06 April 2012

அம்பலத்தார் சாப்பாடு!!!

 இது ஒரு நகைச்சுவையுடன்  சொல்லும் சமையல் குறிப்பு.


  அம்பலத்தார் அடிக்கமாட்டார் கருக்கு மட்டையால்!!! ஹீஆடியில் அம்பலத்தார் அடுத்த ரயில் பிடித்து ஆசையோடு பார்க்க வாறதாக முந்தநாள் முகநூலில் தனிமரத்திக்குத் தந்தி கொடுத்தார்.
                                                இப்படித்தான் இருப்பார்கள் அம்பலத்தார் ஐயாவும் செல்லம்மா அன்ரியும்.

 ஆசையோடு பூநகரி மொட்டைக்கறுப்பன் சோறு ஆக்கி கோழியடித்து குழம்பு வைத்து குவாட்டர் சேர்த்துக் குடித்து மகிழக் காத்திருந்தேன்.!

 தொலை பேசியில் செல்லம்மா அன்ரி அரிவாளோடு போட்ட அதிரடிக் கட்டளை.

  "தம்பி தனிமரம் நீ ஐராங்கனியோடு அதிகம் வழிந்ததும்,  அவர் சமியோட கன்னங்கர் மாவத்தையில் மயங்கி நின்றதும் நான் அறிவேன்.

நாங்௧ வாற இடத்தில். அவருக்கு அதிகம் அன்பைப்போலியாதேங்கோ.!. அவர் முன்னர் போல் இல்லை!

 ஒரு சூர்யா போல இப்ப சிலிம் சிக்ஸ்பெக்ஸ் என்று அதிரடியா சைவத்துக்கு வந்திட்டார்!

 அடுத்த படத்தில் அவர் கூடத்தான் நடிப்பேன் என்று சுருதிகாஷன் கூட ஒரே தனி மெயில் போடும் அளவுக்கு பிரபல்யமான மனுசனுக்கு.

  பிரெஞ் சாப்பாடு தயார் செய்யுங்கோ!" முதலிலில் மெனுவை எனக்கு அனுப்புங்கோ தம்பி. என்ற மகன் செல்லம். சொல்லிப்போட்ட செல்லம்மா அன்ரி

.அவாவும்  அம்மா   போலத்தானே எனக்கு!

அடுத்து என்ன செய்வேன் என்ற செல்லம். வீட்டு குளிர்சாதன அறையில் என்ன இருக்கு?


2அவோக்கா  AVOCAT(அளிக்கடைபேர), அடுத்து 2குடை மிளகாய், இரண்டு கலரில்.

   வெளியில்  வெங்காயம் இருக்கு!
 என்னைசாடுகின்றால் என் மனைவி.

 பாருங்க அம்பலத்தார்.

 என்ர மனுசனை அப்படிச சொல்வேனா! சொல்லுங்க அம்பலத்தார் ஐயா.

 இவை கையில் இருந்தால் ஒரு பிரெஞ்சு சாப்பாடு போட்டு விடலாம் கீழே பார்க்கலாம் செய்முறை..

தேவையான் பொருட்கள்
2 அவோக்கா AVOCAT
2 குடைமிளகாய்- POIVRON
1 வெங்காயம்- OIGNON
விரும்பினால் கொஞ்சம் பால்-LAIT

கையளவு உப்பு- SEL

செய்முறை- அவோக்கா இரண்டாக்கி அதன் பருப்பை அகற்றிவிட்டு வெறும் கழியை எடுக்கவும்.

 பின், குடை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டி அதனுள் போடவும், அத்துடன் வெங்காயம் சிறிது சிறிதாக வெட்டிய பின் ஒன்று சேர்த்து அம்மியில் /மிர்க்சியில் அரைத்தால் அவோக்காமோல் தயார்.

 விரும்பினால், பால் சேர்த்தால் கொஞ்சம் திரவத்தன்மையாய் இருக்கும். அசைவப் பிரியர்களுக்கு இறால் பொரித்து அதன் மேல் வைத்தால் அழகான இறால் அவோக்கா மோல் தயார்.
சாப்பாடு இப்படித்தான் இருக்கும்.

 அம்பலத்தார். உடல் மெலிவு காரர் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். இது வெயில் காலத்துக்கு ஏற்றது!

 இந்த சாப்பாடு மொரிசியஸ் நாட்டிலிலும் பிரபல்யம். ஏன் சீனாவிலும் உண்டு! வாங்கோ அம்பலத்தார் தனிமரத்தின் சாப்பாட்டு மேசைக்கு !/////////////////////////

கன்னங்கர மாவத்தை -கொழும்பு தெகிவலையில் இருக்கும் ஒரு வீதியின் பெயர்.125 comments :

Yoga.S.FR said...

haay!!!!good evining!!!!

Yoga.S.FR said...

உடல் மெலிவு காரர் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.///சாய்!!!!!!!!சந்திக்கு இழுத்துப் போட்டாண்டா,ஹ!ஹ!ஹா!ஹோ!ஹோ!ஹோ!!!!!

Yoga.S.FR said...

இண்டைக்கு புட்டும்,வாழக்காய்ப் பொரியலும் கேப்பம்,ஹி!ஹி!ஹி!!!!!!!

Yoga.S.FR said...

இப்படித்தான் இருப்பார்கள் அம்பலத்தார் ஐயாவும் செல்லம்மா அன்ரியும்.////இப்பவோ,அப்பவோ?????ஏனென்றால் இப்பெல்லாம் காப்டன்?!டாஸ்மார்க்...............................!

தனிமரம் said...

மாலை வணக்கம் யோகா ஐயா வாங்க பால்க்கோப்பி குடியுங்கோ!

Yoga.S.FR said...

உள்ளதச் சொன்னால்,இன்று வரை இந்த ஆவுக்கா,பிட்சா,பிறகு குஸ்குஸ்..................இவையெல்லாம் நான் சுவை பார்த்ததேயில்லை!

Yoga.S.FR said...

புட்டும்,வாழக்காய்ப் பொரியலும்!!!!!!

தனிமரம் said...

உடல் மெலிவு காரர் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.///சாய்!!!!!!!!சந்திக்கு இழுத்துப் போட்டாண்டா,ஹ!ஹ!ஹா!ஹோ!ஹோ!ஹோ!!!!!

