04 April 2012

தோட்டம் போட்ட நினைவுகள்!!!!!!!`!

பாரிஸ் காலநிலை மாறிக்கொண்டு வருகின்றது. கொஞ்சம் சூரியன் கண் சிமிட்டி மொட்டந் தலையில் தொப்பியைப் போட வைக்கிறான்!
நிலத்துடன் வீடு இருப்பவர்கள் தோட்டம் போடத்தயாராக பல பூங்கண்டுகளை வாங்கிப் போவதைப் பார்க்கும் போது, மாடிவீட்டில் வாழும் பலர் நினைவுகளை மீட்டிப்பார்ப்பதைத் தவிர என்ன செய்ய முடியும்!

தோட்டம் போட்ட பசுமையான காலங்களுக்கு  பின் சென்றால்...
எங்கள் வீட்டுத் தோட்டம் என்று சொல்ல முடியாது. பெரிய வளவில் சில செடிகளை வேலியை தாண்டாமல் வளர்த்த காலங்கள் சுவையான பொழுதுகள்! பூக்கண்டு என்றால் முதலில் ஞாபகம் வருவது மணிவாழையாகும்!

 இது ஒரு கிழங்குவகைத் தாவரம். கிழங்கை புடுங்கி அல்லது பதியம் வைத்துக் கொண்டு வந்து வீட்டில் நட்டு காலையும் மாலையும் ஒரு வாளி தண்ணீர் ஊற்றிவிட்டால் விரைவில் சடைச்சு வரும். மணிவாழை வளரும் வரை கொஞ்சம் கவனமாக இருக்கனும். புதிய பதிவாளர்கள் போல் யாருடா முதலில் ஊக்கிவிக்கிறாங்கள் என்று காத்திருக்கனும்! வளர்ந்துவிட்டால் அதிகமான இனப்பெருக்கம் செய்யும் வாழை. இது அந்நாட்களில் எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் மஞ்சள் , சிவப்பு, நாவல் நிறங்களில் பூத்து நிற்கும் அழகு தனியான சுகம்.

மணிவாழை இலை கொஞ்சம் வாழை இலையை விட சின்னது. இஞ்சியை விட கொஞ்சம் பெரியது.

நீண்டும், சிறியதுமான அளவில் பூக்க வெளிக்கிடும் போது இதனை பார்க்க மனதிற்கு இனம் புரியாத ஆனந்தம். கஸ்ரப்பட்டு தோட்டம் கொத்தி பூக்கண்டு வைத்தது ஏந்த வெள்ளாடும் வந்து மேய்ந்து விடவில்லை என்ற ஆசுவாசப் படுத்தலாக இருக்கலாம். சில வீட்டுக்கிணற்றடியை இது சூழ்ந்து இருக்கும் போது, பூக்கும் பருவகாலம் வந்துவிட்டால் பலர் இதற்கு முன்னால் நின்று புகைப்படம் எடுப்பார்கள். ஊரில் கொண்டாட்டம் என்றால் வீட்டில் உள்ளோரின் அவுட்டோர் சினிமா சூட்டிங் இங்குதான். பச்சைப் பசேல் என இருக்கும் மணிவாழைப் பூவை யாரும் சூடுவதும் இல்லை! கோயில் பூசைக்கு கொடுப்பதும் இல்லை! பூத்துக் குலுங்கி வாடிப்போய் விடும் இந்தப் பூ! இதற்கு ஏதும் சாபமோ எனக்குத் தெரியாது!

இதை யார் விட்டில் இருந்து நிலவு வெளிச்சத்தில் பொட்டுப் பிரித்துப் புகுந்து போய்க் களவாக திருடியந்தது? என்று இன்னும் ஞாபகம் இருக்கு! அந்த வீடும் இன்றில்லை! அவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் தான்.. நானும் பார்த்ததில்லை 20 வருடங்களாக...!

அப்போதெல்லேம் நிலவு வெளிச்சத்தில் ஊரில் எங்கள் பகுதியில் மின்சாரம் வரவில்லை. எல்லா வீட்டிலும் அரிக்கன் லாம்புதான்.
கடிநாய்கள் இல்லை, ஆனால் பாட்டிமார் கொடுவாள் கத்தி வைத்திருப்பார்கள் பேத்திமார் யாருக்கும் பேய் பிடிக்காமல் இருக்க. அப்படியும் பாட்டிமார் தூங்கினால் பின் வந்து காதல் கடிதம் கொடுத்தவர்களையும் பார்த்திருக்கின்றேன்!

அவர்களுடன் காவலுக்கு என்று போய்  வீட்டில் தோட்டம் போட வசதியான பூக்கண்டையும் கிழறிக் கொண்டு வந்தால் வீட்டுத் தோட்டம் களைகட்டும்.

ஏதாவது வீட்டுக் கொண்டாடத்திற்கு அவர்கள் வந்தால் "எங்க வீட்டிலும் இப்படி நட்டு வைத்தனான். யாரோ குறுக்கால போவான் களவு எடுத்துக் கொண்டு போய்விட்டான்" என்று புகழும் போது இத்தனையும் கேட்டுக் கொண்டு மெய்யோ?.. என்று அவர்கள் சம்பாசனையில் கலந்து கொண்டு "இதற்காகத்தான் தோட்டத்தைச் சுற்றி  போத்தல் ஓடு கவுத்து வைத்திருக்கிறன்" என்று அறிவுத்தனமா பதில் சொன்னால், பொடியன் படித்தவன் என்று அவர்கள் மெச்சும் போது பொட்டிப் பாம்பாவது தனித்திறமை.

ஆர்வக் கோளாரில் அவர்களின் மகள்கள் உங்களுடன் படித்தால் உண்மையா உங்கள் வீட்டில் இப்படி ஒரு பூக்கண்டு களவு போன போது நீ என்ன கும்பகர்ணன் போல் குறட்டை விட்டனியோ உன்னைக் கண்டுறவன் கோவிந்தா என்று கலாய்த்தால் கொஞ்சம் பொழுது போகும் படிப்பில்..
மணி வாழையின் அடர்த்தியான காட்சி மிகவும் புகைப்படத்திற்கு ரம்மியமான காட்சியாக பலரின் ஞாபகப்பதிவுகளை அப்போதைய ஞானம் ஸ்டூடீயோ புகைப்படம் சிறைப்படுத்தியிருக்கும் .

எங்கள் வீட்டிலும் இருந்தது ஒரு காலத்தில்... அதன் பிரதியாவது யாழ் நூலகம் போல் சிதையாமல் இருக்குமா என எண்ணிக் கொள்வது மட்டுமே?

மணிவாழை சிறப்பாக  பார்த்த பாடல் காட்சி  இதோ--

இப்படியான தோட்டங்களில் இன்னொரு சிறப்பான செடிதான் செவ்வந்தி! அது பற்றிய நினைவை இன்னொரு பதிவில் தருகின்றேன்!

////////////////////
அரிக்கன் லாம்பு-காவும் விளக்கு
குறுக்கால போவான்-சாவுகிராக்கி  என்பார்கள் சென்னைப்பாசையில்!
பொட்டு-வேலியைப்பிரித்துப் போகும் சிறுவழி யாழ் வட்டார மொழி.

137 comments :

ஹேமா said...

நான் வந்திட்டேன்.....கருவாச்சி....!

தனிமரம் said...

வாங்க ஹேமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நலம்தானே!

ஹேமா said...

நான் இண்டைக்கு இரட்டைச்சுகம் ரீரீ.கருவாச்சி விழுந்தாலும் மீசை மண்ணில் ஒட்டேல்ல எண்டு சொல்லிக்கொண்டு வருவா பாருங்கோ.அவவுக்குத்தான் இண்டைக்குச் சுடுதண்ணி.தாங்கோ கோப்பியை மடமடவெண்டு குடிக்க.ஒருத்தருக்கும் இல்லை இண்டைக்கு !

Yoga.S.FR said...

இரவு வணக்கம் நேசன்!உடல்நிலை சரியில்லை!கொஞ்சம் வெறும்கோப்பியாவது................................!

தனிமரம் said...

