07 April 2012

கண்கள் ஊடே!!!!

பாசத்தின் உணர்வுகளைக் கண்டு கொள்ளும் இன்னொரு இடம் விமானநிலையம்! நான் பலதரப்பட்ட பயணமாக சென்னை செல்லும் போதெல்லாம் விமானநிலையத்திற்கு கொஞ்சம் அதிக நேரம் முன்னதாகவே வந்து விடுவது உண்டு;


காரணம், பயணங்கள் எளிதாக இருக்கனும் என்ற எண்ணத்தில்.. அப்போது பலர் தம் மேற்படிப்பு,வேலை,மருத்துவம் என பலகாரணங்களுக்காக வெளி இடங்களுக்கு பயணிப்பதற்கு தயாராக வருவார்கள் .

'பாப்பாவை ஜாக்கிரதையாக பார்த்துக்கம்மா' பேத்தி மீதான பாட்டியின் பாசம் ஒரு புறம் என்றால், 'அதெல்லாம் நான் பார்த்துக்கின்றேன்' என்று  தன் மகள் மீது தனக்கும் பாசம் உண்டு என்று காட்டும், முதல் குழந்தை பெற்ற பின் நாடு கடந்து செல்லும் மகளின் தாயுணர்வு ஒரு பக்கம்!

'எல்லா தஸ்தாவேஸ்கள் பத்திரமாக எடுத்துவிட்டாயாம்மா'.

'ஓம் அப்பா! இன்னும் நான் என்ன சின்னப்பிள்ளையா!' சினந்து கொள்ளும் மகள், மணம்முடித்து வெளிநாடு போக உள்நுழைவாள்! 'நீ எத்தனை பிள்ளை பெற்றாலும் எனக்கு குழந்தைதான்' பாசத்தில் கம்பீரமாக வலம் வந்த அப்பா குழந்தையாக மாறுவது விமானநிலையத்தில்!

'கவனமாக படிக்கனும்' அக்காள் அடுத்த தாயாக மாறி தங்கைக்கு அறிவுரை சொல்லும் இடம் இங்குதான்! 'அம்மாவை பாத்துக்க, அடிக்கடி கோல் பண்ணு,
வீட்டில் இரு, விளையாடப்போய் விடாத! இனி நீ தான் வீட்டுக்கு காவலன்' என்று இடித்துரைத்து தம்பிக்கு குடும்பப் பொறுப்பைச் சுட்டிக்காட்டும் அக்காள் விடைபெறும் இடம் பன்னாட்டு பறக்கும் இடத்தில்!

'அடிக்கடி கோல் பண்ணுங்க மாப்பிள்ளை' மச்சானை மச்சான் அண்ணாவாக பார்க்கும் இடம்!

'இரண்டு வருடம் தானே கொஞ்சம் உழைத்துவிட்டு வாறன்!' கவலையுடன் வழியணுப்பும் தாய்க்கு கலங்கிய விழியுடன் அரபுலகம் செல்ல விடைபெறும் மகன். சனிக்கிழமையில் நல்லா முழுகு எண்ணைய் வைத்து; மருத்துவச்சியாகும் தாயுள்ளம் மகளுக்கு சொல்லியணுப்பும் இடம்!

'மகளைப்பத்திரமாக பார்த்துக்கங்க! இவ்வளவுகாலமும் செல்லமாக வளர்த்துப்போட்டன், ஏதும் பிழை செய்திட்டா கோபப்பட்டு திட்டிவிடாதீங்க மாப்பிள்ளை' மாமானார் மருமகனிடம் பேசும் போதே தொண்டை அடைத்துக்கொள்ளும்; தன் மகள் வெளிநாட்டில் போய் எப்படி தனிக்குடித்தனம் நடத்தப்போறாளோ என்ற கவலையோடு வழியணுப்பும் இடத்தில்...

