01 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -11

சுற்றிவரும் பூமியில் சுற்றுலாக்கள் மனதிற்கு புத்துணர்ச்சியும், புதிய சிந்தனையையும், சீண்டிச் செல்லும் உணர்வை. பார்த்து ரசிக்க வேண்டும் .

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள் நாட்டை செழுமை ஆக்குவதைவிட சிறுமையாக்கும் கொடுமையை புத்தன் பெயரால் செய்வது தான் ஆட்சியில் இருபோர் கையாளும் தந்திரம்

.புத்தனுக்கும் பலநாடு இருக்கு முதன்மையான மதம் சார்ந்த பட்டியலில். அப்படியான நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று

."தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் 10 நூற்றாண்டில் இருந்து மதத்தொடர்பு இருக்கு என்று லங்கா ராணியில் அருளர் சொல்வார் வரலாற்றை"

.
தாய்லாந்து தேசம் ஒரு இயற்கையின் கொடையை நன்கு கைவரப்பெற்ற மக்களைப் பெற்ற மகராசி. மலைகள் ,கடல்,விவசாய நிலம் என எப்போதும் நினைத்தாலே ஒரு சுகம் .

இந்த நாட்டுக்காலநிலை இதம்தரும். இயற்கையான இடத்தை கொண்ட இந்த நாட்டை ஊடகம் அதிகம் விபச்சாரப் பக்கம் அதிகம் பிரபல்யம் ஆக்குவது வேதனையானது.
இதனை பதிவுலகில் ஒரு சகபதிவாளிகூட பதிவு செய்து இருக்கின்றா.

அன்று சேகர் எங்களை அழைத்துச் சென்றது. ஹாட்சாய் என்ற நகருக்கு !

மதியம் என்றால் தாய்லாந்து சாப்பாடு வெள்ளைச் சோறும் அரைப்பதத்தில் எண்ணெய்யில் பிரட்டின முட்டை கூடவே கெக்கரிக்காய் சேர்த்து கோழிக்கறி என சாப்பிட்ட போது .உணரவில்லை இனி வரும் நாட்கள் சோறு நம் தேசத்தைப்போல சுவையாக கிடைக்காமல் போகும் என்று.

வந்து போகும் இந்த உலகில் கூடவந்தவர்கள், இடையில் சேர்ந்தவர்கள் இறுதியில் உதறிவிட்டுப்போவதும், உடன் வருவதும் உண்மையான பக்குவத்தைக் கொடுக்கும் பலருக்கு படிப்பினையாக அப்படித்தான் சேகர்.

ரயிலில் பயணத்தில் வரும் சகபயணிபோல தன் தரிப்பிடம் வந்ததும் இறக்கிச் செல்லும் வழிகாட்டி வேலையை முடித்துவிட்டு சேகர் அண்ணா போய் விட்டார் ஹாட்சாயில் இருந்து. அதன் பின் வந்தவர் கடிதங்கள் வினியோகிக்க பிரிப்பது போல எங்களை நட்சத்திரவிடுதியில் மூன்று அறையில் பிரித்துவிட்டார்கள் .புதிதாக பதவிக்கு வந்த ஜனாதிபதி போல பலபலப்பில் இருந்த மலேசிய நாட்டு ஓட்டியான குமார். எல்லாரும் தமிழ் பேசினாலும் ஒவ்வொரு இடமும் தனித்துவம் இருக்கு பேச்சு வழக்கில். யாழ் தமிழ்,மலையகத்தமிழ்,கிழக்குமாகாண த்தமிழ் கொழும்புத் தமிழ்,நீர்கொழும்புத் தமிழ் என பல இருக்கும் நாட்டில் மலேசியத்தமிழ் இன்னொரு வகை . மலாய்மொழியும் கலந்து வரும் தமிழ் அதனைப் பேசும் குமார் அண்ணாவை மறக்க முடியாது நாம். வாழ்க்கையில் சிலரை வழிப்பாதையில் மறக்க முடியாத முகங்களை கடவுள் அனுப்பி வைப்பார் உறவு கடந்து என்பது நிஜம் என்று ஆன்மீகம் நம்ப வைத்தநிலையும் இந்த குமார் வடிவத்தில் தான்..
ஹாட்சாயில் பகல்பொழுதைக்கழித்த பின் மாலைப்பொழுதில் இன்னொரு சிறிய வாகனத்தில் நம் ஊர் தட்டிவன் போல  போன இடம் தான்! சாங்கலா(sangkhla)  தொடரும் பயணம் உருகிய வண்ணம்!!!!!!!! .

32 comments :

சிட்டுக்குருவி said...

அண்மைய நாட்களில் கேட்காமல் விட்ட பாடல்...

சிட்டுக்குருவி said...

இருங்கோ சகோ படிச்சிட்டு அப்புறமா வாறன்........

தனிமரம் said...

அண்மைய நாட்களில் கேட்காமல் விட்ட பாடல்...// வாங்க சிட்டுக்குருவி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!ம்ம்

தனிமரம் said...

இருங்கோ சகோ படிச்சிட்டு அப்புறமா வாறன்.......//ம்ம் வாங்க படித்த பின்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

கேரளாக்காரன் said...

//
தாய்லாந்து தேசம் ஒரு இயற்கையின் கொடையை நன்கு கைவரப்பெற்ற மக்களைப் பெற்ற மகராசி//

வேரு சில கொடைகளும் இருக்கு அண்ணே..... நெஜமாவே கடவுளின் தேசம் தான்

ஹேமா said...

வணக்கம் நேசன்.....பாலை விட்டிட்டு ஒரு கோப்பி கிடைக்குமோ.நேற்று மணியம் கஃபே ஓனர் ஃபிரிட்ஜ்ல வச்சிச் சூட்டாக்கின கோப்பி தந்து.....ஒரே வயித்துவலி இண்டைக்கு முழுதும்....ஹிஹிஹி !

ஹேமா said...

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள் ......

இப்பவும் சுற்றுலாத் தேசம்தான் நமது தேசம்.போர் நடந்த இடங்களைப் போய்ப் பார்க்கிறார்களாமே !

ஹேமா said...

தாய்லாந்து சாப்பாடு வெள்ளைச் சோறும் அரைப்பதத்தில் எண்ணெய்யில் பிரட்டின முட்டை கூடவே கெக்கரிக்காய் சேர்த்து கோழிக்கறி ...

நான் வேலை செய்யும் ஹோட்டலில் சைனீஸ் ரெஸ்டோரண்ட் இருக்கு.நீங்கள் சொன்ன இந்த மெனு ஸ்பஷல்...!

ஹேமா said...

பாடல் தெரிவு எப்போதும்போல ரசனை.இதன் முதல் பதிவில் போட்ட மொழியறிப்பாட்டை மொழிபெயர்ப்புச் செய்தேன்.அருமையா இருக்கு நேசன் !

தொடர்ந்து வரட்டும் உருகும் பிரெஞ்சுக்காதலி !

athira said...

ம்ம்ம் பால் கோப்பி கிடைக்கவில்லை எனும் கவலை இன்று எனக்கு வரவிலை:)... பதிவின் மூலம்
பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்ன்ன்ன்..

athira said...

//புத்தனுக்கும் பலநாடு இருக்கு முதன்மையான மதம் சார்ந்த பட்டியலில். அப்படியான நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று//

புத்தருக்குப் பல நாடு இருந்தாலும்... அதைவிட உலகமெல்லாம் பரவியிருப்பது தமிழர்கள்தான்ன்ன்:).

athira said...

அந்திநேர தென்றல்காற்று.. என் ஃபேவரிட் பாடல்... சூப்பர்ர்ர்ர்...

K.s.s.Rajh said...

இந்த மானுடப் பிறவியில் எங்கள் தலைவிதியை நாங்கள் சுமக்கின்றோம் என்றோ ஒரு நாள் எம் பொழுதுகள் விடியும் என்ற நம்பிக்கையில்........

வாழ்க்கையின் வலியை சொல்லும் தன்னம்பிக்கை தொடர் தொடர்ந்து கமண்ட் போட முடியாவிட்டாலும் படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பயணம் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது... ரொம்ப நன்றிங்க...

Yoga.S. said...

காலை வணக்கம் நேசன்!நலமா?வந்து சென்ற எல்லோரும் நலமே இருப்பார்கள் நானும் நலமே!///சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள்!///ம்..ம்..ம்,பார்த்தேன்/பார்த்தோம்!சுற்றுலாத் தளமாக குருதி சிந்திய மண்!புத்தரை பின் பற்றுபவர்களாம்/நேசிப்பவர்களாம்!வெட்கக் கேடு(புத்தருக்கு)!!!!

Yoga.S. said...

அவர்களால் துவம்சம் செய்யப்பட்ட எங்கள் தேசத்தின் சுவடுகள் எதுவும் காட்சியில் இல்லை.தண்ணீர்த் தாங்கி மட்டும்..............................இன நல்லிணக்கம் ஏற்படும்!

Rasan said...

நீண்ட நாட்களாக கேட்காமல் விட்ட பாடலை கேட்டேன். நன்றி நண்பரே. பல தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.தொடருங்கள்.

தனிமரம் said...

தாய்லாந்து தேசம் ஒரு இயற்கையின் கொடையை நன்கு கைவரப்பெற்ற மக்களைப் பெற்ற மகராசி//

வேரு சில கொடைகளும் இருக்கு அண்ணே..... நெஜமாவே கடவுளின் தேசம் தான்

1 September 2012 13:32 //ம்ம் நன்றி கேரளாக்காரன் வருகைக்கும் கருதுரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் நேசன்.....பாலை விட்டிட்டு ஒரு கோப்பி கிடைக்குமோ.நேற்று மணியம் கஃபே ஓனர் ஃபிரிட்ஜ்ல வச்சிச் சூட்டாக்கின கோப்பி தந்து.....ஒரே வயித்துவலி இண்டைக்கு முழுதும்....ஹிஹிஹி //ம்ம் வாங்க ஹேமா!!

தனிமரம் said...

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள் ......

இப்பவும் சுற்றுலாத் தேசம்தான் நமது தேசம்.போர் நடந்த இடங்களைப் போய்ப் பார்க்கிறார்களாமே !//ம்ம் உண்மைதான் ஹேமா அது உண்மையான் சுற்றுலா அல்ல!

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

தாய்லாந்து சாப்பாடு வெள்ளைச் சோறும் அரைப்பதத்தில் எண்ணெய்யில் பிரட்டின முட்டை கூடவே கெக்கரிக்காய் சேர்த்து கோழிக்கறி ...

நான் வேலை செய்யும் ஹோட்டலில் சைனீஸ் ரெஸ்டோரண்ட் இருக்கு.நீங்கள் சொன்ன இந்த மெனு ஸ்பஷல்...!/ம்ம் நல்ல சாப்பாடு ஹேமா!ஹீ

தனிமரம் said...

பாடல் தெரிவு எப்போதும்போல ரசனை.இதன் முதல் பதிவில் போட்ட மொழியறிப்பாட்டை மொழிபெயர்ப்புச் செய்தேன்.அருமையா இருக்கு நேசன் !

தொடர்ந்து வரட்டும் உருகும் பிரெஞ்சுக்காதலி !

1 September 2012 14:14 //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா!

தனிமரம் said...

ம்ம்ம் பால் கோப்பி கிடைக்கவில்லை எனும் கவலை இன்று எனக்கு வரவிலை:)... பதிவின் மூலம்
பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்ன்ன்ன்..

1 September 2012 16:56 
//வாங்க அதிரா ம்ம்!

தனிமரம் said...

//புத்தனுக்கும் பலநாடு இருக்கு முதன்மையான மதம் சார்ந்த பட்டியலில். அப்படியான நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று//

புத்தருக்குப் பல நாடு இருந்தாலும்... அதைவிட உலகமெல்லாம் பரவியிருப்பது தமிழர்கள்தான்ன்ன்:).

1 September 2012 16:58 
//உண்மைதான் அதிரா!

தனிமரம் said...

அந்திநேர தென்றல்காற்று.. என் ஃபேவரிட் பாடல்... சூப்பர்ர்ர்ர்...

1 September 2012 16:58 
//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இந்த மானுடப் பிறவியில் எங்கள் தலைவிதியை நாங்கள் சுமக்கின்றோம் என்றோ ஒரு நாள் எம் பொழுதுகள் விடியும் என்ற நம்பிக்கையில்........

வாழ்க்கையின் வலியை சொல்லும் தன்னம்பிக்கை தொடர் தொடர்ந்து கமண்ட் போட முடியாவிட்டாலும் படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் தொடருங்கள்

1 September 2012 19:18 
//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ராச்!

தனிமரம் said...

உங்கள் பயணம் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது... ரொம்ப நன்றிங்க...

1 September 2012 21:23 
//நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம் நேசன்!நலமா?வந்து சென்ற எல்லோரும் நலமே இருப்பார்கள் நானும் நலமே!///சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள்!///ம்..ம்..ம்,பார்த்தேன்/பார்த்தோம்!சுற்றுலாத் தளமாக குருதி சிந்திய மண்!புத்தரை பின் பற்றுபவர்களாம்/நேசிப்பவர்களாம்!வெட்கக் கேடு(புத்தருக்கு)!!!!

1 September 2012 23:09 
//மாலை வணக்கம் யோகா ஐயா!ம்ம் கடவுளின் பெயரில் கலங்கம் செய்யும் கயவர்கள்!

தனிமரம் said...

அவர்களால் துவம்சம் செய்யப்பட்ட எங்கள் தேசத்தின் சுவடுகள் எதுவும் காட்சியில் இல்லை.தண்ணீர்த் தாங்கி மட்டும்..............................இன நல்லிணக்கம் ஏற்படும்!

1 September 2012 23:12 
://ஆதங்கம் தான் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நீண்ட நாட்களாக கேட்காமல் விட்ட பாடலை கேட்டேன். நன்றி நண்பரே. பல தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.தொடருங்கள்.

2 September 2012 00:19 
//நன்றி ராசன் வருகைகும் கருத்துரைக்கும்.

angelin said...

மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு இறைவனை பயன்படுத்துவது வேதனைதரும் விடயம் .

இணைந்த கைகள் படப்பாடல் மிகவும் அருமையான பாடல் ..ரொம்ப நாளாச்சு கேட்டு