09 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-71

அவள் வீடுவரை சென்றது இல்லை ராகுல் ஆனால் விதி அவள் வீடுவரை போக வழி விட்டது! 


அதற்கு முன் நடந்தது
எழுத்து ஆர்வம் என்பது எல்லோருக்கும் வருவதில்லை. எத்தனைபேர் இந்தப் பள்ளிக்காலத்தில் எழுத்துப்பக்கம் பயணிப்பார்கள் .
சில்லரைகிடைக்காது சிந்தும் பேனாத்துளிகளுக்கு என்ற சிந்தனையில் தீண்ட மாட்டார்கள் சிலர். ஆனால் இப்படி எல்லாம் ஜோசித்து இருந்தால் !பாரதியும் ,கம்பனும் ,விபுலனந்தர் ,ஏன் வைரமுத்துவும் எஸ்.பொ.சி.பி.வேலுப்பிள்ளை என பேசப்படுவதன் காரணம் என்ன ? 


எழுத்துத் தானே !


 மீண்டும் ஒரு ஜோசினையின் பின் சொல்லுங்க . 


எழுத்துப்பிழை பார்க்க நான் விழித்திருக்கின்றேன்! .விருப்பத்துடன் நல்ல விடயம் என்றால் ! 


எழுதிய கொப்பியை கல்பனா மீண்டும் தந்த போது மனதில் ஒரு சலனம்!
 ஏன் போட்டியில் இறங்கக்கூடாது. அதுவும் ஜனாதிபதி தலைமை தாங்கும் பொன்விழா !.கொழும்பு போகும் சந்தர்ப்பம் கிடைக்கும் ,குயில்கள் வரும் வானொலி இருக்கும் இடத்தைப் பார்க்கலாம். பதுளைக்கு வரதாபல நூல்கள் வாங்கி வரலாம் . என கற்பனை விரிந்து சென்றது!
 விடையாக எழுத வெளிக்கிட்டான் ராகுல். 10000 வார்த்தைகள் 15 புஸ்காப் பேப்பரில் எழதியாச்சு


. வேற்றுமையில் ஒற்றுமை 'தலைப்பு. இலங்கையின் பொன்விழாவில் இந்தியா பற்றிய தலைப்பை யாரும் தொடமாட்டாங்க!


. ஒரே அரசியல் ,மதம் ,காதல் என்று தான் பலர் ஜோசிப்பார்கள் 


.கொஞ்சம் வித்தியாசமாக வேற கோணத்தில் ஜோசித்தால் நல்லா இருக்கும் .எழுதிவிட்டால் . சிந்தனையில் கல்பனா ஒரு சிற்பியே உன்னைச் செதுக்கின்றேன் வைரமுத்து கவிதை போல! 


இந்தப்பள்ளியில் யார் எழுதுகின்றார்கள் தெரியுமா ? என்று எழுதிய கேள்விக்கு பதில் வகுப்பில் விமலா ஆசிரியர் இல்லாத நேரத்தில் விரைந்து வந்திச்சு !


எப்போதும் சிலதை நேரில் சொல்லுவதைவிட, தோழிகளுக்குச் சொல்லும் போது வித்தியாசமாக சொன்னால் புரிய வேண்டியவர்களுக்கு புரியும் .
 வகுப்பாசிரியரும் அப்படித்தான் . வகுப்பில் பிழைவிட்டால் நேர தப்பு என்று சொல்லமாட்டா .
பொதுவாக சொல்லுவா யார் அதுக்கு பொருந்தம் என்று அவர்கள் உணரட்டும் என்று . சீலா அந்த ஆசிரியையின் விளக்கப்பாடு சரியில்லை என்று குமரன் சேரிடம் போய்விட்டால். 


இதுவரை இருந்த தடங்கள் இனி இல்லை என்ற நிலை ராகுலுக்கு நல்லதாகவே இருந்தது. 
"தொப்பியை வீசுவது தான் என் வேலை யாருக்கு அளவோ அவர்கள் புரிந்து கொண்டால் சரி ." என்பது எங்க விமலா டீச்சரின் பஞ்சு வசனம் .படிப்பிக்கும் காலத்தில் !


