12 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-45

புதுவருடங்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் தரும்  இனியையான ,சுகமான ,குதுகலம். பலருக்கு தொடர்ந்து நிலைப்பதில்லை .தேடிவைத்த செல்வம் போல .

ஆனால் நினைவுகள் மட்டும் அழியாமல் நெஞ்சுருக்கும் வரை நிலைத்திருக்கும் என்றால்.

 அனோமாவோடு  கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.?

 அதிகாலையில் ஆற்றில் குளித்துவிட்டு சுபநேரம் பார்த்து கடை திறந்து நாள் வியாபாரம் செய்தார் செல்லன் மாமா.

புதுவருடம் என்றால் பலர் வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிச் செல்வார்கள்.

 புகையிலை விலை ஏற்றம் அதனை வாங்க முடியாத ஏழைமக்களுக்கு புகையிலையை துண்டு துண்டாக வெட்டி துண்டுப்புகையிலை ஒவ்வொரும் 1 ரூபாயில் இருந்து 5 ரூபாய்  வரை விற்ற காலத்தில்  கூட புதுவருடம்  சிறப்பாக கொண்டாடினவன் ராகுல் .

செல்லன் மாமா புது உடை வாங்கிக்கொடுத்தார் ,

தங்கமணி மாமா தனியாக உடுப்பும் அன்பளிப்பாக காசும் கொடுத்தார் .

.புத்தாண்டு நேரம் மூத்தவர்களுக்கு வெற்றிலை கொடுத்து ஆசிர்வாதம் வேண்டுவது சகோதர மொழி பாரம் பரியம்.

 செல்வம் மாமி தென்னக்கோன் தாத்தாவிடம்(மாமியின்  அப்பா )ஆசீர் வாதம் வாங்கிய பின்.

 தங்கமணி மாமாவீட்டில் தங்கி இருந்த அனோமா தான் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணியாமல் இருந்தாள் இனிக் கதைக்க மாட்டேன் .

எப்போதும் நீ உடுத்தும் சாரத்தை விட இந்த உடுப்பு போட்டுப்பாரு என்று அவள் வாங்கிக் கொடுத்த நீலக்கலர் டெனிம் டவுசர். போட்டு .

தென்னக்கோன் தாத்தாவிடம் இருவரும் சேர்ந்து ஆசி வேண்டிய போது இருந்த சந்தோஸம் எழுத்தில்


வடிக்கமுடியாத பரவசம்.

 பெரியவர்கள் எப்போதும்! அன்பான வார்த்தையில் சொல்வார்கள் எப்போதும் சந்தோஸமாக இப்படியே சேர்ந்து இருக்க வேண்டும் என்று.

 ராகுலும் தான் ஆசைப்பட்டான்! பங்கஜம் பாட்டியிடம் இருவருமாக சேர்ந்து காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும் ஜோடியாக என்று!

இந்தக்காலில் விழும் கலாச்சாரம் அரசியலில் தரம் தாழ்ந்து போய் இருக்கு இன்று.

 ஆனால் மூத்தவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது என்பது  அவர்களின்  பாதத்தில் இருந்து தான் அடுத்த பாதைகள் எது என்பதை தேடல்மூலம் தெரிந்து கொள்ள முடியும்

.அடுத்து வந்த நாட்களில் அனோமாவும் ,துசாரியும் செல்வம் மாமியும் பதுளையில் இருந்து. தங்கமணி மாமாவின் வானில்  கொழும்பு போய் ஊரைவிட்டும் இந்த நாட்டைவிட்டும் புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்!

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதைபோல அனோமாவும்  ராகுலின் எண்ணங்களில் இருந்து மறைந்து போய் விட்டாள்

! பருவம் கடந்து பங்கஜம் பாட்டியின் பேர்த்தி என்பதைக்கடந்து.


அந்தக் குடும்பத்தில் மீண்டும் உறவைப் புதுப்பிக்க நினைக்கவில்லை.

 மீண்டும் ராகுல் அவளை இப்படி ஒரு நிலையில் பார்க்கும் நாள் வரும் என்று அன்று அவன் நினைக்க வில்லை!

அவன் மனதில் அவள் ஒரு உறவுப்பாலமாக வருவாள்  என்று நினைதிருந்தான் .தீர்வு த்திட்டம் கிடைக்கும் என எண்ணும் தமிழர் போல ஆனால்.

