13 August 2012

மின்நூலும் அன்பு மழையும் !!

வணக்கம் வலை உறவுகளே!
பதிவுலகில் தனிமரம் என்னத்தைச் சாதித்தது என்றாள் ?நிச்சயமாக பல நல்ல உறவுகளை சேர்த்ததைச் சொல்லுவேன்.

அந்தவகையில் ஒரு தொடரில் பல பாசக்குடும்பத்தை நட்பாக்கியதில் மலையகத்தில் முகம் தொலைந்தவன் நீண்ட தொடர் தனிமரத்தையும். பலருக்குவெளிச்சம் காட்டியது.

மலையகம், அதன் நீறுபூத்த நெருப்புக்கள் ,நண்பர்கள் ,தோழிகள் ,அவர்களின் முகம் !வாழ்க்கைப்பயணம், இலக்கியத் தேடல்கள் என என் நண்பனை மலையகத்தின் வீதியோரம் அவன் நடந்த பாதைகள் ஊடாக நானும் அவன் பின்னே கைபிடித்து அவனின் எண்ணங்களுக்கும் அவனின் தொலைந்த கனவுக்கும் காரணம் என்ன என்று வண்ணங்களாக வார்த்தை சேர்த்த தொடர் .


முக்கிய சம்பவம் நடந்து இந்த (ஆகஸ்ட் )மாதம் இந்தக்கதையோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் முக்கிய சிறப்புநாட்களும் கூட .

