04 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி --19

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கு இவனைக் நான் கான என்ன தவம் செய்துவிட்டேன் கர்ணன் என்று ஒரு பாடல் .மிகவும் கருத்தாளம் மிக்கது .

அதே போல ஐயப்பன் பஜனையில் ஒரு பாமாலையில் வருவது அனாதை என்பவன் யாருமே இல்லை .ஐயப்பனே துணை என்று அப்படித்தான் சங்காவிலில் துணைக்கு வந்தவர் பெருமாள் .

நம்பி வந்து நடு ஆற்றில் நிக்கும் நம்நிலைக்கு உதவும் கரமாக தன் செலவில் முதலில் தங்கும் வசதி செய்து தந்தார் .

எங்கள் விபரம் அறிந்து கொண்டு தானும் ஒரு ஓட்டி என்றும் தான் அனுப்பிவைப்பதாகவும் வாக்குறுதி தந்தார் .சந்திரிக்காவின் வெற்றிக்கோஸம் போல சீலனும் ,காந்தனும் நம்பவில்லை பெருமாளை .
"உவனும் அரசியல்வாதி போலத்தான் எங்களிடம் காசு பறிக்க நல்லவன் போல வேசம் போடுகின்றான் மச்சான் வாக்கு வாங்கியபின் மக்களை மறக்கும் தலைவர்கள் போல வெளிய போய் இருக்கும் பெருமாள் வரமுன் தங்கம் தந்த ஓட்டியிடம் போவோம்" என்று காந்தன் ரகசியமாக வைத்திருந்த தங்கன் கொடுத்த தொலைபேசி இலக்கத்தைக் காட்டினான்

.18 பேர் கட்டுநாயக்கா ஊடாக கச்சாய் வந்தோம். குழுமங்களில் ஒன்றாகுவது போல பின் முரண்பாடு வந்தால் இடையில் பிரிந்து போனவர்கள் போலவும், கட்சி மாறுவது போலவும் தங்கன் தப்பிவிட்டான் கட்சிமாறியதும் அமைச்சர் பதவி கிடைத்த ஜீ.எல் பீரிஸ்போல.!

வந்தவர்களில் கடைசியில் இருந்தது சீலனும் ,காந்தனும் தாங்கள் தங்கனிடம் போவோம் என்ற நிலையில் நான் பெருமாளின் வார்த்தைகள் மீது ஒரு நம்பிக்கைக்கீற்று பார்க்க நல்லவன் போல தெரிகின்றது. இனி நடப்பது தெய்வத்தின் கையில் என்றுவிட்டு பெருமாளுக்காக காத்திருக்க சீலனும் ,காந்தனும் தங்கனின் ஓட்டிக்கு அழைப்பு எடுத்துவிட்டு அவன் கூறியபடி வாடகைக்காரில் மீண்டும் கச்சாய் புறப்பட்டார்கள்.

நாங்க போறம் ரவி இனி எப்படியோ ?எங்களுக்கு முன் ஐரோப்பா போனால் இந்த இலக்கத்துக்கு அழைப்பு எடுத்துச் சொல்லு. எங்கள் நிலையை என்றுவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்...

மனம் சஞ்சலம் ஆகும் போது கடவுளிடன் பாரம் கொடுத்துவிட்டால், வழிகாட்டுவதும் வழி மறிப்பதும் அவர் செயல் .என்றுவிட்டு தாய்லாந்து சோமபானம் நீண்டநாட்களின் பின் பருகினேன்.!

சாலியின் மோதிரநினைவு மனதில் அடைவு வைக்கப்போனபோது பெருமாள் வேண்டாம் என்று தடுத்ததும் தன் செலவில் எல்லாருக்கும் சாப்பாடும் குடிக்க தனக்கும் சேர்த்து வாங்கியந்த பீர் காந்தனும் ,சீலனும் போனபின் இப்போது துணையாக இருந்தது.

விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடங்கள் யாரை நம்புவது .?

எங்கள் ஊரில் ஒரு ஐயனார் கோவில் இருந்தது. அடிக்கடி தாத்தா அந்தக்கோவில் போர்த்துக்கள் அரசு இலங்கையை ஆண்டகாலத்தில் இருந்து இன்றும் இருக்கும் இந்தக் கோவிலுக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் தொடர்பு இருக்கு அங்கு இருந்துதான் முன்னர் இந்தக்கோவிலுக்கும் ஆச்சாரியர்கள் வந்தார்கள் என்று ஊரைவிட்டு வந்த 1991 இல் ஜீவனும் இருக்கும் போது சொன்ன போது தாத்தாவுக்கு பைத்தியம் ஊரைவிட்டு ஓடுவதால் இப்படிச் சொல்லுகின்றார் என்று நினைத்துக்கொண்டேன் !