6 April 2012 11:12 // யாரையும் இன்னும் இழுக்கவில்லை! நான் சின்னவயதில் இருந்து நல்லவன்!!!

ஹேமா said...

சரி பரவால்ல.கலை என்னவோ பிஸி.கோயில் இல்லாட்டி படிக்கிறா.அதான் எனக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்கு.அப்பா சாப்பாடு பாதி தரவேணும் இல்லாட்டி நேசன் எனக்கும் ஏதாச்சும் கிடைக்குமோ !

அம்பலத்தார் said...

hai i am here

தனிமரம் said...

இண்டைக்கு புட்டும்,வாழக்காய்ப் பொரியலும் கேப்பம்,ஹி!ஹி!ஹி!!!// இரவுச் சாப்பாடு புட்டும் கத்தரிக்காய்க்குழம்பும்.தாராளமாக வரலாம் சாப்பிட!

தனிமரம் said...

இப்படித்தான் இருப்பார்கள் அம்பலத்தார் ஐயாவும் செல்லம்மா அன்ரியும்.////இப்பவோ,அப்பவோ?????ஏனென்றால் இப்பெல்லாம் காப்டன்?!டாஸ்மார்க்.............//ஹீ நான் ஒன்றும் சொல்லவில்லை அம்பலத்தார்!!

அம்பலத்தார் said...

இன்றைக்கு கொஞ்சம் நேரத்துக்கு வந்திட்டன் என்ன என்ரை பேரும் செல்லம்மாவின்ரை பெயரும் அடிபடுகுது கொஞ்சம் பொறுங்கோ படிச்சிட்டு வாறன்

Yoga.S.FR said...

தனிமரம் said...

உடல் மெலிவு காரர் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.///சாய்!!!!!!!!சந்திக்கு இழுத்துப் போட்டாண்டா,ஹ!ஹ!ஹா!ஹோ!ஹோ!ஹோ!!!!!
///யாரையும் இன்னும் இழுக்கவில்லை! நான் சின்னவயதில் இருந்து நல்லவன்!!!உடல் மெலிவு காரர்////நான் அப்படித்தானே?அதனால் நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று...............

தனிமரம் said...

ள்ளதச் சொன்னால்,இன்று வரை இந்த ஆவுக்கா,பிட்சா,பிறகு குஸ்குஸ்..................இவையெல்லாம் நான் சுவை பார்த்ததேயில்லை!// நமக்கு வேலை சுவைத்துப்பார்த்துத்தானே கொடுக்கவேண்டும்!

Anonymous said...

vanthuteeeeeeeeeeeen ...

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா! அந்தஒருவனைப்படித்துக் கொண்டிருந்தேன் யோகா ஐயா போய் வந்ததைச் சொல்லவில்லை!

Anonymous said...

அங்கிள் யா வம்புக்கு இழுத்துப் போட்டிங்கள் அன்ன ..சுப்பர் சமையல் குறிப்பு .....

neenga சொல்லி இருக்குற அவரைக்காய் என்ன எண்டே எனக்குத் தெரியாது ..எங்கட ஊரில் நான் பார்த்தது இல்லை

தனிமரம் said...

நல்ல புட்டு இருக்கு அரிசிமா!

தனிமரம் said...

வாங்க அம்பலத்தார் நலமா!

Yoga.S.FR said...

வணக்கம் ஹேமா&அம்பலத்தார்!அது ஒன்றுமில்லை உங்களுக்குப் பிடித்த சாப்பாடு தான் அம்பலத்தார்!அப்புறம் ஹேமாவுக்கு புட்டும் கத்தரிக்காய்க் குழம்பும் ஓ.கே வா?இரவில் பழப்புளி சேர்த்த பதார்த்தங்கள் சமிபாட்டை தடுக்கும்.எதற்கும் இன்றைக்கு சாப்பிடுவோம்!

தனிமரம் said...

ஹேமா அக்காள் பாருங்கோ அவரிடம் கருக்குமட்டை இருக்கோ என்று!

Anonymous said...

ஹேமா said...
சரி பரவால்ல.கலை என்னவோ பிஸி.கோயில் இல்லாட்டி படிக்கிறா.அதான் எனக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்கு.அப்பா சாப்பாடு பாதி தரவேணும் இல்லாட்டி நேசன் எனக்கும் ஏதாச்சும் கிடைக்குமோ !///

நான் பிசி இல்லை அக்கா ..ஆபீசில் வேலை செய்ய சொல்லுறாங்க ..தூங்கவே முடியுறதில்லை ...அதான் இரவு ரூமில் படிக்கல்மல் நித்திரை கொண்டு விடுரணன் ...

தனிமரம் said...

வாங்க கலை தேனி மாவட்டத்தில் இருக்கு கலை .பெயர் மறந்து போச்சு நான் சாப்பிட்டேன்!

Yoga.S.FR said...

வாங்க கலை!இரவு(நள்ளிரவு?)வணக்கம்!இந்தியாவில் ஆவுக்கா விளைவதாக தெரியவில்லை!இறக்குமதி செய்வார்களாக இருக்கும்!அடுத்த முறை நேசன் இந்தியா வரும்போது(மாட்டி விட்டாச்சு)வாங்கி வருவார்!

தனிமரம் said...

நான் பிசி இல்லை அக்கா ..ஆபீசில் வேலை செய்ய சொல்லுறாங்க ..தூங்கவே முடியுறதில்லை ...அதான் இரவு ரூமில் படிக்கல்மல் நித்திரை கொண்டு விடுரணன் ...//ஹீ அப்படியா!!

Anonymous said...

அப்பா சாப்பாடு பாதி தரவேணும் இல்லாட்டி நேசன் எனக்கும் ஏதாச்சும் கிடைக்குமோ !///

ஓமாம் மாமா அக்காவுக்கு சோறு பாதி கொடுத்துடுங்கோ இல்லை எண்டால் அக்கா அழுது விடுவினம்..நேசன் அண்ணா மிச்சம் மீதி ஏதேனும் இருக்கமான்னு எவ்வாளவு டீசென்ட்டா கேக்குறாங்க பாருங்க ஹேமா அக்கா ...

Yoga.S.FR said...

Blogger தனிமரம் said...நமக்கு வேலை சுவைத்துப்பார்த்துத்தானே கொடுக்கவேண்டும்!///"பிட்சா"வையுமா,ஹ!ஹ!ஹா!!!!!!

