞ்சி தந்தவ எண்டு ஏலாத நேரத்தில நீங்க கஞ்சி காய்ச்சிக் குடுக்காதேங்கோ.வடிவாச் சமைச்சுக்குடுங்கோ.

களைக்கிற நேரத்தில ஓடிவாங்கோ.நாங்கள் இருக்கிறம் பால்க்கோப்பி,பிளேன்டீ தர இருக்கிறம்.தமிழ்மண நட்சத்திர நாயகன் இந்தக்கிழமை முழுக்க எல்லாருக்கும் ஒவ்வொருநாளும் பால்கோப்பி தருவாராம் !

///

ஆன்டி பரவாயிலைய அங்கிள் ..பத்திரமா பார்த்துகொங்கோ ...நிறைய உதவி செய்யுங்க அங்கிள்

Yoga.S.FR said...

எல்லோருக்கும் இரவு வணக்கம்!பகலில் கொஞ்சம் வெளி வேலை இருந்தது,வர முடியவில்லை!என் குண்டுப் பையனுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை,அதனால் அங்கு,இங்கென்று.....!அப்புறம் காலையில் பார்த்துவிட்டு ஏதேதோ எல்லாம் கண்ட மேனிக்கு எழுதிவிட்டேன் போலிருக்கிறது.அப்படி,இப்படிக் கொஞ்சம் அதிகமாகப் பழகி விட்டால் அதீத உரிமை எடுத்துக் கொள்வது பழக்கமாகி விட்டது!தவறாக ஏதுமிருந்தால் மன்னித்து விடுங்கள் இந்தக் கி....னை,ஹ!ஹ!ஹா!!!!!

Yoga.S.FR said...

ஹேமா said...

இண்டைக்கு கோப்பிக்கும் வழியில்லாமல் போச்சு.ஃப்ரெண்ட் கணேஸ் முந்திட்டாரே.சரி பாவம் வெயில்ல களைச்சு வந்திருப்பார்.

என்ன...யோகா அப்பாவுக்கு பால்கோப்பி இப்ப கிடைக்கிறதேயில்லை.

கருவாச்சிக்குட்டி இனி ஒவ்வொரு நாளும் காவல் இருக்கப்போறா அண்ணாச்சின்ர கோப்பிக்கு.நானும் நித்திரை முழிச்செண்டாலும் கோப்பி வாங்கிக் குடிப்பன் !////எனக்கு இனி பால்கோப்பி வேணாம்!முட்டைக் கோப்பி தான் வேணும்!(இப்புடியாவது முருங்கக்காய் உடம்பைத் தேத்துவம்!)

தனிமரம் said...

தமிழ்மண நட்சத்திரம் நேசன் அவர்களே வாழ்த்துக்கள்//ந்ன்றி அம்பலத்தார் வாங்க அன்ரி நலமா!

தனிமரம் said...

பாருங்கோ பாருங்கோ கருவாச்சி எப்பிடியெல்லாம் மூளையாக் கதைக்குது.அப்ப நான் காக்கா எண்டு சொல்லுவனோ இல்லையோ.தனக்குத்தானாம் முழு வீடும்.யோகா அப்பா....!

2 April 2012 11:07 // யாராவது வீட்டை எடுங்கோ என்னை ஒரு மூளையில் நித்திரைகொள்ளவிட்டால் போதும். யோகா ஐயா சொல்லுங்கோ!

துரைடேனியல் said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். அப்புறம் கதை வெரி இன்ட்ரெஸ்டிங்.

தனிமரம் said...

நேசன் தமிழ்மணம் இப்பொழுது உங்களை இந்தவார நட்சத்திரமாக தெரிவு செய்திருக்கு ஆனால் நீங்க அன்றும் இன்றும் என்றும் ஒளிர்விடும் நட்சத்திரம்தான். நேசன் நீங்க மேலும் பல சிறப்புக்களையும் உச்சங்களையும் காண வாழ்த்துகிறேன்

2 April 2012 11:08 //நன்றி அம்பலத்தார் உங்கள் ஆசி என்னை இன்னும் வளர்க்கும் !

தனிமரம் said...

அட பாவமே நேசன்ரை வீட்டை கலையும் ஹேமாவும் ஆளுக்கு ஆள் பங்குபோட்டால் நேசனுக்கு மிஞ்சுறது வீட்டுக்கு எடுத்தகடன் மட்டுந்தானோ?

2 April 2012 11:11 //பருவாயில்லை அம்பலத்தார் சகோதரிகள் தானே!

தனிமரம் said...

அம்பலம் ஐயா செல்லம்மா மாமி சுகமா இருக்கிறாவோ.சமைச்சுக் குடுத்தீங்களோ.உங்களுக்குக் கஞ்சி தந்தவ எண்டு ஏலாத நேரத்தில நீங்க கஞ்சி காய்ச்சிக் குடுக்காதேங்கோ.வடிவாச் சமைச்சுக்குடுங்கோ.