14 வருடங்கள் கடந்து செல்லும் இந்த நேரத்தில் அதன் தாக்கம் ஒவ்வொரு நட்புக்கும் இடைவெளியையும் நம்பிக்கையீனத்தையும் கொண்டிருக்கின்ற ஒரு துயரச்சம்பவம்.
( சுகுமார் பாத்திரத்துக்கு இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் 13/08/..)
அவனுக்கு பிடித்த பாடல் இது ராகுல் சொன்னது!ம்ம்ம்
இதை ராகுல் எனக்குச் சொல்லி அதனை தொடராக எழுதி ஈழத்தில் ஒரு பத்திரிக்கையில் வெளிவரும் நிலை இருந்தபோது ஏற்பட்ட கருத்துமோதல் (அரசியல்)!அதனை மீண்டும் பறணில் போட்டு விட்டு இலக்கியம் வேண்டாம் என என் தனிப்பட்ட பொருளாதார தேடலில் என்னையும் நாடவிட்ட நிலையும் ,பாதுகாப்பு காரணங்களும் நாடு தாண்டவேண்டிய நிலையில் பாரிஸ் வருகையும் ,ஐபோனின் வருகையும், என்னையும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வரவைத்தது. நிரூபனின் அறிமுகம் எனக்கு இன்னொரு ஆரம்பம் எப்போதும் வாசிப்பு என் நேசிப்பு. சில நண்பர்களுக்கு தனிமரம் ஒரு நெருடல் மிக்கவன் என தோன்றியதன் விளைவு !இந்த பதிவுலகில் நானும் கொஞ்சம் மூக்கூடைப் படவும்; தனித்துப் போகவும் காரணமாகிய நிலையில் ! மீண்டும் ராகுல் என்னை உசிப்பிவிட்டான் பதிவுலகில் மலையகம் பற்றி நீ எழுது. ஒரு பின்னூட்டம் கிடைத்தாலும் அது உன் வெற்றி உன்னால் முடியும் மாத்தயா என் கதையை தூசு தட்டு என்ற போது அவனின் உயிர் நண்பன் அரபுலகத்தில் இருப்பவனும் என் நண்பனும் தன்னிடம் சேமிப்பில் இருக்கும் காட்சிகளை தந்து இந்த தொடரை எழுத அடிகொடுக்க.
தோழி கோடு போட்டாள் நீ சுதந்திர தேசத்தில் இருக்கின்றாய் . இந்த குமுறல் அடுத்த தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் பட்டப்படிப்பு சீர்கெட்டு, அறிவிப்புக்கனவு தொலைந்தவனை .நீ முகம் தொலைந்தவன் ஆக செதுக்கு என்ற போது அரபுலக உறவு தந்த உற்ச்சாகம் என்னை அடுத்த தலைமுறையின் இன்றை ஹீரோ வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா துசியந்தனை தலைவர் ஆக்கி அவர் தலைமையில் இளைஞர் பட்டாளம் கூடியிருந்த சபையில் நேற்று மின்நூல் ஆகியது.
இந்த தொடர் மின்நூலாக வரவேண்டும் என்று பலர் ஆசைப்பட்டார்கள் அவர்களின் ஆசையும் ,இன்னும் என்ன தோழா முகநூல் குழமத்தின் ஒத்துழைப்பாலும் அந்த அரிய முயற்ச்சி கைகூடி நேற்றைய தினம்12/08/12 பாரிஸ் நேரம் 11.30 இன்னும் என்ன தோழா குழுமத்தில் மிகச்சிறப்பாக குதுகலத்துடன் பல்வேறு பதிவாளர்களை ஒன்றினைத்து இணையத்தில் இணைந்து இருந்தநாள் என் வாழ்வில் இன்னொரு சிறப்புநாள்! இன்னும் என்ன தோழாவின் தலைவர் துசியந்தன் தலைமையில் மின்நூல் வெளியீட்டு விழா தொடங்கியது.
‎:அனையாத சோதியாய் தமிழ்த்தாய் என்றும் உன்பால் சிரம் தாழ்த்தி...
மின்நூல் உருவாக்கியவரும் காட்சிப்படம் வரைவதில் சிறப்புத் தேர்ச்சிமிக்க நண்பருமான பவன் ஆரம்ப உரையைத் தொடங்க !
நேர வித்தியாசத்தாலும், வேலை நிமிர்த்தமும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிரூபன் அவர்களுக்காக வரவேற்புரையுடன் நான்.... இன்றைய இணையப்பாவனை என்பது நாடுகளுக்கிடையேயான தொடர்பாடல் வசதியை மிகவும் இலகுபடுத்தியுள்ளது. ஆகவே தொடர்பாடலுக்கு எந்தெந்த இடங்களில் அல்லது நாடுகளில் இருக்கிறோம் என்ற பிரச்சனை நீங்கி, சாதாரணமாக ஒரு சமூக வலைத்தளத்திலே குறித்த ஒரு நேரத்தில் அனைவரும் ஒன்று கூடும் வசதியை இன்றைய தொழில்நுட்பம் எமக்கு வழிவகுத்து தந்துள்ளது. அந்த வகையில் இங்கு எம் கூட தொடர்பில் வந்திருக்கும் நண்பர்கள் அனைவரையும் உளமார வரவேற்றுக்கொண்டு, பேஸ்புக் குழுமங்களில் புத்தக வெளியீடு என்பது வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் இது புது முயற்சி அல்ல; இதற்க்கு முன்னர் துஷ்யந்தன் அவர்கள் எழுதிய 'வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா' என்ற குறுநாவலும் இதே போல முகநூல் குழுமம் ஒன்றிலே சிறப்பாக மின்னூல் வடிவில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் 'தனி மரம்' நேசன் அவர்கள் தொடராக எழுதி வலை ஏற்றிய 'மலையகத்தில் முகம் தொலைந்தவன்' என்னும் நாவல் புதுப்பொலிவுடன் மின்னூல் வடிவில் வெளியிடு செய்வதற்கு இந்த நிகழ்வு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. ஆகவே மீண்டும் தொடர்பில் உள்ள நண்பர்கள் ,உறவுகள் எல்லாருக்கும்