Anonymous said...

வணக்கம் மாமா ..நலம் தானே ..

வணக்கம் ரீ ரீ அண்ணா ,அங்கிள் ,ஹேமா அக்கா

தனிமரம் said...

வாங்க கலை!இரவு(நள்ளிரவு?)வணக்கம்!இந்தியாவில் ஆவுக்கா விளைவதாக தெரியவில்லை!இறக்குமதி செய்வார்களாக இருக்கும்!அடுத்த முறை நேசன் இந்தியா வரும்போது(மாட்டி விட்டாச்சு)வாங்கி வருவார்!// யோகா ஐயா அதே போல் இருக்கும் கொய்யா என்று ஒரு பேர் சொன்னார்கள் மலையாளிகள் !

அம்பலத்தார் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

Blogger தனிமரம் said...நமக்கு வேலை சுவைத்துப்பார்த்துத்தானே கொடுக்கவேண்டும்!///"பிட்சா"வையுமா,ஹ!ஹ!ஹா!!!!!!

6 April 2012 11:32 // பீசா இல்லை இது பிரென்சுக்கடை! யோகா ஐயா!

நிரூபன் said...

வணக்கம் தனிமரம் சார்..

அவோக்கோ...என்பதனை ஆங்கிலீஸில் அவக்காடோ என்று சொல்லுவார்கள்.
இதனையும் பதிவில் சேர்த்தீர்கள் என்றால் தான் தமிழகச் சொந்தங்களுக்கும், இலங்கையில் உள்ளோருக்கும் இலகுவில் புரியும்.

தனிமரம் said...

வணக்கம் கலை!

அம்பலத்தார் said...

நேசன் இன்றைய பதிவு வழமையான பாணியிலிருந்து மாறுபட்டு அதுவும் நான் எழுதினால் எப்படி எழுதுவேனோ அச்சுப்பிசகாமல் அதேபோல அட்டகாசமாக எழுதி அசத்தி இருக்குக்கிறியள். ஹி ஹி ஆனாலும் எனக்கு வெட்கமாக இருக்கு நேசன் எதோ பெரிய மனிசர்போல என்னையும் பதிவிலையே விருந்துக்கு அழைச்சு நானும் செல்லம்மாவும் வெறும் சாதா....

நிரூபன் said...

செம காமெடி குறும்பு பாஸ்..

அம்பலத்தார் ஐயா எப்படி இருப்பாரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்

Yoga.S.FR said...

கலை said...
நான் பிசி இல்லை அக்கா ..ஆபீசில் வேலை செய்ய சொல்லுறாங்க ..தூங்கவே முடியுறதில்லை ...அதான் இரவு ரூமில் படிக்காமல் நித்திரை கொண்டு விடுரணன் ...////அடடா!கஷ்டம் தான் கலை.நல்ல புள்ளையா போய் தூங்குங்க,உம்...

ஹேமா said...

எனக்குப் பிடிச்ச புட்டும் கத்தரிக்காய் பொரியலும்....கலை வாங்கோ பக்கத்தில இருந்து சாப்பிடுங்கோ.செல்லம்மா மாமிட்ட என்ன சாப்பாடாம்.கஞ்சியெண்டா வேணாம் !

Anonymous said...

தேனீ மாவட்டத்திலா ...இருக்கலாம் அண்ணா ...இருந்தாலும் நீங்கள் வாங்கிக் கொண்டு வரணும் இந்திய வரும்போது ....ஹ ஹ ஹா ...மாமா சொல்லி இருக்கன்கள்ள

தனிமரம் said...

வாங்க நிரூபன் சார்!
ச்கோதர மொழியில் அம்பலத்தாரிடம் சொன்னேன் தாய்மொழியில் இந்தப்பழத்திற்கு இன்னும் பெயர் யாரும் சொல்லவில்லை குருநாதா! சாட்சி யோகா ஐயா!

தனிமரம் said...

நிரூபன் தான் தமிழ்பெயர் சொல்லனும் மாட்டிவிட்டாச்சு ஹேமா அக்காள்!

Yoga.S.FR said...

வணக்கம் நிரூபன் சார்!!!!!

அம்பலத்தார் said...

பிரெஞ் சாப்பாடு தயார் செய்யுங்கோ!" முதலிலில் மெனுவை எனக்கு அனுப்புங்கோ தம்பி. என்ற மகன் செல்லம். சொல்லிப்போட்ட செல்லம்மா அன்ரி

.அவாவும் அம்மா போலத்தானே எனக்கு!//
உங்கட இந்த பாசமான வார்த்தைகளை படித்ததிலையே செல்லம்மாவுக்கு பாதி நோய் குணமாகிவிட்டது.

தனிமரம் said...

நேசன் இன்றைய பதிவு வழமையான பாணியிலிருந்து மாறுபட்டு அதுவும் நான் எழுதினால் எப்படி எழுதுவேனோ அச்சுப்பிசகாமல் அதேபோல அட்டகாசமாக எழுதி அசத்தி இருக்குக்கிறியள். ஹி ஹி ஆனாலும் எனக்கு வெட்கமாக இருக்கு நேசன் எதோ பெரிய மனிசர்போல என்னையும் பதிவிலையே விருந்துக்கு அழைச்சு நானும் செல்லம்மாவும் வெறும் சாதா....// நீங்க எங்களுக்கு பெரியவர்கள்தான்!

Yoga.S.FR said...

Comment deleted

This comment has been removed by the author.///Who is the black ........?

Anonymous said...

நீங்கள் சோறு poduveergal endu muthalile therinthu irunthaal thundu pottu idam pidiththiruppom namathu appaththaavum naanum ....paalk kaappi endu thaan konjam asaalttaa irunthu vittom avvvvvvvvvvvvvvvvv

Anonymous said...

haieeeeeeeeeeeeeeeee ஹேமா அக்கா vanthachi jolly jolly jolly jollyyyyyyyyyyyyyyyyyyyyyy

தனிமரம் said...

அவா குணமாக இருக்கனும் விரைவில் நாம் சந்திக்கனும் என்று நேற்றும் தோள் கொடுத்தபோது வேண்டிக்கொண்டேன் அங்கே!!

Yoga.S.FR said...

நானும் செல்லம்மாவும் வெறும் சாதா....// நீங்க எங்களுக்கு பெரியவர்கள்தான்////அதே!!!!!

