03 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -18

பிரியமானவர்கள் பிரியமானவர்களுக்குத் தரும் பரிசுப் பொருள் எப்போதும் அன்பையும் நினைவையும் சுமக்கும் ஒரு விடயம் என்றால் மிகையில்லை.

வரலாற்றில் துசியந்தன் கனையாளி,சீதைகொடுத்தனுப்பிய கனையாளி ,கண்ணகி பாதரசம் என எப்போதும் தனிவரலாற்றுக் கதைகள் இருக்கும். சில ஆபரணங்களுக்கு .

அப்படித்தான் சாலிக்கா ஒரு முறை கொழும்பு வரும் போது எதிர்பாராவிதமாக என் விற்பனை மேல் அதிகாரியின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு நானும் வந்து இருந்தேன்.

இருவருமாக கோல்பேஸ் கடலில் கொஞ்சம் மனம்விட்டுப் பேசிய போது..

ஏன் மாத்தயா ?எனக்கு என்ன கோல்பேஸ் மட்டும்தான் சுற்றிக்காட்டுவீங்களோ ?தியேட்டர் எல்லாம் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களா?

சாலி கூட்டிக்கொண்டு போகும் நேரம் இப்ப இல்லை. அவசரமாக வவுனியா போகவேணும் .ஆனால் உன்னை செட்டித்தெருவில் இருக்கும் என் நண்பனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

.அதுக்குமுன் சினிமா போவோம். இப்பத்தானே முடியாது என்றீங்க .

ஆசைப்பட்டு கேட்கின்றாய். காதலி கேட்டாள் தட்டவா முடியும் ?  மகே பெம்பர்த்தினி.(என் ஆசைக்காதலியே).! ( அந்த நாள் ஞாபகம் தொடரில்  தனிமரம் நேசனின் பார்வையில் இந்தப்படம் பற்றி இன்னும் விபரம் வரும் ))))!)

அவளின் கண்ணில் தெரிந்த காதலின் அன்பை வடிக்கும் வார்த்தைக்கு ஏது மொழி .

குடைக்குள் முத்தமழையும் மெளனமுமாக கழிந்த கணத்தினைக் கலைத்தது வோல்ஸ் ஐஸ்க்கிரீம் காரனின் விற்பனை மொழிக்கூவல்.

அன்று பின்நேரம் செட்டிதெருவில் இருக்கும் அந்த நகைக்கடைக்குள் சாலிக்காவுடன் நுழைந்த போது .ராகுலின் நண்பன் காத்திருந்தான்.

இந்த நண்பனை அறிமுகப்படுத்தியவன் ராகுல் தான் முன்னர் ஒரு சந்திப்பில்.

"மின்னிடும் தங்கநகை உலகில் மங்காத தரத்துடன் மங்கையர் மனதில் என்ற விளம்பரம் முன்னர் ரூபவாஹினியின் ஞாயிறு மாலை2.30 வரும் பொன்மாலைபொழுது பார்க்க காத்திருந்த தருணத்தை ராகுல் நினைவுபடுத்தியதும் அந்த சந்திப்பில் தான். "

அந்த விளபரப் புகழ் அம்பிகா நகைமாடத்தில் தன் நண்பன் முக்கிய பதவியில் இருப்பதாகவும் சொல்லி அந்த சந்திப்பில் தன் இசை ஆர்வத்தைப் பகிர்ந்த நினைவுகள் மனதில் அசைபோட உள்ளே நுழைந்த போது !
.

வாங்க பொஸ் நலமா ?
எப்போதும் நண்பர்களுடன் வருவீங்க இப்ப புதுசா இருக்கு .

நண்பர்களுக்கும் வேலையிருக்குமே. விட்டுவிட்டு வரவேண்டிய இடத்தில் விட்டுவிட்டால் பிரச்சனையில்லை முரண்பாடு முடிந்துவிடும்.

இவங்க என் வுட்பி

.ஓ அப்புறம் என்ன நகை பார்ப்பம். சாலிக்கு ஒரு சங்கிலி நல்ல புதுடிசைனில்.

சிங்கப்பூர் டிசைன் பார்ப்போமா ?

"நல்ல முறுக்குச் சங்கிலி தொளிப்பாக இருக்கும்."

சரி காட்டுங்க.

மறுநாள் அந்த அழகான சங்கிலியை ராகுலிடம் காட்டி கவிதையாக அவன் எழுதியதை என்னிடம் காட்டிய போது நான் அன்று வவுனியா ஹொரவப் பொத்தானைவீதியில் வேலையில் இருந்துகொண்டு சிரித்த நினைவு வந்துபோகின்றது.

"நீ தந்த பரிசு என் தோழில்
நீ வந்து உறவாக நான் உன் மார்பில்
நீடூழி வாழும் நாள் எப்போது மன்னவா".