சரி அக்காள் நான் போய்ட்டு வாறன்;ஒன்றுக்கு ஜோசிக்காத! அடிக்கடி எதிலும் அவசரப்படாத போற இடத்தில் என்று முன் எச்சரிக்கை செய்வதில் அக்காள் இன்னொரு வழிகாட்டியாகுவாள்; அதுவரை உடுப்பு மடித்துவைக்க சண்டைபிடித்த நினைவுகள் வந்து போகும்! கூடவே  இருவருக்கும் நல்ல தோழியின் பிரிவை ஞாபகப் படுத்தும் விமானநிலையம்!

இதையும் தாண்டி மறுகரையில் பலர் 'மாப்பிள டுபாய் போனதும் கோல் பண்ணு, நம்ம பங்காளி எல்லாம் பார்த்துக்கொள்வார்' என்று பாசமாக அன்பு பொழியும் இன்னொரு உறவு.

'ஏப்பா தம்பி, நீங்க சிங்கை வழியாலயா போறீங்க? '

'ஆமா பாட்டி..'

'சும்மா இரு பாட்டி! யார் என்றே தெரியாதவரிடம்...'

'தம்பியைப்பார்த்தா நல்லவர் போல இருக்கின்றார். தம்பி இவ என் பேத்தி! பேரன்ஏதோவேலை அதிகம் என்பதால கூட்ட வரவில்லை! நீங்க கொஞ்சம் உதவி செய்து சிங்கையில் இறங்கும் வரை தஸ்தாவேஸ்க்கு(document) உதவி செய்தம்பி!'  என்று  உரிமையுடன்,  அனுபவமே ஆட்களை இனம் காட்டும் என்று, பேர்த்தியின் பட்டப்படிப்பை விட கிராமத்து மனதில் முதுகலை கற்ற பாட்டி.

'சரிம்மா வாங்கோ!'
எப்படி எல்லாம் அண்ணன் தங்கை உறவாக திடீர் வரவுகள் காணும் இடம் விமானநிலையப் பயணம்.

'ஏங்க நீங்க ஐரோப்பாவில் இருந்து வந்தீங்களா?' குறுக்கு விசாரனையில் இன்னொரு சட்டதரணி என்று நினைப்பில் வரும் முகம் தெரியாத நண்பர்!

'நான் இங்க சுற்றுலா மையம் நடத்துகின்றன். பல இடங்கள் பார்க்க வேண்டிய வசதிகள் செய்வம்' என்று விளம்பர முகவரி கொடுக்கும் போதே இன்னொரு உறவாகிவிடும் சுற்றுலா பயணிகளுக்கு.

ஐரோப்பாவில் எந்த இடம்? என்று கேட்கும் அடுத்த நண்பனாக வருவான் ஈழத்தில் பிறந்த இன்னொரு சகபயணாளி!

'நான் இந்த தேசம்..'

'ஓ அப்படியா! ஊரில் எந்த இடம்?' பதில்கள் பின்னே நாட்டின் அவலம் வந்து மனதைத் தைத்துவிட்டால் மெளனமாக நகர்ந்து செல்லும் உறவுகள் என விமானநிலையப் பயணம் விதம் விதமாகும்.

'இனி எப்ப வருவீங்க மாமா' பாசத்துடன் கேட்கும் மருமகனுக்கு மாமா வரும் போது கொண்டு வரும் சொக்கோலாவின் சுவை இனிக்கும்!

'மாமா வரும் போது கணனி கொண்டு வரனும்'.