நிரூபன் said...

ஹேமா அக்கா இங்கேயே இருக்கா?

நாமளும் பதிவு எழுதுறமாம்! வந்து எட்டிப் பார்க்கலாமில்லே!

நிரூபன் said...

குட் நைட்.

நீங்க கலக்குங்கோ!

தனிமரம் said...

neenga சொல்லி இருக்குற அவரைக்காய் என்ன எண்டே எனக்குத் தெரியாது ..எங்கட ஊரில் நான் பார்த்தது இல்லை//அவரைக்காய் வேர கலை இது அவோக்கா/அளிக்கடப்பேர இலங்கையில்.

நிரூபன் said...

எனக்கு நித்திரை நேரம் வந்திட்டு.

Yoga.S.FR said...

இன்னுமா உடல் நிலை சரியாகவில்லை,அம்பலத்தார்????

Anonymous said...

ஹேமா said...
எனக்குப் பிடிச்ச புட்டும் கத்தரிக்காய் பொரியலும்....கலை வாங்கோ பக்கத்தில இருந்து சாப்பிடுங்கோ.செல்லம்மா மாமிட்ட என்ன சாப்பாடாம்.கஞ்சியெண்டா வேணாம் !////


அக்கா namakulaam ஒசி ல சோறு கிடப்பதே பெரிய vidayam ...கஞ்சி எண்டால் வேணாமுன்னு லாம் சொல்லாதிங்கோ ..

இண்டைக்கு வந்ததிலிருந்து சோறு மட்டும் தன அக்கா நினைவில் இருக்கு

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

உடல் மெலிவு காரர் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.///சாய்!!!!!!!!சந்திக்கு இழுத்துப் போட்டாண்டா,ஹ!ஹ!ஹா!ஹோ!ஹோ!ஹோ!!!!!//
என்ன இது நெசனும் நீங்களுமாக சேர்ந்து என்ரை வீட்டில ரகசிய கமெரா எதாவது பூட்டி வச்சிட்டியளே யோகா. அப்படியே உள்ளது உள்ளபடி விசயமெல்லாம் வெளிய வருகுது.

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி அங்கிள் ...செல்லமா ஆன்ட்டிக்கு பூரணமா விரைவில் குணமடையும்

தனிமரம் said...

அம்பலத்தார் ஐயா எப்படி இருப்பாரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்// அதுதான் நம்மஒரு ஜோடிப்படம் போட்டு இருக்கின்றேன் பாஸ்!

Yoga.S.FR said...

கலை said...

நீங்கள் சோறு poduveergal endu muthalile therinthu irunthaal thundu pottu idam pidiththiruppom namathu appaththaavum naanum ..////அடடா!!கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போய் விட்டதே????

Anonymous said...

நல்ல புள்ளையா போய் தூங்குங்க,உம்...

மாமா உங்கட்ட கொஞ்சம் திட்டு வாங்கணும் ஹேமா அக்காகிட்ட செல்லமா சண்டைப் போடணும் ரீ ரீ அண்ணாகிட்ட கொஞ்சம் வம்பு பண்ணனும் இதுல்லாம் பண்ணினால் தான் தூக்கமே வருது ...

தனிமரம் said...

இனிய தூக்கம் கண்களுக்கு மனதிற்கு ஓய்வு தரட்டும் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிரூபன்!

அம்பலத்தார் said...

கலை said...

haieeeeeeeeeeeeeeeee ஹேமா அக்கா vanthachi jolly jolly jolly jollyyyyyyyyyyyyyyyyyyyyyy//
கலை வந்தச்சு
ஹேமா வந்தாச்சு
கும்மி ஆரம்பிச்சாச்சு
எல்லாரும் மனதாறச் சிரிக்க தொடங்கியாச்சு

தனிமரம் said...

என்ன இது நெசனும் நீங்களுமாக சேர்ந்து என்ரை வீட்டில ரகசிய கமெரா எதாவது பூட்டி வச்சிட்டியளே யோகா. அப்படியே உள்ளது உள்ளபடி விசயமெல்லாம் வெளிய வருகுது.

6 April 2012 11:47 // சீச்சீ அப்படிச் செய்வோமா இப்ப உதுதான் எங்கும் கேட்பது.

Yoga.S.FR said...

கலை said...
அக்கா namakulaam ஒசில சோறு கிடப்பதே பெரிய vidayam ...கஞ்சி எண்டால் வேணாமுன்னு லாம் சொல்லாதிங்கோ ..///ஆஹா,இது பொழைக்கத் தெரிஞ்ச புள்ள!

தனிமரம் said...

மாமா உங்கட்ட கொஞ்சம் திட்டு வாங்கணும் ஹேமா அக்காகிட்ட செல்லமா சண்டைப் போடணும் ரீ ரீ அண்ணாகிட்ட கொஞ்சம் வம்பு பண்ணனும் இதுல்லாம் பண்ணினால் தான் தூக்கமே வருது .// அடியாத்தி அப்பத்தா தான் லாய்க்கு இது டென்சன் பார்ட்டி கலை !அவ்வ்வ்வ்

தனிமரம் said...

தேனீ மாவட்டத்திலா ...இருக்கலாம் அண்ணா ...இருந்தாலும் நீங்கள் வாங்கிக் கொண்டு வரணும் இந்திய வரும்போது ....ஹ ஹ ஹா ...மாமா சொல்லி இருக்கன்கள்ள

6 April 2012 11:38 // நிச்சயம் வாங்கிவாரன் தையில்!!!! சென்னை விமானாநிலையத்தில் வழிவிட்டால்!

Anonymous said...

நிரூபன் said...
ஹேமா அக்கா இங்கேயே இருக்கா?

நாமளும் பதிவு எழுதுறமாம்! வந்து எட்டிப் பார்க்கலாமில்லே!//////////////


அக்காவை குண்டு கத்தரிக்காய் ,ஊதிப் பெருத்தவங்க ,குண்டு பூசணிக்காய் இப்புடி எல்லாம் சொல்லி விட்டு இப்போது வரலை எண்டு புலபலா ...அக்கா க்கு கோவம் அதன் வரல இனிமேல் ஹேமா அக்காவருவாங்கோ ...

