19 April 2012

கவிதை தந்த விருது

கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு சின்ன வயதில் இருந்து வந்த ஒன்று.
 என் கிறுக்கல்களை கவிதை என்று ஏற்றுக்கொண்டு காற்றலையில் தவளவிட்டு எனக்கு முகவரி கொடுத்தது இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபணம்.

அதில் பல நிகழ்ச்சிகளுக்கு என் கவிதை வந்திருக்கு அறிவிப்பாளர்களின் குரல்கள் ஊடாக.அதில் இதயசங்கமம் என்ற நிகழ்ச்சியில் என் முதல் கிறுக்கல் 15 வயதில் வந்த போது என்னை நம்ம மறுத்தவர்கள் என்னை இனி கவிதை எழுக்கூடாது .என்று தடுத்தார்கள்.

அதில் தந்தையும் தாயும் இல்லை நான் சின்ன வயதில் இருந்து வாழ்ந்தது வேறு ஓர் உறவோடு யுத்தம் காரணமாக.

என்றாலும் யார் தடுத்தும் நான் தொடர்ந்தும் எழுதியிருந்தேன்.

என் நாட்குறிப்பில் அதிகம் கிறுக்கியது கவிதை தான். என் நாட்குறிப்பு நம்பிக்கையான நண்பர் வீட்டில் பத்திரமாக இருந்தது பின் சில காலம். .

தடுத்தவர்கள் மீதும் குற்றம் இல்லை .வளரிளம் பருவத்தில் காதல் பாதையில் எங்கே தொலைந்து விடுவேனோ! என்ற ஐயம் இருக்கலாம் .
ஆனால் நான் போட்ட வட்டத்தில் இருந்து பிரெஞ்சு வரும் வரை வழிமாறியது இல்லை

.வியாபாரம் காரணமாக யாழ்தேவியிலும் உடரட்டையிலும் என் வாழ்க்கைப்பாதையில் ரயில் பயணங்கள் அதிகம் செய்தேன்.

போகும் ரயியிலில் இறுக்கமாக இருந்தேன். கவிதை எழுதுவதும் இல்லை. கரைந்து, கலைந்து ,கலந்து போகவும் கூடாது என்று.!

பாரிஸ் தேசத்திலும் ரயில் பயணங்கள் தொழில் நிமித்தம்.
 என்னோடு சிலர் வந்தார்கள் கேட்டார்கள் கவிதை எழுதுவியா ?என்று .
ஓம் என்று ஒருத்திக்கு எழுதிக் கொடுத்தேன்.!
 வாசிக்காமல் போய் விட்டாள்.


அது வாசிக்கப் படாமல் போனாலும் கவிதை விருது தந்திருக்கு.பாதை!விரிந்த தெருக்களில் ஊடே வந்து
விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்ல
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது
இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து
நிற்கின்றது இரு மரம்
அதில் ஒரு தனிமரம்
வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில்
சிறுமரம் உன்னைப்போல
வட்டத்துடன்
இரு பக்கமும் விம்மியழுகின்ற
வட்டக்கல்லாக யாரோ
நான் சொல்லமாட்டேன்
வாழ்க்கைபாதையில்
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!

 .மகிழ்ச்சியுடன் என் வலையில் வைத்துக் கொண்டேன் ..

நன்றி புதுவருடத்தில் கவிதை தந்த விருது பாராட்டிய  ஹேமா உப்புமடச் சந்தியில் !


. வீடு இல்லாதவன் ஏதிலி ! வலையில் வைத்திருக்கின்றேன் பெரியோர்களே தப்பாக எண்ணாதீங்கோ !

நான் பதிவுகள் எழுதுவதும் இந்த ரயில் பயணப்பாதையில் தான். போக்குவரத்தில் அதிக நேரம் இந்த தேசத்தில்.!


பாசம்.- இந்த குடும்பம் ,உறவு ,நண்பர்கள் என்ற பாசத்தில் நானும் தொலைந்தவன் .அதைக்கடந்து போகணும் என்று தான் ஆன்மீகத்தில் அலைபோல அலைகின்றேன் ஆனாலும் விடாது சில உறவுகள் .எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில்
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக
குண்டு வைத்திருக்கின்றான்
பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார்
இருட்டறையில் இப்படித்தான் சொல்லி
சோறு ஊட்டுகின்றேன்
பாவி மகள் நான் பாசமாக
என் பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி
வரும் தந்தை நிலா என்று.


-வேலைத்தளத்தில் அவசரத்தில் ஆர்வத்தில் எழுதிய பின் முடித்துவிடு தங்கையே என்று போய் விட்டேன் மீண்டும் வந்த போது மிக அற்புதமாக புனைந்து இருந்த என் தங்கை கலை கருவாச்சியோடு  சேர்ந்து எழுதியது இந்தக்கிறுக்கல் ! 

நேசன் & கலை(கருவாச்சி)...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்
தோள்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில்
தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம்
காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

தொலைந்த மொழிகளும்
மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாய் திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே
ஒரே மரம்
தனிமரம் என்னவளுக்காய் !!!


அந்த கலைக்கு இன்னொரு அண்ணாவின் சிறப்பு .நன்றி!

113 comments :

கலை said...

aaaaaaaaaaaaaaaaaa

கலை said...

meeeeeeee the firstuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu ...jolly jolly jolly

தனிமரம் said...

வாங்க கலை நலமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!.