களைக்கிற நேரத்தில ஓடிவாங்கோ.நாங்கள் இருக்கிறம் பால்க்கோப்பி,பிளேன்டீ தர இருக்கிறம்.தமிழ்மண நட்சத்திர நாயகன் இந்தக்கிழமை முழுக்க எல்லாருக்கும் ஒவ்வொருநாளும் பால்கோப்பி தருவாராம் !//பால்க்கோப்பி நேரம் மாறுபடும் அம்பலத்தார் சொல்லிப்போட்டன்! ஹேமா உசுப்பேத்துகி்றா!

தனிமரம் said...

அநேகமாக ஒவ்வொரு புலம்பெயர் குடும்பங்களிலும் இந்தக்கதையும் கதாபாத்திரங்களும் வாழ்ந்துகொண்டிருக்கினம்.

2 April 2012 11:17 //இது ஒரு கற்பனை அம்பலத்தார்!

தனிமரம் said...

ஹேமா அக்கா உங்களிடம் ondu சொல்ல மறந்தேப் போயி விட்டினம் ..உங்கட தம்பி உங்களுக்காய் ஒரு பதிவு போட்டவை ..உங்கட சார்பில் நானே நன்றி தெரிவித்துவிட்டினம் ...//எனக்கும் சேர்த்து சொல்லுங்கோ கலை!ஹீ

தனிமரம் said...

ஊரில சொல்லுவினம்.ஒல்லியா காக்கா மாதிரி இருக்கிற ஆக்களுக்கு வினையாம்.உடம்பு வைக்காதாம்.நாங்கள்ல்லாம் குண்டா இருந்தாத்தான் வடிவு!

காக்கா யோசிக்குது.தண்ணி தரவோ கொஞ்சம் குடிக்க !

2 April 2012 11:24 //ஹா ஹா

தனிமரம் said...

ollungo hemaa அக்கா உங்களுக்கு இல்லாத உரிமையா காக்கா,குருவி ,குயில் ,மயில் ,பூற ,அன்னம் எப்புடீல்லாம் தோணுதோ அப்புடி எல்லாம் கூப்பிடுங்கோ ...அப்புடி எல்லாம் ஒண்டும் தோணலை
கழுதை எண்டு கூப்பிடத் தான் ஆசை அப்புடி எண்டு உங்க மனம் நினைக்குது ..ஓகே அப்புடிக் கூட நீங்கள் என்னச் சொல்லலாம் ...நான் கோவிச்சிக்க மாட்டினம் ...ஹ ஹ ஹா ...

யோகா மாமா வந்து நியாயம் aarup பக்கம் எண்டு sollung// புறா நல்லா இருக்கு ஹேமா!

தனிமரம் said...

சும்மா தான் பிட்டு போட்டினம் ஹேமா அக்கா குண்டு எண்டு ..அவ்வவ் அதான் உண்மையா ...குண்டா வடிவா நம்ம குண்டுமணி மாறி இருப்பேல் அல்லோ ...

2 April 2012 11:35 //இதைத்தான் போட்டு எடுப்பது என்பதா கலை!

தனிமரம் said...

ஆன்டி பரவாயிலைய அங்கிள் ..பத்திரமா பார்த்துகொங்கோ ...நிறைய உதவி செய்யுங்க அங்கிள்

2 April 2012 11:44 // அதுதானே அன்ரி இருந்து சமைத்து தர சாப்பிட்டனீங்க இப்ப ச்மைத்துக் கொடுங்கோ!

தனிமரம் said...

எல்லோருக்கும் இரவு வணக்கம்!பகலில் கொஞ்சம் வெளி வேலை இருந்தது,வர முடியவில்லை!என் குண்டுப் பையனுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை,அதனால் அங்கு,இங்கென்று.....!அப்புறம் காலையில் பார்த்துவிட்டு ஏதேதோ எல்லாம் கண்ட மேனிக்கு எழுதிவிட்டேன் போலிருக்கிறது.அப்படி,இப்படிக் கொஞ்சம் அதிகமாகப் பழகி விட்டால் அதீத உரிமை எடுத்துக் கொள்வது பழக்கமாகி விட்டது!தவறாக ஏதுமிருந்தால் மன்னித்து விடுங்கள் இந்தக் கி....னை,ஹ!ஹ!ஹா!!!!!// யோகா ஐயாவுக்கு இல்லாத உரிமையா! எல்லாம் நல்லது நடக்கும் யோசிக்காதீங்க ஐயா!

தனிமரம் said...

கருவாச்சிக்குட்டி இனி ஒவ்வொரு நாளும் காவல் இருக்கப்போறா அண்ணாச்சின்ர கோப்பிக்கு.நானும் நித்திரை முழிச்செண்டாலும் கோப்பி வாங்கிக் குடிப்பன் !////எனக்கு இனி பால்கோப்பி வேணாம்!முட்டைக் கோப்பி தான் வேணும்!(இப்புடியாவது முருங்கக்காய் உடம்பைத் தேத்துவம்!)

2 April 2012 11:56 // ஹ ஹா எனக்கும் முட்டைக்கோ]ப்பி பிடிக்கும்

தனிமரம் said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். அப்புறம் கதை வெரி இன்ட்ரெஸ்டிங்.// நன்றி துரைடெனியல் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

அம்பலத்தார் said...