மிகவும் பிரபலமான புகழ் உட்ச்சியில் கொடி கட்டி பறந்து மரமாகி பல விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் பிரபல மூத்த பதிவர்ஆனா ரீ ரீ அண்ணாவின் பதிவை படிச்சி கமென்ட் போடுவதிலே காலம் சரியாய் இருப்பதினால் ஹேமா அக்கா வால் வர முடியவில்லை ...

அம்பலத்தார் said...

தனிமரம் said...

அவா குணமாக இருக்கனும் விரைவில் நாம் சந்திக்கனும் என்று நேற்றும் தோள் கொடுத்தபோது வேண்டிக்கொண்டேன் அங்கே!!//
நன்றி நேசன். பதிவுலகிற்கு வந்ததில் நான் மிகவும் சந்தோசப்படுவது உங்களைபோன்ற உண்மையான நண்பர்கள் பலரை பெற்றுக்கொண்டதற்கு

தனிமரம் said...

haieeeeeeeeeeeeeeeee ஹேமா அக்கா vanthachi jolly jolly jolly jollyyyyyyyyyyyyyyyyyyyyyy//
கலை வந்தச்சு
ஹேமா வந்தாச்சு
கும்மி ஆரம்பிச்சாச்சு
எல்லாரும் மனதாறச் சிரிக்க தொடங்கியாச்சு

6 April 2012 11:51 //இடையில் என் குருநாதர் நிரூபனும் வ்ந்தாச்சு!ஹீ

ஹேமா said...

செல்லம்மா மாமிக்கு இப்ப எப்பிடி இருக்கு அம்பலம் ஐயா.யோகா அப்பாவும் சுகமில்ல சொல்றார்.காலநிலைக் குழப்படியோ?

ம்ம்...கலை சொல்றதும் சரிதான்.சாப்பாடு வெள்ளிகிழமையும் அதுவுமா வேணாம் சொல்லகூடாது !

Yoga.S.FR said...

தனிமரம் said...

என்ன இது நெசனும் நீங்களுமாக சேர்ந்து என்ரை வீட்டில ரகசிய கமெரா எதாவது பூட்டி வச்சிட்டியளே யோகா. அப்படியே உள்ளது உள்ளபடி விசயமெல்லாம் வெளிய வருகுது.////பழமொழி மறக்கேல்லத் தானே அம்பலத்தார்?.................. இரவில அதுவும் பேசாத,ஹி!ஹி!ஹி!!!!!!!!

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

இன்னுமா உடல் நிலை சரியாகவில்லை,அம்பலத்தார்????//
முன்பு இருந்ததைவிட குறைந்திருக்கு ஆனால் பூரணமாக மாறவில்லை

தனிமரம் said...

மிகவும் பிரபலமான புகழ் உட்ச்சியில் கொடி கட்டி பறந்து மரமாகி பல விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் பிரபல மூத்த பதிவர்ஆனா ரீ ரீ அண்ணாவின் பதிவை படிச்சி கமென்ட் போடுவதிலே காலம் சரியாய் இருப்பதினால் ஹேமா அக்கா வால் வர முடியவில்லை ...//ஐயோ கலை நான் ஒரு சின்னவன். கொடியும் இல்லை ....இல்லை இந்தவாரம் ஏதோ தொடர்கின்றேன் உங்களின் கருனையில் என் குருநாதரிடம் கூட போகவில்லை!

ஹேமா said...

ஹேமா வந்தாச்சி.இண்டைக்கு நிரூவும் வந்தச்சு.கருவாச்சி வந்தாச்சு.நேசன் சமைச்சாச்சு.அப்பா வந்தாச்சு.அம்பலம் ஐயாவும் மாமியும் வந்தாச்சு.இண்டைக்கு எல்லாரும் ஒண்டா இருக்கிற்ம்.நல்ல கும்மிதான்.ஏனாம் நிரூன்ர எல்லாப் பதிவுக்கும் நான் போறனானே.இண்டைக்கு இனித்தான் போகவேணும் !

Anonymous said...

ஹேமா அக்காக்கு சோறு கிடைக்கல எண்டு தான் கொவச்சிக் க்கிட்டு அமைதியா இருக்காங்கோ ..பால் காப்பி எண்டு நினைத்து தான் அசல்ல்ட்டா இருந்து மிஸ் பண்ணி விட்டாங்க ஹேமா அக்கா ...


அக்கா இதுக்குலாம் அழதிங்கோ ...கூடிய விரைவில் ரீ ரீ அண்ணா விடம் விருந்தே வாங்கி டலாம் ...


ஹேமா அக்கா, ரீ ரீ அண்ணா ,மாமா ,அம்பல்ஸ் அங்கிள் எல்லாருக்கும் டாடா டாடா டாடா

Yoga.S.FR said...

ஹேமா said...

செல்லம்மா மாமிக்கு இப்ப எப்பிடி இருக்கு அம்பலம் ஐயா.யோகா அப்பாவும் சுகமில்ல சொல்றார்.காலநிலைக் குழப்படியோ?

ம்ம்...கலை சொல்றதும் சரிதான்.சாப்பாடு வெள்ளிகிழமையும் அதுவுமா வேணாம் சொல்லகூடாது !/////நான் தேறி விட்டேன்!இப்போது புட்டும்,கத்தரிக்காய்க் குழம்பும் சாப்பிடப் போகிறேன்!வெள்ளிக்கிழமை மட்டுமல்ல,எந்த நாளானாலும் மறுக்காமல்,நாளை சாப்பிடுகிறேன் என்று சொல்வது சிறப்பு!(தொடரும்)

தனிமரம் said...

இன்னுமா உடல் நிலை சரியாகவில்லை,அம்பலத்தார்????//
முன்பு இருந்ததைவிட குறைந்திருக்கு ஆனால் பூரணமாக மாறவில்லை

6 April 2012 12:00 //காலநிலை மாற்றம் விரைவில் குணம் ஆகிவிடுவா செல்லம்மா அன்ரி/அம்மா!!

Anonymous said...

அவ்வ்வ்வ் ...ஹேமா அக்கா வந்துட்டகளா ...நித்திரைக் கொள்ள மனசே வரலை ...அவ்வவ் ..கொஞ்சம் ஹேமா அக்க்விடம் கதைச்சிட்டு போகிரணன் மாமா

Yoga.S.FR said...

நிரூபன் said...

எனக்கு நித்திரை நேரம் வந்திட்டு.///போய்ப் படுங்கோ,பேபி!!!!ஹையோ!ஹையோ!!!!!