மருமகள் மாமாவிடம் தனக்கு என்ன தேவை என்பதை தெரிவிக்கும் இடம்! 'ஒழுங்கா சாப்பிடு தம்பி. நேரத்துக்கு உறங்கு, கண்ட படி இணையத்தில் உலாவத!' என்று குட்டுவதில் அக்காள் ஒரு ஆசிரியர் ஆவாள். ஆனால் 'அவன் என்ன சின்னப்பிள்ளையா கல்யாணம் முடிஞ்சுது! இன்னும் உனக்கு தம்பி பாசம்' என்று இடையில் தன் இருப்பை ஞாபகப் படுத்தும் மைத்துனர் உறவு. எல்லாம் தாண்டினால், 'ஏப்பா இப்ப போகத்தான் வேணுமா?' காதல் ஏக்கத்துடன் ஏங்கி நிற்பாள் எங்கோ பிறந்து பல ஊர்களில் அகதியாக அலைந்து எப்படியோ உறவுக்குள் கலியாணம் மூலம் வந்து குடும்பத்தில் இணைந்த கட்டின மனைவி...
தான் பிரியும் வேதனை கண்ணில் தெரிவதை அவள் பார்க்கக் கூடாது என்று சூரியகண்ணாடி போடும் கணவர் பலர் மெளனிப்பது இந்த விமாணநிலையப் பயணத்தில்.
'கண்டிப்பா விரைவில் வருவன்' என்று முகம் பார்க்கும் போதே முத்துக்களாக கண்ணீர்த்துளிகள் வந்துவிடும்!

'எனக்கு மட்டும் உன்னைப்பிரிந்து போக விருப்பமா? என்ன செய்வது உன் விசா கிடைத்தால் தான் உன்னைக்கூட்டிக் கொண்டு போகலாம்' என்று சொல்லும் போதே குற்றம் செய்தவன் போல துடிக்கும் கணவன்மார்கள் எண்ணிக்கொள்வது, ஏண்டா சாமி ஈழத்தில் தமிழனாகப் பிறந்து ஏதிலியாக ஐரோப்பாவிற்கு வந்தோம் என்று...!!

இத்தனை விடயங்கள் கடக்கும் போதே தம்பியும் சிறிலங்காவோ! 'காதுகேளாது போல... பாவம் செவிட்டு மிசின் பூட்டியிருக்கு.. ஆமிக்காரன் அடித்திருப்பாங்களோ!' அப்பாவியாக எண்ணும் பாட்டிக்குத் தெரியாது காதில் பாடல் ஒலிப்பது இந்த வயர் மூலம் என்று!

'என்னபாட்டி கேட்டீங்க?'

'அப்ப நல்லா காது கேட்கும்! நான் தப்பா நினைச்சுப் போட்டன் குறை நினையாதீங்கோ..'

'இல்ல பாட்டிநானும் அப்படியே தான் போறன்'.

'நல்லதாப் போச்சு!, நானும் சிங்கை வழி ஐரோப்பாவிற்குப் போய் அங்கிருந்து விட்டு கனடா போறன்'.

'என்ன செய்யனும்'.

'கையில் இருக்கும் படிவத்தை நிரப்பித் தந்துவிட்டு வாசல் கதவு வரை வந்தால் போதும்.
 இப்ப எல்லாம் அடிக்கடி மூச்சு வாங்குது! தம்பிக்கு கலியாணம் முடிஞ்சுதோ?
என்ர மகனுக்கும் உங்கட வயசு இருக்கும்.

 இன்னும் ஒன்றும் பொருந்தவில்லை!' என்று தாய் போல வந்துவிடும் தாயக உறவுகள் ஒருபுறம் என இந்தப்பயணங்கள் மனதைக் கனக்க வைக்கின்றது பல சமயங்களில்.
அப்போது ஒலிக்கும் குரல்..!
உங்கள் பயணத்திற்கான கதவு திறக்கப்படுகின்றது; பாதுகாப்புச் சோதனை தாண்டி உள்ளே சென்று அமரவும்.
அப்போது பாடல் கேட்பது இப்படியான..!

42 comments :

Yoga.S.FR said...

பகல் வணக்கம் நேசன்!இன்றைக்கும் நான் தானா?உங்கள் சகோதரிகள்........................!ஹேமா தளத்தில் கவிதை பார்த்தேன்!எனக்குத் தமிழில் "எழுத"மட்டுமே தெரியும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

Yoga.S.FR said...

