24 September 2012

urukum piranchukkathali

அரச விடுமுறை நாட்களில் ஓய்வை நாடும் விழிகள் இந்த ஓய்வு கிடைக்க காரணம் என்ன என்று விழிப்புணர்வு அடைந்து இருப்பார்களா ? புத்தன் ஞானம் அடைந்த முழுமதிநாள் போயா விடுமுறைநாள் என்று இலங்கையில் அரச விடுமுறை நாளாக இருக்கின்றது. தொலைக்காட்சியில் படம் பார்ப்பதும் முதல்நாள் வாங்கி வைத்த ஓல்ட் அறக்கு (சாரயம் - டாஸ்மர்க் மூடிவிடுவார்கள் நம்நாட்டில்) சீட்டு ஆட்டம் ஆடும் போது உதவிக்கு வரும் நண்பர்கள் மேசைக்கு ஒல்ட் அறக்கு உள்ளே போனால் வருவது எல்லாம் புலம்பலும் வீரவசனங்களும் தான். சீட்டு ஆட்டம் ஆடும் போது சிந்தனையில் அரசியல் வந்துவிட்டால் இலங்கை பாராளுமன்ற கதிரைப்பேரம் பேசுதல் நிலைபோல நான்தான் வெல்லுவேன், இந்தா பிடி என்பக்கம் தான் வெற்றி என்று கோஸம் வைத்து விளையாட்டை கொழும்பு மீன் சந்தையில் பார்க்கலாம்.

சீட்டு ஆட்டம் தப்பு, இந்த போயா நாளில் என்று புத்த போதனை பன்சாலையில் சொல்லும் பிக்குவிடம் ஓம் என்று கேட்டுவிட்டு வந்து வேதாளம் முருங்கை மரம் எறியகதை போல இவர்கள் ஆடும் சீட்டு ஆட்டம் மீன்சந்தை தாண்டி கொச்சிக்கடை அந்தோனியார் வீதி வரை ஆளுக்கு ஒரு குழு ஆடிக்கொண்டு இருக்கும். பதிவுலகில் இனவாதம் பரப்பவும் மதவாததுக்கு தூபம் போடும் குழுக்கள் போலவும். 

இப்படித்தான் தாய்லாந்து சாங்கலா கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு அரச விடுமுறைநாள். நீராட்டு விழா நம்மூரில் கார்த்திகைத் தீபம் போல! கும்பமேளா திருவிழா போல தாய்லாந்து வாசிகள் இந்த நீர் விளையாட்டை மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடுவார்கள். அதில் பாலியல் தொழில் புரிவோர் இந்த நாளில் தங்கள் பாவங்கள் தீரும் நாள் என்று எண்ணி தண்ணீரில் தென்னம்பாலையில் செய்த கும்பம் போன்ற ஒரு விளக்கினை ஆற்றங் கரைகளிலும் நீர் நிலைகளிலும் விளக்கு ஏற்றி நீரில் விடுவார்கள். 

இந்நாளில் சங்கா கிராமத்தில் எந்த வீதியிலும் பாலியல் விடுதிகள் இயங்காது. ஒருமித்த கடையடைப்பு செய்து தங்கள் ஒற்றுமையை மற்றவர்களுக்குக்கு காட்டுவார்கள். அரசியல் ஆறைகூவல் இல்லை இது ஆண்டாண்டு நடக்கும். இந்த விழாவைக்காண பல நாட்டவர்கள், ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற போர்வையில் விடுப்புப் பார்க்க விரைந்து வருவார்கள். எங்களுக்கும் ஆசை வந்தது விடுதியில் சாப்பாட்டுடனும் நித்திரையுடனும் போகும் நாளை கொஞ்சம் சந்தோசம் மிக்க நாளாக மாற்றவோம் என்று நாங்கள் மூவரும் வெளியில் வந்தோம். என்னுடன் தேவன், காந்தன் என மூவருமாக முதலில் ஐரோப்பாவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கச் சென்றோம்.

இந்தக் கிராமத்தில் தூரதேசத்துக்கு அழைப்பு எடுக்க அதிகம் வீதிகள் தாண்டவேண்டும். ஓல்க்கோட் மாவத்தையில் பாதணி தேடி அலைவது போல! அலைந்தால் எங்காவது ஒரு தாய்லாந்து அன்னை ஒரு குடையின் கீழ் கைபேசியுடன் காதிருப்பார். வெளியிடங்களுக்கும் வெளிநாட்டுக்கும் அழைப்பு எடுக்கும் தொலைபேசி மையமாக அவரிடம் இருப்பது ஒரு குடை இரு கதிரை இரு கைபேசி இதுதான் தொலைபேசி பரிவர்த்தனை நிலையம். இந்த சங்கா கிராம வீதியில் ஆங்கிலம் தகறாறு. 

இவர்கள் கிராமிய பஞ்சாயத்து நீதியில் ஆங்கிலம் வழிகாட்டவில்லை. கிராமியக் கல்வியை முன்னேற்ற முன்னேறியது ஊழல் மூலம் தன் வருவாயை மட்டும்தான். அதனால்தான் தச்சின்சிங்கா லண்டனில் அரசியல் தஞ்சம் கோரும் அளவுக்கு பின் வந்த நாட்களில் நாட்டில் நெருக்கடி வந்தது. எங்கே போனாலும் பிழைக்க வழிகாட்டும் மொழி சைகை (உடல்வாகு) மொழி நாங்களும் தாய்லாந்து பாட்டியிடம் தொலைபேசி எடுக்க முதலில் சைகைமொழியில் செயல்பட்டதில் வெற்றிகிட்டியது. ஐரோப்பா தொடர்பு இலக்கம் பாவனையில் இல்லை என்று வந்த பதில் மனதில் பயத்தினைத் தந்தது. 

கையில் காசும் அதிகம் இல்லை. இனி எங்கள் கழுத்தில் கைகளில் இருக்கும் அணிகலன்ளைத் தான் விற்கவேண்டும். இல்லை அடைவு வைக்க வேண்டும். அடைவு வைக்க கடவுச் சீட்டில் விசாக்காலம் இருக்க வேண்டும். விசா முடிந்துவிட்டது. சட்டவிரோதமாக தங்கியிருக்கும் எங்களின் நிலை

8 comments :

Seeni said...

mmmmm ...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!எதுகை மோனையுடன் பிரெஞ்சுக் காதலி.................தொடருங்கள்!

angelin said...

தாய்லாந்து நாட்டைப்பற்றி பல விவரங்களுடன் பிரெஞ்சுகாதலி அழகாய் செல்கிறார் ...தொலைபேசி இலக்கம் வேலை செய்யவில்லையா ??அடுத்து என்ன நடக்கும் என்று டென்ஷன் ...தொடர்கிறேன் ....

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பகிர்வை அறிய ஆவல்...

தனிமரம் said...

mmmmm ...// வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!எதுகை மோனையுடன் பிரெஞ்சுக் காதலி.................தொடருங்கள்!// காலை வ்ண்க்க்ம் யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தாய்லாந்து நாட்டைப்பற்றி பல விவரங்களுடன் பிரெஞ்சுகாதலி அழகாய் செல்கிறார் ...தொலைபேசி இலக்கம் வேலை செய்யவில்லையா ??அடுத்து என்ன நடக்கும் என்று டென்ஷன் ...தொடர்கிறேன் ....// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அடுத்த பகிர்வை அறிய ஆவல்...// விரைவில் வரும் தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் ஊக்கிவிப்புக்கும்.