Yoga.S.FR said...

கலை said...

ஹேமா அக்காக்கு சோறு கிடைக்கல எண்டு தான் கொவச்சிக் க்கிட்டு அமைதியா இருக்காங்கோ ..பால் காப்பி எண்டு நினைத்து தான் அசல்ல்ட்டா இருந்து மிஸ் பண்ணி விட்டாங்க ஹேமா அக்கா ...


அக்கா இதுக்குலாம் அழதிங்கோ ...கூடிய விரைவில் ரீ ரீ அண்ணா விடம் விருந்தே வாங்கி டலாம் ...


ஹேமா அக்கா, ரீ ரீ அண்ணா ,மாமா ,அம்பல்ஸ் அங்கிள் எல்லாருக்கும் டாடா டாடா டாடா./////டாடா!டாடா!!!

தனிமரம் said...

ஹேமா வந்தாச்சி.இண்டைக்கு நிரூவும் வந்தச்சு.கருவாச்சி வந்தாச்சு.நேசன் சமைச்சாச்சு.அப்பா வந்தாச்சு.அம்பலம் ஐயாவும் மாமியும் வந்தாச்சு.இண்டைக்கு எல்லாரும் ஒண்டா இருக்கிற்ம்.நல்ல கும்மிதான்.ஏனாம் நிரூன்ர எல்லாப் பதிவுக்கும் நான் போறனானே.இண்டைக்கு இனித்தான் போகவேணும் !

6 April 2012 12:02 //சில பதிவுகளுக்குப் போகமுடியாது ஹேமா அக்காள் நான் படம் பார்த்தே!!!!!!!! பல மாதம். தமிழில் அவர் ஆங்கிலம் முதுமானி ! பிரென்சு நமக்கு!!!!

அம்பலத்தார் said...

என்ன கலை கருவாச்சி காய்ந்துபோய் கிடக்கு எதாவது ஒரு சின்ன பதிவு என்றாலும் எழுதுதலாமே

Yoga.S.FR said...

கலை said...

அவ்வ்வ்வ் ...ஹேமா அக்கா வந்துட்டகளா ...நித்திரைக் கொள்ள மனசே வரலை ...அவ்வவ் ..கொஞ்சம் ஹேமா அக்க்விடம் கதைச்சிட்டு போகிரணன் மாமா.///அவங்களும் சாப்பிட்டு தூங்கப் போயிட்டாங்க,காலையில வேலைக்குப் போகணுமில்ல?நல்ல புள்ளையா போயி தூங்குங்க!

ஹேமா said...

அவகாடோ பற்றி முந்தியும் கதைச்சிருக்கிறம்தானே ரீரீ.பட்டர் ஃபுருட் எண்டும் சொல்றநாங்கள்தானே.இந்த சலட்டுக்குள்ள கிவி பழம் வெட்டிப்போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கோ.எனக்கு நல்லாப்பிடிக்கும்.

தனிமரம் said...

ஹேமா அக்கா, ரீ ரீ அண்ணா ,மாமா ,அம்பல்ஸ் அங்கிள் எல்லாருக்கும் டாடா டாடா டாடா//நன்றி கலை இனிய இரவு வணக்கம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!!!

அம்பலத்தார் said...

வெளியில் வெங்காயம் இருக்கு!
என்னைசாடுகின்றால் என் மனைவி.//
உங்ககூட இத்தனை காலமாக குடும்பம் நடத்துறா கண்டுபிடிக்காமல் இருப்பாவே யார் வெங்காயமென்று. சீ சீ எங்க தன்ரை வெங்காயம் என்று

அம்பலத்தார் said...

good night kalai

தனிமரம் said...

பட்டர் புரூட் என்று உங்களுக்குத்தெரியுது ஹேமா .எனக்கு அது தெரியல அதையும் விட அம்பலத்தாருக்கும் எனக்கும் ஒரு இது சகோதரமொழியில்!!!! அந்தளவு நான் பின்வாங்கு ஆங்கிலத்தில்!ஹீ

Yoga.S.FR said...

Yoga.S.FR said...

இன்னுமா உடல் நிலை சரியாகவில்லை,அம்பலத்தார்????//
முன்பு இருந்ததைவிட குறைந்திருக்கு ஆனால் பூரணமாக மாறவில்லை.///நன்றாக கவனியுங்கள்,வல்லவனை வேண்டுவோம்!

அம்பலத்தார் said...

ஹேமா said...

அவகாடோ பற்றி முந்தியும் கதைச்சிருக்கிறம்தானே ரீரீ.பட்டர் ஃபுருட் எண்டும் சொல்றநாங்கள்தானே.இந்த சலட்டுக்குள்ள கிவி பழம் வெட்டிப்போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கோ.எனக்கு நல்லாப்பிடிக்கும்.//
சீ சீ அந்தப்பழம் புளிக்கும் வேணாம்

ஹேமா said...

கருவாச்சி வேலை கூடவோ.போன் ஒண்டு வந்து மினக்கெடுத்துது என்னை.நல்லாப் படியுங்கோ.சரி போய்ப்படுங்கோ.நாளைக்கு உப்புமடச் சந்தியில சந்திப்பம் !

தனிமரம் said...

உங்ககூட இத்தனை காலமாக குடும்பம் நடத்துறா கண்டுபிடிக்காமல் இருப்பாவே யார் வெங்காயமென்று. சீ சீ எங்க தன்ரை வெங்காயம் என்று//ஹீ ஹீ

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...
///நன்றாக கவனியுங்கள்,வல்லவனை வேண்டுவோம்!//
நன்றி யோகா

ஹேமா said...

அம்பலம் ஐயா கிவி பழம் உடம்புக்கு நல்லது.நல்ல சத்து.மாமியும் நீங்களும் ஒவ்வொருநாளும் ஒண்டு
சாப்பிடுங்கோ !

தனிமரம் said...

கருவாச்சி வேலை கூடவோ.போன் ஒண்டு வந்து மினக்கெடுத்துது என்னை.நல்லாப் படியுங்கோ.சரி போய்ப்படுங்கோ.நாளைக்கு உப்புமடச் சந்தியில சந்திப்பம் !//மதியம் பால்க்கோப்பி கிடைக்கும் போல பார்ப்போம்!

Yoga.S.FR said...

ஹேமா said...

