28 January 2013

விழியில் வலி தந்தவனே -அறிமுகம்.


வணக்கம் உறவுகளே .
                            
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  மீண்டும் சிறிய விடுமுறையின் பின் தனிமரம் இணையத்தின் ஊடே உங்களுடன் இணைகின்றது.

மூன்றாவது ஆண்டின் வலைப்பயண ஆரம்பத்தில் மீண்டும் ஒரு குறுந் தொடரினை உங்களிடம் பகிர்கின்றேன்.

வலையுலகில் தொடருக்கான ஆதரவு மிகவும் குறைவு என்பது என் கடந்தகால நேரடி அனுபவம்  

.என்றாலும் ஒவ்வொரு தொடரும்  வலையுலக உறவுகளினால் வலைச்சரத்தில் வலம் வருவதே  எனக்கு கிடைக்கும் அங்கிகாரம் ஒரு புறம் என்றால் !

இன்னொன்று தொடரின்   மூலம் நான் அடையும் ஆத்ம திருப்தி  பெரிது  . அதனால் தான் இணையத்தில் என் நேரத்தினை செலவிடுகின்றேன்.

இந்தத்தொடர் /

என் கடந்தகாலத்தில் தாயகத்தின் வன்னி நிலப்பரப்பில் விற்பனைப்பிரதிநிதி வேலையும் ,அதனுடன் இணைந்த வியாபார விளம்பர சேமிப்பும் , என்னைப்  பல்வேறு நபர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை  பெற்றதன் விளைவும்   அப்படிப் பழகியவர்களில் பள்ளி மாணவர்களும் மாணவர்த்தலைவர்களும் அடக்கம்.

என்னுடன் நெருங்கிப்பழகிய ஒரு மாணவத்தலைவன் கதை தான் இது.

இந்த வாய்ப்பினை எனக்கு சமாதான காலம் தந்தது.2002 இல் A--9 திறப்பும்  அந்த அந்த பயணத்தில் பழகிய ரகுவின் நட்பினை நான்  பின் பிரிந்து இனவாத அடக்குமுறையினால் .

என்றாலும்  மீண்டும் ஒரு நாள் என் ஆன்மீகப் பயணத்தில் சென்னையில் சந்தித்தேன்  .அந்த நட்பினை  அதன் பின் சிந்தித்தேன் .

இனி ரகுவுடன் உங்களைப் பயணிக்க எழுத்தாணியாக மட்டும் தனிமரம் பிடித்த பாடல்களுடன் இந்தத்தொடரில் பயணிக்கும்.

வழமைபோல இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை .

இது ஒரு சாமானிய வழிப்போக்கனின் உன்னதமான உணர்வு யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.

 என்றாவது ஒருநாள் மீண்டும் வன்னி மண்ணில் சிலரைச் சந்திக்கும் ஆவலுடன் ,ஆசையுடன்  ,புலம்பெயர் தேசத்தில் இருந்து .

சுதந்திரக் காற்றினை அன்னை பூமியில் சுவாசிக்க காத்து இருக்கும் ஒரு ஏதிலியின் எதிர் பார்ப்புக்களுடன் இந்தத்தொடரினை ஏற்றிவிடுகின்றேன் தனிமரம் வலையில் .உங்களுடன் கதை பேசும் ஆசையில்.:))).சுதந்திரமாக காட்சிப்படத்தினை தன் தொழில்நுட்பத்த திறமையால் தனிமரம் கேட்ட வண்ணம் வடிவமைத்து தந்த  அன்புத்தம்பி நிகழ்வுகள் வலைப்பதிவாளர் கந்தசாமிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்த பதிவாக இரு அங்கம் தொடரோடு  சந்திக்கின்றேன் .அதன் பின் வாரத்தில்  முடியும் தருணங்களில் இணையத்தில் இணையலாம்  நான் வணங்கும் தெய்வம் வழிவிட்டால் .!

உங்களின் அன்பும், அரவணைப்பும் காத்திரமான பின்னூட்டமும் இந்தத்தொடருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் .

என்றும் அன்புடன்
தனிமரம்-நேசன்.

26 comments :

angelin said...

வணக்கம் நேசன் ..புதிய தொடரின் ஊடே நாங்களும் பயணிக்கிறோம் உங்களோடு மற்றும் ரகுவோடு .

தனிமரம் said...

வணக்கம் அஞ்சலின் அக்காள் நலமா ??முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

Seeni said...

vaangayyaa !
vaanga ... !


thodarkiren..

தனிமரம் said...

vaanga ... !


thodarkiren..
//வாங்க சீனி அண்ணா நன்றி உற்சாகமூட்டலுக்கு!