கலை said...

நான் சுப்பரா இருக்கிரணன் அண்ணா ,,நீங்கள் நலமா ..

இண்டைக்கு பாலக் காப்பி எனக்கே எனக்குத் தான் ..ஹ ஹா ஹா ..கவிதையினிக்கு இல்லையி எஈ எ ஈ எ ஈ ஈ ஈ ...

கலை said...

அண்ணா 15 வயதில் கவிதை எழுதி வானொலிக்கு அனுப்பி அம்மாடி பெரிய ஆளு அண்ணா நீங்க ...

கலை said...

உங்கட கவிதை ரொம்ப நல்லா இருக்கு ..சுப்பரா எழுதி இருக்கீங்க அண்ணா பதிவு ...உங்களைப் பார்த்து நான் கற்றுக் கொள்ளுரணன் ..

கலை said...

அண்ணா உண்மையா நான் தான் உங்களுக்கு மிக்க நன்றி சொல்லணும் ..நீங்கள் எழுதச் சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு

கலை said...

ஆருமே காணும் ...கவிதாயினி ஹேமா அக்கா varanum varanum ...yogaa maamaa ambalaththar uncle சிக்கிரமா வாங்கோ ...

ரே ரீ அண்ணன் பிஸி என்டேப் புழுகளோடு வருவினம் தினமும்

தனிமரம் said...

நான் சுப்பரா இருக்கிரணன் அண்ணா ,,நீங்கள் நலமா ../ நலம் கலை.

Esther sabi said...

கலை அக்கா பாவம் அலட்டுறதுக்கு ஆட்களயே காணோம். ஜயோ பாவம் எல்லாரும் சீக்கிரம் வாங்கோ......

தனிமரம் said...

அண்ணா 15 வயதில் கவிதை எழுதி வானொலிக்கு அனுப்பி அம்மாடி பெரிய ஆளு அண்ணா நீங்க ...

19 April 2012 10:16 // ஹீ அப்பசின்ன வயது..! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

உங்கட கவிதை ரொம்ப நல்லா இருக்கு ..சுப்பரா எழுதி இருக்கீங்க அண்ணா பதிவு ...உங்களைப் பார்த்து நான் கற்றுக் கொள்ளுரணன் ..

19 April 2012 10:17 // கோவிந்தா உங்களுக்கும் பின் விரைவில் உள்குத்துப் போடுவார்கள். வேண்டாம் தாயி நான் தனிமரம் தாங்குவன் நீங்க!ஹீ ஆவ்வ்வ்வ்!!!!!! ம்ம்ம் ஹீ

தனிமரம் said...

கலை அக்கா பாவம் அலட்டுறதுக்கு ஆட்களயே காணோம். ஜயோ பாவம் எல்லாரும் சீக்கிரம் வாங்கோ......

19 April 2012 10:23 //வாங்க எஸ்தர் -சபி நலமா கலை பாவம் தங்கை!

கலை said...

எனக்கு ஆசை ஆசையா இருக்கு ...உள்குத்து பதிவு பார்க்கோணும் எண்டு

உள்குத்து போடச் சொல்லுங்கோ அண்ணா .

தனிமரம் said...

அண்ணா உண்மையா நான் தான் உங்களுக்கு மிக்க நன்றி சொல்லணும் ..நீங்கள் எழுதச் சொல்லி எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு

19 April 2012 10:18 //ஹீ அப்படியா அப்ப நாம் ஒரு அறிவிப்பாளர் அவர் தாயகத்தில் என் அபிமான எஸ்.ராபீக் அவருக்கு சேர்ந்து சொல்லுவோம் அவர் தான் இப்படி செய்வார்..slb வேலை செய்கின்றார்.

கலை said...

வாங்க எஸ்தர் ..நலமா

நீங்களே நல்லக் கேளுங்கோ ...ellarum எஸ்கேப் என்னை தனியா புலம்ப விட்டு தாங்க

தனிமரம் said...

ஆருமே காணும் ...கவிதாயினி ஹேமா அக்கா varanum varanum ...yogaa maamaa ambalaththar uncle சிக்கிரமா வாங்கோ ...// ஹேமா இன்று வேலை பிறகுதான் வருவா.

கலை said...

கோவிந்தா உங்களுக்கும் பின் விரைவில் உள்குத்துப் போடுவார்கள். வேண்டாம் தாயி நான் தனிமரம் தாங்குவன் நீங்க!ஹீ ஆவ்///////


ஆரது அங்கே என் அண்ணனுக்கு உள்குத்து பதிவு போட்டது ..தைரியமிருந்தால் எங்கே எனக்கு போடுங்கோல் பார்க்கலாம் ...

தனிமரம் said...

உள்குத்து போடச் சொல்லுங்கோ அண்ணா .

19 April 2012 10:30 // அப்படிச் செய்ய சொல்ல எனக்கு நேரம் இல்லை நானோ தனிமரம்..ம்ம்ம்

கலை said...

ஓம் அண்ணா..நேற்றறே அக்கா சொல்லிப் போட்டினம் இண்டைக்கு வேலை நேரம் எண்டு ...

மாமாக்கு வீட்டில் kuttis கள் கணினி கொடுக்கவில்லை போலும் ..

அங்கிள் என் பதிவில் வந்தார் ...இங்கே காணல

தனிமரம் said...

