10 May 2012

கடல் கடந்தவன் கண்ணீர் அஞ்சலி!

இந்தப் பதிவு என்னை எழுத்து உலகில் கொண்டு வந்த ஆசிரியைக்கு சமர்ப்பணம் யாரும் திரட்டியில் இணைக்க வேண்டாம்!

//
என் குருவே என்ன சொல்லுவேன்!
ஏன் இந்த காலக்கூற்றுவன் இப்படி ஒரு
ஏக்கம் தந்தான்?
எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால்
நீங்கள் தானே என் எழுத்து உலகத்திற்கு
துரோணர்.!

எப்படி அந்த காலக்கூற்றுவன் கவர்ந்து சென்றான்?
முன்னம் முன்னூறு நாள் சுமந்து
மூத்தமகன் என்று சீராட்டிய சின்னக் குழந்தையை!

முகநூலில் சேதி கேட்டு முகம் புதைந்து அழுகின்றேன்!

எல்லாம் முடிந்த பின் வரும் தகவல் போல தான் எனக்கும் சொன்னார்கள் நேற்று இரவு!

அருமைமகன் போன துயரம் அதைப்பங்கு போட.
  எழுத்தை உங்கள் மூலம் வளர்த்தவன் அருகில் இல்லை.

வாடிப்போகாதீர்கள் என்று மட்டும் நீங்கள் சொன்ன வார்த்தையைத் தான் .
கடன் வாங்கி காற்றில் விடுகின்றேன்
 கடல் கடந்தவன் கண்ணீர் அஞ்சலியாக!

இத்தனை நாள் எங்கோ இருந்தவன்.
வெளியேறும் நேரத்தில் வேதனையை தந்தானே. கூற்றுவா ?
நீ கவர்ந்து சென்றது .ஒரு முத்துப்போல நான் பார்த்த சின்னக் குழந்தையை.

எப்போதும் ஆசிரியராக ,அக்காளாக ,ஒரு குடும்பத் தலைவியாக ,எனக்கு நீங்க செய்த உதவியை எப்படி மறப்பேன்!

மகனுக்கு இப்படி ஒரு வருத்தம் வந்த சேதிமட்டும் .ஏன் சொல்ல மறுத்தீர்கள் ?மலைபோல பல நண்பர்கள் தவிக்க
மாண்டு போன
 இந்தப் பாலகன் நிலமை எண்ணி எப்படி அழாமல் இருப்பது.

ஆறாம் வகுப்பில் அகதியாக வந்த போது !
வாடிப்போக வேண்டாம் வடிவாகப் படிக்கணும் என்றீர்கள்.

கம்பனும் ,வைரமுத்துவும் ,மேத்தாவும் ,ஜெயகாந்தனும், நூலகத்தில் என் பொறுப்பு .அந்தச் சாவிக்கொத்து என்னிடம் இருக்கு .
சங்கடப்பாடாமல் வந்து கேள் என்றீர்கள். இப்போது சங்கடப்படுகின்றேன் .

இறுதி ஊர்வலத்தில் கூட இருக்க முடியாத தேசத்திற்கு வந்துவிட்டேன்.  என்று எண்ணி!

இயன்றளவு என் சிறு உதவி
இறுதி நேரத்திலும் தேவைப்படாமல் போய் விட்டதே !
என்ன பாவம் செய்தேன் நான்?

நீங்கள் அழும் தருணத்திலும் தோள்கொடுக்க வில்லையே .
என் தோழில் தூக்குமூட்டை தூக்கிக் காட்டிய
என் சின்னத்தம்பி உங்கள் மகன்.

 எத்தனை போட்டிக்கும் பரிசுக்கும் என்னை .நீ எழுதணும் என்று தூண்டாமணி விளக்காக இருந்து தூண்டி விட்டீர்கள்.

இன்று அந்த விளக்கின் வீட்டு வெளிச்சம் இருண்டு கிடக்கு என்று சொன்னான் என் நண்பன்.
இயந்திர தேசத்திலும் இயங்க மறுக்குது உணர்வுகள்.

ஊருக்கு எல்லாம் கல்வி வெளிச்சம் காட்டிணீர்கள் .
உண்ணாமல் இருந்த போது இது உன் வீட்டைப்போல என்று ஊட்டிணீர்களே ஊணர்வோடு பாசத்தையும் சேர்த்து!

தம்பி நீ அண்ணாவோடு விளையாடு நான் இந்த கவிதையில் எழுத்துப்பிழை திருத்துகின்றேன் .
என்ற போது என் முகத்தில் மீசை கீறீயவன் மீசை வளர்ந்த பருவம் பார்க்காமல் பலதூரம் கடந்தேனே.

கடைசியாக எப்படி இருந்திருப்பான் ?என்பதைப் பார்க்காமல் இருந்தேனே!

ஏன் இனி வரமாட்டாய் ?
அன்று நடந்தது உன் பிழை இல்லை என்று எனக்குத் தெரியும் .

என்று எண்ணை நிமிர்ந்து பார்க்கச் சொன்னீர்கள் .
அப்போதும் அவணைத் தூக்கி வைத்திருந்தேன்.

