09 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -36


பார்த்த பார்வையில் என் உள்ளம் பள்ளமானது வார்த்தை சொன்னது.. என்ற பாடல் போலத் தான் பல வருடங்களின் பின் அவளைப்பார்க்கின்றேன். எத்தனையோ பெண்களை இந்த நாள் வரை, தொழில் நிமித்தமும், பள்ளியிலும் பார்த்து இருந்தாலும், இப்படி ஒருத்தியைக் காணத்தான் இத்தனை அவலங்கள் கடந்து வந்தேன் 
தெய்வமே என்று மனம் நினைக்கும் போது எதிரில் வந்தாள் நிசா.

நிசா! நீண்ட வழுவழுப்பான நோர்வே நாட்டு சுமோ மீனைப்போல தலைமுடி. பாகிஸ்தான் நாட்டு மாம்பழம் போல கன்னங்கள்! இத்தாலி நாட்டு ஒலிவ் போல இரு கண்கள்! ஸ்பெயின் நாட்டு ஸ்ரோபரி போல மூக்கு! ஐஸ்வெரிகோட்ர் நாட்டு வாழைப்பழம் போல நெற்றி! அருவி போல ஓடிவரும் அழகான கழுத்து! அதன் கீழே வந்து நிற்கும் முன்னழகில் பச்சை கூனைப்பூ (ஆர்த்தி சோ) தண்டைப்போல முன்னழகு. பிரெஞ்சு தேச வைனைப்போல அவள் இடை! அரேபிய குதிரை போல அவள் நடை! அதிர்ந்து பேசாத உதடுகள்! மாரிமழையில் முளைத்த காளன் போல காதுகள்! நீண்ட மரவள்ளிபோல கைகள்! அதில் சோயாப் பூவைப்போல விரல்கள்! அழகான மணலை மீனைப்போல கால்கள்! அதில் தாய்லாந்து மட்டிபோல கால்விரல்கள்! காந்தப் பார்வையில் அவள் ஒரு தேவதை.. நீமிர்ந்து நடந்தால் என் தோளுக்கு இரண்டு அடி குறைந்தவள்! மொத்தத்தில் அவள் ஒரு வசியக்காரி போல என் மனதில் வந்து தங்கிவிட்டாள்.


இப்படி ஒருத்தியை இனி எப்படிக் காதலிக்காமல் இருக்க முடியும்? இதயம் விழித்துக் கொண்டது 23 வயதில்..! வெளிநாடு வந்தவன் ஹார்மோன்கள் தூண்டலில் துள்ளியது வாலிபம். இது என்ன மாயம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போதே, எப்படிச் சுகம் என்றாள் பிரெஞ்சு மொழியில்..

என்ன ஜீவன் நிசாவை கண்டு பிடிக்க முடியவில்லையோ? என்ற ரவியின் குரலின் பின் தான் நானே கனவில் இருந்து விழித்துக்கொண்டது. ஜீவன் அவள் சுகமாக இருக்கின்றாயா என்று கேட்டாள் மறுபதிலுக்கு நீயும் கேட்க வேண்டும்! நீங்க நலமா என்று இந்த நாட்டு நல்ல கலாச்சாரத்தில் இதுவும் ஒன்று எங்கே யாரைக்காண்டாலும் வணக்கம் சொல்லி நலம் கேட்பது இங்கு பிரதானம்..


இப்ப தானே வந்து இருக்கின்றான் விடு ரவி.. இனி பிடிச்சிடுவான். வாங்க சாப்பிடுவம்.
இல்லை சோதி மாமி நான் வேலைக்கு இறங்கணும். இவனைக் கொண்டு போய் கேஸ் ஆலுவல் ஆளைப்பார்க்க வேண்டும். நாங்க போகப் போறம் என்ற ரவியின் பேச்சை மீற முடியாத நிலை ஒரு புறம், நிசாவை விட்டு வர முடியாத இதயவலி ஒருபுறம்.... என்ன செய்வது? பிரெஞ்சில் புதிய முகம் இல்லையா?? 

 சரி,
கடவுளே கண் திறந்துவிடு, இவள் எனக்கு கிடைக்கணும் என்று! வெளியில் வந்தபோது ரவியிடம் கேட்டேன்? சாலிக்கா போல நானும் இனி உருகப் போறண்டா மச்சான் நிசாவிடம்!மச்சான். உன் உதவி இனி எனக்குத் தேவைடா என்ற போதே ரவி சொன்னான் விசரோ உனக்கு?... !!தொடரும்!!!
கூனைப்பூ விபரம் இங்கே!Special selection du mois 13
கேஸ் அழுவ்ல் அக்தி அந்தஸ்து விடயம்

13 comments :

angelin said...

நேசன் நலமா ...இரவு உணவு சாப்பிட்டாச்ச

ஆ!!! பார்த்த பார்வையில் பாட்டு அப்பெல்லாம் அடிக்கடி ஒலியும் ஒளியும் இல் போடுவாங்க ...பாடலின் இசைக்காகவே விரும்பிய பாடல் ..

angelin said...

அப்புறம் சிஸ்டர் இன்லா நல்லா இருக்காங்களா .

angelin said...

ஒவ்வொரு நாட்டு பொருட்களை வைத்து என்னே வர்ணனை ..:))

சிட்டுக்குருவி said...

பிரஞ்சுக் காதலி பிரசவித்து விட்டாள்.

வர்ணனை சூப்பர்.....

தொடர்ந்து சில பதிவுகளை விட்டு விட்டேன் படித்துவிட்டு வருகிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனை அருமை...

தொடர்கிறேன்...
tm1

கரந்தை ஜெயக்குமார் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தனிமரம் said...

நேசன் நலமா ...இரவு உணவு சாப்பிட்டாச்ச 

ஆ!!! பார்த்த பார்வையில் பாட்டு அப்பெல்லாம் அடிக்கடி ஒலியும் ஒளியும் இல் போடுவாங்க ...பாடலின் இசைக்காகவே விரும்பிய பாடல் ..
// வாங்க அஞ்சலின் அக்காள் நான் நலம் உண்மைதான் அருமையான பாடல் எனக்கு அதிகம் பிடித்ததில் இதுவும் ஒன்று !

தனிமரம் said...

அப்புறம் சிஸ்டர் இன்லா நல்லா இருக்காங்களா .//நல்லா இருக்கின்றாங்க அஞ்சலின் அக்காள் நன்றி நலம் விசாரிப்புக்கு!

தனிமரம் said...

ஒவ்வொரு நாட்டு பொருட்களை வைத்து என்னே வர்ணனை ..:))
//ஹீ ஹீ நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

பிரஞ்சுக் காதலி பிரசவித்து விட்டாள்.

வர்ணனை சூப்பர்.....

தொடர்ந்து சில பதிவுகளை விட்டு விட்டேன் படித்துவிட்டு வருகிறேன் // பாராட்டுக்கு நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!

தனிமரம் said...

ரசனை அருமை...

தொடர்கிறேன்...
tm1 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் பாராட்டுக்கும்!

தனிமரம் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் //உங்களுக்கும் உரித்தாகட்டும் அண்ணாச்சி!

Seeni said...

kavithai mmmmmmmm...