. இன்றும் அதே வார்த்தையை ராகுல் பின் நாட்களில் இதே ஆசிரியையிடம் அவனும் சொன்னபோது .அந்த ஆசிரியை சொன்னது. " நீ எப்போதும் என் மாணவர்களில் தங்கம் தான் !என் சொல் மீறாத ஒருத்தன்!பெருமையாக இருக்கு ராகுல் உன் அலைபேசியில் நீ அழைப்பில் வந்த போது என்று அந்த ஆசிரியரின் விருது போதும் வலிகளுக்கு மருந்தாகும் எப்போதும்.!வீட்டில் காத்திருப்போம் உன் வருகைக்காக என்ற அந்த டீச்சருக்குத் தெரியும் ராகுலின் நேர்மை குருவின் வார்த்தை தாண்டாத மாணவன் என்று "" 
ஆனால் குமரன் சேர் செய்யும் சதி இந்த மாணவர்களிடையே . அரசியலில் தொண்டர்களை மோதவிடும் செயல் போல! இருக்கும்.
 இப்படியான நிலையில் கல்பனா சொன்னால் . இந்த 1997 வருசத்தில் இருக்கும் எங்கள் அறிவுச்சோலைப் பூக்கள் எல்லாம் தூதறுவோ 360 வாரங்கள் தாண்டி வெற்றிநடைபோடும் சின்னத்திரையின் நிஜம் பற்றிப்பேசமாட்டாள்கள்.


 ஒன்ஸ்மோரில் சிம்ரம் செய்தது தப்பு என்று விஜய்க்கு வக்காலத்து வாங்கும் ரசனையில்லாத பூக்கள் ,குறிஞ்சித் தென்னவன் மருத்துவமனையில் இருக்கும் நிலைபுரியாது !


கிரிக்கட்டில் யார் வெல்லுவாங்க என்று பந்தயம் பிடிக்கும் கொஞ்சப் பூக்கள் ,பழனிபாரதியின் பாடல்; நாகபூசனியின் கவிதை ,என யாரும் போகாத பாதை இது . அதுகடந்து யார் யார் கடிதம். எறியினம் கல்லில் கட்டி என்று பார்க்கும் விழிகள் எழுத்துப் போட்டி என்றால் போகமாட்டார்கள் 


. அதுக்கு முன்னர் காவேரி இருந்தாள்!! இப்போது யாரும் இல்லை அதுக்காக .! "ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ சக்கரையாம் என்று நினைத்து எழுதக்கூடாது! தேசிய ரீதியில் பல்லாயிரம் மாணவர்கள் ,மாணவிகள் வருவார்கள். திறமையும் ,புலமையும் ,கற்பனையோடும் ,துணிவு இருந்தால் மோதுகின்ற விரல்கள் எழுத்தாணி பிடிக்கலாம். கையெழுத்துச் சரியில்லை என்று பன ஓதாமல் துணைதெழுத்துப் பார்க்க ஆசிரியர் இருப்பினம் நண்பர்கள் வட்டம் இருக்கும் இல்லையோ எல்லாரும் 16 வயதினிலே சப்பாணிதான் !


.என்ன கல்பனா !யாரைச் சொல்லுகின்றாய் .
உன்னையில்லை மரியா !! 


தொப்பி பொறுத்தமானவங்களுக்கு பொறுந்தும்


.விழுந்த அடி ராகுலுக்கு என்று புரியாத நிலையில் அயிசா நினைப்பில் இருந்தான் சுகுமார்.
பன/-போதனை சகோதரமொழி

தூதறுவோ- சகோதரமொழியில் சின்னத்திரையில் சாதனை தொடர்!-
குறிஞ்சித்தென்னவன்..மலையக் கவிஞர்!

29 comments :

கலைவிழி said...

இந்த பகுதியை நான் தான் இரண்டாவதா வாசிச்சன் ஹி..ஹி

தனிமரம் said...

வாங்கோ கலைவிழி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் முறையாக தனிமரம் தரும் சிறப்புப்பரிசு!ஹீ

கலைவிழி said...

சம்பவம் நடைபெறும் காலத்து பிரபலங்கள், அந்த காலத்து பெயர்போனவைகள் பற்றி பேசுவது நன்றாக இருக்கு. எனது பள்ளிக் காலத்தையும் ஞாபகப்படுத்துகிறது.

கலைவிழி said...

வீட்டில வறுத்து இடிச்ச கோப்பி தானே, தாங்கோ களையாற குடிப்போம், நன்றி

தனிமரம் said...

இந்த பகுதியை நான் தான் இரண்டாவதா வாசிச்சன் ஹி..ஹி// வாசிப்புக்கு நன்றி கலைவிழி தொடருங்கள் நேரம் இருக்கும் போது முகம் பல சொல்லும்!ஹீ

தனிமரம் said...