விமான நிலையம்!ஹும்...................பல்லின மக்கள் மட்டுமல்ல,பலவகை கனவுகள்,ஏக்கங்கள்,எதிர்பார்ப்புகள்,இப்படிஎத்தனை,எத்தனையோ?சுவர்களும்,கண்ணாடித் தடுப்புகளும் ஆயிரம் கதை சொல்லும்!

இராஜராஜேஸ்வரி said...

பயணங்கள் பலவிதம்...

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
முதல்முறை விமானநிலையம் சென்ற போது
கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது..
நாமும் இங்கே வருவோமா? என்ற நினைத்த நிலை
மாறி .. காலம் எனை அங்கு கொண்டுவந்து சேர்த்தது..
ஆனாலும் பணிக்கான நேர்காணல் மட்டுமே என் கண்களில்
இருந்ததால் அதன் அழகு தெரியவில்லை...

கடந்த ஆறுவருடங்கள் மாதம் ஒருமுறை விமானப் பயணம்
தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது...
ஆனாலும் ஊருக்கு செல்கையில் ஒருவித மகிழ்ச்சியும்
திரும்பி வருகையில் மனம் இறுகியும் இருப்பது
சாதரணமாகிவிட்டது..

பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க விமான நிலையம்
உதவுகிறது..
அழகிய பதிவு நேசன்...

ஹேமா said...

அட...அப்பா சூசகமாச் சொல்லியிருக்கிறார் நேசன்ர பதிவை.நான் கவிதைக்கு எதையோ சொல்றார் எண்டு நேசன்ர கவிதையைத் தேடிப்பாத்திட்டு இருந்திருக்கிறன் இவ்வளவு நேரம்.

சமையல் நடக்குது இண்டைக்கு உறைப்பா புளிப்பா.வந்து வாசிக்கிறன் நேசன் !

கவிதைகள் எல்லாமே அருமை.நல்ல கருக்களோட அமைஞ்சிருக்கு !

Seeni said...

விமான நிலையம்!

சோகத்தின் தளம்!

அடைபட்டு கொண்டது-
உங்கள் எழுத்திடம்!!

ஹேமா said...

"கண்கள் ஊடே..."நல்லாயிருக்கு.ஒரு கவிதைக்குக் கட்டாயம் இந்தப் பெயர்.கடன் தருவீங்களோ ரீரீ !

விமான நிலையங்கள் இப்போ சாதரண புகையிரத நிலையம்,பேரூந்து நிலையம்போல ஆகிவிட்டாலும் ஆரம்பகால நினைவுகளை அப்படியே கண்கள் ஊடே கொண்டு வந்து நெகிழப்பண்ணி வச்சிருக்கிறீங்கள் நேசன்.எத்தனை வித மனிதர்கள்.அவர்களின் உணர்வுகள்,தேவைகள்.ஆனால் ஒரு அவசரம் தெரியும் எல்ல்லோருக்குள்ளும்.பிரயாணிகள் வேலையாட்கள் உடபட.யாருமே சும்மா சோம்பேறித்தனமாகத் தெரியமாட்டார்கள்.அருமையான பதிவு.

பாட்டி போட்டோ கிடைத்தற்கரிய பொக்கிஷம்.ஆனால் தெளிவில்லையே !

பாட்டு....சொல்லப்போனால் ராமராஜனைக் கண்டாலே ஏனோ ஒரு எரிச்சல் வரும்.சரி பாடல் இசை சாதாரணமாகப் பிடித்த பாடல்தான் !

அம்பலத்தார் said...

அப்படியே சென்னை விமான நிலையத்தில நின்ற நிமிடங்களை மீண்டும் கண்முன் கொண்டுவந்துவிட்டது உங்கள் பதிவு

அம்பலத்தார் said...