நீங்களே நல்லக் கேளுங்கோ ...ellarum எஸ்கேப் என்னை தனியா புலம்ப விட்டு தாங்க// ஹ்ஹீ புலம்பாமல் நல்லா பாடல் கேளுங்க பெறுபேறு வந்து விட்டதா கலை.

தனிமரம் said...

அங்கிள் என் பதிவில் வந்தார் ...இங்கே காணல

19 April 2012 10:35 // ஹீ அம்பலத்தார் மெதுவாகத்தான் நடந்து வருவார் ஓடி வந்த காலம் போய் விட்டது அவர் வந்தது முன்னம் நாட்டைவிட்டு கலை!.ஹீ

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

கலை said...

ஓம் அண்ணா ...அங்கிள் மெது மெதுவாய் நடந்து வருகிறார் தான் போல ..அங்கிள் க்கும் இப்போ ஹேமா அக்கா மாறி வயதாகிட்டதொல்லோ ...

தனிமரம் said...

ஓம் அண்ணா ...அங்கிள் மெது மெதுவாய் நடந்து வருகிறார் தான் போல ..அங்கிள் க்கும் இப்போ ஹேமா அக்கா மாறி வயதாகிட்டதொல்லோ ...

19 April 2012 10:54 //ஹீ கவிதாயினியிடம் கருக்குமட்டை அடி நிச்சயம்.ஹீ

கலை said...

என்ன அண்ணா இன்னும் அக்கா வரல ..மாமாவையும் காணல

தனிமரம் said...

என்ன அண்ணா இன்னும் அக்கா வரல ..மாமாவையும் காணல//அக்காள் இரவு 11மணிக்கு மேல் தான் வருவா ..யோகா ஐயாவுக்கு கணனியில் இருக்கும் நேரம் வரவில்லைப்போல கலை.

அம்பலத்தார் said...

hai, good evening everybody

தனிமரம் said...

கலைக்கு பாட்டுப் பிடிக்காதோ!

அம்பலத்தார் said...

கலை said...

ஓம் அண்ணா ...அங்கிள் மெது மெதுவாய் நடந்து வருகிறார் தான் போல ..அங்கிள் க்கும் இப்போ ஹேமா அக்கா மாறி வயதாகிட்டதொல்லோ ...//
ha haa good joke kalai,
கொஞ்சம்பொறுங்கோ ஹேமா கருக்குமட்டையோட வருவா

தனிமரம் said...

வாங்க அமபலத்தார் இன்று கலை மாமாவைக்காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுக்க ரெடி! நலம் தானே வீட்டில் அனைவரும்.

தனிமரம் said...

கொஞ்சம்பொறுங்கோ ஹேமா கருக்குமட்டையோட வருவா// ஹீ அம்பலத்தார் ஹேமா வேலை நேரம் அதிகம் இன்று .

அம்பலத்தார் said...

தனிமரம் said... ஹீ அம்பலத்தார் மெதுவாகத்தான் நடந்து வருவார் ஓடி வந்த காலம் போய் விட்டது அவர் வந்தது முன்னம் நாட்டைவிட்டு கலை!.ஹீ//
ம்.... காவோலை விழ குருத்தோலை சிரிக்குது.நேசன் ஹேமாவிட்டை சொல்லிவிடுறன் பாருங்கோ கலைக்கு குடுக்க கொண்டுவாற கருக்குமட்டையாலை உங்களுக்கும் இரண்டு தருவா

தனிமரம் said...

.... காவோலை விழ குருத்தோலை சிரிக்குது.நேசன் ஹேமாவிட்டை சொல்லிவிடுறன் பாருங்கோ கலைக்கு குடுக்க கொண்டுவாற கருக்குமட்டையாலை உங்களுக்கும் இரண்டு தருவா

19 April 2012 11:16 ///ம்ம்ம்ம் ஹாஹா எல்லாரும் இப்படிச் சொல்லித்தானே ஓடிவந்தோம் ஐயா..!

கலை said...

ஹாய் ஜாலி ஜாலி அங்கிள் வந்து விட்டங்க ...ஹேமா அக்கா காலையும் நீங்க வாரி விட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு அங்கிள் ...

அம்பலத்தார் said...

தனிமரம் said...

வாங்க அமபலத்தார் இன்று கலை மாமாவைக்காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுக்க ரெடி! நலம் தானே வீட்டில் அனைவரும்.//
ஓம் நேசன் நலமாக இருக்கிறம். செல்லம்மாவிற்கும் இப்போ ok. அதுசரி எதுக்கு பொலிசில் புகார் கொடுக்கப்பார்த்தனிங்கள். நான் என்னத்தை பெரிசா திருடிப்போட்டன் உங்கள் எல்லோரதும் இதயங்களில் கொஞ்ச இடத்தைத்தானே திருடினனான். விட்டிடுங்கோ பாவம் கிழவன்

கலை said...

அண்ணா எனக்கு பாட்டுப் பிடிக்கும்
எண்ணப் பாட்டு அண்ணா கேக்குறிங்க ...

அம்பலத்தார் said...

கலைக்கு அக்காச்சியின்ரை காலை வாருறதிலை அவ்வளவு சந்தோசமோ. லேட்டா வந்தாலும் ஹேமா ஒரு குட்டு என்றாலும் தருவா பாருங்கோ கலை

தனிமரம் said...

ஹாய் ஜாலி ஜாலி அங்கிள் வந்து விட்டங்க ...ஹேமா அக்கா காலையும் நீங்க வாரி விட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு அங்கிள் ...

