30 April 2012

நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை!

வணக்கம் உறவுகளே !!

மீண்டும் ஒரு நம்மவர் இசை,நம்மவர் பாடல்,நம்மவர் பாடும் சந்தனமேடை நிகழ்ச்சி ஊடாக சந்திப்பதில்  மகிழ்ச்சி என்று அறிவிப்பாளர் R.சந்திரமோகன் வரும் இலங்கை ஒலிபரப்பு தேசிய சேவையும் அதனோடு சமநேரத்தில் அன்றைய வர்த்தகசேவை (இன்றையதென்றல் )அலைவரிசையில்  சனிக்கிழமை மதியம்2.30 என்றால் எந்த விடயங்களையும் தள்ளி வைத்து  விட்டு ரசிப்பேன் சின்னவயதில்!  அப்போது இருந்து சந்தனமேடை  ஒலிக்கும் வானொலியோடு இருந்தவன் .

இந்த உணர்வில் தான் அதிகம் நம்மவர் பாடல் என்றால் ஒரு அதீத எதிர்பார்ப்புடன் ரசித்துக் கேட்பேன்.

வேலை நிமித்தம் நான் யாழ் தேவியிலும் உடரட்டையில் பயனித்த போதும் என்னோடு வானொலி கூட வரும் தோழன் ஆகியது.

அப்போது நான் பார்த்த் கேட்ட விடயங்களை என் இரண்டாவது தொடரில் தொடர்கின்றேன் .

எனக்கும் ரயிலுக்கும் ஏதோ முன் ஜென்ம பந்தம் போல தொடர்ந்து பல பயணம் ரயிலுலோடு !

பாரிசிலும் நான் ரயிலில் சந்தித்த காதல் கதையை தொடராக தருவேன் கொஞ்சம் விடுமுறையின் பின்!

 ரயிலில் அதுவும் யாழ்தேவியில் ஒரு பக்கத்தில் இருந்து உடரட்டையில் இன்னொரு பக்கத்திற்கு வியாபாரம் காரணமாகவும் உறவுகளைச் சந்திக்கவும் என் பயணித்த நாட்கள் அதிகாலையில் யாழ்தேவியிலும் வார இறுதியில் உடரட்டையிலும் என ஓடியது.

விற்பனைத் தொழில் தந்த  அனுபவம் மறக்க முடியாது .

தொழில் தாண்டி நான் ஏன் அதிகம் உரடட்டைக்கும் யாழ்தேவியிலும் பயனித்தேன் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் கடந்தவாரத்தில் இருந்து இடைவிடாது ஒலிக்கின்றது என் காதில்!கூடவே குத்தாட்டம் மனசுக்குள்!

கந்தப்பு ஜெயந்தன் இசையில் அவரோடு சேர்ந்து பாடியிருக்கும் பாடகி பிரதா,ஜெயரூபன் .

கவிதைக்குச் சொந்தக்காரர்-திரு. T.சதீஸ்காந்த.

பாடல் ஒலி/ஒளி மிகவும் எனக்கு பிடித்திருக்கின்றது .காட்சி அமைப்பில் பிரியந்தன்.  செய்திருக்கும் புதுமை. காட்சியில் இருக்கும் இயல்பு மீண்டும் நம்மவர்களின் திறமையை பட்டொளிகாட்டி மின்ன வைக்கின்றது.

  காந்தனின் தொடர் இசைப்பயணத்தில் இந்தப்பாடலும் ஈழத்து இசையில்  இந்தப்பாடல் இசையின் தாக்கம் இனி பலரையும் மெல்லிசை குறுவட்டு செய்வதற்கு தூண்டு கோலாக அமையும் என்பது என் எண்ணம்.

ஈழத்து இசைக்கு ஊடகங்கள் காட்டும் தொடர் அசமந்தப்போக்கு  என்று தான் தீருமோ ???

என்றாலும் ஜெயந்தனின் இந்தப் பாடல் சமுகதளமான முகநூலிலும்,யூத்டூயூப்பிலும் இணைந்து இருப்பதால் நம்மவர் இசையை  விரும்பும் உள்ளங்களுக்கு இப்போதைய நவீன வசதி இன்னொரு தளத்தினை அல்லது சந்தையை திறந்து விட்டு இருக்கின்றது.

இலத்திரனிய ஊடகங்கள் தொடர்ந்து ஒலி/ஒளி செய்து மக்களிடம் போக வழிநடத்த  தயங்கினாலும் முகநூல்  ஊடாக பலர் கண்டு களிக்கிறார்கள்.

 அதனால் பயன் பெற்றவனில் நானும் ஒருவருன்!

அதன் பயனை வலையுலகம் கான  கண்டுகளுக்கட்டும் உறவுகள்.

 பாடல் வரிகள் என்னை மீளவும் ஊர் பெருமைக்கு சிக்க வைக்கின்றது

.பாடலில் என் ஊரும் வருகின்றது கேட்பது தனி சுகம் .

 கண்ணாம்பூச்சி மட்டுமா விளையாடினோம் ம்ம்ம் .

அதையும் தாண்டி.

 "நீ வாய் பேசும் வெள்ளிச்சிலை. "ரசிக்கின்றேன் பலதரம் கற்பனை ஊற்றை

".உன் காதல் என்ற சிறையில் நான் ஆயுள் கைதியானேன்  ""

கவிதையின் வாசம்  .

நாம் ஊர் விட்டு ஊர் சென்று  வாழ்ந்தாலும்  யாழ் மண்வாசம் மனம் விட்டுப் போகாதே  !!

யார் எது சொன்னாலும் (பிரதேசவாதம்) என்றாலும் அதில் இருக்கும் தனித்துவம் வார்த்தையில்  அடக்க முடியாது.

பிரியந்தனின் படத் தொகுப்பு பாராட்டிக்கொண்டே இருக்கலாம்.

பாடல் முடிவில் நானும் இந்த புலம்பெயர் வாழ்வை விட்டு ஊர் ஓடிவிட மனம் துடிக்குது. எனக்கா காத்திருக்கும் என் காதல் மனைவியை  கான ஆனால்!!!!ம்ம்ம்ம்ம்

கேட்டு ரசியுங்கள் நம் படைப்பை!

ஜெயந்தனின் முகநூல் இதோ-Facebook link- http://www.facebook.com/pages/MusicDirector-K-Jeyanthan/195797620434975

164 comments :

ஹேமா said...

வந்திட்டேஏஏஏஏஏஏஏன்.நேசன் எனக்குத் தாங்கோ பால்க்கோப்பி.நான் பிச்சுக் குடுப்பன் இண்டைக்கு !

ஹேமா said...

வாவ்...என்ர இசைக்காதலரின்ர பாட்டுகளோட பதிவோ இண்டைக்கு.சூப்பர் நேசன்.ஜெயந்த்ன்ர் பாட்டுக்கள் வரிசையா சொல்லுவன் போட்டுவிடுங்கோ.கடைசியா வந்த வவுனியா மண்ணே....மிக அருமை.அதைப்போல காந்தள் பூக்கும் தீவிது.....சிக்குப் புக்கு...சொல்லிக்கொண்டே போகலாம் !

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா! நல்ல பாடல் கேட்டுக்கொண்டே பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

காந்தள் பூக்கும் தீவிது.....சிக்குப் புக்கு...சொல்லிக்கொண்டே போகலாம் !////ம்ம்ம் காந்தள் பூக்கும் பிடிக்கும் பிறகு வந்த லிமோ லிமோ பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஹேமா.

ஹேமா said...

வவுனியா மண்ணே இணைச்சிருக்கலாம் நேசன்.நல்லாயிருக்கு !

தனிமரம் said...

வவுனியா மண்ணே இணைச்சிருக்கலாம் நேசன்.நல்லாயிருக்கு !

30 April 2012 08:19 //ஓம் ஆனால் இணையம் லோட்டாக அதிக நேரம் ஆகும் ஹேமா காந்தள் பூக்கள் பாடல் சேர்க்கணும் என்ற ஆசை இருக்கு பலரிடம் போகனும் நம்மவர் படைப்பு!

ஹேமா said...

நீங்கள் ஆசை காட்டிவிட அவரின்ர பாட்டுக்கள்தான் இப்ப கேட்டுக்கொண்டிருக்கிறன் கோப்பியோட.ஐபிசி வானொலியில ஒவ்வொரு கிழமையையும் நம்மவர் நிகழ்ச்சி இருக்கு.அதில் இவர்களது குடும்பத்தில் தம்பி,தங்கை என எல்லோரது பாடல்களுமே கேட்கலாம் !