நன்றிகள்.
தொடர்ந்து நாற்று நிரூபனின் வரவேற்புரை.
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய சொந்தங்களே, இணைய உலகினூடாக உங்கள் இதயங்களை இணைத்து, கணினியூடே கருத்தாழம் மிக்க படைப்புக்களை வழங்கி வரும், அனைத்து வலையுலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் சிறியேனின் வணக்கமும், இந் நிகழ்வினை நடாத்தும் ஒழுங்குதாரர்களுக்கு வாழ்த்துக்களும், இன்றைய காலம் கணினிக் காலம் எனும் வாக்கிற்கு அமைவாக, கணினியூடே ஒரு நூல் வெளியீட்டினை கச்சிதமாக நடாத்துவதற்கு முன்னின்று உழைத்த அன்புத் தம்பி, பவனுக்கு இந் நேரத்தில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!
நாம் வாழும் நேரக் கோடுகள் வேறு வேறு என்பதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் ஒன்று கூட்டுவது எவ்வளவு சிரமம் என்பது நாம் கடந்த பல நிகழ்வுகள், வெளியீடுகள் ஊடாக கண்டு வந்த உண்மை! இந் நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களையும், அகிலமெல்லாம் வலைப் பூ ஊடே தமிழ் பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்துப் பதிவுலகத் தோழமைகளையும், வருக வருக என வரவேற்பதில் அகம் மகிழ்கிறேன்! எமது சகோதர குழுமத்தின் சார்பில் இந் நிகழ்வு சிறப்பாக இடம் பெறுவதையிட்டு தாய்க் குழுமமான நாற்று குழுமத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை அன்புத் தம்பிகள் துஸ்யந்தன், பவன் ஆகியோருக்கு மீண்டும் ஒரு தரம் தெரிவித்துக் கொள்கின்றோம். தனிமரம் அண்ணரின் தளராத முயற்சிக்கு துணையாக நிற்க முடியவில்லையே எனும் வருத்தத்தினையும் இந் நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்! இத்தோடு நில்லாது காத்திரமான முறையில் ஈழத்தின் மெல்லிசை, ஈழச் சினிமா, ஈழத்து வானொலி வரலாறுகள் எனப் பலதரப்பட்ட சிறப்பான படைப்புக்களை நூல் வடிவில் வெளியிட வேண்டும் என அன்புக் கோரிக்கையினையும் இவ் வரவேற்புரையுடன் இணைத்து முன் வைக்கின்றேன். இம் முயற்சி மின் நூல் வெளியீட்டுடன் நின்று விடாது, இலங்கையின் மலையகத்தில் வாழும் எம் பாசமிகு சொந்தங்களை அச்சு வடிவிலும் சென்று சேர வேண்டும் எனும் அன்புக் கோரிக்கையினையும் இவ் இடத்தில் முன் வைக்கின்றேன். அன்பிற்கினிய உறவுகளே, இந் நிகழ்வோடு மாத்திரம் நின்று விடாது இன்னும் பல சேவைகளை இக் குழுமம் ஆற்ற வேண்டும் என இந் நேரத்தில் கேட்டுக் கொண்டு, என்னுடைய வரவேற்புரையை நிறைவு செய்கின்றேன்.
அவரோடு நண்பர்கள் பதிவாளர் ராச் சேர்ந்து கொண்டபின் மங்களவிளக்கினை ஏற்றினார் நாஞ்சில் மனோ.
மங்களகரமான நாள் இன்று, மனதும் சந்தோஷத்தில் லயித்து இருக்கிறது, நண்பன் நேசனின் "மலையகத்தில் முகம் தொலைந்தவன்" தொடர் மின்னூலாக வெளி வரும் இந்நாள் தமிழுக்கும் ஒரு பொன் நாள், என் உயிர் தமிழால் வாழ்த்தி மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கிறேன்....! தமிழனாய் வாழ்வோம், நம் அமுதாம் தமிழை வாழவைப்போம், அணையா விளக்காக இந்நூல்....... வரும் அடுத்த தலைமுறை தமிழர்களிடம் ஓங்கி வளர்ந்து, தமிழர் மாண்பையும், வீரத்தையும், காதலையும், அதற்காக பட்ட வடுக்களையும் கொண்டு சேர்த்து வரலாறு படைக்கட்டும்....! வாழ்க தமிழன், வளர்க எம் தேன்தமிழ் என்றென்றும் இவுலகில் நன்றி...!
 தன் பணியின் நிமித்தம் முன்கூட்டியே என் தொடருக்கு ஆசி வளங்கி! தொடரும்! மாத்தயா -அதிகாரி சாகோதரமொழியில்!