19 April 2012 11:23 //கவிதாயினி வந்து கொதிக்கப் போறாங்க கலை.

கலை said...

ஓம் அங்கிள் ...நீங்களும் மாமாவும் கிழவன் எண்டு சொல்லியே நல்லா சமாளிக்கிறிர்கள் எப்போதும்

அம்பலத்தார் said...

நேசன் சிலநாட்களிற்குமுன் எனக்காக பாட்டு லிங் போட்டதுக்கு நன்றி

கலை said...

ஓமாம் அங்கிள் ..ஹேமா அக்கா காலை வாரணும் எண்டால் ரொம்ப சந்தோசம் ...அதவும் நீங்கள் அக்காவை வாருரத்தை பார்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோசம் ...

ஹேமா அக்கா கருக்கு மட்டை அடியில் அங்கிள் க்கும் பங்கு இருக்கெல்லோ

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//கவிதாயினி வந்து கொதிக்கப் போறாங்க கலை.//
நேசன் எதுக்கும் ஒரு கப் ஐஸ்காப்பி ரெடிபண்ணி வையுங்கோ ஹேமா வந்த உடனே கொடுத்து ஆளை கூலாக்குவம்.

தனிமரம் said...

கொடுக்கப்பார்த்தனிங்கள். நான் என்னத்தை பெரிசா திருடிப்போட்டன் உங்கள் எல்லோரதும் இதயங்களில் கொஞ்ச இடத்தைத்தானே திருடினனான். விட்டிடுங்கோ பாவம் கிழவன்// காணவில்லை என்றாள் ஓரு முன் தேடல் கருதித்தான். அம்பலத்தார்.இதயம் திருடுவதும் ஒழிந்துகொள்வதும் த்வ்று இல்லையாம் வைரமுத்துச் சொல்லியது.

கலை said...

அண்ணா எனக்கு எந்தப் பாட்டின் லின்க்கும் varalalaiye

தனிமரம் said...

நேசன் சிலநாட்களிற்குமுன் எனக்காக பாட்டு லிங் போட்டதுக்கு நன்றி//அதுக்கு ஏன் நன்றி. நல்ல பாடல் கேட்டீங்களா!

கலை said...

நேசன் எதுக்கும் ஒரு கப் ஐஸ்காப்பி ரெடிபண்ணி வையுங்கோ ஹேமா வந்த உடனே கொடுத்து ஆளை கூலாக்குவம்./////

அங்கிள் ஹேமா அக்காவின் கருக்கு மட்டை அடிக்கு பயந்து இப்போவே அக்காக்கு ஐஸ் வைக்கிறாங்க ..

அம்பலத்தார் said...

கலை said...

ஹேமா அக்கா கருக்கு மட்டை அடியில் அங்கிள் க்கும் பங்கு இருக்கெல்லோ//
அடி பாவி என்ன ஒரு நல்லமனசு சந்தடிசாட்டில அங்கிளுக்கும் வாங்கித் தந்திடுவியள்போல இருக்கு.

கலை said...

இன்னும் வராமல் காலம் தாழ்த்தும் அக்காvaiyuம் யோகா மாவையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறான்

தனிமரம் said...

அண்ணா எனக்கு எந்தப் பாட்டின் லின்க்கும் varalalaiye

19 April 2012 11:32 //அது சகோதரமொழி பாடல் கலை நாளை வேணும் என்றால் காட்சி இனைக்கின்றேன்.

தனிமரம் said...

இன்னும் வராமல் காலம் தாழ்த்தும் அக்காvaiyuம் யோகா மாவையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறான்//மாமா வீட்டில் இல்லையோ தெரியாது!

கலை said...

அடி பாவி என்ன ஒரு நல்லமனசு சந்தடிசாட்டில அங்கிளுக்கும் வாங்கித் தந்திடுவியள்போல இருக்கு///////////


ha haa haa அங்கிள் eppudii

அம்பலத்தார் said...

ஐஸ் என்றதும்தான் ஞாபகம்வருகிறது கலை, தமிழ்நாட்டில சாயங்காலநேரங்களில் தெரிவில் குல்பி ஐஸ் என்று ஒருவகை ஐஸ் வித்திட்டுவருவாங்களே ருசியாக இருக்கும்

கலை said...

ஓகே அண்ணா mudinthaal naalai inaiyungo ...munnaram நீங்கள் inaiththa paadal kettinan ..supperaa irunthathu அண்ணா

அம்பலத்தார் said...

யோகாவிற்கு அடிக்கடி தலைவலி வருவதாகவும் சொல்லுறவர்.... ஒருவேளை இன்றும்....

தனிமரம் said...

ஐஸ் என்றதும்தான் ஞாபகம்வருகிறது கலை, தமிழ்நாட்டில சாயங்காலநேரங்களில் தெரிவில் குல்பி ஐஸ் என்று ஒருவகை ஐஸ் வித்திட்டுவருவாங்களே ருசியாக இருக்கும்

19 April 2012 11:40 //குல்பி எனக்கு ஐசும் பிடிக்கும் லைலா நடிகையும் குல்பி தான்.அம்பலத்தார்..

தனிமரம் said...

யோகாவிற்கு அடிக்கடி தலைவலி வருவதாகவும் சொல்லுறவர்.... ஒருவேளை இன்றும்....

19 April 2012 11:42 //காலையி வந்தார் பின் என்னாச்சு தெரியவிலை.

கலை said...