தனிமரம் said...

ஐபிசி வானொலியில ஒவ்வொரு கிழமையையும் நம்மவர் நிகழ்ச்சி இருக்கு.அதில் இவர்களது குடும்பத்தில் தம்பி,தங்கை என எல்லோரது பாடல்களுமே கேட்கலாம் !// ஆனால் வேலை ஹேமா அதனால் பாட்டை இறக்கி வைத்திருக்கின்றேன் கைபேசியில்
ரெவெரி பாடம் சொல்லி இருக்கிறார்!!

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

தனிமரம் said...

அருமை.
வாழ்த்துகள்.//நன்றி ரத்தினவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!.

Anonymous said...

என்ன இந்த நேரத்தில்..?

Anonymous said...

ஜெயந்தன் இசை...தனி ரகம் தான்...ஹேமாவும் பெரிய ரசிகை போல...

தனிமரம் said...

என்ன இந்த நேரத்தில்..?

30 April 2012 10:11 //ஓலா ரெவெரி நேரம் கொஞ்சம் அதிகம் கிடைத்து இருக்கு இன்று.

Anonymous said...

K.S ராஜா..அப்துல் ஹமீது வரிசையில்...R.சந்திரமோகன் ?

தனிமரம் said...

ஜெயந்தன் இசை...தனி ரகம் தான்...ஹேமாவும் பெரிய ரசிகை போல...

30 April 2012 10:17 // ஹேமாவுடன் நானும் அவரின் இசையைத் தொடர்ந்து கேட்கின்றேன் ஓரு உணர்வு அதிகம் முற்றத்து மல்லிகையும் மணக்கும் தானே!

Anonymous said...

நலமா நேசரே...?

Anonymous said...

முற்றத்து மல்லிகையும் மணக்கும் தானே//

மாற்றான் தோட்ட மல்லிகை மணக்கையில் நம் முற்ற மல்லிகை மணக்காதா என்ன?

தனிமரம் said...

K.S ராஜா..அப்துல் ஹமீது வரிசையில்...R.சந்திரமோகன் ?

30 April 2012 10:18 //அப்படிச் சொல்லமுடியும் ஒரு நிகழ்ச்சியை 10 வருடங்களுக்கு மேல் நடத்துவது என்றால் சும்மாவா அத்தோடு அவர் பின் நாட்களில் கட்டுப் பாட்டாளர்பதவியும் வகித்தார் நேரில் சில நிமிடங்கள் பார்த்திருக்கின்ரேன் அவரை.பேசியும் இருக்கின்ரேன்.

Anonymous said...

வோட்டுப்பட்டை வேலை செய்யவில்லை என்றீர்கள்...டெம்ப்ளேட் மாற்றும்போது பழையது எல்லாம் அப்படியே வந்திருக்கும்..மாற்றியது போக...தமிழ்மணத்தில் இணைக்க அதை நான் பயன்படுத்துவேன்...மற்றவற்றில் பட்டை இல்லாமலே இணைக்க முடியும்..இணைத்துப்பார்தேன் இணைந்தது...பார்த்து சொல்லுங்கள்...

தனிமரம் said...

நலமா நேசரே...?// நலம் ரெவெரி உடலினால் மனதினால் யாழ்தேவியில்!

தனிமரம் said...

மாற்றான் தோட்ட மல்லிகை மணக்கையில் நம் முற்ற மல்லிகை மணக்காதா என்ன?//சிலர் அப்படி நினைத்துத்தானே விமர்சனம் செய்கின்றார்கள்.வாசம் நமக்கு புரியுது இல்லை குத்துப்பாட்டில்! ம்ம்ம்ம்

Anonymous said...

அவேன்ஜெர்ஸ் படம் பார்க்க செல்கிறேன்...

தனிமரம் said...

வலைக்குள் செல்ல முடியாமல் இருக்கு தற்போது. ரெவெரி அண்ணா! சென்னைப்பித்தன் /கானாபிரபு இராஜேஸ்வறீ எல்லாருக்கும் இதே பிர்ச்சனைதான் சுற்றிக்கொண்டே இருக்கு!!!!!பாருங்கள்

தனிமரம் said...

அவேன்ஜெர்ஸ் படம் பார்க்க செல்கிறேன்...//பார்த்துவிட்டு சொல்லுங்க ஆடியில் விடுமுறையில் பார்க்கின்றேன்.

Anonymous said...

அது என் அலுவலக வாசலில் படமாக்கப்பட்டது...நிறைய ஷூட்டிங் பார்த்தேன்...படத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் உள்ளது..

Anonymous said...

தனிமரம் said...
வலைக்குள் செல்ல முடியாமல் இருக்கு தற்போது. ரெவெரி அண்ணா! சென்னைப்பித்தன் /கானாபிரபு இராஜேஸ்வறீ எல்லாருக்கும் இதே பிர்ச்சனைதான் சுற்றிக்கொண்டே இருக்கு!!!!!பாருங்கள்
//
பிக்ஸ் பண்ணிவிட்டேன்...என் தொலைபேசியில் நுழைகிறது இப்போது...

ஹேமா said...

ரெவரி....வந்திட்டார்.சுகம்தானே ரெவரி.எங்கே எங்கட அப்பாவும் கருவாச்சியும்.காணேல்ல !

Anonymous said...

நலம் ஹேமா..சுகம் எப்படி?

Anonymous said...

வித்தியாச ஹேமா..இன்று உப்பு மட சந்தியில்...

தனிமரம் said...

அது என் அலுவலக வாசலில் படமாக்கப்பட்டது...நிறைய ஷூட்டிங் பார்த்தேன்...படத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் உள்ளது..

30 April 2012 10:36//ஆஹா பாருங்கள்§

தனிமரம் said...

இன்று உப்பு மட சந்தியில்...

30 April 2012 10:39 //கவிதாயினி கலக்கிப்புட்டாங்க

Anonymous said...

தனிமரம் said...
அது என் அலுவலக வாசலில் படமாக்கப்பட்டது...நிறைய ஷூட்டிங் பார்த்தேன்...படத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாய் உள்ளது..

30 April 2012 10:36//ஆஹா பாருங்கள்§
//

படம் சின்ன புள்ளைங்க படம் மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்...

Anonymous said...

தனிமரம் said...
இன்று உப்பு மட சந்தியில்...

30 April 2012 10:39 //கவிதாயினி கலக்கிப்புட்டாங்க
//
நான் கயிறு தேடினேன் தொங்க...-:)

Anonymous said...

ஹேமா ஓடிட்டீங்களா?

தனிமரம் said...

இலலை ரெவெரி அண்ணா! வலை குழப்பம் பண்ணுகின்றது! தொட்ர்ந்து ரங்கராட்டிணம்

ஹேமா said...

உண்மைதான் முதன்முறையா இப்பிடி ஒரு பதிவு.கனகாலமாய் இப்பிடி ஒரு பதிவு போட ஆசை.அதோட 2-3 பதிவுகள் சீரியஸ்.கொஞ்சம் ரிலாக்ஸ்ம் வேணும்தானே.இவ்வளவு நேரமும் அதிரா,ஏஞ்சல்,விச்சு கும்மி நடந்திச்சு உப்புமடச்சந்தியில !

தனிமரம் said...

ஹேமா ஓடிட்டீங்களா?//கருக்கு மட்டை எடுக்கப் போட்டா! ஹீ

தனிமரம் said...

ஏஞ்சல்,விச்சு கும்மி நடந்திச்சு உப்புமடச்சந்தியில !

30 April 2012 10:44 // நல்லம் கதைக்கட்டும் ! யோகா ஐயாவைக்கானவில்லை

Anonymous said...

ஹேமா said...
உண்மைதான் முதன்முறையா இப்பிடி ஒரு பதிவு.கனகாலமாய் இப்பிடி ஒரு பதிவு போட ஆசை.அதோட 2-3 பதிவுகள் சீரியஸ்.கொஞ்சம் ரிலாக்ஸ்ம் வேணும்தானே.இவ்வளவு நேரமும் அதிரா,ஏஞ்சல்,விச்சு கும்மி நடந்திச்சு உப்புமடச்சந்தியில !
//
ஏஞ்சலின் ஐயும் விடலையா?