நான் இண்டைக்கு இரட்டைச்சுகம் ரீரீ.கருவாச்சி விழுந்தாலும் மீசை மண்ணில் ஒட்டேல்ல எண்டு சொல்லிக்கொண்டு வருவா பாருங்கோ.அவவுக்குத்தான் இண்டைக்குச் சுடுதண்ணி.தாங்கோ கோப்பியை மடமடவெண்டு குடிக்க.ஒருத்தருக்கும் இல்லை இண்டைக்கு !//ஹீ

தனிமரம் said...

இரவு வணக்கம் நேசன்!உடல்நிலை சரியில்லை!கொஞ்சம் வெறும்கோப்பியாவது...//வாங்க் யோகா ஐயா! என்னாச்சு உட்ம்புக்கு கால்நிலை மாற்றம் காரணமா! ஒரு இஞ்சிக்கோப்பி தாரன்.

ஹேமா said...

யோகா அப்பா நான் கோப்பி தாறன்.பாதி உங்களுக்கும்.நீங்கதான் கருவாசிக்குட்டிக்குச் செல்லம் குடுக்கிறீங்கள்.நான் உங்களுக்குச் செல்லம் இல்ல.எண்டாலும் எனக்கு உங்களில மரியாதை அன்பு மதிப்பு எல்லாம் !

Yoga.S.FR said...

ஹேமாவுக்கும் வணக்கம்!இண்டைக்கு ஒரு திட்டத்தோடதான் காத்துக் கொண்டு இருந்திருக்கிறியள்.நானும் நேற்றைய பதிவில கொஞ்சம் மினக்கட்டுப் போனன்.அதில "ஆள்" நிண்டவர்!கொஞ்சம் அசுமாத்தமாத்தான் கிடந்தது.போச்சு இண்டைக்கு கோப்பி,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

எனக்கு உங்களில மரியாதை அன்பு மதிப்பு எல்லாம் !// எனக்கும் தான் ஹேமா.

Yoga.S.FR said...

ஹேமாவுக்கும் வணக்கம்!இண்டைக்கு ஒரு திட்டத்தோடதான் காத்துக் கொண்டு இருந்திருக்கிறியள்.நானும் நேற்றைய பதிவில கொஞ்சம் மினக்கட்டுப் போனன்.அதில "ஆள்" நிண்டவர்!கொஞ்சம் அசுமாத்தமாத்தான் கிடந்தது.போச்சு இண்டைக்கு கோப்பி,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

ஹேமாவுக்கும் வணக்கம்!இண்டைக்கு ஒரு திட்டத்தோடதான் காத்துக் கொண்டு இருந்திருக்கிறியள்.நானும் நேற்றைய பதிவில கொஞ்சம் மினக்கட்டுப் போனன்.அதில "ஆள்" நிண்டவர்!கொஞ்சம் அசுமாத்தமாத்தான் கிடந்தது.போச்சு இண்டைக்கு கோப்பி,ஹ!ஹ!ஹா!!!!!!

4 April 2012 10:47 // எல்லாருக்கும் பதில் சொல்லவேனும்தானே !இணையம் பாடல் தேட கொஞ்சம் நேரம் எடுத்தது அதனால் தான் யோகா ஐயா தாமதம்.

ஹேமா said...

பின்ன இண்டைக்கு எவ்வளவு நேரம் படலைக்குள்ளயே காத்துக்கிடந்தன்.கருவாச்சி நாய்க்குட்டி எண்டு சொன்னாலும் சொல்லும்.காக்காவுக்கு இண்டைக்கு வாசம் போகேல்லையோ.அதிசயமாக்கிடக்கு.நித்திரையாக்கும் காக்கா.நித்திரைக்குளிசை ஆரோ குடுத்திட்டினம்போல.ரெவரி தான் குடுத்திருப்பார் !

Yoga.S.FR said...

நான் நினைக்கிறான் ஆள்(கலை)இண்டைக்கு கொஞ்சம் பிசி போல!வந்தாலும் வருவா!எல்லாரும் "கவனமா"இருங்கோ!ஹேமா அரு..........!

தனிமரம் said...

பின்ன இண்டைக்கு எவ்வளவு நேரம் படலைக்குள்ளயே காத்துக்கிடந்தன்.கருவாச்சி நாய்க்குட்டி எண்டு சொன்னாலும் சொல்லும்.காக்காவுக்கு இண்டைக்கு வாசம் போகேல்லையோ.அதிசயமாக்கிடக்கு.நித்திரையாக்கும் காக்கா.நித்திரைக்குளிசை ஆரோ குடுத்திட்டினம்போல.ரெவரி தான் குடுத்திருப்பார் !// கலை நல்லாப் படிக்கின்றா போல ஹேமா!

தனிமரம் said...

நான் நினைக்கிறான் ஆள்(கலை)இண்டைக்கு கொஞ்சம் பிசி போல!வந்தாலும் வருவா!எல்லாரும் "கவனமா"இருங்கோ!ஹேமா அரு..........!

4 April 2012 10:51 // கலைக்கு இப்படி மரியாதையா/ பாசம் அதிகம் தான் யோகா ஐயா! ஹீ

Yoga.S.FR said...

கொஞ்சம் சூரியன் கண் சிமிட்டி மொட்டந் தலையில் தொப்பியைப் போட வைக்கிறான்!////இந்த வசனம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!!!!நான் எல்லாக் காலமும் போடுவன்.

ஹேமா said...

பதிவு வாசிச்சன் நேசன்...ஊர் ஞாபகம்தான் திரும்பவும் திரும்பவும்.ஊரில உலகத்தில இருக்கிற பூக்கண்டெல்லாம் கொண்டு வந்து வச்சிட்டு தண்ணி ஊத்திறதுக்குச் சண்டை வந்திடும்.முதல் பூத்த பூவுக்குச் சண்டை.

அதோட களவெடுத்த பூக்கண்டு நல்லா வருமெண்டு சொல்லியே களவெடுக்கிறதாம் மதிலுக்கு மேலால.எங்கட அம்மா மதிலைத் தாண்டி எட்டிப்பாக்கிற செம்பருத்தி நுனி கிள்ளிக்கொண்டு வருவா.ஏனெண்டா ஒரு சிதம்பரத்தை மரத்தில 5-6 நிறமெண்டு ஒட்டி வைச்சிருப்பா !

தனிமரம் said...

புரியுது யோகா ஐயா! ஹீ ஹீ

Yoga.S.FR said...

தனிமரம் said...

நான் நினைக்கிறன் ஆள்(கலை)இண்டைக்கு கொஞ்சம் பிசி போல!வந்தாலும் வருவா!எல்லாரும் "கவனமா"இருங்கோ!ஹேமா அரு..........!

4 April 2012 10:51 // கலைக்கு இப்படி மரியாதையா/ பாசம் அதிகம் தான் யோகா ஐயா! ஹீ!!!////படிக்கிற புள்ளையளோட கொஞ்சம் அனுசரிச்சுப் போக வேணும்!அதிலயும் குழப்படி இல்லாத புள்ளைஎண்டால்..............

ஹேமா said...

நேசன்...ரீ ரீ அண்ணா நீங்க நல்ல வடிவெண்டெல்லே கலை நேற்றுச் சொன்னவ.நானும் பாத்திட்டன் ரீ ரீயை.தலையில முடி ஒட்ட வைக்கலாம் பிரச்சனையில்ல நேசன்.குளிருக்கும் வெயிலுக்குதான் கவனமா இருக்கவேணும் !

கலை இண்டைக்கு அருவாளோ இல்லாட்டி கருக்குமட்டையோ கொண்டுதான் வரப்போறா.....கருவாச்சிக்கு இப்ப நல்லாத் தும்மும் !

தனிமரம் said...

பதிவு வாசிச்சன் நேசன்...ஊர் ஞாபகம்தான் திரும்பவும் திரும்பவும்.ஊரில உலகத்தில இருக்கிற பூக்கண்டெல்லாம் கொண்டு வந்து வச்சிட்டு தண்ணி ஊத்திறதுக்குச் சண்டை வந்திடும்.முதல் பூத்த பூவுக்குச் சண்டை.

அதோட களவெடுத்த பூக்கண்டு நல்லா வருமெண்டு சொல்லியே களவெடுக்கிறதாம் மதிலுக்கு மேலால.எங்கட அம்மா மதிலைத் தாண்டி எட்டிப்பாக்கிற செம்பருத்தி நுனி கிள்ளிக்கொண்டு வருவா.ஏனெண்டா ஒரு சிதம்பரத்தை மரத்தில 5-6 நிறமெண்டு ஒட்டி வைச்சிருப்பா !

4 April 2012 10:56 //உண்மைதான் ஹேமா செம்பரத்தை பூவில் கூட இரண்டு வகை வேறுபாடு உண்டு கேரளாவில் வீட்டுக்காரியுட்ன் பார்த்து ரசித்தேன். நேரம் கிடைத்தால் பதிவில் போடுகின்றேன்!

தனிமரம் said...

நேசன்...ரீ ரீ அண்ணா நீங்க நல்ல வடிவெண்டெல்லே கலை நேற்றுச் சொன்னவ.நானும் பாத்திட்டன் ரீ ரீயை.தலையில முடி ஒட்ட வைக்கலாம் பிரச்சனையில்ல நேசன்.குளிருக்கும் வெயிலுக்குதான் கவனமா இருக்கவேணும் !

வீட்டுக்காரி சொல்லிப்போட்டா இந்த அழகே போதும் என்று ஹேமா! செலவு மிச்சம். ஹீ

Yoga.S.FR said...

தனிமரம் said...

புரியுது யோகா ஐயா! ஹீ ஹீ!!////சும்மா பகிடிக்கு!ஆனா,எனக்கு தொப்பி போடாட்டி அண்டு முழுக்க தலையிடி தான்.பத்துப் பதினைஞ்சு வரியமா பழகீட்டுது.இப்ப காலநிலை மாறினதால,காய்ச்சல் தலையிடி,தொண்ட நோவு.மருந்து போட்டிட்டு இருக்கிறன்!

தனிமரம் said...

உண்மைதான் யோகா ஐயா இந்த வாரம் கால நிலை நல்லது இல்லை.

Yoga.S.FR said...

எங்கட வீட்டிலையும் பெல் வாழை(மணி வாழை) நிண்டது!கிணத்தடிய அண்டி.அதால,புறம்பா தண்ணி ஊத்த மினக்கடயில்ல!

தனிமரம் said...

சும்மா பகிடிக்கு!ஆ// எனக்கும் நடுவழுக்கை அதனால்தான் மொட்டை அடிப்ப்து!ஹீ

தனிமரம் said...

எங்கட வீட்டிலையும் பெல் வாழை(மணி வாழை) நிண்டது!கிணத்தடிய அண்டி.அதால,புறம்பா தண்ணி ஊத்த மினக்கடயில்ல!//உண்மைதான் கிணற்றடியில் அதிகம் எல்லாம் விரைவில் வளரும் !

Yoga.S.FR said...

எங்கட வீட்டிலையும் பெல் வாழை(மணி வாழை) நிண்டது!கிணத்தடிய அண்டி.அதால,புறம்பா தண்ணி ஊத்த மினக்கடயில்ல!இப்ப "அவயள்" உழவு அடிச்சிருப்பினம்,ஹும்.....................

ரெவெரி said...

போன பதிவு மற்றும் பின்னூட்டங்கள் இப்ப தான் படிச்சேன்...அதுக்குள்ளே அடுத்ததா...இன்னைக்கும் பால் கோப்பி ஹேமாவுக்கு தானா...?

தனிமரம் said...

4 April 2012 10:51 // கலைக்கு இப்படி மரியாதையா/ பாசம் அதிகம் தான் யோகா ஐயா! ஹீ!!!////படிக்கிற புள்ளையளோட கொஞ்சம் அனுசரிச்சுப் போக வேணும்!அதிலயும் குழப்படி இல்லாத புள்ளைஎண்டால்..............//சில விடயங்களில் ஒத்துப்போக முடியாது! யோகா ஐயா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

சும்மா பகிடிக்கு!ஆ// எனக்கும் நடுவழுக்கை அதனால்தான் மொட்டை அடிப்பது!ஹீ!!!///நண்பன் படத்தில சத்தியராசா(சத்தியராஜ்)மாதிரி செய்யேலாதோ?ஹேமா குசினிக்கை போட்டா போல????

தனிமரம் said...

வாங்க ரெவெரி அண்ணா பால்க்கோப்பி ஹேமா தட்டிச்சென்றுவிட்டா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

4 April 2012 10:51 // கலைக்கு இப்படி மரியாதையா/ பாசம் அதிகம் தான் யோகா ஐயா! ஹீ!!!////படிக்கிற புள்ளையளோட கொஞ்சம் அனுசரிச்சுப் போக வேணும்!அதிலயும் குழப்படி இல்லாத புள்ளைஎண்டால்..............//சில விடயங்களில் ஒத்துப்போக முடியாது,யோகா ஐயா!////ஆம்,அனுபவிக்கிறேன்!!!!!

Yoga.S.FR said...

எங்கட வீட்டிலையும் பெல் வாழை(மணி வாழை) நிண்டது!கிணத்தடிய அண்டி.அதால,புறம்பா தண்ணி ஊத்த மினக்கடயில்ல!இப்ப "அவயள்" உழவு அடிச்சிருப்பினம்,ஹும்.....................

4 April 2012 11:09
Delete
Blogger ரெவெரி said...

போன பதிவு மற்றும் பின்னூட்டங்கள் இப்ப தான் படிச்சேன்...அதுக்குள்ளே அடுத்ததா...இன்னைக்கும் பால் கோப்பி ஹேமாவுக்கு தானா...?///YES!Yes!!!!Yes!!!!!

தனிமரம் said...

இந்த வாரம் இங்க கொஞ்சம் இருக்கின்றேன் ரெவெரி அண்ணா பலரிடம் போகவில்லை!

ரெவெரி said...

கருவாச்சி குடிக்காம இருந்தா பரவாயில்லை...நம்ம ஹேமா தானே...பொழச்சி போகட்டும் விடுங்க...தினம் தலையை மொட்டை அடிப்பீர்களோ...

தனிமரம் said...

ம்மா பகிடிக்கு!ஆ// எனக்கும் நடுவழுக்கை அதனால்தான் மொட்டை அடிப்பது!ஹீ!!!///நண்பன் படத்தில சத்தியராசா(சத்தியராஜ்)மாதிரி செய்யேலாதோ?ஹேமா குசினிக்கை போட்டா போல?// சமைக்கவும் வேனுமே!

ரெவெரி said...

யோகா ஐயா தான் வழக்கு தீர்ப்பவரா?

தனிமரம் said...

கருவாச்சி குடிக்காம இருந்தா பரவாயில்லை...நம்ம ஹேமா தானே...பொழச்சி போகட்டும் விடுங்க...தினம் தலையை மொட்டை அடிப்பீர்களோ...

4 April 2012 11:15 // இரண்டுமாதத்திற்கு ஒரு தரம். இந்தியா செல்லும் போது மட்டும் அடிக்க மாட்டம் ரெவெரி அண்ணா!

Yoga.S.FR said...

"எங்க வீட்டிலும் இப்படி நட்டு வைத்தனான்.யாரோ குறுக்கால போவான் களவு எடுத்துக் கொண்டு போய்விட்டான்" என்று புகழும் போது....////ஹ!ஹ!ஹா!!!!!!!!

ஹேமா said...

பாத்தீங்களோ நான் சொன்னது சரியாப்போச்சு.ரெவரியும் பால்கோப்பிக்குத்தான் ஓடி வந்திருக்கிறார்.ஒருவேளை ரெவரிதான் நித்திரைக்குளிசை குடுத்திட்டார்போல காக்காக்கு !

தனிமரம் said...

யோகா ஐயா தான் வழக்கு தீர்ப்பவரா?// அவர்தான் எங்களுக்கு எல்லாம் பெரியவர் ரெவெரி அண்ணா! மூத்த பதிவாளர் அவர்.

ரெவெரி said...

// இரண்டுமாதத்திற்கு ஒரு தரம். இந்தியா செல்லும் போது மட்டும் அடிக்க மாட்டம் ரெவெரி அண்ணா!//

எங்களுக்கு அந்த கொடுப்பினை ரெண்டு வருசத்திற்கு ஒரு முறை தான் நேசரே...

தனிமரம் said...

எங்க வீட்டிலும் இப்படி நட்டு வைத்தனான்.யாரோ குறுக்கால போவான் களவு எடுத்துக் கொண்டு போய்விட்டான்" என்று புகழும் போது....////ஹ!ஹ!ஹா!!!!!!!!

4 April 2012 11:18 // கடைசியில் அந்த வீட்டில் இருந்தவள். பேர்த்தி ம்ம்ம்ம்!!! எங்கேயோ!

ரெவெரி said...

ஹேமா நலமா? கருவாச்சி யை கட்டிப்போட்டு வச்சிருககீகளா?

ரெவெரி said...

அவர்தான் எங்களுக்கு எல்லாம் பெரியவர் ரெவெரி அண்ணா! மூத்த பதிவாளர் அவர்.//

தெரிந்த விஷயம்...தெரிந்த மனிதர் தானே நேசரே..

ரெவெரி said...

அவர்தான் எங்களுக்கு எல்லாம் பெரியவர் ரெவெரி அண்ணா! மூத்த பதிவாளர் அவர்.//

தெரிந்த விஷயம்...தெரிந்த மனிதர் தானே நேசரே..

தனிமரம் said...

பாத்தீங்களோ நான் சொன்னது சரியாப்போச்சு.ரெவரியும் பால்கோப்பிக்குத்தான் ஓடி வந்திருக்கிறார்.ஒருவேளை ரெவரிதான் நித்திரைக்குளிசை குடுத்திட்டார்போல காக்காக்கு !//இன்று அண்ணாவுக்கு நேர்த்திற்கு வேலை முடிந்து இருக்கும் ஸ்பானிசில் ஹாலா சொல்லுவோம்!

Yoga.S.FR said...

ரெவெரி said...

யோகா ஐயா தான் வழக்கு தீர்ப்பவரா?////உங்களுக்குத் தெரியாதா?இலங்கை யாழ்ப்பாணத்தில இருந்து மலேசியா,அமேரிக்கா வரைக்கும் போய் வழக்குப் பேசின ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குப் பிறகு,பேமசான ஆள் இவர் தான்!!!!!

ரெவெரி said...

ஓலா..

தனிமரம் said...

எங்களுக்கு அந்த கொடுப்பினை ரெண்டு வருசத்திற்கு ஒரு முறை தான் நேசரே..// நான் வ்ருச்த்திற்கு ஒருமுறைதான் ரெவெரி அண்ணா்/ அதுவும் இப்ப செலவு அதிகம்.

ஹேமா said...

ரெவரி...நான் இண்டைக்கு கோப்பி குடிச்சு நல்ல தென்பா டபிள்சுகமா இருக்கிறன்.கருவாச்சி எனக்கு வெறும் சுடுதண்ணியெல்லோ குடுக்கச்சொல்லி...!

நான் நீங்களெல்லோ நித்திரைக்குளிசை குடுத்து நித்திரையாக்கிப்போட்டீங்கள் எண்டு நினைச்சன்.இல்லாட்டி கருவாச்சிக்கு நேசன் வாசம் அனுப்பேல்லபோல.எங்க எங்கட கருவாச்சிக்குட்டி !

ரே ரே...யோகா அப்பாதான் தீர்ப்புச் சொல்றவர்.ஆனா கருவாச்சிக்குச் சொல்லிட்டு மிச்சம் கொஞ்சம் இருந்தா எங்களுக்குத் தருவார்.படிக்கிற பிள்ளையெண்டு ஓரவஞ்சனைதான் !

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

யோகா ஐயா தான் வழக்கு தீர்ப்பவரா?////உங்களுக்குத் தெரியாதா?இலங்கை யாழ்ப்பாணத்தில இருந்து மலேசியா,அமேரிக்கா வரைக்கும் போய் வழக்குப் பேசின ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குப் பிறகு,பேமசான ஆள் இவர் தான்!!!!!//

உங்கள் மூலமே உங்களைப்பற்றி அறிந்து கொண்டேன் அய்யா....-:)

தனிமரம் said...

யோகா ஐயா தான் வழக்கு தீர்ப்பவரா?////உங்களுக்குத் தெரியாதா?இலங்கை யாழ்ப்பாணத்தில இருந்து மலேசியா,அமேரிக்கா வரைக்கும் போய் வழக்குப் பேசின ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குப் பிறகு,பேமசான ஆள் இவர் தான்!!!!!// இடையில் குமார் பொண்ணம்பலம் ,இவர் அதன் பின்பு.

Yoga.S.FR said...

சரி,பாண்(ரொட்டி)சாப்பிட்டு கொஞ்சம் தூங்கப் போகிறேன்.முடிந்தால் பின்னர் வருவேன்!இல்லையேல்,எல்லோருக்கும் இரவு வணக்கம்!

ரெவெரி said...

ரெவரி...நான் இண்டைக்கு கோப்பி குடிச்சு நல்ல தென்பா டபிள்சுகமா இருக்கிறன்.கருவாச்சி எனக்கு வெறும் சுடுதண்ணியெல்லோ குடுக்கச்சொல்லி...!
//
கருவாச்சி பரீட்சைக்கு பிட் தயார் செய்து கொண்டிருப்பதாய் கேள்வி...

தனிமரம் said...

யோகா ஐயா தான் எங்களுக்கு இப்ப மதியுரைஞ்சர்.// ஹீ

தனிமரம் said...

சரி,பாண்(ரொட்டி)சாப்பிட்டு கொஞ்சம் தூங்கப் போகிறேன்.முடிந்தால் பின்னர் வருவேன்!இல்லையேல்,எல்லோருக்கும் இரவு வணக்கம்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் சந்திக்கலாம் பின்னர் இனிய இரவு வணக்கம்.

ரெவெரி said...

நான் போய் ஒரு கோப்பி குடிக்கிறேன்...ஹேமா...நேசரே...இரவு வணக்கங்கள்...

தனிமரம் said...

கருவாச்சி பரீட்சைக்கு பிட் தயார் செய்து கொண்டிருப்பதாய் கேள்வி...//படிக்கட்டும் கலை. அதுதான் முக்கியம் .

தனிமரம் said...

நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்.உறவுகளுக்கும் தெரிவியுங்கோ!

ஹேமா said...

காக்கா காக்கா பறந்து வா.
காத்திருக்கிறோம் விரைந்துவா.
கோப்பி குடிக்க ஓடி வா.
ஏப்பம் விடமுன் எம்மிடம் வா.
நாளைக்கு கோப்பி உனக்குத்தான்
கோவிக்காமல் குட்டியம்மா வா!!!

தனிமரம் said...

காக்கா காக்கா பறந்து வா.
காத்திருக்கிறோம் விரைந்துவா.
கோப்பி குடிக்க ஓடி வா.
ஏப்பம் விடமுன் எம்மிடம் வா.
நாளைக்கு கோப்பி உனக்குத்தான்
கோவிக்காமல் குட்டியம்மா வா!!!// ஆஹா கவிதை கருவாச்சிக்கு. நாளை மதியம் வரும் தனிமரம். மாலையில் வேலையில் இருக்கும்.

Seeni said...

அனுபவமும்-
எழுது விதமும்-
பாராட்டய்தகுன்தது!

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா! தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

கலை said...

aaaaaaaaaaaaaaaaa vanthuttennnnnnnnnnnnnnnnnnnnnn

hemaaaaaa akkaaaaaaaaaaaaaaa.ree reeeeeeeee annaaaaaaaaaaaaa ,maamayoiiiiiiiiiiiiiiiiiii\uncleeeeeeeeeeeeeeeeeeeee

கலை said...

ஹேமா அக்க க்கு தான் இண்டைக்கு பால் காப்பியா ...நான் ஒத்துக் கொள்ளவே மாட்டினம் அண்ணா ...

தனிமரம் said...

வாங்க கலை இன்று ஹேமா வென்றுவிட்டா!

கலை said...

ஆரோ எனக்கு சூனியம் வைத்து விட்டினம் ...அதான் என்னால் முதலாவதா வர முடியவில்லை ...
ஹேமா அக்காக்கு முட்டை மந்திரம் பண்ணி வைக்கலாமா ரீ ரீ அண்ணா

தனிமரம் said...

நலம்தானே கலை எல்லாரும் வந்து போன பின் வந்து இருக்கின்றீர்கள்!

தனிமரம் said...

ஆரோ எனக்கு சூனியம் வைத்து விட்டினம் ...அதான் என்னால் முதலாவதா வர முடியவில்லை ...
ஹேமா அக்காக்கு முட்டை மந்திரம் பண்ணி வைக்கலாமா ரீ ரீ அண்ணா

4 April 2012 12:25 // ஐயோ நான் இப்படிச் செய்யமாட்டன் கருக்கு மட்டை அடிவாங்க முடியாது! கலை

ஹேமா said...

கருவாச்சி....நல்லா நித்திரை கொண்டு எழும்பி வந்திருக்கிறா.ரெவரி நித்திரைக்குளிசை தந்திட்டார்போல.நான் ஒண்டும் சூனியம் வைக்கேல்ல !

அன்பு அண்ணாச்சி இண்டைக்கு காத்தில வாசம் அனுப்பேல்லயாக்கும் காக்காக்கு !

கலை said...

அண்ணா சுப்பரா எழுதி இருக்கிரிஎல் ,,,,தோட்டம் களவாண்டு வைக்கணுமா ...அவ்வவ் ..

கலை said...

காக்கா காக்கா பறந்து வா.
காத்திருக்கிறோம் விரைந்துவா.
கோப்பி குடிக்க ஓடி வா.
ஏப்பம் விடமுன் எம்மிடம் வா.
நாளைக்கு கோப்பி உனக்குத்தான்
கோவிக்காமல் குட்டியம்மா வா!!!////////////////

கவிதாயினின் கவிதை எப்போதும் போல அழகோ அழகு ....சூப்பர் டுப்பர் டாப்பர்

அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ...குயிலே குயிலே ஓடி வா அல்லது மான் குட்டியே மான்குட்டியே ஓடி வா அல்லது அழகு மயிலே அழகு மயிலே ஓடி வா அப்புடி எண்டு சொல்லி இருதால் கவிதை இன்னும் அழகாய் இருந்திருக்கும்

..பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் கவிதாயினி...

தனிமரம் said...

அன்பு அண்ணாச்சி இண்டைக்கு காத்தில வாசம் அனுப்பேல்லயாக்கும் காக்காக்கு !

4 April 2012 12:31 //ஐயோ ஹேமா நான் இப்ப யாருக்கும் தனிமெயில் போடுவது இல்லை உள்குத்துவாங்கிய பின்.

கலை said...

ஹேமா said...
கருவாச்சி....நல்லா நித்திரை கொண்டு எழும்பி வந்திருக்கிறா.ரெவரி நித்திரைக்குளிசை தந்திட்டார்போல.நான் ஒண்டும் சூனியம் வைக்கேல்ல !

அன்பு அண்ணாச்சி இண்டைக்கு காத்தில வாசம் அனுப்பேல்லயாக்கும் காக்காக்கு !/////////

அனுப்பி விட்டணம் ஹேமா அக்கா ...நேத்து நீங்கள் மண்ணில் அழுது பிரண்டு அழுதீர்கள் எண்டு அத்தான் சொல்லி வருத்தம் பட்டினம் அதான் நான் தான் உங்களுக்காய் விட்டுக் கொடுத்தனம்

தனிமரம் said...

அண்ணா சுப்பரா எழுதி இருக்கிரிஎல் ,,,,தோட்டம் களவாண்டு வைக்கணுமா ...அவ்வவ்//அது ஒருகாலம் கலை!!!!

கலை said...

4 April 2012 12:31 //ஐயோ ஹேமா நான் இப்ப யாருக்கும் தனிமெயில் போடுவது இல்லை உள்குத்துவாங்கிய பின்./////////

ஐயூ அண்ணா பயப்படாதிங்கோ ....தைரியமா சொல்லுங்கோ நீங்க எனக்கு மட்டும் தான் மெயில் அனுப்புரிங்க எண்டு ...அப்புறம் சண்டைக்கு ஆரேனும் வந்தால் என்னைக் கை காமியுங்கோ ..நான் பேசிக்கிரணன்

தனிமரம் said...

அன்பு அண்ணாச்சி இண்டைக்கு காத்தில வாசம் அனுப்பேல்லயாக்கும் காக்காக்கு !/////////

அனுப்பி விட்டணம் ஹேமா அக்கா ...நேத்து நீங்கள் மண்ணில் அழுது பிரண்டு அழுதீர்கள் எண்டு அத்தான் சொல்லி வருத்தம் பட்டினம் அதான் நான் தான் உங்களுக்காய் விட்டுக் கொடுத்தனம்

4 April 2012 12:36 //கலை இன்று ஹேமா இந்தப்பாட்டுப்பற்றி ஒருவார்த்தையும் இன்னும் சொல்லவில்லை இது நிஜாயமா!!!

கலை said...

அவ்வவ் .. ரே ரீ (ரேவேரி) அண்ணா பக்கத்துல இருத்து பரீடிச்சக்கு பிட் கொடுத்த மாறி அல்லோ கதைக்கிரிங்க ...நான் ரொம்ப nallap பொன்னாக்கும் பிட் எண்டால்
என்ன வேண்டத் தெரியாதாக்கும் ...

ஹேமா said...

காக்காக்கு தைரியத்தைப் பாருங்கோ.விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லயாம் !

தனிமரம் said...

ஐயூ அண்ணா பயப்படாதிங்கோ ....தைரியமா சொல்லுங்கோ நீங்க எனக்கு மட்டும் தான் மெயில் அனுப்புரிங்க எண்டு ...அப்புறம் சண்டைக்கு ஆரேனும் வந்தால் என்னைக் கை காமியுங்கோ ..நான் பேசிக்கிரணன்// பயம் இல்லை என் வேலை நேரம் மாறுபடும் கலை!

தனிமரம் said...

வ்வவ் .. ரே ரீ (ரேவேரி) அண்ணா பக்கத்துல இருத்து பரீடிச்சக்கு பிட் கொடுத்த மாறி அல்லோ கதைக்கிரிங்க ...நான் ரொம்ப nallap பொன்னாக்கும் பிட் எண்டால்
என்ன வேண்டத் தெரியாதாக்கும் ...// கொஞ்சம் பொறு கலை ராகுல் குதிரை ஓடியது சொல்லுவான் விரைவில்!

கலை said...

கலை இன்று ஹேமா இந்தப்பாட்டுப்பற்றி ஒருவார்த்தையும் இன்னும் சொல்லவில்லை இது நிஜாயமா!!!

4 April 2012 12:40//////////////////

ஹேமா அக்கா நமளிடம் லாம் நல்லப் பிள்ளையாய் தான் சீனு போடுவினம் ...வீட்டில் தான் அக்கா அத்தானிடம் புலம்பல் ...அத்தன் என்னிடம் சொல்லி அழதக் குறையா வருத்தப்படுரர் ...பாவம் எம்புட்டு நல்ல என் அத்தானுக்கு இப்புடி போயி வாழ்க்கை அமைஞ்சிடுத்தே !

ஹேமா said...

பாட்டைப் பற்றிச் சொல்லேல்லையோ நேசன்.மயக்கமான பாட்டு.அதுதான்.மயக்கிப்போடும் கேக்கிற நேரமெல்லாம்.உமா ரமணின் குரல் உண்மையாவே ஒரு மயக்கும் குரல்தான்.இரவோ பகலோ இந்தப் பாட்டுக் கேட்டால் இதம்தான் நேசன்.உங்களின் பாடல் தெரிவு எப்போதுமே என்னோடு ஒத்துப்போகும் !

தனிமரம் said...

காக்காக்கு தைரியத்தைப் பாருங்கோ.விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லயாம் !

4 April 2012 12:41 // ஹீ நீங்கள் இருவரும் பேசுங்கோ நான் காலையில் வாரன் இனிய இரவு வணக்கம் நன்றி வருகைக்கு கலை மற்றும் ஹேமா!

ஹேமா said...

எனக்கே என்ர அத்தானைத் தெரியேல்ல ஆரெண்டு.உந்தக் கலைக்குட்டிட்ட அந்த அத்தான் சொல்லிச் சொல்லி அழுவுறாராமெல்லோ.ஆரப்பா அந்த அத்தான்.எனக்கும் ஒருக்கா காட்டுங்கோவன்.வடிவா இருப்பாரோ.எங்க இருக்கிறார் !

கலை said...

ஹேமா said...
காக்காக்கு தைரியத்தைப் பாருங்கோ.விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லயாம் !///

காக்காக்கு போயி மீசை இருக்குமா ...நீங்கள் பார்க்குறது ஒரு குட்டி புஷ் ..

வயசாகிடுச்செல்லோ அதான் கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது உங்களுக்கு ....

அவ்வவ் ..

தனிமரம் said...

பாட்டைப் பற்றிச் சொல்லேல்லையோ நேசன்.மயக்கமான பாட்டு.அதுதான்.மயக்கிப்போடும் கேக்கிற நேரமெல்லாம்.உமா ரமணின் குரல் உண்மையாவே ஒரு மயக்கும் குரல்தான்.இரவோ பகலோ இந்தப் பாட்டுக் கேட்டால் இதம்தான் நேசன்.உங்களின் பாடல் தெரிவு எப்போதுமே என்னோடு ஒத்துப்போகும் !//சிறப்பு நன்றி ஹேமாவுக்கு பாடலில் தீபன்ச்க்கரவர்த்தியின் குரல் அதையும் தாண்டி அவரும் விடுதலைவிரும்பி!

ஹேமா said...

நேசன்....நில்லுங்கோ.எனக்குப் பயம் கருவாச்சிக்கு.சமாளிக்கேலாது.காக்காக்கு மீசை இல்லயாம்.சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கு.சொல்லுங்கோ ரீரீ.எனக்கு வயசு போட்டுதாம்.....இப்பத்தான் அழுகிறன் உண்மையாவே !

கலை said...

ஹேமா said...
எனக்கே என்ர அத்தானைத் தெரியேல்ல ஆரெண்டு.உந்தக் கலைக்குட்டிட்ட அந்த அத்தான் சொல்லிச் சொல்லி அழுவுறாராமெல்லோ.ஆரப்பா அந்த அத்தான்.எனக்கும் ஒருக்கா காட்டுங்கோவன்.வடிவா இருப்பாரோ.எங்க இருக்கிறார் !//////

அத்தானை அழ வைத்து விட்டு எப்புடி எல்லாம் கதைக்கினம் ஹேமா அக்கா ...ஆறேண்டெத் தெரியாதம் ....அத்தன் மட்டும் இதை பார்த்தல் மயங்கியே விழுந்து விடுவினம் ...

தனிமரம் said...

எனக்கே என்ர அத்தானைத் தெரியேல்ல ஆரெண்டு.உந்தக் கலைக்குட்டிட்ட அந்த அத்தான் சொல்லிச் சொல்லி அழுவுறாராமெல்லோ.ஆரப்பா அந்த அத்தான்.எனக்கும் ஒருக்கா காட்டுங்கோவன்.வடிவா இருப்பாரோ.எங்க இருக்கிறார் !//எதுக்கும் கலையிடம் கவனம் ஹேமா நானே நேற்று கவிதை போட்டு கொஞ்சம் கலங்கித்தான் போய்ட்டன் !

தனிமரம் said...

நீங்க அக்காள் தங்கை நானோ தனிமரம். நாளை மதியம் வருவேன் வேலை உறவுளே! நன்றி!!!

கலை said...

hemaa akkaa அப்புடி எல்லாம் அழதிங்கோ ...அப்புறம் ஒரு நல்லவங்க கண்ணீர் சாபம் வந்துப் போடும் ...விடுங்க ஹேமா அக்கா எங்கட குரு சொல்லி இருப்பவை குருவுக்கு 16 வயது எனக்கு 12 எண்டு ..எல்லலரும் நம்பி விட்டினம் அக்கா ..இத்தனைக்கும் நானும் குருவும் 5வயது கூட்டிப் போட்டுத்தான் சொன்னோம்..
நீங்கள் வேணா ஒரு 20 வயசை குறைத்து விட்டு55 எண்டு சொல்லிப் பாருங்கோல் ...மக்கள் நம்பினாலும் நம்பிவிடுவார் உங்களுக்கு 55வயது மட்டும் தன எண்டு

கலை said...

ஹேமா அக்கா எனக்கு இண்டு ஒரு சந்தேகம் வந்தது...ரீ ரீ அன்ன இத்தனை நாள் இல்லாமல் இண்டு ஏன் ப்ரோபிலே படம் வைத்து விட்டணம் ..

ஹேமா said...

கலை....சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கோ இல்லையோ எண்டு ஒரு சந்தேகமோ?

அடுத்து ரீரீ தன்னை வெளில காட்டிருக்கிறார்.ஏன் எண்டு சந்தேகமோ?

கலை said...

எதுக்கும் கலையிடம் கவனம் ஹேமா நானே நேற்று கவிதை போட்டு கொஞ்சம் கலங்கித்தான் போய்ட்டன் !////////

அவ்வவ் ..அப்புடினா நான் சொன்னது சரிதானே .அந்தக் கதை உண்மைக் கதை அப்போ அந்த அன்னக்குதனே ...அவ்வவ் அந்த அண்ணா குள்ள அம்புட்டுப் பெரிய சோகமா ....
மீ க்கு தேய்ந்ஜிடுத்தே ஏ

கலை said...

ஹேமா said...
கலை....சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கோ இல்லையோ எண்டு ஒரு சந்தேகமோ?

அடுத்து ரீரீ தன்னை வெளில காட்டிருக்கிறார்.ஏன் எண்டு சந்தேகமோ?///

இந்தியா காக்கு மீசை இருக்காது ..அனால் சுவிஸ் காக்காக்கு மீசை இருக்கும் அக்கா ...நான் பார்த்திருக்கிரணன் ...பால் காப்பிகாய் மண்ணில் அழுது பிரண்டு எழும்போது மீசையில் ஒட்டி இருக்கும் மண்ணை சுவிஸ் காக்கைகள் துடைக்கும் அக்கா ...

ரீ ரீ த்டிர் எண்டு ஏன் வைத்தார் எண்டும் சந்தேகம் தான்

கலை said...

100 haieeeeeeeeeeeeee

ஹேமா said...

கலை ஓடி வாடா கிட்ட.கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிவிடவேணும்.என்ன ஒரு புத்திசாலித்தனம்.போட்டு வாங்கிறா எல்லாரிட்டயும் !

கலைக்குட்டி நித்திரை கொள்ளேல்லையோ.நான் படுக்கப்போறன்.உங்களை இத்தினை மணியில நித்திரை முழிக்க வைக்கிறன் எண்டு யோகா அப்பா நாளைக்கு எனக்குத்தான் திட்டுவார்.ஓடிப்போய் படுங்கோ குட்டி !

கலை said...

யோகா மாமா என்னைத் தேடி இருக்கிறார் ...மாமாவோடு கதைச்சி ரொம்ப நாள் ஆகுது ......

கலை said...

தனிமரம் said...
பின்ன இண்டைக்கு எவ்வளவு நேரம் படலைக்குள்ளயே காத்துக்கிடந்தன்.கருவாச்சி நாய்க்குட்டி எண்டு சொன்னாலும் சொல்லும்.காக்காவுக்கு இண்டைக்கு வாசம் போகேல்லையோ.அதிசயமாக்கிடக்கு.நித்திரையாக்கும் காக்கா.நித்திரைக்குளிசை ஆரோ குடுத்திட்டினம்போல.ரெவரி தான் குடுத்திருப்பார் !// கலை நல்லாப் படிக்கின்றா போல ஹேமா!/////////////

ச சா சா உங்கட போயி நாய் குட்டி எண்டு சொல்லுவேனா ...பாவமெல்லோ அந்த நாய் குட்டி ..

ரீ ரீ அண்ணா படிக்கோணும் அண்ணா ....இண்டு இணையம் வர வேண்டாமெண்டு நினத்திணன் ...ஹேமா அக்காவோட டெலிபதி என்னை அழைத்து வந்துடுச்சி .......

கலை said...

ஹேமா said...
கலை ஓடி வாடா கிட்ட.கட்டிப் பிடிச்சுக் கொஞ்சிவிடவேணும்.என்ன ஒரு புத்திசாலித்தனம்.போட்டு வாங்கிறா எல்லாரிட்டயும் !

கலைக்குட்டி நித்திரை கொள்ளேல்லையோ.நான் படுக்கப்போறன்.உங்களை இத்தினை மணியில நித்திரை முழிக்க வைக்கிறன் எண்டு யோகா அப்பா நாளைக்கு எனக்குத்தான் திட்டுவார்.ஓடிப்போய் படுங்கோ குட்டி !

ஹ ஹா ஹா புத்திசாலிக் காக்கா ...

உங்களோடு ஜாலி யா கதைச்சிட்டு இருக்கேன் அல்லோ அதான் நித்திரை கொள்ளேல்லை

ஓகே அக்கா நீங்களும் போயி நித்திரை கொள்ளுங்கோ ...நானும் தொங்கப் போகிரணன் ...நாளைக்கு மீண்டும் வரலாம் ...நீங்களும் சமத்தப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ ...டாடா டாடா ....

மாமா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள் டாடா டாடா

ஹேமா said...

டாட்டா குட்டி.நல்லா நித்திரை கொண்டு காலேல எழும்பிப் படியுங்கோ.நல்லா மனசில படியும்.நாளைக்குப் பதிவில பாக்கலாம் !

கணேஷ் said...

Mani Vazhai Pathina Vishayam Enakku Puthithu Nesan! Niraiya Therinthu Konden. Kurukkala Povan Engira Varthiyum New to Me. tks. Nizhalgal Song Enakku Rombave Pidikkum. Ellathaiyum vida... Kalai-mavum Hema-vum Kathaichathu romba romba pidichathu.

அம்பலத்தார் said...

ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ ஊ ஊ ஊ ஊஊஊஊஊஊஊஉ என்ன இங்கே ஒரே அட்டகாசமாக இருக்கு. யாரங்கே எனக்கு பால்கோபி, பிளேன் கோப்பி, சுடுதண்ணி, onRumillaiyenRaal பச்சத்தண்ணியாவது கிடைக்குமா

அம்பலத்தார் said...

நேசன் மணிவாழை எல்லாம் நிறைய நட்டு வடிவா தோட்டம்போட எல்லாரும் ஓடிவந்து தோட்டத்தில உட்கார்ந்து கும்மியடிக்கிறியளோ.

அம்பலத்தார் said...

நேசன் ஒரு தடவை நேசன் இரண்டுதடவை நேசன் மூன்றுதடவை. நீங்க பதுங்கினாலும் நான் போறதாக இல்லை. விருந்தில எனக்கும் ப்ங்குதராவிட்டால் இன்று இரவு பூராவும் இதிலையே சத்தியக்கிரகம் இருக்கிற முடிவோடதான் வந்திருக்கிறன்.

அம்பலத்தார் said...

ஹேமா said...

காக்காக்கு தைரியத்தைப் பாருங்கோ.விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லயாம் !//
காக்காவுக்கு எப்ப மீசை வந்தது மண் ஒட்டுறதுக்கு....

ஹேமா said...

அம்பலம் ஐயா பச்சத்தண்ணிக்கோ இல்ல சுடுதண்ணிக்கோ சத்தியாக்கிரகம் இருக்கிறீங்கள்.சரி இருந்தா பிடியுங்கோ நான் தாறன் பிளேண்டீ !

உங்களுக்குத் தெரியாதோ சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கு.கருவாச்சிக்கும் தெரியுமாம்.அந்தக் காக்காதானாம் நான் அழேக்க கண் துடைச்சு விடுறதாம்.அதோட என்ர அத்தான்ர கதை தெரியுமோ.கலை என்ர அத்தானைக் கண்டு பிடிச்சிருக்கிறா !

Esther sabi said...

எனக்கு மணி வாழை பூ என்றால் றொம்ப பிடிக்கும் ...... அழகான நந்தவன பகிர்வு

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
இடுப்பில துண்டைக் கட்டி..
தோளிலே மண்வெட்டியைச் சுமந்துகொண்டு
வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது போல
இருக்குது ....

அருமையானதொரு பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நேசன்.

MANO நாஞ்சில் மனோ said...

பூஞ்செடி வளர்ப்பது என்பது மனதுக்கு இனிமையான விஷயம் இல்லையா, இங்கே மும்பையில் கூட செடி வளர்க்க முடியவில்லை....!!!

Yoga.S.FR said...

காலை வணக்கம் எல்லோருக்கும்!

Yoga.S.FR said...

வணக்கம் மனோ சார்!//////MANO நாஞ்சில் மனோ said...

பூஞ்செடி வளர்ப்பது என்பது மனதுக்கு இனிமையான விஷயம் இல்லையா, இங்கே மும்பையில் கூட செடி வளர்க்க முடியவில்லை....!!!///அதனால் என்ன?அப்படியே பூவுடன் வாங்கி பல்கனியில் வைத்து விடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

Yoga.S.FR said...

கலை said...

hemaa akkaa அப்புடி எல்லாம் அழதிங்கோ ...அப்புறம் ஒரு நல்லவங்க கண்ணீர் சாபம் வந்துப் போடும் ...விடுங்க ஹேமா அக்கா எங்கட குரு சொல்லி இருப்பவை குருவுக்கு 16 வயது எனக்கு 12 எண்டு ..எல்லலரும் நம்பி விட்டினம் அக்கா ..இத்தனைக்கும் நானும் குருவும் 5வயது கூட்டிப் போட்டுத்தான் சொன்னோம்..
நீங்கள் வேணா ஒரு 20 வயசை குறைத்து விட்டு55 எண்டு சொல்லிப் பாருங்கோ......மக்கள் நம்பினாலும் நம்பிவிடுவார் உங்களுக்கு 55வயது மட்டும் தன எண்டு./////அடடே!இப்பதான் பொட்டுக்கே டெல்லாம் வெளியே வருகிறது!55-ஆகிடுச்சா?கவிதாயினி,நல்லாயில்ல!!!!

தனிமரம் said...

hemaa akkaa அப்புடி எல்லாம் அழதிங்கோ ...அப்புறம் ஒரு நல்லவங்க கண்ணீர் சாபம் வந்துப் போடும் ...விடுங்க ஹேமா அக்கா எங்கட குரு சொல்லி இருப்பவை குருவுக்கு 16 வயது எனக்கு 12 எண்டு ..எல்லலரும் நம்பி விட்டினம் அக்கா ..இத்தனைக்கும் நானும் குருவும் 5வயது கூட்டிப் போட்டுத்தான் சொன்னோம்..
நீங்கள் வேணா ஒரு 20 வயசை குறைத்து விட்டு55 எண்டு சொல்லிப் பாருங்கோல் ...மக்கள் நம்பினாலும் நம்பிவிடுவார் உங்களுக்கு 55வயது மட்டும் தன எண்டு

4 April 2012 12:59 
//பெண்களிடம் வயதைக்கேளாதே என்று முதுமொழி இருக்கு கலை மறந்துவிடவில்லைத்தானே! ஹீ

Yoga.S.FR said...

தனிமரம் said...பெண்களிடம் வயதைக்கேளாதே என்று முதுமொழி இருக்கு கலை மறந்துவிடவில்லைத்தானே! ஹீ!!!
//////கேக்காட்டியும்,மூஞ்சி காட்டிக் கொடுத்து விடும் தானே,ஹி!ஹி!ஹி!!!!!!

தனிமரம் said...

ஹேமா அக்கா எனக்கு இண்டு ஒரு சந்தேகம் வந்தது...ரீ ரீ அன்ன இத்தனை நாள் இல்லாமல் இண்டு ஏன் ப்ரோபிலே படம் வைத்து விட்டணம் ..

4 April 2012 13:01 
//ஹீ கலை நான் ஆரம்பத்திலே படத்தோடதான் வந்தன் ஹேமாவுக்குத் தெரியும் இடையில் சில அரசியல் முட்டை யடி(இதயத்திற்கும் சொல்லடி) அந்த நேரம் ஹேமா கனடாவில் நானும் இந்தியா போகும் நேரம் அதுதான் மரத்தை தூக்கி வைத்துவிட்டு அதன் பின் ஒழிந்து கொண்டேன்.இப்ப மரம் கொஞ்சம் மாறிவிட்டது.பிளாஸ்டர் ஒட்டிவிட்டா ஹேமா அக்காள் .

தனிமரம் said...

எதுக்கும் கலையிடம் கவனம் ஹேமா நானே நேற்று கவிதை போட்டு கொஞ்சம் கலங்கித்தான் போய்ட்டன் !////////

அவ்வவ் ..அப்புடினா நான் சொன்னது சரிதானே .அந்தக் கதை உண்மைக் கதை அப்போ அந்த அன்னக்குதனே ...அவ்வவ் அந்த அண்ணா குள்ள அம்புட்டுப் பெரிய சோகமா ....
மீ க்கு தேய்ந்ஜிடுத்தே ஏ
/.சீச்சீ கலை சும்மா ஒரு பேச்டுக்குச் சொன்னேன்  கவிதைக்கும் எனக்கும்  சம்மந்தம் இல்லை .நிஜமா . சோகமா ??நமக்கு எப்போதும் ஜாலிதான் ஐராங்கனி சொல்லுவாள் நீங்க ரொம்ம பாட்டுப் பையித்தியம் என்று.

தனிமரம் said...

ஹேமா said...
கலை....சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கோ இல்லையோ எண்டு ஒரு சந்தேகமோ?

அடுத்து ரீரீ தன்னை வெளில காட்டிருக்கிறார்.ஏன் எண்டு சந்தேகமோ?///

இந்தியா காக்கு மீசை இருக்காது ..அனால் சுவிஸ் காக்காக்கு மீசை இருக்கும் அக்கா ...நான் பார்த்திருக்கிரணன் ...பால் காப்பிகாய் மண்ணில் அழுது பிரண்டு எழும்போது மீசையில் ஒட்டி இருக்கும் மண்ணை சுவிஸ் காக்கைகள் துடைக்கும் அக்கா ...

ரீ ரீ த்டிர் எண்டு ஏன் வைத்தார் எண்டும் சந்தேகம் தான்

4 April 2012 13:07 
//கலைக்கு அண்ணாவின் முகம் தெரியட்டும் என்றுதான் .விரைவில் சில நேரம் சென்னையில் தனிமரம் வலம் வரலாம்!!!!!

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா படிக்கோணும் அண்ணா ....இண்டு இணையம் வர வேண்டாமெண்டு நினத்திணன் ...ஹேமா அக்காவோட டெலிபதி என்னை அழைத்து வந்துடுச்சி ......./.உள்ளுணர்வு நல்லாத் தான் படித்திருக்கின்றா கலை.

தனிமரம் said...

Mani Vazhai Pathina Vishayam Enakku Puthithu Nesan! Niraiya Therinthu Konden. Kurukkala Povan Engira Varthiyum New to Me. tks. Nizhalgal Song Enakku Rombave Pidikkum. Ellathaiyum vida... Kalai-mavum Hema-vum Kathaichathu romba romba pidichathu.

4 April 2012 13:36 
//நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ ஊ ஊ ஊ ஊஊஊஊஊஊஊஉ என்ன இங்கே ஒரே அட்டகாசமாக இருக்கு. யாரங்கே எனக்கு பால்கோபி, பிளேன் கோப்பி, சுடுதண்ணி, onRumillaiyenRaal பச்சத்தண்ணியாவது கிடைக்குமா

4 April 2012 13:48 
// வாங்க அம்பலத்தார் இவ்வளவு ஆறுதலா வந்தால் ம்ம்ம் ஒரு பால்க்கோப்பி தாரன்.

தனிமரம் said...

நேசன் மணிவாழை எல்லாம் நிறைய நட்டு வடிவா தோட்டம்போட எல்லாரும் ஓடிவந்து தோட்டத்தில உட்கார்ந்து கும்மியடிக்கிறியளோ.

4 April 2012 13:52 
/.தோட்டத்திற்கு வந்தால் மனதிற்கு சந்தோஸம் தானே  அம்பலத்தார் அதுதான் எல்லாரும் கும்மியடிக்கின்றார்கள்.

தனிமரம் said...

நேசன் ஒரு தடவை நேசன் இரண்டுதடவை நேசன் மூன்றுதடவை. நீங்க பதுங்கினாலும் நான் போறதாக இல்லை. விருந்தில எனக்கும் ப்ங்குதராவிட்டால் இன்று இரவு பூராவும் இதிலையே சத்தியக்கிரகம் இருக்கிற முடிவோடதான் வந்திருக்கிறன்.

4 April 2012 13:55 
//ஐயோ அம்பலத்தார் வந்த நேரம் அவசரமாக ஆட்களைக் கூட்டியர வெளியில் போட்டன். நீங்க இப்படி சத்தியாக்கிரகம் இருந்தால் செல்லம்மாக்கா கருக்குமட்டையடி போடுவா எனக்கு.

தனிமரம் said...

ஹேமா said...

காக்காக்கு தைரியத்தைப் பாருங்கோ.விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லயாம் !//
காக்காவுக்கு எப்ப மீசை வந்தது மண் ஒட்டுறதுக்கு....

4 April 2012 14:00 
//நானும் அதுதான் ஜோசிக்கின்றேன் .

தனிமரம் said...

அம்பலம் ஐயா பச்சத்தண்ணிக்கோ இல்ல சுடுதண்ணிக்கோ சத்தியாக்கிரகம் இருக்கிறீங்கள்.சரி இருந்தா பிடியுங்கோ நான் தாறன் பிளேண்டீ !

உங்களுக்குத் தெரியாதோ சுவிஸ்ல காக்காக்கு மீசை இருக்கு.கருவாச்சிக்கும் தெரியுமாம்.அந்தக் காக்காதானாம் நான் அழேக்க கண் துடைச்சு விடுறதாம்.அதோட என்ர அத்தான்ர கதை தெரியுமோ.கலை என்ர அத்தானைக் கண்டு பிடிச்சிருக்கிறா !
//அம்பலத்தார் பார்த்தீங்களோ ஹேமா அக்காவின் இரக்க குணத்தை.

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

 வணக்கம் மகேந்திரன் அண்ணா.
நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பூஞ்செடி வளர்ப்பது என்பது மனதுக்கு இனிமையான விஷயம் இல்லையா, இங்கே மும்பையில் கூட செடி வளர்க்க முடியவில்லை....!!!

4 April 2012 20:45 
//என்ன செய்வது மனோ அண்ணா எல்லாருக்கும் ஆசையிருந்தாலும் இடம் அமையனும் தானே.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம் எல்லோருக்கும்!

4 April 2012 22:50 
//காலை வணக்கம் யோகா ஐயா.

தனிமரம் said...

வணக்கம் மனோ சார்!//////MANO நாஞ்சில் மனோ said...

பூஞ்செடி வளர்ப்பது என்பது மனதுக்கு இனிமையான விஷயம் இல்லையா, இங்கே மும்பையில் கூட செடி வளர்க்க முடியவில்லை....!!!///அதனால் என்ன?அப்படியே பூவுடன் வாங்கி பல்கனியில் வைத்து விடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

4 April 2012 22:53 
/.நல்ல ஐடியாதான்.யோகா ஐயா.

தனிமரம் said...

தனிமரம் said...பெண்களிடம் வயதைக்கேளாதே என்று முதுமொழி இருக்கு கலை மறந்துவிடவில்லைத்தானே! ஹீ!!!
//////கேக்காட்டியும்,மூஞ்சி காட்டிக் கொடுத்து விடும் தானே,ஹி!ஹி!ஹி!!!!!!

5 April 2012 01:04 
//உண்மைதான் யோகா ஐயா. பிரெஞ்சுக்காரிக்குத் தெரியாது எங்களின் கண்டுபிடிப்புக்கள்.ஹீ

சசிகலா said...

அப்போதெல்லேம் நிலவு வெளிச்சத்தில் ஊரில் எங்கள் பகுதியில் மின்சாரம் வரவில்லை. எல்லா வீட்டிலும் அரிக்கன் லாம்புதான்.// ஆமாங்க படிக்கும் போது ஊர் நினைவுதான் வருகிறது . மின்சாரம் இல்லாத நேரத்தில் மின்னலென இருளில் ஓடி மறையும் காதல் பார்வைகள் . அதனை கண்டு கேலி செய்த நண்பர் கூட்டம் ....

தனிமரம் said...

நன்றி சசிகலா வருகைக்கும் கருத்துரைக்கும்.