ஓமாம் அங்கிள் ...சுப்பரா இருக்கும் gulphi ஐஸ் ...நான் சின்ன பொண்ணா இருக்கும் போதெல்லாம் இரவு எழு மணிக்கு தொடங்கி பதினோரு பன்னிரண்டு மணி வரை விர்ப்பாங்க ....சைக்கிளில் சின்னதா சிம்ல விளக்கு வைத்துக் கொண்டு மணி அடிச்சிட்டு வருவாங்க ..

இப்போலாம் மதியம் சாயந்தரம் வேளைகளில் விக்குறாங்க ...

கலை said...

நேற்றே யோகா மாமா தலைவலி இல்லை எண்டு தான் சொன்னார் ..குட்டீஸ் கள் தான் கணினி கொடுக்காமல் இருப்பினம்

தனிமரம் said...

இப்போலாம் மதியம் சாயந்தரம் வேளைகளில் விக்குறாங்க ...

19 April 2012 11:47 //அது எங்க ஊரில் குச்சி ஐஸ்.

அம்பலத்தார் said...

தனிமரம் said...
குல்பி எனக்கு ஐசும் பிடிக்கும் லைலா நடிகையும் குல்பி தான்.அம்பலத்தார்..//
இந்த வசனத்தை நல்லா ஞாபகம் வைத்திருக்கிறன். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது போட்டுக்கொடுக்கவேண்டியவவிடம் போட்டுக்கொடுத்துவிடுகிறன்.

தனிமரம் said...

நேற்றே யோகா மாமா தலைவலி இல்லை எண்டு தான் சொன்னார் ..குட்டீஸ் கள் தான் கணினி கொடுக்காமல் இருப்பினம்

19 April 2012 11:48 //குட்டீஸ்கள் என்று சாட்டக்கூடாது கலை.

தனிமரம் said...

இந்த வசனத்தை நல்லா ஞாபகம் வைத்திருக்கிறன். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போது போட்டுக்கொடுக்கவேண்டியவவிடம் போட்டுக்கொடுத்துவிடுகிறன்.

19 April 2012 11:49 /8/ஆஹா நான் தனிமரம் விட்டுறுங்கோ அம்பலத்தார்

அம்பலத்தார் said...

நேசன், எங்க ஊர் குச்சி ஐஸ்சிற்கும் தமிழ்நாட்டு குல்பி ஐஸ்சிற்கும் வேற வேற ருசியிருக்கும்

கலை said...

குட்டீஸ்கள் என்று சாட்டக்கூடாது கலை.////
இல்லை அண்ணா நான் ஒருக்காலும் சாட்டவில்லை ...
நானே ஒரு குட்டிஸ் ஆ இருக்கும் பொது என்ற வர்க்கத்தை சாட்டுவேனோ ...ஹ ஹா ஹா சப்பா கொசு தொல்லை தாங்க முடியல சாமீ அப்புடி எண்டு ரே ரீ அண்ணா சொல்லுவாங்க பாருங்க

தனிமரம் said...

நேசன், எங்க ஊர் குச்சி ஐஸ்சிற்கும் தமிழ்நாட்டு குல்பி ஐஸ்சிற்கும் வேற வேற ருசியிருக்கும்//உண்மைதான் எங்க ஊர் கல்யானி கூல் பார், ராஜா கூல் பார் ருசி வேறதான்!

தனிமரம் said...

சாட்டுவேனோ ...ஹ ஹா ஹா சப்பா கொசு தொல்லை தாங்க முடியல சாமீ அப்புடி எண்டு ரே ரீ அண்ணா சொல்லுவாங்க பாருங்க

19 April 2012 11:56 //யோகா ஐயா என்னையும் அப்படித்தான் சொல்லூவார்.

கலை said...

ஓகே ரீ ரீ அண்ணா ,அங்கிள் டாட்டா டாட்டா ...


ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரே ரீ அண்ணா வரும்போதுவணக்கம் கிளம்பும் போது டாடா டாடா

தனிமரம் said...

ஓகே ரீ ரீ அண்ணா ,அங்கிள் டாட்டா டாட்டா ...


ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரே ரீ அண்ணா வரும்போதுவணக்கம் கிளம்பும் போது டாடா டாடா

19 April 2012 12:00 /// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் .மீண்டும் நாளை சந்திப்போம்.

கலை said...

கவிதாயினி வந்து கொதிக்கப் போறாங்க கலை./////////////////


அங்கிள் கவிதாயினி என்னா சுடுதண்ணியா கொதிக்கிறதுக்கு ...மீ எஸ்கேப் ppppppppppppppp ...

ரீ ரீ அண்ணா தான் என்னை அப்புடி கேக்க சொன்னங்க எண்டு யாரும் அண்ணா மேல் சந்தேகம் கொள்ளதிங்கோ ...

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா தான் என்னை அப்புடி கேக்க சொன்னங்க எண்டு யாரும் அண்ணா மேல் சந்தேகம் கொள்ளதிங்கோ ...//அடி கருக்கு மட்டையால் எனக்கே ஆப்பா!ஹீ

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,எல்லோருக்கும்!உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை,பதிவு வருமென்று!அத்துடன் என்னுடைய நிலை என்னவாக இருக்குமென்று கலை சொல்லி விட்டா.ஆள் மாறி ஆள் கணனியில் உட்கார்ந்து விடுகிறார்கள்,என்ன செய்ய?பாடசாலை நாட்களில் இப்படி இருப்பதில்லை.அதிக நேரம்(சமையல் நேரம் தவிர) நான் தான் உட்கார்ந்திருப்பேன்.சரி,எல்லோரும் நலம் தானே?நான் நலம்.கலை விடை பெற்று விட்டா போல?நல்லது பின் தூங்கி முன்னெழும் பேதை ஆயிற்றே?ஹ!ஹ!ஹா!!!!!மகள் வர எப்படியும் பத்து மணி ஆகும் என நினைக்கிறேன்.