சம்பவம் நடைபெறும் காலத்து பிரபலங்கள், அந்த காலத்து பெயர்போனவைகள் பற்றி பேசுவது நன்றாக இருக்கு. எனது பள்ளிக் காலத்தையும் ஞாபகப்படுத்துகிறது.

9 June 2012 03:54 //ம்ம் அந்தக்காலம் எனக்குத் தெரியாது நானே காலம் புரியாமல் இருக்கும் சாமானியன்!ஹீ படிக்காதவன் தனிமரம் உங்கள் பள்ளியையும் ஞாபகம் ஊட்டுவது வார்த்தை கேட்டு சந்தோஸம் கலைவிழி!ஹீ

தனிமரம் said...

வீட்டில வறுத்து இடிச்ச கோப்பி தானே, தாங்கோ களையாற குடிப்போம், நன்றி

9 June 2012 03:56//ம்ம்ம் அப்படி நினைத்துத்தான் கடையில் வாங்கி நானும் வெளிநாட்டு வாழ்க்கையை ஓட்டுகின்றேன்!ம்ம்ம்

கலைவிழி said...

முன்பெல்லாம் வேலை பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்காக இடையிடையே youtubeஇல் பாடல் பார்ப்பேன். இப்போதெல்லாம், பதிவுகள் வாசிக்கிறேன். கட்டாயம் பெரும்பாலானவர்களின் பதிவுகள் வாசிப்பதுண்டு அனால் கருத்து பகிர முடிவதில்லை.

கலைவிழி said...

இங்கும் அப்படித்தான். ஹரிச்சந்திரா கோப்பி வீட்டுக் கொப்பி மாதிரி இருக்கிறது. தொடர்ந்து குடிப்பதாலோ தெரியவில்லை. நாக்கு பழகிவிட்டது

தனிமரம் said...

முன்பெல்லாம் வேலை பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்காக இடையிடையே youtubeஇல் பாடல் பார்ப்பேன். இப்போதெல்லாம், பதிவுகள் வாசிக்கிறேன். கட்டாயம் பெரும்பாலானவர்களின் பதிவுகள் வாசிப்பதுண்டு அனால் கருத்து பகிர முடிவதில்லை.//ம்ம் எல்லாருக்கும் நேரப்பிரச்சனை இருக்கு ஆனால் பாடல் தேர்வு பலர் ரசனை அல்லவா கலைவிழி!ம்ம்ம்

9 June 2012 04:02

தனிமரம் said...

இங்கும் அப்படித்தான். ஹரிச்சந்திரா கோப்பி வீட்டுக் கொப்பி மாதிரி இருக்கிறது. தொடர்ந்து குடிப்பதாலோ தெரியவில்லை. நாக்கு பழகிவிட்டது

9 June 2012 04:04 //ம்ம் ஹரிச்சந்திரா ஏகவினியோகஸ்தர்கள் கூட ஒரு ஊரில் ஒரு பகுதிக்கு ராகுலின் மாமா என்றான்! நண்பன்! நான் வேலை செய்தது முகப்பூச்சுக்கம்பனியிலும் முதுகு தேய்க்கும் வெளிச்சக் கம்பனியிலும் அதுவும் வடக்கில்! இந்தப் பொருள் இல்லாமல் கிணற்றுக்கு போக மாட்டார்கள் ஊத்தை உடுப்போடு!ம்ம் ஹீ

கலைவிழி said...

சரி நேசன் அண்ணா நேரம் ஆகி விட்டது. ஒரு பயிலை முடிச்சுட்டு வீட்ட போகணும், இரவு எல்லாரும் வரட்டும் தொடருவோம்.

தனிமரம் said...

சரி நேசன் அண்ணா நேரம் ஆகி விட்டது. ஒரு பயிலை முடிச்சுட்டு வீட்ட போகணும், இரவு எல்லாரும் வரட்டும் தொடருவோம்.

9 June 2012 04:18//ம்ம் நன்றி கலைவிழி வேலையைப்பாருங்கோ நேரம் இருக்கும் போது சந்திப்போம்!


நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் உங்கள் இந்த தொடரை தொடர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முடிவதில்லை அப்ப அப்ப வந்து ஒரு சில பகுதிகளை படிக்கின்றேன் ஒரு நாள் முழுமையாக எல்லாப் பாகங்களையும் படித்து முடிக்கவேண்டும் பார்ப்போம்

எஸ்தர் சபி said...

ம்ம்ம் அழகிய பதிவு
தொடருங்கள்..

Yoga.S. said...