ரவி எப்படி நம்ம தோஸ்த்து
. ம்ம் இருக்கின்றான்?

.வேலை இன்று மன்னாரில் வேலை அங்கு போய் இருப்பான் .
ஓ அப்படியா?

ராகுலை கேட்டதாக சொல்லுங்க.
நிச்சயம் பொஸ்.


ரவி இந்த மோதிரத்தைப் பாருங்க. நல்ல வடிவாக இருக்கு.

எனக்கு வேண்டாம் சாலி நான் மோதிரம் போடுவது இல்லை.

ஐயோ ரவி இது உனக்கு அழகாய் இருக்கும் .பல இடத்துக்கு வேலைக்குப் போற நீ கைமொட்டையாக இருக்க கூடாது.

என்ற மாத்தயா தங்கம். எனக்காக இந்த மோதிரம் எப்போதும் போட்டு இருக்கவேண்டும்.

ஹாவதாவக் அமத்தக்கவெண்ட எப்பா மேக்க மகே புஞ்சி தாக்கி(எப்போதுமே என்னை மறக்கமுடியாது இருக்க இந்தப்பரிசு) உங்கள்.கைவிரலில் இருக்கணும் .என்று அவள் போட்டுவிட்ட மோதிரம் அழகாய்த்தான் இருந்தது.

பணம் அதிகம் சாலியிடம் இல்லாத போதும் .நான் கொடுத்து வாங்கியிருந்தாலும் அது அவளின் அன்பளிப்பாக அவள் உயிர் நீங்கிய பின்னும் என் கைவிரலில் இருந்தது.

சிறையில் இருந்தகாலத்தில் ,சாலியின் தம்பி பாண்டாரவிடம் இந்த மோதிரமும் கழுத்தில் என் பாட்டி போட்ட சங்கிலியும் பத்திரமாக இருந்தது.

இதை விமானநிலையத்தில் மீண்டும் பண்டார தந்து வழி அனுப்பினவன் இது பலருக்குத்தெரியாது .

இந்த நகைகள் எல்லாம் அடைவுவைக்க வேண்டியநிலை கையில் பணம் இல்லை பயணமுகவர் குமாரின் தொடர்பு இல்லை.

ஓட்டியாரும் வரவில்லை .விடுதியில் எங்களை செளியேறச் சொல்லிவிட்டார்கள் நாளையுடன் உங்கள் முற்பணம் முடிந்துவிட்டது என்ற நிலையில் நாம் தங்க வழிதேடி சங்கா கிராமத்தில் வட்டிக்கடையை தேடிப்பார்த்தோம் .

அடைவு வைக்க ஏழைகளிடம் இருக்கும் பொருள்தானே முதலில் அடைவுகடைக்குப் போகும். ஆபத்துக்கும் அவசரத்துக்கும்.

வவுனியாவில் பணம் அவசரம் என்றால் கைமாற்று செய்ய முடியும். இங்கு அப்படி முடியாதே. எங்கே போனாலும் சனியன் பின் தொடரும் ஒதுங்க நினைத்தாலும் தானாக வரும் சில விருந்தாளிகள் போல.

அதே போலத்தான் அடைவு வைக்க நம் அத்தாட்சிப்பத்திரம் கடவுச்சீட்டு வேண்டும். அதில் விசா இருந்தால் தான் அடைவு வைக்க முடியும்.விசா இல்லை.

சீலனின் மோதிரத்தையும் வாங்கி அடைவுகடையில் அடைவு வைக்க வழி தெரியாமல் நின்ற போது! கடவுள் அனுப்பிய தூதன் போல வந்த மலேசிய மைந்தனிடம் எங்கள் நிலமைச் சொன்னோம்!

 தொடரும்.......விரைந்து....................
//


வுட்பி-காதலி-கொழும்பு வட்டாரச் சொல்லு.
ஓட்டி-பயண வழித்துணை வரும் நபர்.

 டிஸ்க்கி -மஞ்சல் குறியீடு சகோதரமொழியான சிங்களம்.

5 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!ம்ம்ம்...........மோதிரம்,சங்கிலி எல்லாம்......நடக்கட்டும்,நடக்கட்டும்!(இப்போதும் இருக்கிறதா?ஹி!ஹி!ஹி!!!!)ONE HOT COFFEE,Please!

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலமா!ஹீ என்னது சங்கிலியா.ஹீஈஈஈஈஈஈஈஈஈஇ !வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீ

Seeni said...

mmmmm.
thodarungal...

சிட்டுக்குருவி said...

சாலி பற்றி முன்னர் அந்த நாள் ஞாபகத்தில் ஒரு முறை ஞாபகப்படுத்தியிருக்கிறீகள் சகோ....
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...