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலம் தானே இப்படித்தான் சில நேரங்களில் !ஹீ

Yoga.S.FR said...

நானே ஒரு குட்டிஸ் ஆ இருக்கும் பொது என்ற வர்க்கத்தை சாட்டுவேனோ ...ஹ! ஹா!! ஹா!!!!////இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா,சாமி!!!ஹி!ஹி!ஹி!!!!

அம்பலத்தார் said...

வணக்கம் யோகா நலமா

தனிமரம் said...

அம்பலத்தார் அமப ஜாலுவோ என்று யோகா ஐயாவைத் தேடுகி்ன்றார்! ஆவ்வ்வ்

தனிமரம் said...

வணக்கம் யோகா நலமா//அவ
ர் நலம் பத்மினி தலைவர் வந்து விட்டார் ஹீ

Yoga.S.FR said...

நான் நலம் நேசன்&அம்பலத்தார்!!! ////கலை said...

ஓகே ரீ ரீ அண்ணா ,அங்கிள் டாட்டா டாட்டா ...


ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரே ரீ அண்ணா வரும்போதுவணக்கம் கிளம்பும் போது டாடா டாடா!!///இது நல்ல புள்ளக்கு அழகு!

Yoga.S.FR said...

வணக்கம் யோகா நலமா?//அவர் நலம் பத்மினி தலைவர் வந்து விட்டார் ஹீ!!!////என்னய்யா இது புதுக் குழப்பம்?ஓ..ஒ...ஓ...ஒ..செங்கோவி வந்ததைச் சொல்லுறியளோ?ஹோ!ஹோ!ஹோ!!!!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா அம்பலத்தார் கூட சேர்ந்து கதையுங்கோ நான் விடைபெறுகின்ரேன் அதிகாலை கொஞ்சம் நேரத்துக்கு போகனும் வார இறுதி ஆரம்பம் என்பதால்! நன்றி இருவருக்கும் நாளை முடிந்தால் சந்திப்போம் இனிய் இரவு வணக்கம்.

தனிமரம் said...

..ஓ...ஒ..செங்கோவி வந்ததைச் சொல்லுறியளோ?ஹோ!ஹோ!ஹோ!!!!//ஹீ செங்கோவி ஐயா! ம்ம்ம்

Yoga.S.FR said...

ரெண்டு பெரும் புல்லு(சாப்பிட)போடப் போட்டினம் போல?நானும் போட்டுட்டு பிறகு வாறன்,ஹி!ஹி!ஹி!

Yoga.S.FR said...

O.K!Bon Nuit,Bon Courage!!!

Yoga.S.FR said...

நாளை சந்திப்போம்,இனிய இரவு வணக்கம்!!!!

அம்பலத்தார் said...

goodnight yoga

Yoga.S.FR said...

இனிய இரவு வணக்கம்(goodnight),அம்பலத்தார்!!!

ஹேமா said...

வணக்கம் வணக்கம்...வாறன் கருவாச்சிக்கு.நான் இல்லையெண்டா இன்னும் நல்லாக் கலாய்க்கிறது.காக்காக்கு இண்டைக்கு வடையும் கோப்பியும் கிடைச்சிடுது.அதுதான் உச்சியில இருந்து கரைஞ்சிருக்கு.ஒரு நாளைக்கு கலைச்சுப்பிடிச்சு வச்சுக் குட்டவேனுமெண்டு சரியான ஆசையாக்கிடக்கு !

ஹேமா said...

எனக்கே பெரிய சந்தோஷமாயிருக்கு.ரெவரி,நேசன்,கலை பக்கங்களில் நான் தந்த விருதை பதிவாக இட்ட்தைப் பார்க்க மனதிற்குள்ளும் ஒரு பெருமிதம்தான்.

நேசனுக்கு இந்த விருதல்ல இதைவிடப் பெரிய அங்கீகாரங்கள் கிடைத்திருக்கவேணும்.அத்தனை கவிதைகளும் அவரின் மனம்.15 வயதிலிருந்து தன் கவிதை ஆர்வத்தை எழுதி நெகிழவைத்திருக்கும் நேசனுக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டும் வாழ்த்தும் !

பதிவிட்ட விதமும் அழகு !

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,மகளே!சின்னதா ஒரு உள்ளுணர்வு,மகள் வந்திட்டா போல கிடக்கு எண்டு.கலை வஞ்சகமில்லாம கதைக்கும்!கருக்கு மட்டை ரெடியோ????தானும் குட்டீஸ் எண்டுறா!உங்களுக்கு.......................வேணாம் விடுவம்!சிண்டு முடியக்குடாது!

Yoga.S.FR said...

ஹேமா said...

எனக்கே பெரிய சந்தோஷமாயிருக்கு.ரெவரி,நேசன்,கலை பக்கங்களில் நான் தந்த விருதை பதிவாக இட்ட்தைப் பார்க்க மனதிற்குள்ளும் ஒரு பெருமிதம்தான்.