மாலை வணக்கம் நேசன்!நலம் தானே?தொடர் நன்றாகப் போகிறது.பகலில் கணனி கொஞ்சம் மக்கர் பண்ணியதால் வர முடியவில்லை!

Yoga.S. said...

நல்ல ஆசிரியர்கள்/ஆசிரியைகள் எக்காலமும் போற்றப்படுவார்கள்!

மகேந்திரன் said...

வணக்கம் சகோதரர் நேசன்,

எழுத்து என்பது
எவ்வளவு பெரிய விஷயம்...
அது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை
என்பது உண்மை.

கலைகளிலே பொன்னென போற்றப்படுவது
எழுத்துக்கலையே
எழுத்துக்கலை பற்றிய படைப்பு தான் என்னுடைய
அடுத்த கவிதை...

கலைவிழி said...

இரவு வணக்கம் யோகா ஐயா, நலமாக இருக்கிறீர்களா?

Yoga.S. said...

இரவு வணக்கம்,கலைவிழி!நலமாக இருக்கிறேன்,நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

Yoga.S. said...

கலை விழி,பதிவு போட்டு கன நாளாகீட்டுது.

Yoga.S. said...

கலைவிழி said...

இங்கும் அப்படித்தான். ஹரிச்சந்திரா கோப்பி வீட்டுக் கோப்பி மாதிரி இருக்கிறது. தொடர்ந்து குடிப்பதாலோ தெரியவில்லை. நாக்கு பழகிவிட்டது.///எங்களுக்கும் ஒரு பக்கெற் வாங்கி அனுப்பி விடுங்கோ,நேசன்ரை கோப்பி குடிச்சு நாக்குச் செத்துப் போச்சு!(நாக்கு மட்டும் தான்,ஹ!ஹ!ஹா!!!)

தனிமரம் said...

வணக்கம் பாஸ் உங்கள் இந்த தொடரை தொடர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசை ஆனால் முடிவதில்லை அப்ப அப்ப வந்து ஒரு சில பகுதிகளை படிக்கின்றேன் ஒரு நாள் முழுமையாக எல்லாப் பாகங்களையும் படித்து முடிக்கவேண்டும் பார்ப்போம்

9 June 2012 07:45 //ம்ம் ஆறுதலாக படி தம்பி ராச் படித்தபின் உன் கருத்தைச்சொல்லு!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

ம்ம்ம் அழகிய பதிவு
தொடருங்கள்..

9 June 2012 08:09 /// ம்ம் நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

மாலை வணக்கம் நேசன்!நலம் தானே?தொடர் நன்றாகப் போகிறது.பகலில் கணனி கொஞ்சம் மக்கர் பண்ணியதால் வர முடியவில்லை!

9 June 2012 08:13// ம்ம் நன்றி யோகா ஐயா!

தனிமரம் said...

நல்ல ஆசிரியர்கள்/ஆசிரியைகள் எக்காலமும் போற்றப்படுவார்கள்!

9 June 2012 08:14 // 100 விகிதம் உண்மை ஐயா!

தனிமரம் said...

வணக்கம் சகோதரர் நேசன்,

எழுத்து என்பது
எவ்வளவு பெரிய விஷயம்...
அது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை
என்பது உண்மை.

கலைகளிலே பொன்னென போற்றப்படுவது
எழுத்துக்கலையே
எழுத்துக்கலை பற்றிய படைப்பு தான் என்னுடைய
அடுத்த கவிதை...// உண்மைதான் மகி அண்ணா ! நல்ல கவிதைக்கு நானும் காத்து இருக்கின்றேன் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு!

தனிமரம் said...

கலை விழி,பதிவு போட்டு கன நாளாகீட்டுது.

9 June 2012 10:48 //ம்ம்ம் பிசி போல யோகா ஐயா!

தனிமரம் said...

இங்கும் அப்படித்தான். ஹரிச்சந்திரா கோப்பி வீட்டுக் கோப்பி மாதிரி இருக்கிறது. தொடர்ந்து குடிப்பதாலோ தெரியவில்லை. நாக்கு பழகிவிட்டது.///எங்களுக்கும் ஒரு பக்கெற் வாங்கி அனுப்பி விடுங்கோ,நேசன்ரை கோப்பி குடிச்சு நாக்குச் செத்துப் போச்சு!(நாக்கு மட்டும் தான்,ஹ!ஹ!ஹா!!!)

9 June 2012 10:51 // ஹீ எனக்கு இன்னும் பால்க்கோப்பி சுவை சாகவில்லை!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