அவகாடோ பற்றி முந்தியும் கதைச்சிருக்கிறம்தானே ரீரீ.பட்டர் ஃபுருட் எண்டும் சொல்றநாங்கள்தானே.இந்த சலட்டுக்குள்ள கிவி பழம் வெட்டிப்போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கோ.எனக்கு நல்லாப்பிடிக்கும்.////ஏதோ சாப்பிட்டு "சிறப்பா" இருந்தா சரிதான்,ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

அம்பலம் ஐயா கிவி பழம் உடம்புக்கு நல்லது.நல்ல சத்து.மாமியும் நீங்களும் ஒவ்வொருநாளும் ஒண்டு
சாப்பிடுங்கோ !//பிரென்சிலும் அதேபெயர் தான் ஹேமா! நல்லதும் கூட.

அம்பலத்தார் said...

ஹேமா said...
.நாளைக்கு உப்புமடச் சந்தியில சந்திப்பம் !//
உப்புமட சந்திலையோ அப்ப நாளைக்கு நல்ல திருவிழா என்று சொல்லுறியள் ஹேமா நானும் வரப்பார்க்கிறன்.

தனிமரம் said...

அவகாடோ பற்றி முந்தியும் கதைச்சிருக்கிறம்தானே ரீரீ.பட்டர் ஃபுருட் எண்டும் சொல்றநாங்கள்தானே.இந்த சலட்டுக்குள்ள கிவி பழம் வெட்டிப்போட்டுச் சாப்பிட்டுப் பாருங்கோ.எனக்கு நல்லாப்பிடிக்கும்.////ஏதோ சாப்பிட்டு "சிறப்பா" இருந்தா சரிதான்,ஹ!ஹ!ஹா!!!!!

6 April 2012 12:18 //அக்காள் உது எல்லாம் வெட்டிக்கொடுத்து அவையள் சாப்பிட்டு எப்படா வீட்டில் வந்து சோறு சாப்பிடுவம் என்று இருக்கும் ம்ம்ம்.

தனிமரம் said...

உப்புமட சந்திலையோ அப்ப நாளைக்கு நல்ல திருவிழா என்று சொல்லுறியள் ஹேமா நானும் வரப்பார்க்கிறன்.// இங்கையும் எட்டிப்பாருங்கோ வித்தியாசம் பறக்கும்! ஹீ வேலை முழுநேரம்!

தனிமரம் said...

யோகா ஐயா விடைபெற்றுவிட்டார் போல! நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

நீங்கள் ஒருத்தரும் என்னைக் காணேல்ல.காக்காதான் கண்டிருக்கிறாபோல.

இண்டைக்கு புரொக்கொலியும் அவரையும் உப்புப் போட்டு அவிச்சு குஸ்குஸ் சமைச்சன்.இப்பிடித்தான் நான் சாப்பிடுறது.ஆனால் எனக்கும் நேசன்போல கிழமையில ஒருநாளைக்கு உறைப்பு புளிப்பா சாப்பிடவேணும்.

தனிமரம் said...

நீங்கள் ஒருத்தரும் என்னைக் காணேல்ல.காக்காதான் கண்டிருக்கிறாபோல.

இண்டைக்கு புரொக்கொலியும் அவரையும் உப்புப் போட்டு அவிச்சு குஸ்குஸ் சமைச்சன்.இப்பிடித்தான் நான் சாப்பிடுறது.ஆனால் எனக்கும் நேசன்போல கிழமையில ஒருநாளைக்கு உறைப்பு புளிப்பா சாப்பிடவேணும்.// முட்டைக்கோவா நல்லா இருக்கும் ஹேமா நுவரெலியா பதுளை என மறக்கமுடியாது . குஸ்குஸ் மெனு தாரேன் பிறகு! ஹீ ராகுல் விரைவாக வந்தாகனும்!

6 April 2012 12:28

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

ஹேமா said...

சரி நேசன் நானும் இனி நாளைக்கு வாறன்.உப்புமடச் சந்தியில எல்லாரையும் கவிதை எழுத வைக்கலாமெண்ட ஒரு ஆசை.பாக்கலாம்.வெயில் காலம் தொடங்கினதால உங்களுக்கு வேலை கூடவா இருக்கும்.வேலை வேலைதான்.நல்லாச் சாப்பிடுங்கோ.அதேநேரம் சந்தோஷமும் வேணும்.சந்திப்பம் !

அம்பலத்தார் said...

தனிமரம் said...
இங்கையும் எட்டிப்பாருங்கோ வித்தியாசம் பறக்கும்! ஹீ வேலை முழுநேரம்!//
இந்தவாரம் முழுவதும் உங்களிடம் சிறப்பு விருந்துண்ண கட்டாயம் வருவன் நேசன்

தனிமரம் said...

சரி நேசன் நானும் இனி நாளைக்கு வாறன்.உப்புமடச் சந்தியில எல்லாரையும் கவிதை எழுத வைக்கலாமெண்ட ஒரு ஆசை.பாக்கலாம்.வெயில் காலம் தொடங்கினதால உங்களுக்கு வேலை கூடவா இருக்கும்.வேலை வேலைதான்.நல்லாச் சாப்பிடுங்கோ.அதேநேரம் சந்தோஷமும் வேணும்.சந்திப்பம் !// முடிந்தளவு வாரேன்! தனிமெயில் போடுங்கோ குறைநினைகாமல் பல பதிவில் கடைசியாக்த்தான் வாரன் எப்படியும் நாளை வருவேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வண்க்கம்.

அம்பலத்தார் said...

ஹேமா said...
உப்புமடச் சந்தியில எல்லாரையும் கவிதை எழுத வைக்கலாமெண்ட ஒரு ஆசை....பாக்கலாம்.//
என்ன ஹேமா இப்படி மிரட்டிப்போட்டு போறா நாங்கள் மழைக்குக்குட பள்ளிக்கூடத்தில ஒதுங்காத ஆக்கள் கவிதை எழுதச்சொன்னால் என்ரை கதை கந்தல்தான்....

தனிமரம் said...

இங்கையும் எட்டிப்பாருங்கோ வித்தியாசம் பறக்கும்! ஹீ வேலை முழுநேரம்!//
இந்தவாரம் முழுவதும் உங்களிடம் சிறப்பு விருந்துண்ண கட்டாயம் வருவன் நேசன்

6 April 2012 12:48 //நன்றி அம்பலத்தார் மன்னிக்கவும் தொடர்ந்து உங்களைக் துன்பப்படுத்துவதுக்கு!!

அம்பலத்தார் said...