நேசனுக்கு இந்த விருதல்ல இதைவிடப் பெரிய அங்கீகாரங்கள் கிடைத்திருக்கவேணும்.அத்தனை கவிதைகளும் அவரின் மனம்.15 வயதிலிருந்து தன் கவிதை ஆர்வத்தை எழுதி நெகிழவைத்திருக்கும் நேசனுக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டும் வாழ்த்தும் !

பதிவிட்ட விதமும் அழகு !///உண்மைதான்,மகளே!எனக்கோ ஆச்சரியம் என்ற ஆச்சரியம்!படிக்காத தனிமரம் என்று அடிக்கடி சொல்லுவார்.அவர் முன் நான்................?!

ஹேமா said...

குட்டீஸ்....படுத்தபிறகும் காதுக்குள்ள கொசுச்சத்தம்..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!


அப்பா,கலைக்குட்டி,நேசன்,அம்பலம் ஐயா,மாமி எல்லாருக்கும் இரவு வணக்கங்கள்.சந்திப்போம் நாளைக்கொரு காதல் கவிதையோடு !

Yoga.S.FR said...

நேரம் போய் விட்டது,களைத்து வந்திருப்பீர்கள்,சாப்பிட்டு நன்றாக உறங்குங்கள்.நாளை பார்க்கலாம்!

ஹேமா said...

அப்பா....வாங்கோ இதுதான் உள்ளுணர்வு.உறவின் அறைகூவல்.சந்தோஷமாயிருக்கு உங்களைக் காண இந்த நேரத்திலயும்.காலையும் மாலையும் தவறாமல் வணக்கம் சொல்லிப் போறீங்கள்.மனம் நெகிழ்ந்துபோகிறேன் அப்பா.இப்ப தலையிடி சுகம்தானே.சாப்பிட்டாச்சோ ?!

ஹேமா said...

அப்பா...கருவாச்சிக்கு சும்மா சாதாரண கருக்குமட்டை சரிவராது.ஓடர் பண்ணித்தான் எடுக்கவேணும்.இல்லாட்டி ஊருக்கு போய் வரேக்க பார்சலில கொண்டு வாறன் !

கருவாச்சியும் என்னைப்போல தனிய இருக்கிறா.நினைச்சா கவலைதான் !

கணேஷ் said...

நேசன்! உங்கட கவிதைய அங்க படிக்கறப்பவே புதுசா எழுதறவன் மாதிரித் தெரியலையேன்னு மனசு சொல்லிச்சு. இப்பத்தான் உங்களோட அனுபவம் என்னங்கறது விளங்கிச்சு. அப்பப்ப ஸ்டாகல இருக்கற ம(மொ)த்தக் கவிதைகளையும் எடுத்து விடுங்கோ... நாங்க ஆவலா காத்திருக்கிணம்!

மகேந்திரன் said...

நேசன்..
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத்தகும் என்பது போல....
கவிதையும் கதையும்
உயிரெனக் கொள் என்ற சொல்லின் பால்
நடைபோடும் தங்கள் வழியில்
நானும் ஓர் நட்டு வைத்த பூச்செடி...

நினைத்த எண்ணங்களை
சொல் வந்த வார்த்தைகளை
சொல்லுக்குள் கட்டுப்படுத்தி..
படிக்கையில் மனதில்
ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிப்
பிரவாகம் ஏற்படுத்தும்
படைப்பாளி அந்த பிரம்மனுக்கு சமம்..

சகோதரி ஹேமா அவர்களின் கவிதை
படித்தால் மனதுக்கும் ஏதோ செய்யும்..
அவ்வளவு அழகான வார்த்தைப் பிரயோகம்
இருக்கும்...
அவர்கள் கையால் விருது என்பது
மிகப் பெரிய விஷயம்...

வாழ்த்துக்கள் நேசன்..

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!

Yoga.S.FR said...

ஹேமா said...
கருவாச்சியும் என்னைப்போல தனிய இருக்கிறா.நினைச்சா கவலைதான் !/////எனக்கும் கூட இப்படி அவ எழுதிய போது கவலையாகவே இருந்தது,இருக்கிறது.உங்கள் நிலையும் அவர் நிலையும் வேறு.இந்தியாவிலேயே இருப்பதால் கொஞ்சம் ஆறுதல்!ஆனால் நீங்கள்?உங்களுக்கு என்ன (தலை)விதி?(மன்னிக்கவும் கொஞ்சம் அதிகம் தான்!)முடிந்தால் கோவில் செல்லவும்!

கலை said...

காலை வணக்கம் யோகா மாமா ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா..

மாமா நீங்கள் ஏன் என் பதிவுக்கு கம்மேன்ன்ட் போடலை ...ஆர் போடலை எண்டாலும் கண்டு கொள்ள மாட்டினம் ...ஆனால் மாமாவிடம் சண்டைப் போட்டு கேப்பெனல்லோ ..

தனிமரம் said...

கலைச்சுப்பிடிச்சு வச்சுக் குட்டவேனுமெண்டு சரியான ஆசையாக்கிடக்கு ! //நல்லா குட்டுங்கோ அக்காச்சியும் தங்கையும் சண்டைபிடிக்கும் போது இடையில் நான் வரமாட்டன்.

தனிமரம் said...

