13 February 2013

காதலர் தின அனுபவம்!


வணக்கம் உறவுகளே இது காதல் மாதம் என்று சமையல் கடைமுதல் அங்காடி வரை அழகிய வார்த்தைகளில் தூங்கும் என் போன்ற தூங்கும் அப்பாவிகளையும் உசுப்புகின்றார்கள்:)))


புதுமாப்பிள்ளை உன் காதல் கதை என்ன என்று  ஒருத்தன் இணையத்தில் முகம் தெரியாமல் வந்து என்ன பாஸ் !
உருகும் காதலியா ?தொலைந்தவன் காதலா ?இல்லை விழியில் வலி தந்தவனே ?
இல்லை இனி எழுதும் தொடர் தான் உண்மையான உங்க அனுபவமா ?

என்று வம்பில் மாட்டிவிட நினைக்கும் அன்பு உள்ளங்களுக்கு தெரியாது நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போன கதை :))) 
இருந்தாலும் அவன் கேட்ட காதலர் தின கடந்த கால அனுபவம் சொல்லணும் என்று எனக்கும் காதல் வந்த கதை இது !

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கோ !அது 1996 அப்ப  படித்துக்கொண்டு இருந்தேன் இனிப்படிப்பு வேண்டாம் இத்தனை காலம் கடைசி வாங்கில் இருந்து கணக்கு வாத்தியார் கருக்குமட்டையால் அடித்து உன் கையில் காயம் பட்டு வரும் நிலையை விட்டுவிட்டு உதவாக்கரையாக இருக்காமல் உருப்படு என்று என்னையும் வியாபாரக்கடைக்கு வா என்று என் மாமா சொல்லியதை நம்பி என் தாயும்  வவுனியா அனுப்பிய நிலையில்  !


அங்கு வந்து நான் அடுத்த கட்டம் என்ன என்று காத்து இருந்த போது தான் ஊர் தாண்டி வந்தால் கட்டுப்பாடு போய்விட்டது எங்க பார்த்தாலும் காதலர் தினம் என்று பேச்சு என் நண்பர்களும் சேர்ந்து கொள்ள காலையும் மாலையும் கற்குழியில் குந்தியிருக்கலாம் என்றால் ஒழுங்கா படிக்கவும் இல்லை இதில் வேற உதவாக்கரைக்கு ஒரு காதல் ஒரு கேடா என்று எங்க மாமா கையால் அடித்தால் காயம் வந்து விடும் வீட்டில் அடித்த்தால் விடுதலைக்கு போய்விடுவானோ என்று நினைத்தார் போல நானோ அடுத்த காதலர்தினம்  வருவதற்கு முன் எப்படியும் அன்று  கேட்டுவிடவேண்டும் என்று நினைத்ததுதில் என்ன பிழை ?? கேட்டது பிழை என்று தேஞ்ச (துடைப்பத்தால்)தும்புத்தடியால்  முதுகில் போட்டார் பாருங்க !

தாங்க முடியாத காதல் வலி !!

முடிவு செய்தேன் நான் கட்டினால் இவளத்தான் கட்டணும் .என்று நினைக்கவில்லை .உருகுதே மருகுதே என்று சொல்லவில்லை .காதல் வந்ததும் காதலை யாருக்கும் என்றோ ?காண்பதில் எல்லாம் தலைகீழ் தோன்றம் என்றோ ?

நினைத்து நினைத்துப் பார்தேன் என்றோ ? பாடவில்லையே !

பார்த்தேன் பார்த்தேன் என்றும் ஏனோ எனக்குள் .

உன்னைப் பார்த்த பின் நானாக இல்லையே .என்று ஒரு உணர்ச்சிப் போராட்டம்.

 அவள் ஒன்றும் அப்படி அழகில்லை கொடியிலே மல்லிகைப் பூ ஆனால் சுமார் தேவதை .

அவள் அப்படித்தான் !

நானே பணக்காரன் இல்லை .நானே ராஜா நானே மந்திரி போல என் வழி தனி
வழி .அவளிடம் சென்றேன் அன்பே அன்பே என்னைக் கொள்ளாதே !