இந்தக் காவடியை இறக்கி விடு .
குடும்பக் காவடியை தூக்க வேண்டும்.
 அன்னக்காவடி எதற்கு இந்த வயசில் என்று அழுத்திச் சொன்ன போதும் சிரித்துக் கொண்டிருந்தவன்  .
சின்னக்குழந்தை உடல் தீயில் போவதா ?

இரக்கமில்லாத இதயங்கள் நெஞ்சில் குத்திய போதும்.
 நிமிர்ந்து நிற்கச் சொன்னீர்களே மரமாக .
இரு என்று .
இன்று உங்களின் வார்த்தை தானே பலருக்கு என் முகம்சொல்வது.
மறக்கத்தான் முடியுமா ?அந்தப் பிஞ்சுமுகம்?.

 இனி மேல் வரமாட்டேன் இந்த ஊருக்கு என்ற போது .
நொந்து போன இதயம்
கடந்து வருவாய்  .
என் பிள்ளையைப் பார்க்க  .என்றீர்கள் .

இத்தனை வருடம் காத்து வைத்த வைராக்கியம்.
 அவன் உடலுக்கு கொள்ளியீட்டிய தந்தையை நினைத்து. அழுது வடிக்குது.

மீண்டும் வரமுடியாத தூரம் அவன் போய்விட்டான்
 மீண்டும் வரமுடியாத தேசம் வந்து விட்டேன் .
மன்னித்துவிடுங்கள் .

கடந்து வர ஆசையிருக்கு இன்று. ஆனால் !!
அந்த குழந்தை உருவம் மறைந்தபின்  நான் வந்து யாரோடு விளையாட?

வா கோப்பி குடி என்று சொல்லும் ஆசிரியை முகம் எப்படிப்பார்ப்பேன் ?

இந்த மகன் பிறந்போது தானே முதல் விருந்து வாங்கினாய் .என்று சொல்லும் போதெல்லாம் மகிழ்ந்த இதயம் அழுது வடிக்குது.

 ஆண்டா என் ஆசிரியை மகனை கவர்ந்து போனாயா?

இரக்கமில்லாத இந்த கொடிய நோய் இன்றுடோடு ஒழியட்டும்!

காலக்கூற்றுவனே கடைசியாக புற்று நோயில் போனவன் .
இந்தப் பாலகனாக  இருக்கட்டும் இனியும் அழ சக்தியிலை ஆண்டவா!

அந்த பாலகன் ஆத்மா சாந்தியடையட்டும்.

நீண்ட தூரம் வந்தாலும் என் நினைவுகள் உங்களுடன் .
நீங்கள் மீண்டும் துயரம் கடந்து வரவேண்டும்  ஆசிரியர் தொழிலுக்கு. அன்பு ரீச்சர்.

என்னைப்போல எங்கோயோ இருந்து ஓடிவருவான் உங்கள் மகன் போல இன்னொருதன் துயரத்தோடு தூர தேசத்தில் இருந்து முன்னால் மாணவன்!
.              தி.சிவநேசன்!

12 comments :

தனிமரம் said...

வருவோர் உணர்வை மட்டும்
பதிவு செய்யவும்
!நாளை வரும் இயல்பான பதிவு

Yoga.S. said...

உங்கள் துயரில் பங்கு கொள்ளும்..................யோகா.எஸ்.

ஹேமா said...

என் கண்ணீர அஞ்சலிகளும் நேசன் !

Anonymous said...

அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவன வேண்டுகிறேன்

Siva sankar said...

அவரின் ஆத்மா அமைதி அடைவும்
குடும்பத்தினர் சமாதனம் ஆகவும்
நானும் உங்களுடன் இறையை வேண்டுகிறேன்

காற்றில் எந்தன் கீதம் said...

மன்னியுங்கள் நேசன்.... அவர் உங்களுக்கும் ஆசிரியர் என்பதை மறந்து விட்டேன்... இல்லாவிடில் அப்பொழுதே சொல்லி இருப்பேன்....
குற்ற உணர்வுடன் உங்கள் சோகத்தை பகிர்கிறேன்....
மனோஜின் ஆன்ம சாந்தியடையட்டும்...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!இழப்புகள் எதிர்பாராதவை தான்.இன்றிருப்போர் நாளை இல்லை.அதிலும் மாதா,பிதா,குரு இழப்பு என்பது அளவிட முடியா சோகங்களைக் கொடுக்கும்.எம்மால் முடிந்ததெல்லாம் அந்த ஆன்மா நல்ல இடம் சென்று சேர வேண்டும் என்று படைத்தவனை வேண்டிக் கொள்வதாகவே இருந்தது,இருக்கிறது,இருக்கும்.நாமெல்லோரும் பிரார்த்திக்கிறோம்!

MANO நாஞ்சில் மனோ said...

ஆழ்ந்த அஞ்சலிகள்...

Anonymous said...

என் அஞ்சலிகளும்...

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!இரவு வணக்கம் ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார்&அதிரா மேம்!!!!

ஹேமா said...

நேசன் மனதை ஆறுதல் படுத்துங்கோ.வீட்டில் நிக்காம வேலைக்குப் போங்கோ.நிறைய மெல்லிய இசை கேளுங்கோ.பிடிச்ச ஆக்களோட நிறையக் கதையுங்கோ நேசன்.மௌனமாய் இருக்கவேண்டாம் !

Esther sabi said...

அவரின் ஆன்மா நித்திய வீட்டில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.