ஹேமா said...

எனக்குத்தான் கருக்குமட்டை ஓடர் பண்ணிட்டு அப்பாவும் கருவாச்சியும் காத்திருக்கினம்போல.நேசன்,ரெவரி நீங்களும் ரெடியாகி இருங்கோ.எனக்குத்தான் இண்டைக்கு கருக்குமட்டை விளாசல் !

தனிமரம் said...

காத்திருக்கினம்போல.நேசன்,ரெவரி நீங்களும் ரெடியாகி இருங்கோ.எனக்குத்தான் இண்டைக்கு கருக்குமட்டை விளாசல் !// ஐயோ நான் இடையில் வரமாட்டன் கலை பாடல் பார்த்து மயக்கம் போடாவிட்டால் போதும் ஹீஈஈஈஈஈஈஈ

Anonymous said...

தனிமரம் said...
இலலை ரெவெரி அண்ணா! வலை குழப்பம் பண்ணுகின்றது! தொட்ர்ந்து ரங்கராட்டிணம்//

தமிழ் மணம்தான்..காரணம்னு நினைக்கிறேன்...தூக்கிட்டேன் கடைசியா ஒரு முறை பாருங்க நேசரே...

Anonymous said...

ஹேமா said...
எனக்குத்தான் கருக்குமட்டை ஓடர் பண்ணிட்டு அப்பாவும் கருவாச்சியும் காத்திருக்கினம்போல.நேசன்,ரெவரி நீங்களும் ரெடியாகி இருங்கோ.எனக்குத்தான் இண்டைக்கு கருக்குமட்டை விளாசல் !
//
As I am suffering from fever....Escape...

Anonymous said...

ஹேமா உங்கள் இன்றைய படைப்பில் எந்த படம் ரொம்ப பிடிச்சது?

ஹேமா said...

ரெவரி....இப்பிடி இக்கட்டான பதில் கேக்கலாமோ.கலையழகோட எல்லாப் படங்களுமே அழகு.அந்தக் குழந்தைகள் ரியல் அழகு !

நேசன் அங்க வந்திட்டார்.கலை,நேசன்,ஏஞ்சல் !

தனிமரம் said...

மீள்வும் அதே ரங்க ராட்டிணம் தான் ரெவெரி அண்ணா!

தனிமரம் said...

ரெவரி....இப்பிடி இக்கட்டான பதில் கேக்கலாமோ.கலையழகோட எல்லாப் படங்களுமே அழகு.அந்தக் குழந்தைகள் ரியல் அழகு !// எனக்கு அந்த கங்காரு குட்டி பிடிச்சிருக்கு அடுத்தது நாய் படுத்திருக்கும் விதம்! ம்ம்ம்

தனிமரம் said...

As I am suffering from fever....Escape...

30 April 2012 10:56 /நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்! ஹாஸ்தாவா விஸ்தா! அடியோஸ்§

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!இங்கிருக்கும் மற்றையோருக்கும் இரவு வணக்கம்!"அங்கே"கும்மி களை கட்டியிருந்தது,பார்த்தேன்!சின்னஞ்சிறுசுகள் அடியுங்க!"அந்தப்"பசங்களுக்கு உடுப்பு வாங்கிக் குடுக்க வேணும்,அட்ரஸ் தாங்கோ!

தனிமரம் said...

ரவு வணக்கம்,நேசன்!இங்கிருக்கும் மற்றையோருக்கும் இரவு வணக்கம்!"அங்கே"கும்மி களை கட்டியிருந்தது,பார்த்தேன்!சின்னஞ்சிறுசுகள் அடியுங்க!"அந்தப்"பசங்களுக்கு உடுப்பு வாங்கிக் குடுக்க வேணும்,அட்ரஸ் தாங்கோ!// வாங்க யோகா ஐயா நலம் தானே! தனிமெயிலில் அட்ரஸ் கைபேசி இலக்கம் அனுப்புகின்றேன்!

30 April 2012 11:35

Yoga.S.FR said...

இரவு வணக்கம் ரெவெரி!உடம்பைக் கவனியுங்கள்.சுவர் வேண்டும் சித்திரம் தீட்ட!நல்லிரவு......!

Anonymous said...

அண்ணா எனக்குத் தான் நெட் ஸ்லாவா இருக்கு ..பாட்டுலாம் ஓபன் ஆகா மாட்டேந்து ....நாளை காலை பார்க்கினும் .........

Anonymous said...

ரே ரீ அண்ணா உடம்பை பத்திரமா பார்த்துகொங்க ........நல்ல மருந்து சாபிடுங்கோ ........

Yoga.S.FR said...

தனிமரம் said...
வாங்க யோகா ஐயா நலம் தானே! தனிமெயிலில் அட்ரஸ் கைபேசி இலக்கம் அனுப்புகின்றேன்!////சார்!சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா,பப்ளிக்கில அது அனுப்புறன்,இது அனுப்புறன் எண்டு...................!?

Yoga.S.FR said...

நானும் பாட்டு கேட்கவில்லை!என்னவோ தெரியவில்ல,இப்போதெல்லாம் பாட்டு என்றாலே............................

தனிமரம் said...

நெட் ஸ்லாவா இருக்கு ..பாட்டுலாம் ஓபன் ஆகா மாட்டேந்து ....நாளை காலை பார்க்கினும் .........

30 April 2012 11:43 // நாளை பாருங்க கலை பிடிக்கும் பாடல் மட்டுமா!!!!! அண்ணியும் தான் நாங்க!!!! அவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

பாட்டு கேக்கிறன்!

தனிமரம் said...

நானும் பாட்டு கேட்கவில்லை!என்னவோ தெரியவில்ல,இப்போதெல்லாம் பாட்டு என்றாலே............................

30 April 2012 11:48 //ம்ம் இந்தப்பாட்டில் வித்தியாசம் இருக்கு யோகா ஐயா ஒரு முறை கேளுங்கள் பிளீஸ்§

Yoga.S.FR said...

அந்தக் குரல் அந்தக் கால எஸ்.பி.பாலா குரலை ஒத்திருக்கிறது!

Anonymous said...

அண்ணியும் தான் நாங்க!!!! //////////

அண்ணா எண்ணச சொல்லுரிங்க............................அண்ணி வருவாங்கள அதுல ...

அண்ணா எனக்கு எத்தனை அண்ணிகள் மொத்தம் இருக்கினம் இப்போதைக்கு ...

Anonymous said...

மாமா எதுக்கு இன்னைக்கு அன்னனை சார் எண்டு அழைக்கிரான்கள்

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலம் தானே! தனிமெயிலில் அட்ரஸ் கைபேசி இலக்கம் அனுப்புகின்றேன்!////சார்!சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா,பப்ளிக்கில அது அனுப்புறன்,இது அனுப்புறன் எண்டு...................!?

30 April 2012 11:46 //இந்த பாரீஸ் தேசத்தில் கட்டுப்பாட்டோடுதானே வாழ்கின்றோம் யோகா ஐயா!

தனிமரம் said...

அந்தக் குரல் அந்தக் கால எஸ்.பி.பாலா குரலை ஒத்திருக்கிறது!// கொஞ்ச்ம் ஆனால் காட்சி அமைப்பு யாழ் இடங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹேமா said...

//அண்ணா எனக்கு எத்தனை அண்ணிகள் மொத்தம் இருக்கினம் இப்போதைக்கு ...//

நேசன்...எடுத்துவிடுங்கோ உங்களுக்குப் பிடிச்ச அண்ணிகளின்ர
பேரையெல்லாம் !

Yoga.S.FR said...

அண்ணி பாக்கிற மாதிரி இருக்கிறா,ஹி!ஹி!ஹி!!!!!

தனிமரம் said...

அண்ணா எனக்கு எத்தனை அண்ணிகள் மொத்தம் இருக்கினம் இப்போதைக்கு .../ஹீ கலை தனிமரம் நேசனுக்கு ஒருத்திதான் அது அன்பு மச்சாள் அவள் என் மனைவி அவள் சின்ன வயதில் எப்படி எல்லாம் இருந்தாலோ அப்படி ஒருத்தி காட்சியில் தோன்றுவாள்!! ம்ம்ம்

Yoga.S.FR said...

ஹேமா said...
நேசன்...எடுத்துவிடுங்கோ உங்களுக்குப் பிடிச்ச அண்ணிகளின்ர
பேரையெல்லாம் !////அவரைப் புடிச்ச அண்ணிகளோ/அவருக்குப் புடிச்ச அண்ணிகளோ ????

தனிமரம் said...

மாமா எதுக்கு இன்னைக்கு அன்னனை சார் எ//எனக்குத் தெரியாது கலை!

தனிமரம் said...

நேசன்...எடுத்துவிடுங்கோ உங்களுக்குப் பிடிச்ச அண்ணிகளின்ர
பேரையெல்லாம் !

30 April 2012 11:58 //ஏன் ஹேமா முக்நூல் ப்க்க்ம் முட்டை அடி அதுதான் இங்கே இருக்கின்றேன் தொடரில் யாரு யாரு அந்தச் சிறுக்கி அவன் யார் என்று ம்ம்ம் என்னோட் மச்சாள்மார் 16 பேர் தாய்வழி /தந்தைவழி என் ஆனால் நான் முடித்து தாய் வழியில்!

தனிமரம் said...

அவரைப் புடிச்ச அண்ணிகளோ/அவருக்குப் புடிச்ச அண்ணிகளோ ????

30 April 2012 12:00 //ஹீ பாரதவிலாஸ் நம்ம குடும்பம் யோகா ஐயா!!ஹீ

Anonymous said...

அண்ணி பாக்கிற மாதிரி இருக்கிறா,ஹி!ஹி!ஹி!!!!!//

மாமாஆஆஆஆ ரீரீ அண்ணாவே வடிவு தானே ..அண்ணியும் மிக்க வடிவைத் தான் இருக்கினம் ,,,,,நான் தான் காக்கா

Yoga.S.FR said...

தனிமரம் said...

மாமா எதுக்கு இன்னைக்கு அன்னனை சார் எ//எனக்குத் தெரியாது கலை!/////ஐய்யய்யோ!என்ன இது இண்டைக்கு இப்புடியெல்லாம்??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????சொறி!சொறி!சொறி!!!!!!!!!

Anonymous said...

அவரைப் புடிச்ச அண்ணிகளோ/அவருக்குப் புடிச்ச அண்ணிகளோ ????///


அண்ணா பிரஞ்சுக்கார அன்னி பற்றி சொல்ல்வங்க எண்டு நினைத்திணன் ,,,ஆனால் பாரத விலாஸ் ஆம்...


பிரேஞ்சுக்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம் மாமா

Anonymous said...

சொறி!சொறி!சொறி!!!!!!!!!..///////////

ஹா ஹாஆஆஅ ஹாஆஆஆஆஆஆஆஆஆஅ மாமா மாமா

Yoga.S.FR said...

கலை said...

அண்ணி பாக்கிற மாதிரி இருக்கிறா,ஹி!ஹி!ஹி!!!!!//

மாமாஆஆஆஆ ரீரீ அண்ணாவே வடிவு தானே ..அண்ணியும் மிக்க வடிவைத் தான் இருக்கினம் ,,,,,நான் தான் காக்கா.////கலையும் வடிவு தான்!கருப்பாயிருந்தால் என்ன?

ஹேமா said...

முகநூல் பக்கம் ஏதும் பிரச்ச்னையோ.நல்லதுதான் அங்க சூன்யம் வச்சிருக்காம்.மணி சொல்லியிருந்தார்.போகாதேங்கோ அங்க.நான் ஒளிச்சிருந்து பாத்திட்டு வந்தன்.எனக்கு ஐபிசியோட தொடர்புக்கு முகநூல் இலகுவா இருக்கு.அதுதான் அங்க போறன் !

Anonymous said...

ஹேமா said...
எனக்குத்தான் கருக்குமட்டை ஓடர் பண்ணிட்டு அப்பாவும் கருவாச்சியும் காத்திருக்கினம்போல.நேசன்,ரெவரி நீங்களும் ரெடியாகி இருங்கோ.எனக்குத்தான் இண்டைக்கு கருக்குமட்டை விளாசல் !
//
As I am suffering from fever....Escape... //

மறுபடியும் மாலை வணக்கங்கள்...

அடி வாங்க நான் வரலைன்னு Symbolicக்கா சொன்னேன்...

உடம்பு நல்லாத்தான் இருக்கு...

கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...

தனிமரம் said...

மாமாஆஆஆஆ ரீரீ அண்ணாவே வடிவு தானே ..அண்ணியும் மிக்க வடிவைத் தான் இருக்கினம் ,,,,,நான் தான் காக்கா// அப்படி அல்ல கலிங்கநாட்டு இளவரசி நல்ல வடிவுதான்!

தனிமரம் said...

மா எதுக்கு இன்னைக்கு அன்னனை சார் எ//எனக்குத் தெரியாது கலை!/////ஐய்யய்யோ!என்ன இது இண்டைக்கு இப்புடியெல்லாம்??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????சொறி!சொறி!சொறி!!!!!!!!!// யோகா ஐயாவுக்கு அதிராவின் இனிப்பு கூடிவிட்டது கலை! அவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

கலை said...

அவரைப் புடிச்ச அண்ணிகளோ/அவருக்குப் புடிச்ச அண்ணிகளோ ????///


அண்ணா பிரஞ்சுக்கார அன்னி பற்றி சொல்ல்வங்க எண்டு நினைத்திணன் ,,,ஆனால் பாரத விலாஸ் ஆம்...


பிரேஞ்சுக்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம் மாமா?////அது ஒரு காலத்தில பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் பிரெஞ்சுக்காரர் கையில தானே இருந்திச்சு?அதான் சம்பந்தம்,ஹி!ஹி!ஹி!!!!

ஹேமா said...

காக்கா கருப்பெண்டாலும் வடிவெல்லோ.அதுதானே அண்டைக்கு தலையை மூடினபடி பின்பக்கம் பாத்தனே நான் !

Anonymous said...

Yoga.S.FR said...
ஹேமா said...
நேசன்...எடுத்துவிடுங்கோ உங்களுக்குப் பிடிச்ச அண்ணிகளின்ர
பேரையெல்லாம் !////

நலமா யோகா அய்யா...
அதென்ன பன்மையில அண்ணி கள்னு...?

Anonymous said...

ஹேமா said...
எனக்குத்தான் கருக்குமட்டை ஓடர் பண்ணிட்டு அப்பாவும் கருவாச்சியும் காத்திருக்கினம்போல.நேசன்,ரெவரி நீங்களும் ரெடியாகி இருங்கோ.எனக்குத்தான் இண்டைக்கு கருக்குமட்டை விளாசல் !...........///////////


ஆஹா அஹா ஹாஆஆஆ ஹாஆஅ ...அருமையான மகிழ்ச்சி நிறைந்த செய்தி ....பகிர்வுக்கு நன்றிங்க ஹேமா அக்கா ...ரே ரீ அண்ணாக்கும் மிக்க நண்ரிஈஈஈஈஈ

Anonymous said...

கலை உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் ஸ்பானிஷ் ~ 5":

ஓலா ரே ரீ அண்ணா !!!

ப்வீநோஹ்ஸ் நோச்செஸ்

கொமொஸ்டாஸ் ??

இ உஸ்டெட் பிவேர் ஆஆஆஆஅ அண்ணா??? ...........

இ உஸ்டெட்டோம லாஸ் டப்ளேத்ஸ் ........

அடியோஸ்//

கருவாச்சி நலமா? I am alright...

தனிமரம் said...

அண்ணி பாக்கிற மாதிரி இருக்கிறா,ஹி!ஹி!ஹி!!!!!

30 April 2012 11:58 // என்னைவிட அவள் சூப்பர் அழகு யோகா ஐயா நான் தான் கொடுத்து வைத்தவன் சிலர் விட்டுக்கொடுத்த!இடம் !!ஹீ

Yoga.S.FR said...

ரெவெரி said
மறுபடியும் மாலை வணக்கங்கள்...

அடி வாங்க நான் வரலைன்னு Symbolicக்கா சொன்னேன்...

உடம்பு நல்லாத்தான் இருக்கு...

கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...///அட!அந்தப் போட்டோவ(முக்காடு)நீங்களும் பாத்தீங்களா?

தனிமரம் said...

பிரேஞ்சுக்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம் மாமா?////அது ஒரு காலத்தில பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் பிரெஞ்சுக்காரர் கையில தானே இருந்திச்சு?அதான் சம்பந்தம்,ஹி!ஹி!ஹி!!!!

30 April 2012 12:12 // ஹீ ஹீ

ஹேமா said...

நேசனைப் பிடிச்ச அண்ணியோ நேசனுக்குப் பிடிச்ச அண்ணியோ....எப்பிடியோ பிடிச்சா பிடிச்சதுதான்.பிறகென்ன !


ரெவரி....எனக்கு நல்லா கருக்குமட்டை அடி விழட்டுமெண்டு ஒளிச்சிருந்திட்டு வாறீங்களாக்கும் !

Anonymous said...

As I am suffering from fever....Escape... //

மறுபடியும் மாலை வணக்கங்கள்...

அடி வாங்க நான் வரலைன்னு Symbolicக்கா சொன்னேன்...

உடம்பு நல்லாத்தான் இருக்கு...

கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...///////////////ஓலா ரே ரீ அண்ணா !!!

கொமொஸ்டாஸ் ??

இ யுச்டேட் பிவேர் நேஹி யா )??
அப்போ காய்ச்சல் எண்டு பொய் சொல்லித் திரிந்து கொண்டு இருக்கினம் ,,,,எடுங்கோ அந்த கருக்கு மட்டையை ...அடிக் கொடுப்பம்

தனிமரம் said...

கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...///அட!அந்தப் போட்டோவ(முக்காடு)நீங்களும் பாத்தீங்களா?// ஹீ அப்படியா!

Anonymous said...

ஹேமா said...

ரெவரி....எனக்கு நல்லா கருக்குமட்டை அடி விழட்டுமெண்டு ஒளிச்சிருந்திட்டு வாறீங்களாக்கும் !//

அடி நம்ம மேல தெரியாம பட்ரக்கூடாதில்லையா..ஹேமா...
பின் விளைவுகள் மோசமோ?

Anonymous said...

கருவாச்சி நலமா? I am alright.../////////


ஈஸ்தோய் பியின் .................


மூச்சோ குஸ்தோ

Anonymous said...

தனிமரம் said...
கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...///அட!அந்தப் போட்டோவ(முக்காடு)நீங்களும் பாத்தீங்களா?// ஹீ அப்படியா!
//
வலையுலகிலேயே எனக்கு பிடித்த Profile படம் கருவாச்சியோடது தான்...

Anonymous said...

கருவாச்சி என் வலையில் வந்து முக்காடு போட்டு அழுதிட்டு போயிருக்கு...///அட!அந்தப் போட்டோவ(முக்காடு)நீங்களும் பாத்தீங்களா?// ஹீ அப்படியா!///////////////


மாமா அந்த போட்டவ மறக்கவே மாடீங்க ளா ..........ஏன் மாமா ஏன் இப்புடி ...........

Anonymous said...

கலை said...
கருவாச்சி நலமா? I am alright.../////////
ஈஸ்தோய் பியின் .................
மூச்சோ குஸ்தோ
//

டமில் மறந்துச்சா ?

ஹேமா said...

ஆளைப்பாருங்கோ.....நல்ல வேளை அப்பா...நேசனிட்ட நல்லாத் திட்டு வாங்குவன் எண்டுதான் நினைச்சன்.பரவால்ல ஐரோப்பிய வாழ்க்கை கொஞ்சம் பொறுமை சகிப்புத்தன்மை குடுத்திருக்கு.நன்றி !

இனி அடி விழுந்தா காப்பாத்துங்கோ ரெவரி.காக்க்கா எண்டா காட்டிக்குடுத்திட்டு சிரிக்கும் !

தனிமரம் said...

நலமா யோகா அய்யா...
அதென்ன பன்மையில அண்ணி கள்னு...?

30 April 2012 12:12 // அது ரெவெரி கலை என் தொடரில் அந்த ராகுல் குடும்பம் என் குடும்பம் என்று நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கின்றா கலை. அடுத்த தொடர் என் வாழ்க்கையோ என்ற ஆவலில்தான் அது! எதுவும் எனக்கு சம்மந்தம் இல்லை!ஹீ

Anonymous said...

தனிமரம் said...
நலமா யோகா அய்யா...
அதென்ன பன்மையில அண்ணி கள்னு...?

30 April 2012 12:12 // அது ரெவெரி கலை என் தொடரில் அந்த ராகுல் குடும்பம் என் குடும்பம் என்று நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கின்றா கலை. அடுத்த தொடர் என் வாழ்க்கையோ என்ற ஆவலில்தான் அது! எதுவும் எனக்கு சம்மந்தம் இல்லை!ஹீ
//
அப்பம் உண்மையிலே ராகுல்<>நேசன்...

தனிமரம் said...

டமில் மறந்துச்சா ?//இல்லை இல்லை இப்ப எல்லாரும் எல்லா மொழியும் படிக்கின்ரம் சிங்களமும் கூட!! ஆவ்வ்வ்

Yoga.S.FR said...

என்ரை மூத்த மோள் சரியான காரியகாறி!அப்பிடி,இப்பிடி எண்டு கதைச்சு ஒரு தையல் மிசின் ஒழுங்குபடுத்திப் போட்டா!!!!!

Anonymous said...

வலையுலகிலேயே எனக்கு பிடித்த Profile படம் கருவாச்சியோடது தான்...///

மிக்க நன்றி அண்ணா ...

பூ பட ஹீரோயின் பார்வதி படம்தான்...

என்ர படத்தை போட்டு இருந்திணன் அப்பம் சொல்லுவீங்க வலையுலகிலேயே எனக்கு பிடிகாத Profile படம் கருவாச்சியோடது தான்...///

நன்கலம் யோசிப்பம் ள ...
மீ கிட்னி எப்புடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

ஹேமா said...
ஆளைப்பாருங்கோ.....நல்ல வேளை அப்பா...நேசனிட்ட நல்லாத் திட்டு வாங்குவன் எண்டுதான் நினைச்சன்.பரவால்ல ஐரோப்பிய வாழ்க்கை கொஞ்சம் பொறுமை சகிப்புத்தன்மை குடுத்திருக்கு.நன்றி !

இனி அடி விழுந்தா காப்பாத்துங்கோ ரெவரி.காக்க்கா எண்டா காட்டிக்குடுத்திட்டு சிரிக்கும் !//

இருந்தாலும் கொஞ்சம் மோசம் தான்...

தனிமரம் said...

அப்பம் உண்மையிலே ராகுல்<>நேசன்...

30 April 2012 12:22//அவன் வேற தனிமரம் நேசன் வேற ரெவெரி.

Anonymous said...

டமில் மறந்துச்சா ?////////////////////////


ஹோஓஓஒ நான் ஸ்பானிஷ் வகுப்புக்கு சென்றிணன் ..அதான் பிரச்டிசே ..............
ஹேமா அக்காக்கு கருக்கு மட்டை அடி இன்னும் கொடுக்கலையா

Anonymous said...

கலை said...
வலையுலகிலேயே எனக்கு பிடித்த Profile படம் கருவாச்சியோடது தான்...///

மிக்க நன்றி அண்ணா ...

பூ பட ஹீரோயின் பார்வதி படம்தான்...

என்ர படத்தை போட்டு இருந்திணன் அப்பம் சொல்லுவீங்க வலையுலகிலேயே எனக்கு பிடிகாத Profile படம் கருவாச்சியோடது தான்...///

தெரியும் கருவாச்சி..பூ ரெண்டு தடவை பார்த்தேன்...

நன்கலம் யோசிப்பம் ள ...
மீ கிட்னி எப்புடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
//

யப்பா..கருவாச்சி தமில கொல பன்னி ரெம்ப நாலாச்சு...

தனிமரம் said...

ன்ரை மூத்த மோள் சரியான காரியகாறி!அப்பிடி,இப்பிடி எண்டு கதைச்சு ஒரு தையல் மிசின் ஒழுங்குபடுத்திப் போட்டா!!!!!/ ஹீ நல்ல வருமானம் இப்ப அதுக்குத்தானே!! ஹீ

Anonymous said...

அப்பம் உண்மையிலே ராகுல்<>நேசன்...

30 April 2012 12:22//அவன் வேற தனிமரம் நேசன் வேற ரெவெரி.////////////


நான் நம்பவேஏஏஏஏஏஏஏ மாட்டினான் ........இந்தக் கதை எல்லாம் ஹேமா அக்காகிட சொல்லுங்கள் ...