நேசனுக்கு இந்த விருதல்ல இதைவிடப் பெரிய அங்கீகாரங்கள் கிடைத்திருக்கவேணும்.அத்தனை கவிதைகளும் அவரின் மனம்.15 வயதிலிருந்து தன் கவிதை ஆர்வத்தை எழுதி நெகிழவைத்திருக்கும் நேசனுக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டும் வாழ்த்தும் !

பதிவிட்ட விதமும் அழகு ! /.கவிதாயினின் பாராட்டுக்கு நன்றி உங்கள் பாராட்டு  இன்னும் கவிதை எழத தூண்டுது ஆனால் வலிகள் கொடுக்கக் கூடாது வார்த்தைதாயால் சிலருக்கு என்று என் எழுத்துரு குட்டிச் சொல்லுது.கவிதாயினியின் பாராட்டு தனிமரத்திற்கு அதிகம் போல இருக்கு இது சின்ன மரம்.

தனிமரம் said...

உள்ளுணர்வு,மகள் வந்திட்டா போல கிடக்கு எண்டு.கலை வஞ்சகமில்லாம கதைக்கும்!கருக்கு மட்டை ரெடியோ????தானும் குட்டீஸ் எண்டுறா!உங்களுக்கு.......................வேணாம் விடுவம்!சிண்டு முடியக்குடாது! 
//யோகா ஐயா குட்டினால் தப்பில்லை!

தனிமரம் said...

பதிவிட்ட விதமும் அழகு !///உண்மைதான்,மகளே!எனக்கோ ஆச்சரியம் என்ற ஆச்சரியம்!படிக்காத தனிமரம் என்று அடிக்கடி சொல்லுவார்.அவர் முன் நான்................?! //யோகா ஐயா கவிதை எழுத படிப்பு முக்கியம் இல்லை கண்ணதாசன் வனவாசத்தில் சொல்லியது என் ராசா இளையராஜா என் நரம்பு வீணையில் சொல்லியது.நான் படிக்க வில்லை ரொம்ப சின்னவன். இதுதான் நிஜம்.உங்கள் அனுபவத்துக்கு முன் நான் ஒரு சின்ன  தனிமரம்!

தனிமரம் said...

நேசன்! உங்கட கவிதைய அங்க படிக்கறப்பவே புதுசா எழுதறவன் மாதிரித் தெரியலையேன்னு மனசு சொல்லிச்சு. இப்பத்தான் உங்களோட அனுபவம் என்னங்கறது விளங்கிச்சு. அப்பப்ப ஸ்டாகல இருக்கற ம(மொ)த்தக் கவிதைகளையும் எடுத்து விடுங்கோ... நாங்க ஆவலா காத்திருக்கிணம்! 
//நன்றி கணேஸ் அண்ணா உங்களின் மனம்நிறைந்த வாழ்த்துக்கு .உங்களின் அளவுக்கு என்னிடம் அனுபவம் இல்லை ஏதோ சில ஆசையில் கிறுக்கியதை முடிந்தளவு செம்மையாக்கி முடியும் போது தருகின்றேன்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சகோதரி ஹேமா அவர்களின் கவிதை 
படித்தால் மனதுக்கும் ஏதோ செய்யும்..
அவ்வளவு அழகான வார்த்தைப் பிரயோகம்
இருக்கும்...
அவர்கள் கையால் விருது என்பது
மிகப் பெரிய விஷயம்...

வாழ்த்துக்கள் நேசன்.. //நன்றி மகேந்திரன் அண்ணா வாழ்த்துக்கவிதைக்கும் பாராட்டுக்கும் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்! 
//காலை வணக்கம் யோகா ஐயா.நல்ல நாளாக அமையட்டும்.

தனிமரம் said...

 
//காலை வணக்கம் கலை நல்லா சண்டை போடுங்கோ அப்பாவும் மகளும்.அவ்வ்வ்.

சசிகலா said...

வாழ்த்துக்கள்.

Yoga.S.FR said...

கலை said...

காலை வணக்கம் யோகா மாமா ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா..

மாமா நீங்கள் ஏன் என் பதிவுக்கு கம்மேன்ன்ட் போடலை ...ஆர் போடலை எண்டாலும் கண்டு கொள்ள மாட்டினம் ...ஆனால் மாமாவிடம் சண்டைப் போட்டு கேப்பெனல்லோ .////சாரி!கமெண்டு போட்டாச்சு!கூடவே உங்க "நிலா" அக்காவுக்கும் வாழ்த்து சொல்லியாச்சு!

ரெவெரி said...

நேசரே வாழ்த்துக்கள்...சும்மா வாழ்த்துக்கள்னு சொல்ல ஒரு மாதிரி இருக்கு...
இன்னும் நிறைய எழுதுங்கள்...காதல் வயப்படுங்கள்...கவிதை வரும் நிறையவே...அனுபவமான்னு கேட்க்ககூடாது...

திங்கள் கிழமை சந்திப்போம்...மறுபடியும் வாழ்த்துக்கள்...

கலை said...

okey maamaa ...

paarththup potten..

mikka nanri...


aayiram paer vanthu karuththup pottalum maamaa maari varumaa.............

கலை said...

re reeee anna pathivu podalai innnum

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,கலை!நாளை வேலை இல்லையோ?"அந்த" நேர்முகத் தேர்வு ரிசல்ட் கிடைத்ததா?அண்ணா பதிவிட நேரம் ஆகும் போலிருக்கிறது.சாப்பிட்டாச்சா?