Venkat S said...

ஆவலுடன் காத்திருக்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Venkat S said...

tha.ma 2

அருணா செல்வம் said...

புதிய தொடரா....?
தொடருங்கள்... நானும் உங்களைத்
தொடருகிறேன்.

அருணா செல்வம் said...

t:a: 3

நெற்கொழுதாசன் said...

இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .////இனிமேல் இப்படியான பல குத்துக்கரணங்களை நாங்கள் கேட்க வேண்டி வரும்.இப்படி சொல்லாவிட்டால் இப்ப நேரடியாகவல்லோ குத்துகள் விழும் ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் தொடருங்கோ பாஸ்.

MANO நாஞ்சில் மனோ said...

சுவையான தொடர் போல, தலைப்பே மனதை கொஞ்சம் காயப்படுத்தி கலவரப்படுத்துகிறது ம்ம்ம்ம் தொடருங்கள் நேசன்...வாழ்த்துக்கள்...!

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ் ஆவலுடன் காத்திருக்கின்றேன் வாசிக்க

முத்தரசு said...

அடுத்த தொடர் - தொடருங்கள் தொடர்கிறேன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்)

Yoga.S. said...

பகல் வணக்கம்,நேசன்!நலமா?///அட்டகாசமான அறிமுகத்துடன் தொடங்கியிருக்கிறீர்கள்.பயணத்தில் பங்கு கொள்வோம்!!!!

Yoga.S. said...

பாடல் அருமை.

Anonymous said...

நலமா நேசரே...

ஆவலுடன் காத்திருக்கின்றேன் வாசிக்க...

Start the music...

தனிமரம் said...

ஆவலுடன் காத்திருக்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்//நன்றி ரமனி ஐயா வாழ்த்துக்கும் வாக்கு இடலுக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

புதிய தொடரா....?
தொடருங்கள்... நானும் உங்களைத்
தொடருகிறேன்.//நன்றி அருணா வருகைக்கும் கருத்துக்கும்,வாக்கும்!இட்டதுக்கு!!!

தனிமரம் said...

இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .////இனிமேல் இப்படியான பல குத்துக்கரணங்களை நாங்கள் கேட்க வேண்டி வரும்.இப்படி சொல்லாவிட்டால் இப்ப நேரடியாகவல்லோ குத்துகள் விழும் ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் தொடருங்கோ பாஸ்.//ம்ம் குத்து வலி அதிகம் பாஸ்§ம்ம்ம் நன்றி வாழ்த்துக்கு!நெற்கொழுதாசன்!

இளமதி said...

வணக்கம் நேசன்...
புதிய தொடரா...மகிழ்ச்சி. தொடரக் காத்திருக்கிறேன் நானும்.
வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

சுவையான தொடர் போல, தலைப்பே மனதை கொஞ்சம் காயப்படுத்தி கலவரப்படுத்துகிறது ம்ம்ம்ம் தொடருங்கள் நேசன்...வாழ்த்துக்கள்...!

28 January 2013 17:04 //நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் வாழ்த்துக்கும்

தனிமரம் said...

வாழ்த்துக்கள் பாஸ் ஆவலுடன் காத்திருக்கின்றேன் வாசிக்க

28 January 2013 18:17 //நன்றி ராச் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

தனிமரம் said...

அடுத்த தொடர் - தொடருங்கள் தொடர்கிறேன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்)

28 January 2013 21:58 //நன்றி முத்தரசு வருகைக்கும் வாழ்த்துக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

பகல் வணக்கம்,நேசன்!நலமா?///அட்டகாசமான அறிமுகத்துடன் தொடங்கியிருக்கிறீர்கள்.பயணத்தில் பங்கு கொள்வோம்!!!!

29 January 2013 04:08 //வணக்கம் யோகா ஐயா நலமா!ம்ம் நன்றி உற்சாகமான வாழ்த்துக்கு!

தனிமரம் said...

பாடல் அருமை.

29 January 2013 04:15 //நன்றி யோகா ஐயா பாடல் பாராட்டுக்கு!ம்ம்

தனிமரம் said...

நலமா நேசரே...

ஆவலுடன் காத்திருக்கின்றேன் வாசிக்க...

Start the music...

29 January 2013 05:49 // வணக்கம் ரெவெரி நாம் நலம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

வணக்கம் நேசன்...
புதிய தொடரா...மகிழ்ச்சி. தொடரக் காத்திருக்கிறேன் நானும்.
வாழ்த்துக்கள்!// வாங்க இளமதி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நலம் தானே! தொடர்வோம் தொடரில்!