Anonymous said...

ரீ ரீ அண்ணா இண்டு உங்களை ஆன்லைனில் பார்த்திணன் ......

தனிமரம் said...

யப்பா..கருவாச்சி தமில கொல பன்னி ரெம்ப நாலாச்சு...// ஹீ பாவம் கலை ஏதோ ஆர்வத்தில் எழுதுகின்றது அதைப்போய் குயிலைப்பிடிச்சு கூட்டில் அடைச்சு........

Anonymous said...

தனிமரம் said...
அப்பம் உண்மையிலே ராகுல்<>நேசன்...

30 April 2012 12:22//அவன் வேற தனிமரம் நேசன் வேற ரெவெரி.
//
அடிக்கடி டிஸ்கி போட்டா/ சொன்னாதான் நம்புவேன்...

Yoga.S.FR said...

கலை said...

கருவாச்சி நலமா? I am alright.../////////


ஈஸ்தோய் பியின் .................


மூச்சோ குஸ்தோ!///உம்..உம்...உம்...!!!!

Anonymous said...

தனிமரம் said...
யப்பா..கருவாச்சி தமில கொல பன்னி ரெம்ப நாலாச்சு...// ஹீ பாவம் கலை ஏதோ ஆர்வத்தில் எழுதுகின்றது அதைப்போய் குயிலைப்பிடிச்சு கூட்டில் அடைச்சு........
//
கருவாச்சி...குயில் எப்படி கூவினாலும் இனிமை தான்...

தனிமரம் said...

நான் நம்பவேஏஏஏஏஏஏஏ மாட்டினான் ........இந்தக் கதை எல்லாம் ஹேமா அக்காகிட சொல்லுங்கள் .// யார் என்றாலும் விரைவில் தொடரை நாளுக்கு இரண்டு மற்றும் எழுநாளும் கொண்டு வருவேன் பாருங்கோ விரும்பினால் படியுங்கோ கொஞ்சம் அவசரம் எனக்கு முடிக்கவேண்டி இருக்கு!ஹீ

Anonymous said...

உம்..உம்...உம்...!.///////////////

ஹா ஹாஆஆஆ ஹாஆஆஆஆஆஆ ஹா ஹாஆஆஅ மாமா மாமாஆஆஅ

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா இண்டு உங்களை ஆன்லைனில் பார்த்திணன் ......

30 April 2012 12:28 // ஹீ என் படம் முதலில் போட்டு இருந்தேனே சில உள்குத்தை சமாளிக்க முடியாமல் தான் மரம் காவல் காக்குது கலை!

Anonymous said...

யார் என்றாலும் விரைவில் தொடரை நாளுக்கு இரண்டு மற்றும் எழுநாளும் கொண்டு வருவேன் பாருங்கோ விரும்பினால் படியுங்கோ கொஞ்சம் அவசரம் எனக்கு முடிக்கவேண்டி இருக்கு!ஹீ///


போடுங்கள் அண்ணா ...ஆரம்பத்திலிருந்து படிப்பம் அல்லோ எழுத்துக் கூட்டினாலும் தினமும் படிச்சிப் போடுவிணன் ..........

தனிமரம் said...

அடிக்கடி டிஸ்கி போட்டா/ சொன்னாதான் நம்புவேன்...

30 April 2012 12:28 //அப்படி போட்டால் அதுவே சில இடத்தைப்பிடித்து விடும் ஏற்கனவே பந்தி அதிகம் என்று நண்பர்கள் குத்துகின்றார்கள் ரெவெரி அண்ணா!

தனிமரம் said...

போடுங்கள் அண்ணா ...ஆரம்பத்திலிருந்து படிப்பம் அல்லோ எழுத்துக் கூட்டினாலும் தினமும் படிச்சிப் போடுவிணன் ..........//ஹீ இனி கொஞ்சம் சகோதர மொழி வரும் சிங்களம் ஹீஈஈஈ தமிழ் விளக்கத்துடன்!

Anonymous said...

கருவாச்சி...குயில் எப்படி கூவினாலும் இனிமை தான்..//////

ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஒ ......


குயிலு கூவினது கேட்டுச்சா அண்ணா..


அடிக்கடி கும்மியில் இருக்குற மாறியே இருந்துட்டு ஜகா வாங்குற கவிதாயினி எ ...அப்புடி எங்க தான் மேடம் எஸ்கேப் ஆரின்கள் ...

Anonymous said...

கலை said...


போடுங்கள் அண்ணா ...ஆரம்பத்திலிருந்து படிப்பம் அல்லோ எழுத்துக் கூட்டினாலும்
//
அப்பா..நேசரே படிக்க ஒரு ஆளு கிடைச்சாச்சு போல...

Sorry எழுத்துக் கூட்டி படிக்க...

Yoga.S.FR said...

கலை said...

போடுங்கள் அண்ணா ...ஆரம்பத்திலிருந்து படிப்பம் அல்லோ?எழுத்துக் கூட்டின்னாலும் தினமும் படிச்சிப் போடுவன்.///எழுத்தை எப்படிக் கூட்டுவது?கணக்குப் பாடத்தில் அல்லவா கூட்டல் வரும்????

ஹேமா said...

//ஹேமா அக்காக்கு கருக்கு மட்டை அடி இன்னும் கொடுக்கலையா//


//நான் நம்பவேஏஏஏஏஏஏஏ மாட்டினான் ........இந்தக் கதை எல்லாம் ஹேமா அக்காகிட சொல்லுங்கள் ...//

அப்பா....பாத்தீங்களோ....காக்கா !

Anonymous said...

ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஒ ......

Anonymous said...

ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஒ ......

Yoga.S.FR said...

கலை said...

கருவாச்சி...குயில் எப்படி கூவினாலும் இனிமை தான்..//////

ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஒ ......


குயிலு கூவினது கேட்டுச்சா அண்ணா..


அடிக்கடி கும்மியில் இருக்குற மாறியே இருந்துட்டு ஜகா வாங்குற கவிதாயினி எ ...அப்புடி எங்க தான் மேடம் எஸ்கேப் ஆரின்கள் ...///அக்கா சமைக்கணும்,சாப்பிடணும்!அதான் குசினியையும் பாத்துக்கிட்டு,வலையையும் மேயிறா!!!/// குயிலு கூவினது கேட்டுச்சா அண்ணா..
////ஓஹோ,ஸ்வர்ணலதா பாட்டுக் கேக்குதோ???

தனிமரம் said...

Sorry எழுத்துக் கூட்டி படிக்க...

30 April 2012 12:39 //ஹீ பதிவுலகில் தொடருக்கு வரவேற்பு குறைவு ஆனாலும் சில விடயத்தை சிறுகதையில் சொல்லமுடியாது தானே! முக்கிய்மாக் இனவாதம் கக்கும் யாரும் இது படிக்கமாட்டார்கள் ரெவெரி.ஆனால் என்க்கு ஹிட்ச் கவலை இல்லை என் தொடர் எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கு தாயகத்தில் ஒரு போட்டியில் அது போதும் எனக்கு!!

Anonymous said...

ழுத்தை எப்படிக் கூட்டுவது?கணக்குப் பாடத்தில் அல்லவா கூட்டல் வரும்?/////////////மாமாஆஆ மாமாஆ உண்மையாத்தான் சொல்லுரின்களா ...என்னலே நம்பவே முடியலை கணக்குப் பாடத்திலா வரும் கூட்டல்............நான் எதோ வீடு கூட்டுறது பேருக்குறது என்றல்லோ நினைத்து விட்டிணன் ...கிட்னி கொஞ்சம் டல் அஆது ..

Yoga.S.FR said...

ஹேமா said...

//ஹேமா அக்காக்கு கருக்கு மட்டை அடி இன்னும் கொடுக்கலையா//


//நான் நம்பவேஏஏஏஏஏஏஏ மாட்டினான் ........இந்தக் கதை எல்லாம் ஹேமா அக்காகிட சொல்லுங்கள் ...//

அப்பா....பாத்தீங்களோ....காக்கா !///இந்தா,சண்டை புடிக்காதயுங்கோ!ரெண்டு பேரையும் முட்டிக்கால்(முழங்கால்)போட வச்சிடுவன் !!!!!!

Anonymous said...

தனிமரம் said...
Sorry எழுத்துக் கூட்டி படிக்க...