34 comments :

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் முயற்சி வெற்றி பெற.
மிக்க நன்றி பகிர்வுக்கு .

ஹேமா said...

நேற்றைய நிகழ்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை நேசன்.அத்தனை சந்தோஷம்.திரும்பவும் மீட்டிப் பார்த்திருக்கிறீர்கள்.சந்தோஷம்.
வாழ்த்துகள் !

angelin said...

வாழ்த்துக்கள் நேசன் ...எனக்கு பங்கு பெற இயலாமல் போய் விட்டது {சொல்வதற்கு வெக்கமாத்தான் இருக்கு ..இஇன்னும் நான் முகநூல் கணக்கு துவங்க வில்லை .)
ஆனாலும் எனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன் .

angelin said...

நேசன் ஹேமா கலா யோகா அண்ணா கலை குட்டி ரெவரி மற்றும் அனைவரும் நலமா ..
நேசன் அனைவரிடமும் நான் விசாரித்ததாக கூறவும் .
good night .

துஷ்யந்தன் said...

ஹேமா அக்காச்சி சொன்னது போல் நேற்றய சந்தோசம் இன்னும் போக வில்லை....

இப்படியா இன்னொரு நிகழ்வுக்காய் மனசு ஏங்குது பாஸ்...

துஷ்யந்தன் said...

நேசன் அண்ணா உங்களிடம் நிறைய விடயங்கள் சொல்ல இருக்கு.... அதை கேக்க நாங்கள் ஆவலாகவே இருக்கோம்... தொடர்ந்து எழுதுங்கள்... வெற்றி உங்களதே...... வாழ்த்துக்கள் அண்ணா

துஷ்யந்தன் said...

அப்புறம் ஒரு விளக்கம்...

"இன்னும் என்ன தோழா.." குழுமம். பவன்,ரித்து, துஷி என்று எங்கள் மூவரின் எண்ணத்தில் நட்பில் பிறந்ததே....

ஆகவே நீங்கள் அந்த குழுமத்தின் தலைவர் தலைவர் என்று என்னை சொல்லலும் போதெல்லாம் எனக்கு ரெம்ப தர்ம சங்கடமாய் இருக்கு... :(((

துஷ்யந்தன் said...

அப்புறம்.... உருகும் பிரஞ்சு காதலி... தொடரும் மின் புத்தகமாக வெளிவர வேண்டும் அதுவும் "இன்னும் என்ன தோழா" குழுமத்திலேயே வெளி வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்..... தொடர்ந்து அசத்துங்க பாஸ்.... வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் தோழரே !!! தொடர்ந்து எழுதுங்கள் .. உங்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தொடர்ந்து இருக்க வேண்டும், பலரையும் சென்றடைய வேண்டும் .. அடுத்த தலைமுறையினர் படித்து இப்படி எல்லாம் நடந்ததா என அறிந்துக் கொள்ள வேண்டும் .. மின் நூல் வெகு விரையில் அச்சில் ஏறவும் வாழ்த்துக்கள் !!!

T.N.MURALIDHARAN said...

இதை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற போதிலும் கூட அது எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.

Seeni said...

vaazhthukkal !
nanpaa!

கவி அழகன் said...

Nesan annachi valthukal. Manvasanai kamalum padaippukkalukku nan enrum adimai

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)

Suresh Subramanian said...

மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்... http://www.rishvan.com

சிட்டுக்குருவி said...

மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.......

உங்கள் இலக்கியப் மரம் மேலும் பல கிளைகள் விரித்து பார் முழுவதும் பரவ வாழ்த்துகிறேன் இந்தச் சிறியவன்

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பல சிறப்பான படைப்புக்கள் உங்கள் தளத்தில் வெளிவரவேண்டும்

அப்பு said...

நேசரே, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்.
உங்களுக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதுமே உள்ளது.
முதலில் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் முயற்சி வெற்றி பெற.
மிக்க நன்றி பகிர்வுக்கு .// நன்றி அம்பாள்டியாள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேற்றைய நிகழ்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை நேசன்.அத்தனை சந்தோஷம்.திரும்பவும் மீட்டிப் பார்த்திருக்கிறீர்கள்.சந்தோஷம்.
வாழ்த்துகள் !

13 August 2012 13:13 // மிகவும் அதிக சந்தோஸத்தில் இருக்கின்றேன் ஹேமா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் நேசன் ...எனக்கு பங்கு பெற இயலாமல் போய் விட்டது {சொல்வதற்கு வெக்கமாத்தான் இருக்கு ..இஇன்னும் நான் முகநூல் கணக்கு துவங்க வில்லை .)
ஆனாலும் எனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன் .