எனக்கு ராமராஜன் படங்களை பார்ப்பதைவிட அவர் படப்பாடல்களை கேட்பது அதிகம் பிடிக்கும்.

அம்பலத்தார் said...

எத்தனை தடவைகள் போனாலும் ஒவ்வொருதடவையும் புதுப்புது அனுபவங்களையும் சுவாரசியத்தையும் தந்துகொண்டே இருக்கும் இடம் விமானநிலையம்

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
பால்க்கோப்பி குடியுங்கோ.எனக்கும் எழுத்தமட்டும் தான் தெரியும் ஹீ எழுத்துப்பிழைகளுடன்.

தனிமரம் said...

உண்மைதான் யோகா ஐயா.கதைகள் பல தரும் சில கவிதையும் தரும் இடம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆம் இராஜராஜேஸ்வரி அம்மா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

அம்பலத்தார் said...

hai nesan you are late today

தனிமரம் said...

அட...அப்பா சூசகமாச் சொல்லியிருக்கிறார் நேசன்ர பதிவை.நான் கவிதைக்கு எதையோ சொல்றார் எண்டு நேசன்ர கவிதையைத் தேடிப்பாத்திட்டு இருந்திருக்கிறன் இவ்வளவு நேரம்.

சமையல் நடக்குது இண்டைக்கு உறைப்பா புளிப்பா.வந்து வாசிக்கிறன் நேசன் !

கவிதைகள் எல்லாமே அருமை.நல்ல கருக்களோட அமைஞ்சிருக்கு !

7 April 2012 05:27 
//வேலைத்தளத்தில் எப்போதும் மென்மையான உறைப்புத்தான் வீட்டில் தான் நம்ம ஊர்ச்சாப்பாடு! நன்றி உங்களின் பாராட்டுக்கு.

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

"கண்கள் ஊடே..."நல்லாயிருக்கு.ஒரு கவிதைக்குக் கட்டாயம் இந்தப் பெயர்.கடன் தருவீங்களோ ரீரீ !//தாராளமாக எடுத்துக்கொள்ளூங்கோ ஹேமா அக்காள்.ரீரீ கலைக்கு மட்டும் தான் உங்களுக்கு நான் எப்போதும் நேசன் தான் .

தனிமரம் said...

hai nesan you are late today 
//அம்பலத்தார் ஐயா வேலைத்தளத்தில் இருக்கின்றேன் இன்று இரவு பதிவு போடமுடியாது என்பதால் தானே காலையில் இட்டிருந்தேன்!

தனிமரம் said...

பாட்டி போட்டோ கிடைத்தற்கரிய பொக்கிஷம்.ஆனால் தெளிவில்லையே !//பாட்டி ஒழுங்கா எடுக்க விட்டால் தானே கெதியா ஓடனும் கதவு திறந்திட்டாங்க என்று குழப்பி விட்டா அதுதான் அப்படி வந்துவிட்டது ஹேமா!

தனிமரம் said...

பாட்டு....சொல்லப்போனால் ராமராஜனைக் கண்டாலே ஏனோ ஒரு எரிச்சல் வரும்.சரி பாடல் இசை சாதாரணமாகப் பிடித்த பாடல்தான் !//எனக்கு அவர் தான் ஹீரோ ஒரு காலத்தில்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா!

Yoga.S.FR said...

இன்றைக்கு எல்லோரும் ஹேமா தளத்தில் கவிதை எழுதி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்!எனக்கு தமிழில் "வசனம்" மட்டுமே எழுத வரும்,ஹி!ஹி!ஹி!!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
பால்க்கோப்பி குடியுங்கோ.எனக்கும் எழுதமட்டும் தான் தெரியும் ஹீ எழுத்துப் பிழைகளுடன்.///இத்தப் பார்ரா!பன்மொழிக் கவிஞன் என்று அம்பலத்தாரே பாராட்டியிருக்கிறார்!நானும் வழிமொழிகிறேன்,நேசன்!