ஹேமா said..
வெயில் காலம் தொடங்கினதால உங்களுக்கு வேலை கூடவா இருக்கும்.வேலை வேலைதான்.நல்லாச் சாப்பிடுங்கோ.அதேநேரம் சந்தோஷமும் வேணும்.சந்திப்பம் !//
ஆமா ஹேமா. அமைதியான தூக்கம் உங்கள் கண்களை அணைக்கட்டும் மீண்டும் சந்திப்போம்

தனிமரம் said...

என்ன ஹேமா இப்படி மிரட்டிப்போட்டு போறா நாங்கள் மழைக்குக்குட பள்ளிக்கூடத்தில ஒதுங்காத ஆக்கள் கவிதை எழுதச்சொன்னால் என்ரை கதை கந்தல்தான்....//ஹீ நீங்க ஒதுங்காத ஆட்கள் நான் போகவே இல்லை!!!!!! அவ்வ்வ்வ்

தனிமரம் said...

வெயில் காலம் தொடங்கினதால உங்களுக்கு வேலை கூடவா இருக்கும்.வேலை வேலைதான்.நல்லாச் சாப்பிடுங்கோ.அதேநேரம் சந்தோஷமும் வேணும்.சந்திப்பம் !//
ஆமா ஹேமா. அமைதியான தூக்கம் உங்கள் கண்களை அணைக்கட்டும் மீண்டும் சந்திப்போம்// மீண்டும் சந்திபோம் அம்பலத்தார்!!!!

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//நன்றி அம்பலத்தார் மன்னிக்கவும் தொடர்ந்து உங்களைக் துன்பப்படுத்துவதுக்கு!!//
அப்படி சொல்லாதையுங்கோ நேசன். அவசர உலகில் மனதுக்கு இனிய விடங்களிற்கும் சில நிமிடங்களையாவது ஒதுக்குவது எனக்கும் மகிழ்வு தருகிறது. நாளை மற்றுமொரு பதிவில் சந்திப்போம். நாளை அனைவருக்கும் மீண்டும் மற்றுமொரு இனியநாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கங்கள் விடை பெறுகிறேன் நேசன்

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா விடைபெற்றுவிட்டார் போல! நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.///இதில் என்ன இருக்கிறது,நேசன்?சாப்பாடு கூவி அழைத்தது,சென்றுவிட்டு வந்தால்?????யாரையும் காணோம்!

Yoga.S.FR said...

ஹேமா said...

நீங்கள் ஒருத்தரும் என்னைக் காணேல்ல.காக்காதான் கண்டிருக்கிறாபோல.///இல்லையே,மகளே?இரண்டு தடவை கூப்பிட்டேனே?கருத்துகளை நேரமிருந்தால் மீள்பார்வை(6 April 2012 12:03,6 April 2012 12:18) இடுங்கள்!அப்பா கூப்பிட்டாரா,இல்லையா என்று தெரியும்!

Yoga.S.FR said...

ஹேமா தளம் சென்றிருந்த நேரத்தில் தான் நீங்கள் பதிவிட்டீர்கள் போலும்!எனக்கே தெரியாது.ஹேமா பதிவிட்டது,தற்செயலாக மாட்டியது!சொல்லவில்லை என்று தவறாக எண்ண வேண்டாம்!

ஹேமா said...

என்னைக் குண்டு என்று கலை சரியாகக் கண்டு பிடிச்சிருக்கிறதைச் சொன்னேன்.அப்பா உங்கள் பின்னூட்டங்கள் சந்தோஷமா உறவின் நெருக்கத்தைத் தருகிறமாதிரி உணர்வு.நாளைக்கு படம் ஒண்டு போடுறன் வந்து அந்தப் படத்துக்கு 10 வரிக்குள்ள ஒரு கவிதை எழுதுங்கோ.எல்லாரும் வாங்கோ !

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
நலமா?
அம்பலத்தார் ஐயா படைத்த விருந்தை படிக்கும் போதே
நாக்கில் எச்சில் ஊறுகிறது...
என்றாவது ஒரு நாள் நானும் ஐயா வீட்டில் விருந்து
சாப்பிட்டுவிடுவது என்று முடிவெடுத்துட்டேன்...

சிட்டுக்குருவி said...

இம்புட்டு பேரு சொல்லுரதெல்லாம் சொல்லிப்புடாங்க...
நான் சொல்லுரத்துக்கு என்ன இருக்கு
வந்ததுக்கு ஒரு கமண்ட் போட்டுடுவோம்
இல்லன்னா கோவிச்சுபுடுவாங்க....

கணேஷ் said...

நான் எழுதியது போல இருக்கிறது என்று அம்பலத்தார் அவர்களே சொல்லி விட்ட பிறகு அதைவிட நான் என்ன பெரிதாகப் பாராட்டிவிட முடியும் நேசன்,,?

Asiya Omar said...

சாப்பாட்டு மேசை மிகவும் அருமை.

Yoga.S.FR said...

காலை வணக்கம் எல்லோருக்கும்!கொஞ்சம் நேரம் கழித்து வருவேன்.

Yoga.S.FR said...

ஹேமா said...

என்னைக் குண்டு என்று கலை சரியாகக் கண்டு பிடிச்சிருக்கிறதைச் சொன்னேன்.அப்பா உங்கள் பின்னூட்டங்கள் சந்தோஷமா உறவின் நெருக்கத்தைத் தருகிறமாதிரி உணர்வு.நாளைக்கு படம் ஒண்டு போடுறன் வந்து அந்தப் படத்துக்கு 10 வரிக்குள்ள ஒரு கவிதை எழுதுங்கோ.எல்லாரும் வாங்கோ !////அப்பாடா!!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

இவ்ளோ கமெண்ட் வாசிக்கவே தனிமரத்திற்கு டைம் இருக்காது. ஏதோ நானும் வந்தேன், வாசித்தேன் என்பதற்கு இந்த கமெண்ட் அத்தாட்சி.

புலவர் சா இராமாநுசம் said...

சாப்பாட்டின் சுவையைவிட யாழ் தமிழின் சுவையே சுவை!
நன்றி! தனிமரம்!

புலவர் சா இராமாநுசம்