30 April 2012 12:39 //ஹீ பதிவுலகில் தொடருக்கு வரவேற்பு குறைவு ஆனாலும் சில விடயத்தை சிறுகதையில் சொல்லமுடியாது தானே! முக்கிய்மாக் இனவாதம் கக்கும் யாரும் இது படிக்கமாட்டார்கள் ரெவெரி.ஆனால் என்க்கு ஹிட்ச் கவலை இல்லை என் தொடர் எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்து இருக்கு தாயகத்தில் ஒரு போட்டியில் அது போதும் எனக்கு!!
//
PDF ஆப்சன் கொடுங்க...நிறைய பேர் வாசிக்க உதவும்...

இன்றல்ல எத்தனை ஆண்டுகள் கழித்தும் உணர்வு...உண்மை கலந்த உங்கள் தொடர் போன்ற படைப்புகள் நிலைத்து அப்படியே இருக்கும்...

Yoga.S.FR said...

கலை said...

எழுத்தை எப்படிக் கூட்டுவது?கணக்குப் பாடத்தில் அல்லவா கூட்டல் வரும்?/////////////மாமாஆஆ மாமாஆ உண்மையாத்தான் சொல்லுரின்களா ...என்னலே நம்பவே முடியலை கணக்குப் பாடத்திலா வரும் கூட்டல்............நான் எதோ வீடு கூட்டுறது பேருக்குறது என்றல்லோ நினைத்து விட்டிணன் ...கிட்னி கொஞ்சம் டல் அஆது ..///அது....... கிட்னி டல் ஆனால் எல்லாமே பிரச்சினை தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

தனிமரம் said...

ப்பா....பாத்தீங்களோ....காக்கா !///இந்தா,சண்டை புடிக்காதயுங்கோ!ரெண்டு பேரையும் முட்டிக்கால்(முழங்கால்)போட வச்சிடுவன் !!!!!!//ஹீ முழங்காலில் இருப்பதை விட கருக்குமட்டை அடிதான் வலி அதிகம் அதுவும் தலையில் யோகா ஐயா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹேமா said...

அப்பா....காக்காவை முட்டுக்கால் போட வையுங்கோ.வர வரக் குழப்படி கூடிப்போச்சு.எனக்கென்ன உங்களுக்குத்தான் தலைவிதி !

Anonymous said...

இந்தா,சண்டை புடிக்காதயுங்கோ!ரெண்டு பேரையும் முட்டிக்கால்(முழங்கால்)போட வச்சிடுவன் !!!!!!/////////

உங்கட செல்ல மகளின் காதில் படுரமாரி சொல்லுங்க மாமா .....

எப்போ பார்த்தாலும் சின்ன குழந்தமாரி பாருங்கோ அப்பா பாருங்கோ அப்பா எண்டே சொல்லவேண்டியது

தனிமரம் said...

மாமாஆஆ மாமாஆ உண்மையாத்தான் சொல்லுரின்களா ...என்னலே நம்பவே முடியலை கணக்குப் பாடத்திலா வரும் கூட்டல்............நான் எதோ வீடு கூட்டுறது பேருக்குறது என்றல்லோ நினைத்து விட்டிணன் ...கிட்னி கொஞ்சம் டல் அஆது ..///அது....... கிட்னி டல் ஆனால் எல்லாமே பிரச்சினை தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!// ஐயோ நான் நினைத்தேன் இட்லிக்கு சட்னி பிழைத்து விட்டுது என்று என்றாளும் கலை நல்லா கூட்டு வைக்கும் சாப்பிட என்று எனக்கு நம்பிக்கை இருக்கு!

30 April 2012 12:52

தனிமரம் said...

அப்பா....காக்காவை முட்டுக்கால் போட வையுங்கோ.வர வரக் குழப்படி கூடிப்போச்சு.எனக்கென்ன உங்களுக்குத்தான் தலைவிதி !// உண்மைதான் தலைவிதி மட்டுமா !!!!ம்ம்ம்ம்

30 April 2012 12:54

Anonymous said...

சரி கடமை அழைக்கிறது...ஹேமா கடந்த ஆறு மணி நேரமா கும்மி...தொடருங்க...
இரவு வணக்கங்கள் நேசரே...கருவாச்சி பிரகு பார்க்களாம்...வர்றேன் யோகா அய்யா..

Anonymous said...

அப்பா....காக்காவை முட்டுக்கால் போட வையுங்கோ.வர வரக் குழப்படி கூடிப்போச்சு.எனக்கென்ன உங்களுக்குத்தான் தலைவிதி !/////////


மாமா சொன்னால் இப்போவே முட்டிக்கால் போட்டு விட்டுடுவேன் ..ஆனால் என்ர முட்டி தேய்ந்தால் கடைசிக் காலத்தில் மாமாவையும் மாமா மகனையும் யாரு பார்ப்பாங்க ....பாவமொல்லோ அவங்கல்லாம் ...


சரி கவிதாயினி எங்க நீங்க மூட்டி போடுங்கப் பார்க்கலாம் .....

ஹேமா said...

போய்ட்டு வாங்கோ ரெவரி.இனி அடி விழேக்க ஒரு கை குடுங்க.குட் நைட் !

Yoga.S.FR said...

கலை said...

இந்தா,சண்டை புடிக்காதயுங்கோ!ரெண்டு பேரையும் முட்டிக்கால்(முழங்கால்)போட வச்சிடுவன் !!!!!!/////////

உங்கட செல்ல மகளின் காதில் படுரமாரி சொல்லுங்க மாமா .....

எப்போ பார்த்தாலும் சின்ன குழந்தமாரி பாருங்கோ அப்பா பாருங்கோ அப்பா எண்டே சொல்லவேண்டியது.////ஹி!ஹி!ஹி!!!அது வந்து.........!சரி,உள்ளதைச் சொல்லவா?அப்பாக்களுக்கு பிள்ளைகள் எப்போதுமே குழந்தைகள் தான்!மகளோ,மருமகளோ,மகனோ,மருமகனோ குழந்தைகள் தான்!ஆனால் ............!

Anonymous said...

ஐயோ நான் நினைத்தேன் இட்லிக்கு சட்னி பிழைத்து விட்டுது என்று என்றாளும் கலை நல்லா கூட்டு வைக்கும் சாப்பிட என்று எனக்கு நம்பிக்கை இருக்கு!////////////

கண்டிப்பாய் ரீரீ அண்ணாக்கு வரும் மச்சான் நல்லா கூட்டு வைக்கும் சாப்பிட என்று எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு!

Anonymous said...

ஓகே ரே ரீ அண்ணா டாட்டா டாட்டா

தனிமரம் said...

இன்றல்ல எத்தனை ஆண்டுகள் கழித்தும் உணர்வு...உண்மை கலந்த உங்கள் தொடர் போன்ற படைப்புகள் நிலைத்து அப்படியே இருக்கும்...//தொடர் முடித்து விட்டு போடுகின்ரேன் ரெவெரி அண்ணா! விரும்பியோர் இலங்கை. மலையகம்,ஈழம் புரிந்துகொள்ளட்டும் இனவாதம் தாண்டி!

ஹேமா said...

அப்பா....பாருங்கோ எவ்வளவு தைரியம்.மச்சாள் எண்டில்லை.முட்டுக்கால் போடட்டாம் !

Anonymous said...

ஆனால் ............!/////////


சொல்லுங்க மாமா என்ன ஆனால் .......


அப்பாக்களுக்கு மகள் எண்டால் ரொம்ப பிடிக்கும் ....சரியா மாமா ,,,,,,,செல்ல மகள் விட்டுக் கொடுக்கதிங்கோ ...


மருமகள் தான் கடை வரை வருபவலாம் ....

Yoga.S.FR said...

சென்று,வென்று வாருங்கள் ரெவரி!மீண்டும் சிந்திப்போம்.நானும் வடை,ச்சீ...விடை பெறப் போகிறேன்!நாளை,தொழிலாளர் தினம்.ஒடுக்கப்பட்டவர்கள் தினம்.ஊர்வலம் போக வேண்டும்.அனைவருக்கும் இரவுப் பொழுது நன்றாக அமையட்டும்!நல்லிரவு!!!!!

தனிமரம் said...

சரி கடமை அழைக்கிறது...ஹேமா கடந்த ஆறு மணி நேரமா கும்மி...தொடருங்க...
இரவு வணக்கங்கள் நேசரே...கருவாச்சி பிரகு பார்க்களாம்...வர்றேன் யோகா அய்யா..