அவனும் புலம் பெயர்ந்து வந்த போது விதி எழுதும் கதைகள் பல கனவாகிப் போகின்றது .
பாசம்!
--------
அதோ பார் வட்ட நிலவு
இதோ பார் என் குட்டி நிலவு
நீயும் சாப்பிடும் போது
அவளுக்கும் ஊட்டிவிடு.

அந்தநிலவு அன்று!
எங்கே அந்த நிலா என் வாழ்நிலா
வாழ்க்கையுலா பால்நிலா பார்க்கவேனும்
நொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா
அம்மா சொல்லிய பெட்டைநிலா!
அருகில் இருந்து ஊட்டிய மாமியின்
கரங்களில் பாசத்துடன் ஊட்டுகின்றாள்
இதோ பார் மகளின்பேரன் அந்த நிலவும்
இந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள்
பாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)!!
இருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ!
அதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.

 ஏன் தெரியுமா ? தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே! சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று! அதை உணர்ந்தவர்களுக்கு!

 தொடரும்......
.
//குறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று  புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்!

///இந்தக் கவிதை விருது கொடுத்தது தனிமரத்திற்கு ஆனால் ராகுலுக்கு  நான் கொடுத்து வருடங்கள் சில அப்போது  அவன் உருகிய சந்தோஸத்தைவிட விருது மகிழ்ச்சியாக இருக்கு  நேசனுக்கு அதுதான் மீண்டும் சேர்த்துவிட்டேன் .

48 comments :

Anonymous said...

மதிய வணக்கம் அண்ணா ,மாமா ,அக்கா

இந்த நேரத்தில் அண்ணா பதிவா ....

படித்து போட்டு வாறன் அண்ணா

Anonymous said...

உண்மை தான் ....மூத்தவர்கலின் காலில் விழுவது குறைந்து போயி இருக்கத்தான் செய்கிறது ...

Anonymous said...

ராகுல் அண்ணா க்காகத்தான் சந்தியில் எழுதிய கவிதயை அண்ணா ...

Yoga.S. said...

பகல் வணக்கம்,நேசன்&கலை!நலமா?எங்கே கலை உங்கள் "கவிதாயினி","அம்முக்குட்டி" அக்கா?இன்று லீவு என்று சொன்னாவே?

Yoga.S. said...

குறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்!///ஆரம்பிச்சுட்டாண்டா!!!!இந்தக் கொசுத்தொல்ல எப்ப தொடங்கும்?ஹ!ஹ!ஹா!!!!!நான் நினைக்கிறன்,"முகம் தொலைச்சது" அம்பதோட முடியும் எண்டு!!!!

தனிமரம் said...

மதிய வணக்கம் கலை  அடுப்படியில் இருந்து கொண்டு குரல் கேட்டு வந்தேன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.

தனிமரம் said...

இந்த நேரத்தில் அண்ணா பதிவா ....
//வேலைக்கு இடையிலும் சில நிமிடம் ஒதுக்கித்தான் பதிவு  சனியில் போடுகின்றேன் அது கலை வந்து திரும்பிப் போகக்கூடாது என்று!

தனிமரம் said...

உண்மை தான் ....மூத்தவர்கலின் காலில் விழுவது குறைந்து போயி இருக்கத்தான் செய்கிறது ... 
//இப்போது காலில்விழுவதும் அதுவும் பெஸன் ஆகிப்போச்சு சில அரசியல் வாதிகளுக்கு!

Yoga.S. said...

மகள்(ஹேமா)கவிதை போட்டிருக்கிறா!

தனிமரம் said...

ராகுல் அண்ணா க்காகத்தான் சந்தியில் எழுதிய கவிதயை அண்ணா ... 
//ம்ம் அவனுக்கு எழுதிக்கொடுத்தேன் பல கிறுக்கல்கள் ஆனால் பாவிப்பயல் இப்போது வேற நாட்டில் இருக்கின்றான் விருது வாங்கியதைப் பார்த்துக்கொண்டு !

தனிமரம் said...

பகல் வணக்கம் யோகா ஐயா! கவிதாயினி கவிதை போடுவா என்று பார்த்தேன் இதுவரை ஒன்றையும் கானவில்லை இன்னும் சில நேரத்தில் சமையல் வேலை அதிகமாகி விடும் எனக்கு பார்க்கலாம் நள்ளிரவு வலையை எட்டி!

Yoga.S. said...