13 August 2012 14:09 // நன்றி அஞ்சலின் வாழ்த்துக்கும் வருகைக்கும்

தனிமரம் said...

நேசன் ஹேமா கலா யோகா அண்ணா கலை குட்டி ரெவரி மற்றும் அனைவரும் நலமா ..
நேசன் அனைவரிடமும் நான் விசாரித்ததாக கூறவும் .
good night .// எல்லாரும் நலம் அஞ்சலின் ரெவெரி தனிப்பட்ட வேலையில் அதிகம் ஓய்வு வலைக்கு!ம்ம்

தனிமரம் said...

ஹேமா அக்காச்சி சொன்னது போல் நேற்றய சந்தோசம் இன்னும் போக வில்லை....

இப்படியா இன்னொரு நிகழ்வுக்காய் மனசு ஏங்குது பாஸ்...

13 August 2012 14:15 // ,உண்மைதான் துசிய்ந்தன் இனிய ஒரு நாள்

தனிமரம் said...

நேசன் அண்ணா உங்களிடம் நிறைய விடயங்கள் சொல்ல இருக்கு.... அதை கேக்க நாங்கள் ஆவலாகவே இருக்கோம்... தொடர்ந்து எழுதுங்கள்... வெற்றி உங்களதே...... வாழ்த்துக்கள் அண்ணா// நன்றி துசிய்ந்தன் கருத்துக்கு.

தனிமரம் said...

அப்புறம் ஒரு விளக்கம்...

"இன்னும் என்ன தோழா.." குழுமம். பவன்,ரித்து, துஷி என்று எங்கள் மூவரின் எண்ணத்தில் நட்பில் பிறந்ததே....

ஆகவே நீங்கள் அந்த குழுமத்தின் தலைவர் தலைவர் என்று என்னை சொல்லலும் போதெல்லாம் எனக்கு ரெம்ப தர்ம சங்கடமாய் இருக்கு... :(((

13 August 2012 14:22 //ம்ம் புரிந்துகொள்கின்றேன்!

தனிமரம் said...

அப்புறம்.... உருகும் பிரஞ்சு காதலி... தொடரும் மின் புத்தகமாக வெளிவர வேண்டும் அதுவும் "இன்னும் என்ன தோழா" குழுமத்திலேயே வெளி வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்..... தொடர்ந்து அசத்துங்க பாஸ்.... வாழ்த்துக்கள்

13 August 2012 14:24 // ம்ம் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி துசி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் தோழரே !!! தொடர்ந்து எழுதுங்கள் .. உங்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தொடர்ந்து இருக்க வேண்டும், பலரையும் சென்றடைய வேண்டும் .. அடுத்த தலைமுறையினர் படித்து இப்படி எல்லாம் நடந்ததா என அறிந்துக் கொள்ள வேண்டும் .. மின் நூல் வெகு விரையில் அச்சில் ஏறவும் வாழ்த்துக்கள் !!!

13 August 2012 14:29 // நன்றி இக்பால் செல்வன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

.N.MURALIDHARAN said...
இதை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற போதிலும் கூட அது எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.

13 August 2012 16:53 // நன்றி முரளி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

...
vaazhthukkal !
nanpaa!// நன்றி சீனி வாழ்த்துக்கு

தனிமரம் said...

Nesan annachi valthukal. Manvasanai kamalum padaippukkalukku nan enrum adimai

13 August 2012 17:54 //நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...


மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..// நன்றி தனபாலன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

தனிமரம் said...

மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்... http://www.rishvan.com/ நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.......

உங்கள் இலக்கியப் மரம் மேலும் பல கிளைகள் விரித்து பார் முழுவதும் பரவ வாழ்த்துகிறேன் இந்தச் சிறியவன்

14 August 2012 04:32 // நன்றி சிட்டுக்குருவி வாழ்த்துக்கு நானும் சின்ன மரம் !ம்ம்

தனிமரம் said...

வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பல சிறப்பான படைப்புக்கள் உங்கள் தளத்தில் வெளிவரவேண்டும்// நன்றி ராச் வாழ்த்துக்கு.

தனிமரம் said...

நேசரே, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்.
உங்களுக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதுமே உள்ளது.
முதலில் வாழ்த்துக்கள்.// வாங்க அப்பு அண்ணா நலமா?நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்!