சொல்லிவிடு வெண்ணிநிலவே ..உன்னைக்கொடு என்னைத் தருவேன் .
காதல் சுகமானது .

நானும் உன்னை நேசிக்கின்றேன் .நீயோ பாணுபிரியாபோலவோ ,சினேஹா போலவோ ,சிங்கரவேலன் குஸ்பூ போலவோ இல்லை .

என் நெஞ்சைக்கிள்ளாதே என்றேன் அவளிடம் .

அவளோ காதலர் தினத்தில் 'உள்ளத்தை அள்ளித் தந்தா'  நீ ஒரு கோடீஸ்வரன்  !அவள் அறிமுகம் ஆன  அந்த மலைக்காட்சி இன்னும் மனதில் நெஞ்சில் ஆடும் பூ  .

இன்னொரு நண்பன் எனக்கும் கிடைத்தது ம் அந்த மலையகத்தில் .அதை முதலில் சொன்னேன்  அவளிடம். பின்  உனக்கு 18 எனக்கு 20 .

சொல்லாயோ வாய் திறந்து ,பொத்தி வைச்சுக்கோ எந்தன் அன்பு மனசை நினைவுச்சின்னம் மாதிரி என்றேன் .

போடாப் போடா புண்ணாக்கு என்றால் அவள் அன்புத்தம்பி .

காதல் வந்தால் காதலர் தினத்தில் என்னவிலை அழகே என்று தொடங்கி உருகி உருகி உருகும் காதலிபோல இல்லாமல் .

வைரமுத்துவைக் கொண்டு எழுதி அதில் "படைத்தான் உன்னையே மலைத்தேன் தினம் தினம் உன்னை நினைக்கின்றேன்  என்று மயங்கிய கதையை கதிர் அண்ணாவிடம் சொல்ல  அவர்  ரகுமானிடம் சென்றதன் விளைவு காதலர் தினம் வந்துவிட்டது .

பிறகு என்ன தாண்டியார் ஆட்டம் ஆடி எனக்கும் காதலர் தினம் பிடிக்கும் :)))

.நான் அவளுக்கு பூக்கொடுக்கவில்லை பாடல்  தந்தால் வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு நாம் ஓடிவந்தாலும் உள்ளத்திலும் ,இதயத்திலும் இன்னும் தொடர்கின்றது காதலர் தினப் பாட்டுத் தான் எனக்கும் பிடிக்கும் கேட்டுப் பாருங்கள்!:)))))))!

தனிமரமும் மொக்கை போடும் :)))))))

இனிய துணையைத் தேடுங்கள் உனக்கென நானும் எனக்கென  நீயும் சேர்தே இருப்போம் இந்தப்பிறவியில்  என்ற நிஜமான அன்புடன்!

இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்!!

கற்குழி- இலங்கை வவுனியாவில் இருக்கும் ஒரு கிராமம்!ம்ம்ம்ம்

22 comments :

நெற்கொழுதாசன் said...

பாஸ் என்ன சொந்த கத இவ்வளவு சோகமா போகுது ...........ஆமா காதலை சொல்லி அடிவேண்டினத சொல்லலையே .............

angelin said...

ஆஅஹா அருமை !!!!அடி வாங்கினதை சொல்லவில்லை நேசன் :)))
தபு சங்கர் கவிதைகாதலர் ஆயிற்றே நீங்கள் ..உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய வாழ்த்துக்கள் .


அழகாய் படங்களையும் பாடல்களையும் காதலர் தினத்துகேற்றவாறு வரிசைபடுத்தி எழுதுயிருக்கீங்க ..

கவியாழி கண்ணதாசன் said...

காலத்திற்கேற்ற காதல்
பதிவு

இளமதி said...

நல்ல தொகுப்பு நேசன்!

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

முத்தரசு said...

வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

பல பாடல்களோடு கலக்கல்...

வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

அண்ணே இந்த மாற்றம் நான் உங்களிலிருந்து ஆசைப்பட்டதுதான் :)

காதல் பற்றி உங்களிடம் இந்தக் கிறுக்கன் பேசவா வேனும்....
பாடலிலே பதிவைக் கொண்டுபோய்விட்டீர்கள்...

செங்கோவி said...

கொன்னுட்டீங்க!!!!

s suresh said...

காதல் கதை இனிமை! இறுதியில் பாடல் பகிர்வு அருமை! நன்றி!

athira said...

ஹா..ஹா..ஹா.. முதல் காதல்.. ஃபெயிலாகிட்டுதோ நேசன் ? அவ்வ்வ்வ்:).. காதலர் தினமும் வௌனியாவும்.. மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.. அருமையான நினைவுகள்.

மாத்தியோசி மணி மணி said...

பிந்திய காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா! அதுசரி வவுனியா - கற்குழியில் இருந்தீர்களா? ஆவ்வ்வ்வ்வ்வ்! அப்போ உங்களை நான் எங்காவது கண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்!!

தனிமரம் said...

பாஸ் என்ன சொந்த கத இவ்வளவு சோகமா போகுது ...........ஆமா காதலை சொல்லி அடிவேண்டினத சொல்லலையே .............

13 February 2013 13:01 /பப்ளிக்கில் இப்படியா!ஹீஈஈஈஈஈஈ வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

ஆஅஹா அருமை !!!!அடி வாங்கினதை சொல்லவில்லை நேசன் :)))
தபு சங்கர் கவிதைகாதலர் ஆயிற்றே நீங்கள் ..உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய வாழ்த்துக்கள் .


அழகாய் படங்களையும் பாடல்களையும் காதலர் தினத்துகேற்றவாறு வரிசைபடுத்தி எழுதுயிருக்கீங்க ..

13 February 2013 13:14 //ஆஹா அஞ்சலின் அக்காளுக்கும் இது கேள்விப்பட்டு விட்டதே!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலத்திற்கேற்ற காதல்
பதிவு//நன்றி கவியாழி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

நல்ல தொகுப்பு நேசன்!

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

13 February 2013 15:49 //நன்றி இளமதி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துகள்//நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் முத்தரசு.

தனிமரம் said...

பல பாடல்களோடு கலக்கல்...

வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

அண்ணே இந்த மாற்றம் நான் உங்களிலிருந்து ஆசைப்பட்டதுதான் :)// ஏன் பாஸ் நான் எப்போதும் ஒரே நிலைதான்!ஹீஈஈ

காதல் பற்றி உங்களிடம் இந்தக் கிறுக்கன் பேசவா வேனும்....!! நான் அறியேன் பாய்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
பாடலிலே பதிவைக் கொண்டுபோய்விட்டீர்கள்...!! பாட்டு என் உயிர் /ம்ம் நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

13 February 2013 18:57

தனிமரம் said...

கொன்னுட்டீங்க!!!!!!ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈஈ வாங்க செங்கோவி ஐயா! நலம் தானே! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காதல் கதை இனிமை! இறுதியில் பாடல் பகிர்வு அருமை! நன்றி!

14 February 2013 04:17 //நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹா..ஹா..ஹா.. முதல் காதல்.. ஃபெயிலாகிட்டுதோ நேசன் ? அவ்வ்வ்வ்:)../ ஹீஈ அப்படி என்றால் என்ன நான் அறியேன்!!!! காதலர் தினமும் வௌனியாவும்.. மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.. அருமையான நினைவுகள்./நன்றி அதிரா வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

பிந்திய காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா!
// வாழ்த்துக்கு நன்றி மணிசார்!
அதுசரி வவுனியா - கற்குழியில் இருந்தீர்களா? !!ம்ம் வ்வுனியாவில் பலகாலம் இருந்தேன்!

ஆவ்வ்வ்வ்வ்வ்! அப்போ உங்களை நான் எங்காவது கண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்!!
!ஹீ இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்!ஹீஈஈஈஈஈஈஈஇ நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.
17 February 201