அதன் பின் வேலை சாலியுடன் ,நட்புறவு என்றும் ,


சிறை என்றும் வாழ்க்கைப்படகு தத்தளித்த பின் இப்போது பெருமாள் உருவத்தில் மீண்டும் ஊர்க்கோவில் ஐயனார் ஞாபகம் வந்து இருக்கு!

" கண்ணதாசனுக்கு சோமபானம் போனால் தான் நல்ல கவிதை பிறக்கும் என்று யாரோ நக்கலாக சொன்னது கனவில் நினைவு போல வர "

திடுக்கிட்டு எழுந்த போது மாலையில் பெருமாள் வரவில்லை இன்னும் .என்ற நினைவு வர என்ன செய்வது என நின்ற போதும் மனதில் சஞ்சலம் அன்றைய இரவு தெளிவில்லாத குழப்பத்தில் எல்லாரும் விட்டுப்போன நிலையில் தனியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வெட்டியான் போல. தொலைக்காட்சி பார்க்கவும் விருப்பம் இல்லை, தனிமை ஒரு கொடுமை அதுவும் புது ஊரில் கூடவந்தவர்கள் எல்லாம் என்ன நிலை எனத் தெரியாத ?நிலையில் மீண்டும் ஒரு சோமபானம் கூப்பிட்டது .

"என்ன யோசனை என்பைப்பருகு அருகில் இருப்பதை உன்னப்பாரு "என்றதைப் போல தாய்லாந்து நூடில்ஸ்சில் முட்டை,சோளம்பூ,மல்லி இலை,சோஜா சாறு இறால் சேர்த்தால் சூடாக சாப்பிடும் போது கொழும்பில் ஸ்டார் ஹோட்டல் புரியானி போல இருக்கும் சுவை!

. நேரம் ஓடியது தவிர பெருமாள் வரவில்லை. அயர்ந்த தூக்கம் அம்மாவின் குரலைபோல பிரம்மை எழுப்பியது .

அதிகாலையில் எப்போதும் ராகமாக தேவாராம் பாடும் அம்மாவை தொழில் என்றும் ,சிறைவாழ்வும் ,அதில் இருந்து உயிர் தப்ப வெளிநாடு போவதும் பிரிக்கின்ற நிலையில் மனதில் அம்மா .எனக்காக எத்தனை அலைச்சல் .

என்பைப்பெற்றதுக்கு இனவாதம் கொடுக்கும் பரிசினைச் சுமக்கும் கொடுமையில் இருந்து விடிவு எப்போது ?நான் விரும்பிய சாலிக்காவை பார்க்க நினைத்தபோதும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

.என் தந்தைக்கு மட்டும் தான் எதிர்கால மருமகளைப் பார்க்கும் சூழல் இருந்தது .

.அம்மா என்னைப்பார்த்ததே சிறையில் இருந்த காலத்தில் தான்.

ஒரே நாட்டுக்குள் இரு தேசம் என்ற நிலையில். பெருமாளைச் சேவி அவர் சங்கு சக்கரத்தாரி சங்கடங்கள் தீர்பார் என்பான் ராகுல் அவன் ஒரு ஆன்மீகப்பிரியன். இந்தப்பெருமாளை நம்புகின்றேன் ஆண்டவா கருணைகாட்டு!

தொடரும்...

14 comments :

Seeni said...

mmmm.....

thodarungal sako..!!

K.s.s.Rajh said...

////விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடங்கள் யாரை நம்புவது .?////

அருமையான கேள்வி

தொடருங்கள் பாஸ் தொடர்கின்றேன்

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!யாரை நம்ப வேண்டும் என்பதே தெரியாமல்.........................!ஹும்!அனுபவம் பேசுகிறது.தொடருங்கள்!

Anonymous said...

vanakkam annaa....sugamaa,.

naangalum irukkom annaa...

thodarnthu varuvamm


சிட்டுக்குருவி said...

தொடருங்கள் சகோ......

Sasi Kala said...

நம்பிக்கையே வாழ்க்கை தொடருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்ந்து வருகிறோம்...

தனிமரம் said...

வாங்க சீனி அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

/விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடங்கள் யாரை நம்புவது .?////

அருமையான கேள்வி

தொடருங்கள் பாஸ் தொடர்கின்றேன்

4 October 2012 21:37 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!யாரை நம்ப வேண்டும் என்பதே தெரியாமல்.........................!ஹும்!அனுபவம் பேசுகிறது.தொடருங்க/ வணக்கம் யோகா ஐயா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

vanakkam annaa....sugamaa,.

naangalum irukkom annaa...

thodarnthu varuvamm// வணக்கம் கலை நலமா நிச்சயம் நாம் தொடர்வோம் வாத்து!ஹீ நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் அண்ணா கொஞ்சம் பிசி!ம்ம்

தனிமரம் said...

தொடருங்கள் சகோ.....//நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நம்பிக்கையே வாழ்க்கை தொடருங்கள்// நன்றி தென்றல் சசிகலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்ந்து வருகிறோம்...

5 October 2012 08:43 // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.