05 September 2012

நாஞ்சில் மனோவை தீட்டப்போறன்!

வணக்கம் உறவுகளே நலமா?

என்ன மீண்டும் தொடரை மட்டும் எழுதுகின்றதே தனிமரம் என்று நினைக்கின்றீர்களா?

காலம் வேகம் கூடியது. வேலை மாற்றங்கள் கணனி முன் இருக்க முடியாத நிலையில் தொடங்கிய தொடரை முடிக்க வேண்டுமே!:)))

நாஞ்சில் மனோ அடிக்கடி அருவாள் கத்தியை காட்டி .

யோ தனிமரம் என்னையா ?பிரெஞ்சுக்காதலியை காட்டாமல் இன்னும் தாய்லாந்தில் ஊர் சுற்றுகின்றாயா ?
எடுடா அந்த அருவாளை என்று கத்தியை எடுத்து கொண்டு வந்துவிட்டார்.

நானோ தனிமரம் கத்தி பட்டால் தாங்குமா!

"அண்ணாச்சி பேச்சு பேச்சாக இருக்கணும் என்று வடிவேலு பாணியில் கத்தியை தீட்டிப் பார்த்தேன் "

நாஞ்சில் அருவாள்  துருப்பிடிச்சிருக்கா ?இல்லை கூரா இருக்கா ?
முடிவு ?:)))) ///////////////////////////////////////////// இப்ப எல்லாம் முகநூலில் ஓய்வாக இருந்தாலே கொஞ்சம் பேர் . யோ தனிமரம் நீ வில்லன்டா ராகுலை மட்டும் இப்படி ஹீரோ ஆக்கிவிட்டாயே ?அவன் வில்லன்டா என்று ஒரே கத்தி வருகின்றநிலையில் ! கதையை எழுதச் சென்ன நண்பன் அரபுலகத்தில் இருந்து இப்போது மீண்டும் மலையகம் (பதுளை )போய் இருக்கின்றான் .சிலரைச் சந்திக்க .ராகுல் போகமட்டான் என்பது நம் இருவருக்கும் தான் தெரியும்!ஹீ  பிரெஞ்சுக்காதலியிலும் ராகுல்  வருவான் இல்ல!ஹீ அடி பலமோ தெரியாது இன்னும் முகநூலிற்கு வரவில்லை டெனில்  எங்கிருந்தாலும் வாடா மச்சான் தனிமரத்திற்கு பொழுது போகுது இல்லை நீ இல்லாமல் முகநூலில் !:)))
////////////////////////////////////////////// இப்போது எல்லாம் சாட்டில் தனியாக வரும் முகம் தெரிந்த நட்புக்கள் எல்லாம் தனிமரம் யாரு மச்சான் என்கிறார்கள்? ஏன் இந்த கொலவெறி என்றால் உருகும் பிரெஞ்சுக்காதலி என்று விட்டு நீ ஏண்டா முகநூலில் குறிப்பும்  பாட்டும்  போட்டே கொல்லுறியே இது நியாயமா என்கிறார்கள்?!:)) அவனவன் வலி அவனணுக்கு அதை எழுத்தச்சென்னவன் இவன் என்று நண்பர் முகம் காட்டுவதுக்குள் என் இணையம் இப்ப அடிக்கடி காலை வாருகின்றது .
.அதனால் தான் பலரின் பதிவைப்படிக்க முடியுது இல்லை. /////////////////////////////////////// திரையரங்குகளில் படம்பார்த்த ஞாபகத்தை தொடரா எழுதப்போறன் என்றதும் . நண்பன் கேட்டான் வவுனியா வசந்தியில் இன்னொரு உலகம் இருந்ததுக்கு நீயும் சாட்சியே என்றான் . கூடவே வீட்டுக்காரியிடம் சொல்லியிருக்கின்றான் வசந்தி யாரு என்று கேளுங்க அண்ணி .  வசந்தி திரையரங்கு என்பதை புரியாமல் வதந்தியைக்கிளப்பி விடுறாங்க நான் பிளக்கில்தான் தனிமரம் இப்பவும் தனிமரம் தான் .ஆனாலும் என்னக்கும் ஒரு குடும்பம் இருக்கு எப்படி எல்லாம் சிந்திக்கின்றாங்க. முகநூலில் இருந்து வெரட்டுவதுக்கு.:))) சிலரைச் சந்தித்தால்
சிந்தித்தால் ? எப்படி இருக்கும் தனிமரம் வலையில் அடுத்த தொடர் எதிர் பாருங்கள். !!!!!!!!!!! டிஸ்க்கி-நாஞ்சில் மனோவின் அருவாளை தீட்டப் போறன் என்று சொல்ல வந்தேன்!ஹீஈஈஈஈஈஈஈஈ  அண்ணாச்சியோட தம்பியாக்கும் தனிமரம் !ஹீஈஈஈஈ எதுக்கும் அருவாளை தீட்டி வையுங்கோ !ஹீ

13 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!"அவர்"எப்போதும் அருவாளோட தான் அலைவார்!(இப்பெல்லாம் "லப்டப்" மனோன்னு யாரும் சொல்லுறதில்லையே,ஏன்????பால் கோப்பி ரெடி?????ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!"அவர்"எப்போதும் அருவாளோட தான் அலைவார்!(இப்பெல்லாம் "லப்டப்" மனோன்னு யாரும் சொல்லுறதில்லையே,ஏன்????பால் கோப்பி ரெடி?????ஹ!ஹ!ஹா!!!!!// வாங்க யோகா ஐயா நலமா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

ஹீ லப்டப் அதிகம் புகழ் இல்லை!ஹீ அருவாள் பண்டைய ஆயுதம்!ஹீ

கவி அழகன் said...

Nanka ready nesan annachi

சிட்டுக்குருவி said...

வாழ்த்துக்கள் சகோ..
அடுத்த வெற்றிப் பயணம் தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சரி... சரி... ஆரம்பிங்க... படிக்க ஆவலாய் இருக்கோம்...

பால கணேஷ் said...

ரைட்டு... மனோவோட அருவாளுக்குத் தப்பி அடுத்த விஷயமா... படிச்சுடறோம் தம்பி.

athira said...

இப்பவெல்லாம் அருவாள் எதுக்கு?:) அது ஓல்ட் பாஷன்.. வேணுமெண்டால் ஒரு “சி கே 16” வாங்குங்கோவன்...:)) நான் துப்பாக்கியைச் சொன்னேன்:)

K.s.s.Rajh said...

வசந்தி வதந்தி நல்லாத்தான் இருக்கு ஹீ.ஹீ............

s suresh said...

நல்லா தீட்டூங்க!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

AROUNA SELVAME said...

வணக்கம் தனிமரம்.

உங்கள் புதிய தொடருக்கு எனது வாழ்த்துக்கள்.

(நானும் டிஸ்கி எல்லாம் எழுதுவேன். முதன் முதலில் இங்கு வருகிறேனா... அதனால கொஞ்சம் தயக்கம்...)

ஹேமா said...

தலைப்பைப் பார்த்துப் பய்ந்தேபோனன் நேசன்.இப்பிடியெல்லாம் பயமுறுத்தாதேங்கோ.மனோன்ர ஒரு நகைச்சுவை போதுமே.ஏன் அவரின்ர அருவாள்........தற்கொலை செய்யிறதெண்டா...அதுக்குத்தான் சொன்னன் !

ஹேமா said...

வர வர வில்லனாகிக்கொண்டுதான் வாறீங்கள்.அன்பு வில்லனா ...ஹிஹிஹி !

இன்னொரு தொடரா...காதல் தொடர்தானே வாழ்த்துகள் நேசன் !