பாட்டு கேட்க மட்டும் தான் முடியும்,டாஸ்மாக் கேசை எல்லாம் பார்க்க முடியுமா?ஹ!ஹ!ஹா!!!!

ஹேமா said...

அட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.

அப்பா விரதமோ இண்டைக்கும்.கருவாச்சிக்குட்டி வாடி செல்லம்.

நேசன் உங்களுக்கும்தான்.துஷிக்குட்டி வரமாட்டார்.நாளைக்கு இருப்பாராக்கும் !

ஹேமா said...

//மூத்தவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது என்பது அவர்களின் பாதத்தில் இருந்து தான் அடுத்த பாதைகள் எது என்பதை தேடல்மூலம் தெரிந்து கொள்ள முடியும்...//

அசத்தல் நேசன்.இப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள் பெரியவர்கள் காலில் விழ.ம்ம்ம்...காலம்தான் !

ஹேமா said...

ஏன் தெரியுமா ? தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே! சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று! அதை உணர்ந்தவர்களுக்கு!//

எனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் !

ஹேமா said...

கவிதை ஏற்கனவே ரசிச்சதுதான்.ராகுலுக்கும் நல்ல சந்தோஷமாயிருந்திருக்கும் !

பாட்டு பெரிசா ரசிக்கேல்ல நேசன் !

காக்காஆஆஆஆஆஆ எங்க காணேல்ல.அப்பா குட்டி நித்திரைக்குப் போய்ட்டார்.நானும் பிறகு வாறன் காக்காவைக் கொஞ்சம் கொஞ்சவேணும் !

Anonymous said...

அக்கா ஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ..........

கொஞ்சம் நண்பிகளுடன் தொலைபேசியில் பேசிட்டு இருந்திணன் ..

இண்டைக்கு நிறைய கதைக்கலாம் அக்கா ஜாலி யா .....

Anonymous said...

எனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் !/////////////

அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நானும் கருப்புதான் ...ஏன் அக்கா அப்புடி சொனீங்க ...என்னை கூட நிறைய ஆளுகள் போட்டோ பார்த்து கருப்பு எண்டு சொல்லி ஒதுக்கி விடுவினம் ...கஷ்டமா இருக்கும் ////சரி விடுங்கள் ....இப்போம் சொல்லிடீங்கல்லோ ....வீட்டில் சொல்லி முடித்து போடலாம் ..
மாமா இஞ்ச வாங்கோ ...அக்கா சொன்னதைப் பாருங்கோ

தனிமரம் said...

குறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்!///ஆரம்பிச்சுட்டாண்டா!!!!இந்தக் கொசுத்தொல்ல எப்ப தொடங்கும்?ஹ!ஹ!ஹா!!!..ஏன் யோகா ஐயா வாசிக்க மாட்டீங்களோ இன்னொரு நண்பனையும் உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தால் இப்படி சொன்னால் உருகும் இதயம் என்ன ஆகும்  தாங்குமோ இது தான் தகுமோ???கொசுக்கடிக்கத் தான் செய்யும் அவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் எழுதி முடிக்கின்றேன் என்று அதனால் தான் ஓடாமல் இங்கே உலாத்துகின்றேன்.ஹீ

!! 

தனிமரம் said...

ஹ!ஹ!ஹா!!!!!நான் நினைக்கிறன்,"முகம் தொலைச்சது" அம்பதோட முடியும் எண்டு!!!! ஏன் இந்த கொலவெறி புரளி யோகா ஐயா ராகுலின் முக்கிய விடயத்தை இன்னும் சொல்ல வில்லை முக்கிய இன்னொரு கொசுத்தொல்லை வரும் வரை வரும் !ஹீ ஹீ 

தனிமரம் said...

அக்காளும் தங்கையும் பேசுங்கோ நான் சமையல் அறைக்குள் போகின்றேன் கோப்பி நேரம் முடிந்து விட்டது!ஹீ:))))

Anonymous said...

இனிய இரவு வணக்கம் அண்ணா ..

அக்கா வரமாடீன்களா


மாமா இன்னும் உங்களைக் காணள்ள என்னாச்சி

தனிமரம் said...

இனிய இரவு வணக்கம் கலை நாளை இரவு சந்திப்போம் இன்று வேலை முடிய பின் இரவு ஆகிவிடும் .குட் நைட் இளவரசியாரே.

Yoga.S. said...

