12 August 2012

வலையில் ஒரு வாழ்த்துமடல்!

வணக்கம் நண்பா!
 நாளைய பொழுது உனக்கு இன்னொரு சுபதினம்
மழலையாக மடியில் தவழ பூமியில் வந்தாய் 13/08/..
பூரிப்பாய் அன்னை மகிழ்ந்தாள்.
மகிழ்ச்சியோடு நானும் வாழ்த்துகின்றேன் .
பூரண தம்பதியாக தரணியில் இந்த வருடம் இணைய வேண்டி!
  
என் வாழ்த்து உனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது அல்ல
எப்போதும் குடும்பத்தை விலக்கமுடியாது புரிந்துகொள். 
பள்ளியில் பார்த்தவள் வீட்டில் பலநாட்கள் பின் பொழுதில்
வாடகைக்கு தங்கியிருந்தேன்.

 வாங்க மாத்தயா 
வந்த இடத்தில் வழிகாட்டிய குரு நீ என்றாள்
வில்லன் என்றவள்  சாபம் போட்டவள் முன் ஒரு பொழுதில் !
 வீட்டில் ஒரு விருந்தாளியாக 
விரும்பும் நானா என்றாள் அவள் தங்கை 
வாங்க மவனே என்றார் அவள் தந்தை அத்தனையும் நிஜம் .
அவர்களுக்கு நான் ஒரு அதிகாரி தொழிலில்.
  ஆனால் உனக்கு வில்லன்
வழி தவறிய நீ அது அறியாய்!
 காதல் எல்லாம் கைகூட விரும்புவேன் .
ஆனால் விட்லைக்காதல் வீதியில் நின்று 
கழுத்தறுக்கும் குடும்பத்தை பார்த்தவன் 
உணர்ந்தவன் உணர்த்தினேன்  உனக்கு .
நான் ஒரு உதவாத நண்பன் தான்!
பிரதேச வாதம் ,மதவாதம், இனவாதம் ,நம்மைப்பிரித்தது!பின் பலகாலம் பிரிந்த நீ முகம் பார்க்க வந்தாய் முகநூலில்
முன்னம் உன் பிரியமானவள் என் முக்நூலில் 
நான் விரும்பியதுபோல இல்லத்தரசியாக இனிய சில மலழைகள் 
மடியில் இருந்து மகிழ்வாக மாமா என விழிக்கும் போது
 மனம் மகிழ்கின்றேன்.
இந்த நட்பு எனக்கு போதும் நீ திட்டுவது எல்லாம் பூமழைதான் ! 
 அதுதான் முகநூலில் நான் இல்லை !


என் கவிதைகள் உன் காதலையும் வளர்த்தது 
கத்தியும் தீட்டியது  என்றாய்?
குடும்பம் ஒரு கோயில் நீஅறியாய்!
 கடைசிப்பிள்ளையாக செல்லத்தில்
வளர்ந்தவனுக்கு !
 கடந்தவை எல்லாம் நல்லதுக்கு என்றாலும் 
விரைவில் கலியாணம் பார்க்க ஆசை உன் தாய் போல எனக்கும்.
உனக்கு மூத்தவன் என்பதால் இன்றும் சொல்லுகின்றேன் 
நட்புடன்  நான் வில்லனாகவே 
உனக்கு இருந்தாலும் .
விடிகின்ற பொழுத்தில் இனிய பிறந்தநாள்   வாழ்த்துக்கள்..13/08/...
நீ நல்லாக இல்லறத்தில் வாழ வேண்டும்.
 மதவாதம் அறிந்தவன் இனவாதி அல்ல
நல்ல பள்ளித்தோழிகள் எனக்கு இப்போது பலர்
 வில்லனும் விரும்புவது குடும்பத்தை
புரிந்துகொள் தோழா!
 நீ போட்ட  சாபம் கடந்து வந்தவன் 
வெட்டி விட்டாலும் நட்பு பட்டுப்போகாது!
 வா முகாரி  வாசல் கடந்து தம்பதியாக இந்த வருடம்!
/////வழிப்போக்கன் எழுத்தச் சொன்னான் என்னை எழுதிவிட்டேன் அவனுக்கு நானும் நண்பன் நீ அறியாய் தோஸ்த்து!
மாத்தயா! -அதிகாரி சகோதரமொழியில்!

7 comments :

MANO நாஞ்சில் மனோ said...

சுடு காப்பி எனக்குதான் முதலில்...!

MANO நாஞ்சில் மனோ said...

நட்புடன் நான் வில்லனாகவே
உனக்கு இருந்தாலும் .
விடிகின்ற பொழுத்தில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..13/08/...
நீ நல்லாக இல்லறத்தில் வாழ வேண்டும்.//

என்னுடைய வாழ்த்துகளையும் சொல்லுங்கள் மக்கா...!

நெற்கொழுவான் said...

நேரடியாக வாழ்த்துக்களை பகிர முடியாத சோகம் தெரிகிறது.விரைவில் அவர் உங்களை புரிந்துகொள்ள வேண்டுகிறேன்
என் வாழ்த்துக்களையும்பகிர்கிறேன்.காலங்கள் இந்த காயத்தையும் ஆற்றட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

காலம் கடந்தால் எல்லாம் மாறும்...
உறுதியாக அதை நம்புவோம்...
வாழ்த்துக்கள்...

தொடருங்கள்... நன்றி… (த.ம. 1)


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

ஹேமா said...

பூங்கொத்தோடு என் வாழ்த்துகளையும் சேர்த்துக்கொடுங்கள் நேசன் !

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?காலம் கடந்து என் வாழ்த்துக்களும்,அந்த வில்லிக்கு,ஹ!ஹ!ஹா!!!!!!!!!(கொஞ்சம் வருத்தம்---மனதில்,மன்னிக்கவும்,ஒன்ற முடியவில்லை)

சிட்டுக்குருவி said...

அழகானது.....ஆ இந்த வாரம் உங்க நட்புகளின் பிறந்த தினம் அதிகம் போல முகநூலில் தெரிந்து கொண்டேன் என் வாத்துக்களையும் சொல்லிவிடுங்கள்