ஹேமா said...

அம்பலம் ஐயா செல்லம்மா மாமி சுகமா இருக்கிறாவோ.சமைச்சுக் குடுத்தீங்களோ.உங்களுக்குக் கஞ்சி தந்தவ எண்டு ஏலாத நேரத்தில நீங்க கஞ்சி காய்ச்சிக் குடுக்காதேங்கோ.வடிவாச் சமைச்சுக்குடுங்கோ.

களைக்கிற நேரத்தில ஓடிவாங்கோ.நாங்கள் இருக்கிறம் பால்க்கோப்பி,பிளேன்டீ தர இருக்கிறம்.தமிழ்மண நட்சத்திர நாயகன் இந்தக்கிழமை முழுக்க எல்லாருக்கும் ஒவ்வொருநாளும் பால்கோப்பி தருவாராம் !//
செல்லம்மாவை அன்பாக நலம்விசாரித்ததற்கு நன்றி ஹேமா. பத்து நாட்களாக என்ரை சமையலை சாப்பிட்டுக்கொண்டு செல்லம்மாவும் மகளும் வீட்டைவிட்டு ஓடாமல் இருக்கிறபடியால் சமையல் ok என நினைக்கிறன்.
எப்படியாவது இடையிடையே நெற்றுக்கு ஓடிவந்து பார்த்தால் எல்லாரும் கோப்பி ரீ எல்லாம்குடிச்சு கும்மியடிச்சு முடிச்சு மூடிக்கொண்டு போயிடுறியள். இந்தக்கிழமை இப்படியே நேசன்ரை தனிமரநிழலிலையே உட்காரலாம் என்று நினைக்கிறன்.

அம்பலத்தார் said...

கலை said...
ஆன்டி பரவாயிலைய அங்கிள் ..பத்திரமா பார்த்துகொங்கோ ...நிறைய உதவி செய்யுங்க அங்கிள்//
நன்றி கலை உங்க எல்லோரதும் அன்பினால் அவ சந்தோசமாக இருக்கிறா

துஷ்யந்தன் said...

நேசன் அண்ணா தமிழ் மண நட்சத்திர பகுதியில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்

தனிமரம் said...

அம்பலத்தார் has left a new comment on your post "நிஜம் சொல்லும் கதை": 

ஹேமா said...

அம்பலம் ஐயா செல்லம்மா மாமி சுகமா இருக்கிறாவோ.சமைச்சுக் குடுத்தீங்களோ.உங்களுக்குக் கஞ்சி தந்தவ எண்டு ஏலாத நேரத்தில நீங்க கஞ்சி காய்ச்சிக் குடுக்காதேங்கோ.வடிவாச் சமைச்சுக்குடுங்கோ.

களைக்கிற நேரத்தில ஓடிவாங்கோ.நாங்கள் இருக்கிறம் பால்க்கோப்பி,பிளேன்டீ தர இருக்கிறம்.தமிழ்மண நட்சத்திர நாயகன் இந்தக்கிழமை முழுக்க எல்லாருக்கும் ஒவ்வொருநாளும் பால்கோப்பி தருவாராம் !//
செல்லம்மாவை அன்பாக நலம்விசாரித்ததற்கு நன்றி ஹேமா. பத்து நாட்களாக என்ரை சமையலை சாப்பிட்டுக்கொண்டு செல்லம்மாவும் மகளும் வீட்டைவிட்டு ஓடாமல் இருக்கிறபடியால் சமையல் ok என நினைக்கிறன். 
எப்படியாவது இடையிடையே நெற்றுக்கு ஓடிவந்து பார்த்தால் எல்லாரும் கோப்பி ரீ எல்லாம்குடிச்சு கும்மியடிச்சு முடிச்சு மூடிக்கொண்டு போயிடுறியள். இந்தக்கிழமை இப்படியே நேசன்ரை தனிமரநிழலிலையே உட்காரலாம் என்று நினைக்கிறன். 
//அம்பலத்தார் ஐயா வரும் வரைக் காத்திருக்க விருப்பம் தான் ஆனால் அதிகாலை வேலையில் கண்ணயரமுடியாது  என்பதால் விரைவில் விடைபெறுகின்றோம். இந்தவாரம் தொடர்ந்து பயணிக்க ஆயத்தமாக இருப்பதற்கு மிக்க நன்றி அம்பலத்தார் ஐயா!

தனிமரம் said...

கலை said...
ஆன்டி பரவாயிலைய அங்கிள் ..பத்திரமா பார்த்துகொங்கோ ...நிறைய உதவி செய்யுங்க அங்கிள்//
நன்றி கலை உங்க எல்லோரதும் அன்பினால் அவ சந்தோசமாக இருக்கிறா

2 April 2012 14:27 
//அதுதான் முக்கியம் நமக்கு அம்பலத்தார்.

தனிமரம் said...

நேசன் அண்ணா தமிழ் மண நட்சத்திர பகுதியில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள் // நன்றி துசியந்தன் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Anonymous said...

வணக்கம்

அருமையான படைப்பு நல்ல மொழிநடையில் வாசக உள்ளங்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-