30 April 2012 12:57 //நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹாஸ்தாலா விஸ்தாலா.அடியோஸ்§

Yoga.S.FR said...

கலை said...

ஆனால் ............!/////////


சொல்லுங்க மாமா என்ன ஆனால் .......///புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல வந்தேன்!

தனிமரம் said...

கண்டிப்பாய் ரீரீ அண்ணாக்கு வரும் மச்சான் நல்லா கூட்டு வைக்கும் சாப்பிட என்று எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு!// ஈஈ ஹீ என் வீட்டுக்காரியும் இப்படிதான் அடிக்கடி சொல்லி தப்பிக்கின்றாள்§ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹேமா said...

சரி....இரண்டு நாளா கணணியும் நானும் நீங்களுமாய் சந்தோஷமாய்ப் போச்சு.இனி அடுத்த பதிவுகளில சந்திப்பம்.பின்னேர வேலைதான்.என்றாலும் ஒருதரம் வந்திட்டுத்தான் போவேன்.அப்பா,நேசன் கருவாச்சியம்மா அன்பு இரவு வணக்கம்.கலைக்குட்டிக்கு அன்பு முத்தங்களும் !

Anonymous said...

ஓகே மாமாவும் கிளம்புறதுக்கு ஆரம்பித்து விட்டாங்க..நானும் கிளம்புறேன்

நாளை எனக்கு லீவ் தான் ......
நல்லத் தூங்குவேன் .........

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹேமா அக்காவோடு பேசியது ரொம்ப சந்தோசம் ............


அக்கா டாட்டா
மாமா டாட்டா
ரீ ரீ அண்ணா டாட்டா
ரே ரீ அன்னைக்கும் டாட்டா

தனிமரம் said...

சென்று,வென்று வாருங்கள் ரெவரி!மீண்டும் சிந்திப்போம்.நானும் வடை,ச்சீ...விடை பெறப் போகிறேன்!நாளை,தொழிலாளர் தினம்.ஒடுக்கப்பட்டவர்கள் தினம்.ஊர்வலம் போக வேண்டும்.அனைவருக்கும் இரவுப் பொழுது நன்றாக அமையட்டும்!நல்லிரவு!!!!!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்.நாளை சந்திப்போம்!

30 April 2012 13:03

தனிமரம் said...

சரி....இரண்டு நாளா கணணியும் நானும் நீங்களுமாய் சந்தோஷமாய்ப் போச்சு.இனி அடுத்த பதிவுகளில சந்திப்பம்.பின்னேர வேலைதான்.என்றாலும் ஒருதரம் வந்திட்டுத்தான் போவேன்.அப்பா,நேசன் கருவாச்சியம்மா அன்பு இரவு வணக்கம்.கலைக்குட்டிக்கு அன்பு முத்தங்களும் !//நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் முடியும்போது சந்திப்போம்! இனிய இரவு வணக்கம்!

தனிமரம் said...

ஓகே மாமாவும் கிளம்புறதுக்கு ஆரம்பித்து விட்டாங்க..நானும் கிளம்புறேன்

நாளை எனக்கு லீவ் தான் ......
நல்லத் தூங்குவேன் .........

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹேமா அக்காவோடு பேசியது ரொம்ப சந்தோசம் ............


அக்கா டாட்டா
மாமா டாட்டா
ரீ ரீ அண்ணா டாட்டா
ரே ரீ அன்னைக்கும் டாட்டா

30 April 2012 13:07 //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம் !இனிய இரவாக அமையட்டும் புலரும் பொழுது நல்லாதாக அமைய சூரிய தேவனை வேண்டி விடைபெறுகிரேன்!

Yoga.S.FR said...

கலை said...

மாமா அந்த போட்டவ மறக்கவே மாட்டீங்களா ..........ஏன் மாமா ஏன் இப்புடி .........../////என் ஆயுள் இருக்கும் வரை அந்த உருவம் மறையாது!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!

30 April 2012 23:48 //காலை வணக்கம் யோகா ஐயா! இன்றைய நாள் நல்ல ஓய்வு

Yoga.S.FR said...

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!
//காலை வணக்கம் யோகா ஐயா! இன்றைய நாள் நல்ல ஓய்வு!///வாங்களே,அப்படியே பஸ்ரில்(BASTILLE) பக்கம்?

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!
//காலை வணக்கம் யோகா ஐயா! இன்றைய நாள் நல்ல ஓய்வு!///வாங்களே,அப்படியே பஸ்ரில்(BASTILLE) பக்கம்? //வாரத்தில் ஆறுநாள் அங்கே தான் வேலை செய்கின்றேன் இன்று விடுமுறை அந்தநாளும்  அங்கேயா ?? இன்னொரு நாள் பார்ப்போம் ஐயா மன்னிக்கவேண்டும் கொஞ்சம் ஓய்வு தேவை மருமகன்களுடன் இருப்பதே இன்று தான்!இல்லையேல் அவர்களும் பள்ளிக்கூடம் ,படிப்பு என பிசி!

துஷ்யந்தன் said...

நீண்ட இடைவெளிக்குப்பின் வந்து இருக்கேன்.... நேசன் அண்ணாச்சி உங்க ஸ்டையிலில் ஒரு பால் கோப்பி கிடைக்குமா?? அச்சச்சோ நான் பால் குடிக்கிறது இல்ல எனக்கு வெறும் கோப்பியே போதும்.. ஆனா சூடா வேணும் :)))

அட பாடல் நல்லா இருக்கேன்..... நான் இப்போதுதான் கேக்குறேன்..... அட்டகாசமாய் இருக்கு.....

நாங்கள் எல்லாம் இந்திய சினிமாவையே சுத்திக்கொண்டு இருக்கோம்..... நம்மவரை கவனிப்பதே இல்லை .... உங்கள் போன்ற ஒரு இருவரே கவனிக்கிறார்கள் எல்லோரும் உங்களைப்போல் மாற வேண்டும் நம்மவரையும் கவனிக்க வேணும் :(

பகிர்வுக்கு தேங்க்ஸ் நேசன் அண்ணாச்சி :)

Anonymous said...

இரவு வணக்கம் அண்ணா ,அக்கா ,மாமா

மாமாவை இன்னும் காணலையே

தனிமரம் said...

நீண்ட இடைவெளிக்குப்பின் வந்து இருக்கேன்.... நேசன் அண்ணாச்சி உங்க ஸ்டையிலில் ஒரு பால் கோப்பி கிடைக்குமா?? அச்சச்சோ நான் பால் குடிக்கிறது இல்ல எனக்கு வெறும் கோப்பியே போதும்.. ஆனா சூடா வேணும் :)))

அட பாடல் நல்லா இருக்கேன்..... நான் இப்போதுதான் கேக்குறேன்..... அட்டகாசமாய் இருக்கு.....

நாங்கள் எல்லாம் இந்திய சினிமாவையே சுத்திக்கொண்டு இருக்கோம்..... நம்மவரை கவனிப்பதே இல்லை .... உங்கள் போன்ற ஒரு இருவரே கவனிக்கிறார்கள் எல்லோரும் உங்களைப்போல் மாற வேண்டும் நம்மவரையும் கவனிக்க வேணும் :(

பகிர்வுக்கு தேங்க்ஸ் நேசன் அண்ணாச்சி :)/// வாங்க துசித்தம்பி பார்த்து நீண்ண்ண்ண்ட நாள் தனிமரம் !!!ம்ம்ம் என்ன் செய்வ்து முற்றது மல்லிகை வாசம் சில ஊடக மருத்துவர்கள் மூலம் மூக்கே இல்லாமல் இருக்கவேண்டி அன்னக்காவடி தூக்கிக் கொண்டு!ம்ம்ம் நன்றி துசி வருகைக்கும் கருதுரைக்கும்..

புலவர் சா இராமாநுசம் said...

இனிய பாடல் கேட்டு சுவைத்தேன்! சா இராமாநுசம்

♔ம.தி.சுதா♔ said...

அருமையானதொரு ரசனைப் பகிர்வு நெசண்ணா...

♔ம.தி.சுதா♔ said...

எப்போதும் வானொலிகளுக்கு இருக்கும் தனி மதிப்பு குறையப்போவதில்லை...