13 March 2013

விழியில் வலி தந்தவனே-11


இணைத்தலைமை நாடுகளின் இரகசிய கழுத்தறுப்பும் ,இனவாத கொள்கை வகுப்பாளர்களின் இறையாண்மை என்ற இத்துப்போன இனவெறியின் தூண்டுதலும் ,அந்த இனவாத கோஷம் கொண்ட கொக்கரிப்பின் கூட்டத்தலைவன் கொண்டுவந்த நாம் வெல்வோம்!(அப்பி திணுவெமு) என்ற அரசியல் கோஷம்.

 இலங்கையில் தனித்துவ ஈழத்தின்  இன்னொரு இனத்தின் இருப்பை மாவிலாறு என்ற மாயை ஊடாக யுத்த ஆற்றினை மடை திறந்த போது!


நாட்டில் யுத்தம் தீவிரமாகியது .

எல்லோரும் ஈழப்போராட்டாத்தில் போராடவேண்டும் .அப்போதுதான் ஒரு இலட்சியத்தீர்வு  கிடைக்கும்.


 எனவே போராட வலுவுள்ள அனைவரும் போராடவேண்டும் என்று வன்னியில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்த இறுக்கமான கட்டுப்பாட்டை தொடர்ந்து ,வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் போராட்டத்தில் இணையவேண்டும் என்ற நிலை.

இருப்பே கேள்வியாகும் போது வேற மார்க்கம்??

அப்படி இணைய மறுக்கின்றவர்களை கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கும் வேலையும் நடைபெற்றது.

வடகிழக்கு மாகாண முதல்வர்  என்ற பொம்மை ஆட்சியை ஈழத்தில் வரதராஜாப்பெருமாள் மூலம் முன்னர் இந்தியன் கொள்கை வகுப்புக்கூட்டம்  உலகநாடுகளுக்கு சொல்லிக்கொண்டே ஈழத்தில் உருவாக்கிய குழுவான ENDF போல இங்கும் பலர் தானாக முன்வந்து இணைந்தாலும் ,சிலர் புலிகளின் கண்களில் தண்ணிகாட்டிவிட்டு காடு வாய்க்கால் என்று ஒழிந்து திரிந்தனர்.

எங்கும் இது பற்றிதான் ஒரே பேச்சு . இனவாத தென் இலங்கை  ஊடகமும் ,அதன் அரச இயந்திரமும் இதை வலுக்கட்டயமாக பிள்ளை பிடிகாரர்கள்  என்று உலகநாட்டுக்கு பிரச்சாரம் செய்கின்றது என்பதைப்போல அவனை இயக்கம் பிடித்துகொண்டு போச்சாம் ,இவரின் பெட்டையை இயக்கம் பிடிச்சுகொண்டு போச்சாம்.என்ற செய்திகள் தான் முதன்மை பெற்றது.

இந்த நிலையில் தான் ஒரு நாள் சுகி ரகுவிடம் கேட்டாள் .ஏன் ரகு ?உங்களுக்கு பிரச்சனை வரும்தானே ?உங்கள் வீட்டில் எத்தனை பேர் ??யாரும் மண்மீட்புப் போராட்டத்தில் இருக்கிறாங்களா ????என்று அவள் கேள்விகள்.போராட்ட மண்ணிலும் மதரசுப்பட்டிணம் போல காதல் பூக்கும் தானே?? !


இல்லை சுகி எங்கள் வீட்டில் நான் தான் தங்கமகன் .போராடப்போகவேண்டும் நாடு என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கின்றதோ ?அதைச் செய்ய விதியின் பாதையில் விரல் பிடித்து இன்னும் சில நாட்களில் போய்விடுவேன்.

மண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை .

இந்த நூற்றாண்டில் புறநானுறும் ,கலிங்கத்துப்பரணியையும் வரலாற்றில் மீண்டும் பதிந்த வருகின்ற இனம் ஈழத்துச் சந்ததி என்பதை  படிப்பிக்கும் போது !

பாவைகள் யாரும் அன்பில் கட்டி அடிமை கொள்ளாதீர்கள் புதிய பாதை போகும் போது நம் உறவுகளை என்று எழுதிச் சொன்னவர்கள். என்ன ஆனார் ?என்று அன்று அந்தப்பள்ளியில் மேல் வகுப்பில் படித்தவர்களுடன் இருந்து எதேட்சையாக கேட்ட வார்த்தையும் மீள் ஞாபகம் வர நினைவூட்டியபோது http://poonka.blogspot.fr/2013/02/5.html.

சுகியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது ஈழத்தில் தமிழனாகப் பிறந்த பாவச்சுமையை எண்ணி!,

ஏன் ரகு நீங்கள் என்னை விரும்பினால் நான் அப்பாவிடம் சொல்லி  உங்களுக்கு பிரச்சனை வராமல் செய்யலாம் தானே? 
அப்போது அவளிடம்  சுயநலம் இருந்தது  திமுகாபோல குடும்பத்துக்காக கொள்கையை விற்பவர் அல்ல தன் தந்தை என்பதைப்புரியாத பேதை அவள் நீ என்னை லவ் பண்ணு உன்னை போராட்டத்துக்கு போகாமல் காப்பத்துகின்றேன்.என்று பகல்கனவு கண்டாள்!

நீங்க ஒன்றும் பிரச்சனை வராமல் செய்யவேணாம் .உண்ணவிரதம் இருந்து தமிழ்தலைவன் என்று பட்டத்துக்காக உலகநாட்டுக்கு படம் காட்டிய தலைவர் போல நினைக்காமல் உங்க அப்பாவை விடுங்க அது போதும். நான் என் வழியில் செயல்படுகின்றேன்.

அப்ப ரகு என் மேல உங்களுக்கு எப்பவும் விருப்பம் வராதா??

விரும்பம் வராது என்று இல்லை சுகி .உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது உங்கள் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதிப்பாங்களா?

நிச்சயம் இல்லை.எனவே நானும் உங்களை விரும்பி அதன்  பிறகு பிரிந்தால். அது எனக்கும் கஸ்டம் ,உங்களுக்கும் கஸ்டம்.
அதனால நான் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.

நல்ல நண்பனாக உங்கள் சுகதுக்கங்களில் கைபிடித்து வருவேன் எதிர்பார்ப்பு இல்லாத திறந்த சுதந்திரமான இருவழிப்பாதை நட்பினைப்போல எப்பவும் .

நல்ல ப்ரண்டா இருப்பன் லவ் எல்லாம் வேண்டாம்.

இதற்கு மேல் அவனுடன் காதல் யுத்தம் செய்ய அந்த மங்கைக்கு சக்தி இல்லை.

நீங்க என்ன விரும்புறீங்களோ ?இல்லையோ ?அது உங்கள் சுதந்திரம் பிரெஞ்சு நாட்டைப்போல ஆனால் நான் உங்களை எப்பவும் விரும்புவன் ரகு  நெஞ்சம் எல்லாம் நீயே என்று !

அட்லீஸ் ப்ரண்டா இருப்பன் என்றாவது சொன்னீங்களே அதுவே போதும்.!!இப்போதைய நிலையில்.


"உங்களை நினைத்து நான் சில கவிதைகள் எழுதியிருக்கேன். என் ஆசை ,நேசம் ,தேடல், விரகதாபம் ,எல்லாம் விளம்பி நிற்கும் அந்த கவிதைகள் காலத்துயரில், இனவாத யுத்த மழையில் ,காகிதங்கள் களவாடப்பட்டாலும் காற்றில் என் யாசகம் கையில் கிடைக்கும் காதலனே!

அந்தக்கொப்பியை என் பிரண்ட் கிட்ட கொடுத்துவிடுறன் நீங்கள் அவசியம் படித்துப்பார்க்கவேண்டும்.லங்கா ராணி போல !!

6 comments :

MANO நாஞ்சில் மனோ said...

மண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை//

நெருப்பில் சாட்டையை முக்கி அடிக்கும் வரிகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

சில வரிகள் சாட்டையடி...

லவ் நட்பாகும்...?

தொடர்கிறேன்...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசரே!நலமா?////நெஞ்சைப் பிழியும் சம்பவங்கள்.ஹூம்!!!!!!!!!!!

தனிமரம் said...

மண்ணுக்கு தலை வணங்கி போகும் மண்ணின் மைந்தர்கள் ஒன்றும் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு ஈன அரசியல் செய்யும் தலைவர்கள் போல இல்லை//

நெருப்பில் சாட்டையை முக்கி அடிக்கும் வரிகள்..!

13 March 2013 18:37 //வாங்க் ம்னோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ சூடாக!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

சில வரிகள் சாட்டையடி...

லவ் நட்பாகும்...?

தொடர்கிறேன்...//ம்ம் பார்ப்போம்!நன்றி வ்ருகைக்கும் கருத்துரைக்கும்.தனபாலன் சார்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசரே!நலமா?////நெஞ்சைப் பிழியும் சம்பவங்கள்.ஹூம்!!!!!!!!!!!

14 March 2013 00:15 //வணக்கம் ஐயா!ம்ம் நிஜம் தான் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா!