30 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி - 29

எதிர்பாராமல் பல இடங்களில் பலரைச் சந்திக்கும் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இருக்கின்றோம். பூர்வீகம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் வந்து சந்திக்கும் பஸ் பயணம் போலத்தான் என்னையும் சிவதாஸ் அண்ணா சேர்த்த இடம் "கிளாங்க". அங்கே எனக்கு முன்னே போய் இருந்த சிலரோடு 10 ஆக என்னையும் சேர்த்துவிட்டார். 

ஜீவன் இவர்களும் உங்க நாட்டுக்காரங்கள் தான் விரைவில் எல்லாரும் போய்விடுவீங்க. இங்க சமைக்க எல்லா சாமான்களும் இருக்கு நீங்களே சேர்ந்து சமைக்கலாம் வெளியில் எல்லாம் போகக்கூடாது. அக்கம்பக்கம் அதிகம் சத்தம் வராமல் இருங்க. எல்லாம் சரியானதும் போய்விடலாம். உங்க கடவுச் சீட்டைத் தாங்க, குமார் வாங்கச் சொன்னவர். என்றதும் நம்பிக் கொடுத்தேன் சிவதாஸ்சிடம்.. வாங்கிக் கொண்டு போய்விட்டார். எங்களோடு 10 பேர் என்றாகிவிட்டோம். வந்தவர்களில் பலர் ஏனோ உளவுத்துறையில் வேலை செய்பவன் நான் என்று நினைத்தவர்கள் போல, அவர்கள் 9 பேரும் தங்களின் ஊர் தாங்கள் போக இருக்கும் ஐரோப்பா பற்றியோ கனடிய தேசம் பற்றியோ பிரஸ்தாபிக்கவில்லை. வாய் பேசாதவர்கள் கூட சைகையில் தம் உணர்வுகளைச் சொல்லிவிடுவார்கள்.நம்மவர்கள் மனதில் எப்போதும் இழக்காரமான நிலையோ இல்லை தன் வழிப்பயணத்தை இவன் காட்டிக்கொடுத்துவிடுவானோ என்ற மனப்பயமோ நான் அறியேன்... சமையலுக்கு ஒன்றாக உதவினார்கள். முதல் மூன்றுநாட்கள் நீண்டநிலையில் மூன்றாம் நாள் சிவதாஸ் வந்தார். கைபேசியில் கூப்பிட்டார். ஹலோ ஜீவன், பணிய இறங்கி வாங்க நான் காடியில் இருக்கின்றேன். உங்களோடு ஒரு வெள்ளைப்பையன் அவன் பேரு தர்சன் அவனையும் இட்டுக்கிட்டு வாங்க. வெரசா! 


அப்போதுதான் தர்சன் என்ற பெயரே தெரியும். அந்தளவுக்கு இருந்தார்கள் இறுக்கமானவர்களாக... இருவருமாக இறங்கி கீழே இறங்கிய நிலையில், காடியில் சிவதாஸ் அவர்கூட ஒரு பெண் மற்றும் இன்னொரு நபர் இருந்தார்கள். ஜீவன் ஏறுங்க பின்னாடி, தர்சன் வா முன்னாடி என்று விரைவாக காரினை பொதுச்சாலைக்கு இறக்கியவாறு தன்னோடு வந்த நண்பர் குகனிடம் சிவதாஸ் ஏப்பா குகன் இவங்களுக்கு பொருத்தமாக அந்தப்பையன் இருப்பானா?  

ஓம் பாஸ்.. அச்சு அசல் ஓட்டியின் பின் வரும் அல்லக்கை கூட்டம். இப்படி ஜால்ரா அடிக்கும் என்பது ஓட்டிகளுடன் பழகியவர்கள் அறிவார்கள். இந்த ஓட்டியின் அல்லக்கைபோல தான் பேராசிரியர் அன்பழகனும் கருணாநிதியின் தவறுகளை என்றும் வாய் திறந்து சொல்லமாட்டார். தலைவர் பேச்சுமீறி ஏதுதாவது சொல்லியிருப்பாரா இந்த பேராசியர்??! சிவதாஸ் தர்சனிடம் "தர்சன் இந்தவாரம் நீங்க கிளம்புறீங்க யார்கிட்டயும் ரூமில் சொல்லக்கூடாது. ஜீவன் நீயும் தான் முதலில் தர்சன் அப்புறம் நீங்க கூடவே இன்னும் கொஞ்சம் பேர் மலாக்காவில் இருந்து கப்பலில் போறீங்க எல்லாம் சரியாகிவிடும்"  என்ற போது காடியில் பின் இருந்த பெண் கனகா கேட்டாள் ஏங்க பாஸ் கப்பலிலா?? எல்லாரும்....

இல்ல 4 பசங்கள் கிளம்புறாங்க.. குமார் நாளை மறுதினம் வருவார் இட்டுக்கிட்டுப் போக... நாம முதலில் இவர்களுக்கு படம் எடுக்க வேண்டும். முன்னால் இருக்கும் பல்பொருள் அங்காடியை நோக்கி காரினை செலுத்தினார் சிவதாஸ். வெளிநாட்டுக்கு அனுப்ப இந்த ஓட்டிகள் முதலில் படம் எடுப்பார்கள். இது நம்மூரில் இராணுவம் சுற்றிவளைப்பு செய்துவிட்டு பொதுமக்களை ஒன்றுகூடவிட்டு, இராணுவப்புலனாய்வுத் தலையாட்டியைக்கொண்டு வந்து புலிகள் என்று அப்பாவிகளைச் சிறைப்பிடிக்கும் நிகழ்வு நினைவுக்கு வந்து போகும். அந்த நிலை இனி இல்லை என்பதால் படம் எடுக்கும் போது மனதில் தோன்றிவிடும் விரைவில் ஐரோப்பாவில் இறங்கிவிடலாம் என்று .. ஆனால் இது எல்லாம் சில ஓட்டிகள் அரங்கேற்றும் நாடகம் படம் பிடிக்க குகனுடன் அனுப்பிவிட்டு காத்திருந்தார்கள். சிவதாசும் கனகாவும் குகனோடு போய் படம் எடுத்து மீண்டும் வர நேரம் அதிகமானது. தனக்கு குடிக்க குகன் பல்பொருள் அங்காடியில் பீரும் ஆளுக்கு ஒரு கோலாவும் வாங்கித் தந்து, திரும்பி வரும் போது பின்னால் இருக்கையில் இருந்த கனகா முன் இருக்கையில் அமர்ந்திருந்த காட்சியை பார்த்த போதே புரிந்துகொண்டேன், அனுராதபுரம் கொழும்பு பஸ்களில் பார்த்த காட்சிகள் போலத்தான் இதுவும் ஒன்று என. எத்தனை சகிலா படம் பார்த்திருப்போம்.. ஜிந்துப்பிட்டி முருகனில்!ஓட்டிகளில் பலர் ராமனும் அல்ல ஓட்டியுடன் வரும் பெண் ஒட்டி பத்தினியும் அல்ல . ஆனால் பாவம் அவர்களின் வாரிசுகள் என்பது மட்டும் நெஞ்சை வருடும் . மலேசியவாசிகளின் சில குடும்பக்கதைகள் கேட்டால் இரட்டை வாழ்க்கை எப்படிச் சாத்தியம் என்பதை இரண்டு மனைவியுடன் வாழும் கருணாநிதிதான் கதை எழுத வேண்டும்.. தென்பாட்டிச் சிங்கம் எழுதியர் அறியாத சங்கதியா??

 சிவதாஸ் மீண்டும் கொண்டுவந்து கிளாங்கில் இறக்கிவிட்டு சொன்னார் "நாளை மறுநாள் தர்சன் பயணம், கூடவே இன்னும் 4 பேர் போறீங்க! நம்புங்கள் என்னை. நம்பி குமார் பொறுப்புத் தந்து இருக்கின்றார்" என்றுவிட்டுச் சென்றார் ஒட்டி சிவதாஸ்! 


தொடரும் 

7 comments :

நெற்கொழுதாசன் said...

நான் தான் முதல் ஆனால் இன்னும் வாசிக்கவில்லை இருங்க வாசிச்சு விட்டு வருகிறேன்

துஷ்யந்தன் said...

நம்மவர்கள் மனதில் எப்போதும் இழக்காரமான நிலையோ இல்லை தன் வழிப்பயணத்தை இவன் காட்டிக்கொடுத்துவிடுவானோ என்ற மனப்பயமோ///

சரியா சொன்னீங்க நேசன் அண்ணா... இது நம்மவர்களிடம் அதிகம் இருக்கும் குணம் அல்லவா?? :(

துஷ்யந்தன் said...

இன்று பதிவும் பதிவின் எழுத்து நடையும் அழகாகவும் புரியும் படியும் இருக்கு நேசன் அண்ணா... இதே பாணியில் எழுதுங்கள்... வாழ்த்துக்கள் நேசன் அண்ணா

Seeni said...

thodarungal sonthame...

K.s.s.Rajh said...

////
நம்மவர்கள் மனதில் எப்போதும் இழக்காரமான நிலையோ இல்லை தன் வழிப்பயணத்தை இவன் காட்டிக்கொடுத்துவிடுவானோ என்ற மனப்பயமோ//// இது பெரும்பாலும் பலரிடமிருக்கும் குணம்

பயணங்கள் தொடரட்டும்

சிட்டுக்குருவி said...

காதலி அனுபவங்களோடு தொடர்கிறாள் போல
தொடருங்கள் சகோ

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

நன்றி...
tm4