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் பாராட்டுக்கு!

தனிமரம் said...

எனக்கு ராமராஜன் படங்களை பார்ப்பதைவிட அவர் படப்பாடல்களை கேட்பது அதிகம் பிடிக்கும்.

7 April 2012 07:11 
//இளையராஜா அவருக்கு தனி இடம் கொடுத்திருந்தார் தன் இசையில் அதனால் தான் அவர் படங்கள் அப்படி ஓடியது எனக்கு அவர் நடிப்பும் பிடிக்கும்!

தனிமரம் said...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
பால்க்கோப்பி குடியுங்கோ.எனக்கும் எழுதமட்டும் தான் தெரியும் ஹீ எழுத்துப் பிழைகளுடன்.///இத்தப் பார்ரா!பன்மொழிக் கவிஞன் என்று அம்பலத்தாரே பாராட்டியிருக்கிறார்!நானும் வழிமொழிகிறேன்,நேசன்!

7 April 2012 11:21 
//யோகா ஐயா  அவர் அன்பில்  சொல்லுகின்றார் புரளி வேண்டாம் ஐயா ஏற்கனவே உள்குத்து இன்னும் மீளமுடியவில்லை .ஹீ

தனிமரம் said...

இன்றைக்கு எல்லோரும் ஹேமா தளத்தில் கவிதை எழுதி அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்!எனக்கு தமிழில் "வசனம்" மட்டுமே எழுத வரும்,ஹி!ஹி!ஹி!!!!!! 
//ஐயா ஒரு பண்டிதர் என்று நிரூபித்துவிட்டீர்கள் புலவர் பாட்டோடு வந்து .

Yoga.S.FR said...

தனிமரம் said...

எனக்கு ராமராஜன் படங்களை பார்ப்பதைவிட அவர் படப்பாடல்களை கேட்பது அதிகம் பிடிக்கும்.

7 April 2012 07:11
//இளையராஜா அவருக்கு தனி இடம் கொடுத்திருந்தார் தன் இசையில் அதனால் தான் அவர் படங்கள் அப்படி ஓடியது எனக்கு அவர் நடிப்பும் பிடிக்கும்!
////என்னது,ராமராஜன் "நடிப்பாரா?"இன்று தான் இந்த சரித்திரப் புகழ்?!பெற்ற சேதியைக் கேள்விப்படுகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
பால்க்கோப்பி குடியுங்கோ.எனக்கும் எழுதமட்டும் தான் தெரியும் ஹீ எழுத்துப் பிழைகளுடன்.///இத்தப் பார்ரா!பன்மொழிக் கவிஞன் என்று அம்பலத்தாரே பாராட்டியிருக்கிறார்!நானும் வழிமொழிகிறேன்,நேசன்!

7 April 2012 11:21
//யோகா ஐயா அவர் அன்பில் சொல்லுகின்றார் புரளி வேண்டாம் ஐயா ஏற்கனவே உள்குத்து இன்னும் மீளமுடியவில்லை .ஹீ!!!!////இல்லையே?இப்போதும் "அங்கு" சென்று பார்த்தேன்!நிரூபன் கூட அப்படித்தானே சொல்கிறார்?திறமை இருப்போரை ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை.உங்கள் அடக்கம் நல்லது!

தனிமரம் said...

எத்தனை தடவைகள் போனாலும் ஒவ்வொருதடவையும் புதுப்புது அனுபவங்களையும் சுவாரசியத்தையும் தந்துகொண்டே இருக்கும் இடம் விமானநிலையம்

7 April 2012 08:30 
//உண்மைதான் அம்பலத்தார்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இந்த சரித்திரப் புகழ்?!பெற்ற சேதியைக் கேள்விப்படுகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!!! 
//அவரைப்போல கரகாட்டக்காரன்,எங்க ஊர்க்காவல்காரன் என்னைப்பெத்த ராசா போன்ற படங்களை இன்றைய விசில்கூட்டம் நடிக்குமா ஐயா! அவரின் படத்தின் முக்கிய அம்சத்தை ராகுல் சொல்லுவான் பொறுங்கோ!ஹீ

தனிமரம் said...