இரவு வணக்கம்,எல்லோருக்கும்!யாராச்சும் இருக்கீங்களா?கலை,நான் தான் சொல்லியிருக்கிறேனே,கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலருன்னு?அப்புறம்,அக்கா சொன்னத கேட்டேன்.பாப்போம் எங்க வரைக்கும் போகுதுன்னு!

Yoga.S. said...

அடடா!மிஸ் பண்ணிட்டனே!நல்லிரவு வணக்கம் நேசன்,நாளை சந்திப்போம்.

Yoga.S. said...

கொசு கடிக்காமல் கொஞ்சவா செய்யும்?ஹ!ஹ!ஹா!!!!படிக்க மாட்டேன் (பள்ளிக்கூடப் படிப்பு இல்ல)என்று சொல்லவேயில்லையே?

Anonymous said...

இனிய இரவு வணக்கம் கலை நாளை இரவு சந்திப்போம் இன்று வேலை முடிய பின் இரவு ஆகிவிடும் .குட் நைட் இளவரசியாரே.///சரிங்க அண்ணா நாளை சந்திப்பம் ...


குட் நைட் அண்ணா ...


மாமா நானும் கிளம்புறேன் நாளை சந்திப்பம் ...டாட்டா மாமா

அக்கா டாட்டா

Yoga.S. said...

ஹேமா said...

அட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.

அப்பா விரதமோ இண்டைக்கும்.கருவாச்சிக்குட்டி வாடி செல்லம்.///நான் விரதமில்லை,ஆனால் மரக்கறி.அதனாலென்ன நாளைக்குச் சாப்பிட்டால் போகிறது!பழைய மீன் குழம்பும் ஒடியல் மாப் புட்டும் நன்றாக இருக்கும்,பொரியலும் இருந்து விட்டால்............... ,தூக்கும்!!!!!ஹ!ஹ!ஹா!!!!

Anonymous said...

மாமா தூக்கமே வரல ..

அண்ணா வர மாட்டாங்கள் ..

அக்கா வரேன் எண்டு சொல்லி போனவங்க திரும்படி வரவே இல்லையே மாமா

ஹேமா said...

காக்காஆஆஆஆஆ வந்திட்டேன்.அப்பா இருக்கிறாரோ.நேசன் கோப்பி தாங்கோ !

ஹேமா said...

இப்ப கருப்பு நல்லாவே பிடிக்கும்.குழந்தைநிலாவின்ர கலரை மாத்துங்கோ எண்டு எத்தனை பேர் அடம் பிடிச்சுக் கொடி தூக்கினவை.நான் மாத்தமாட்டேனே.ஏன் அப்ப அப்பிடிச் சொன்னன் எண்டே தெரியேல்ல.ஆனா கருப்பு அத்தான் என்ர பெயர் உள்ள ஒருத்தியே வேணுமெண்டு தேடிக்கொண்டு என்ர நினைவோடயே போய்ட்டார்.அந்த வலி அப்ப விளங்கேல்ல.இப்ப டூ லேட்.கருப்புக் காக்காவையும் எனக்கு நிறையப் பிடிக்கும் !

தனிமரம் said...

அட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.

அப்பா விரதமோ இண்டைக்கும்.கருவாச்சிக்குட்டி வாடி செல்லம். 

நேசன் உங்களுக்கும்தான்.துஷிக்குட்டி வரமாட்டார்.நாளைக்கு இருப்பாராக்கும் ! 
// நான் மதியம் வேலைக்குப் போகனும் அதுதான் விரைந்து ஓடவிடுகின்றேன் ராகுலை! ஹேமா இன்று சனிக்கிழமை கோயில் போவேன் ஐய்யனிடம் அதனால் நான் சனி என்றுமே சைவம் தான் நாளை சாப்பிடுவேன் மீன் குழம்பு உறைப்பாக.

தனிமரம் said...

அசத்தல் நேசன்.இப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள் பெரியவர்கள் காலில் விழ.ம்ம்ம்...காலம்தான் ! 
//நான் எப்போதும் அதை மாற்றியது இல்லை பெரியவர்கள் குரு அல்லவா இன்று வரை காலில் விழுந்து ஆசிர் வாதம் வேண்டுகின்றேன்.குரு வழிபாடு என்னை செதுக்குகின்றது பணிவில்!

தனிமரம் said...

எனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் ! 
//ம்ம்ம் காலம் புரிந்துணர்வைக் கொடுக்குது நல்ல காலம் என் மச்சாள் அப்படிச் சொல்லவில்லை ஹீ மனைவி இனி அப்படிச் சொல்லவும் மாட்டாள் !

தனிமரம் said...

பாட்டு பெரிசா ரசிக்கேல்ல நேசன் !
//எனக்கு இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும் ராஜாவின் குரலுக்கும் ஜானகி குரல் என்று ஒரு புறம் அந்த நேரத்தில் விஜய்காந்து தான் என் ஹீரோ!

தனிமரம் said...

அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நானும் கருப்புதான் ...ஏன் அக்கா அப்புடி சொனீங்க ...என்னை கூட நிறைய ஆளுகள் போட்டோ பார்த்து கருப்பு எண்டு சொல்லி ஒதுக்கி விடுவினம் ...கஷ்டமா இருக்கும் ////சரி விடுங்கள் ....இப்போம் சொல்லிடீங்கல்லோ ....வீட்டில் சொல்லி முடித்து போடலாம் ..
மாமா இஞ்ச வாங்கோ ...அக்கா சொன்னதைப் பாருங்கோ // கறுப்பு என்றாலும் கஸ்தூரி என்பார்கள் ஊரில் கலை.

athira said...

//அனோமாவோடு கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

athira said...

அழகான கவிதை எல்லாம் சொல்லிக் கலக்குறீங்க.... நான் கோப்பியைச் சொன்னேன்:))

athira said...

//அதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.

ஏன் தெரியுமா ? தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே! ///

ஹா..ஹா..ஹா....

தனிமரம் said...

காக்காஆஆஆஆஆ வந்திட்டேன்.அப்பா இருக்கிறாரோ.நேசன் கோப்பி தாங்கோ ! 
//யோகா ஐயா இப்ப நல்லாக உறங்கி இருக்கும் நேரம். கோப்பி குடித்தாள் நித்திரை வராது எனக்கு அதுதானே புத்துணர்ச்சி கொடுக்குது வேலையில்.:))

தனிமரம் said...

இப்ப கருப்பு நல்லாவே பிடிக்கும்.குழந்தைநிலாவின்ர கலரை மாத்துங்கோ எண்டு எத்தனை பேர் அடம் பிடிச்சுக் கொடி தூக்கினவை.நான் மாத்தமாட்டேனே.ஏன் அப்ப அப்பிடிச் சொன்னன் எண்டே தெரியேல்ல.ஆனா கருப்பு அத்தான் என்ர பெயர் உள்ள ஒருத்தியே வேணுமெண்டு தேடிக்கொண்டு என்ர நினைவோடயே போய்ட்டார்.அந்த வலி அப்ப விளங்கேல்ல.இப்ப டூ லேட்.கருப்புக் காக்காவையும் எனக்கு நிறையப் பிடிக்கும் ! //ஏன் கறுப்பு ஆடு பிடிக்காதோ ஹேமா :))) 

தனிமரம் said...

//அனோமாவோடு கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) 
//அதிரா அது ராகுல் கொண்டாடியது நான் இல்லை :)))))

தனிமரம் said...

அழகான கவிதை எல்லாம் சொல்லிக் கலக்குறீங்க.... நான் கோப்பியைச் சொன்னேன்:)) 
//பால்க்கோப்பியை விற்கத்தானே வேண்டும் அதுதான் கலக்குகின்றேன் :))))

தனிமரம் said...

//அதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.

ஏன் தெரியுமா ? தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே! ///

ஹா..ஹா..ஹா.... / அதிரா தப்பி விட்டா போல நான் மட்டிவிட்டேன் மச்சாளிடம்! நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

Seeni said...

uravukal ennaikkum
marakka mudiyaathathu!

kavithai arumaiyaaka ullathu!

விமலன் said...

அதிகாகையில் ஆற்றில் குளித்து விட்டு கடை திறாந்தவரின் வியாபாரம் குறித்த கடையின் ஆரம்பம் மிக நன்று.அப்படியே கதையை நூற்றூக்கொண்டு போயிருக்கலாம்தானே?நல்லபதிவு.வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

காலில் விழுந்து ஆசிபெற இன்றைக்கு வெட்கப்படுகிறார்களென்பது உண்மைதான். நேசனின் கவிதை இங்க படிக்கையிலும் அழகாவே இருக்கு.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!