இன்னும் மீளமுடியவில்லை .ஹீ!!!!////இல்லையே?இப்போதும் "அங்கு" சென்று பார்த்தேன்!நிரூபன் கூட அப்படித்தானே சொல்கிறார்?திறமை இருப்போரை ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை.உங்கள் அடக்கம் நல்லது! 
//இடையில் வேலை என்பதால் அங்கே போகவில்லை மிச்சம் பின்னிரவில் பார்க்கின்றேன் போய் என்றாலும் உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மகிழ்சியுடன் கூடிய நன்றி.

கலை said...

பயண நியாபகப் படுத்திடுச்சி அன்ன உங்கட பதிவு ...சுப்பெர்ரா இருக்கு

கலை said...

உண்மை தானுங்க அண்ணா ...ரயில்வே ஸ்டேஷன் ,பேருந்து நிலையம் எண்டால் கூட நிறையா பாச மழை இருக்கும் ....

நானும் வீட்டுக்கு போகும்போது ஜாலி யா போவினம் ...திரும்பி கிளம்பும் போது அழுது விடுவினம் ..இப்போலாம் நல்லப் பிள்ளையா சமத்தா டாடா சொல்லிடுவேன் ...மனசுக்குள் கொஞ்சம் கஷ்டம் இருக்கும் ...

தனிமரம் said...

பயண நியாபகப் படுத்திடுச்சி அன்ன உங்கட பதிவு ...சுப்பெர்ரா இருக்கு 
//நன்றி கலை கருத்துரைக்கு.

தனிமரம் said...

உண்மை தானுங்க அண்ணா ...ரயில்வே ஸ்டேஷன் ,பேருந்து நிலையம் எண்டால் கூட நிறையா பாச மழை இருக்கும் ....

நானும் வீட்டுக்கு போகும்போது ஜாலி யா போவினம் ...திரும்பி கிளம்பும் போது அழுது விடுவினம் ..இப்போலாம் நல்லப் பிள்ளையா சமத்தா டாடா சொல்லிடுவேன் ...மனசுக்குள் கொஞ்சம் கஷ்டம் இருக்கும் ... //ம்ம்ம் பலர் விழியில் ஈரம் கசிவதை வேடிக்கை பார்த்திருக்கின்றேன்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கலை.

கணேஷ் said...

விமான நிலையத்துக்கும் சரி, விமானத்திலும் சரி... செல்லும் அனுபவம் எனக்கு இதுவரை வாய்த்ததில்லை நேசன். உங்கள் எழுத்தில் இருந்த உணர்வுகள் என்னுள் கடத்தப்பட்டன. இந்த வகையான உணர்வுக் குவியல்களில் சிலவற்றை நான் ரயில் நிலையங்களில் பார்த்திருக்கிறேன். ஆகவே உங்களின் எழுத்தை ரசித்துப் படிக்க முடிந்தது!

Esther sabi said...

விமான நிலையம் இது வருடத்திற்கு நான் இரு முறை பார்ப்பேன் பிரான்ஸிலிருந்து புறப்பட்டு இலங்கை வந்தாலும் சரி, இலங்கையிலிருந்து பாரிஸ் சென்றாலும் ஒரே அனுபவம்தான் எனக்கு..

கணேஷ் said...

நேசன்... நான் உங்களை அண்ணாவென்று அழைக்கட்டுமா... இல்லை ரீரீயென்று விளிக்கட்டுமா... ஹி... ஹி....

Yoga.S.FR said...

எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!

rajesh said...

நல்ல பதிவு .
http://astrovanakam.blogspot.in/