21 April 2013

விழியில் வலி தந்தவனே விரும்பியோர்!

வணக்கம் உறவுகளே !
விழியில் வலி தந்தவனே தொடரை தொடர்ந்த தனிமரம் என்ன இன்னனும் சுகியின் நினைவில்  சுந்தர மோகனம் பாடுதோ என்று என்னை ஒரு அன்பு நண்பர் முகநூலில் கலாய்த்தாலும் !

தனிமரம் என்னோடு இந்த தொடரில் கூடவந்தவர்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா?? 

பதிவுலகில் தொடர் என்றால் வரும் வாசர்களும் ,பின்னூட்டமும் ,ஹிட்சும் மிகக்குறைவு என்றாலும்! 

சில ஆதங்களையும் ,விடயங்களையும் எழுத்தில் பதிவு செய்வோம் !என்றாவது ஒருவர் தேடும் போது .அது அவர்கள் விழியில் விழும் என்ற  எதிர்பார்ப்பு எனக்கு எப்போதும் உண்டு.

 எங்கள் மண்ணில் நடந்த சங்காரம் எப்போதும் மனதில் ஒரு வலியாக தொடரும். என்றாலும் அந்த நேரத்திலும் சாதாரன மக்களின் மனநிலை என்ன ?ரகு போன்றோரின் கனவுகள் ?சுகி 
போன்றோரின் எதிர்ப்பார்ப்புக்கள் .எல்லாம் எப்படிப்பட்டன என்று ரகு நேரடியாக என்னோடு ஓர் இடத்தில் பகிர்ந்ததை .

சில காலத்தின் பின் தனிமரம் வலையில் சுதந்திரமாக எழுதிய திருப்தி எனக்குண்டு ..அத்தோடு இது விருதையும் தந்து என் வலையை அலங்கரிக்கின்றது..!

ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பின் வரும் காலங்களில் ஏனோ தடம் புரண்ட ரயிலைப்போல மாறிவிடுகின்றது.

 ரகு ஒரு பாதையில் சுகி ஒரு பாதையில் போனாலும் ஆசையும் ,கனவும் ,காதலும் பாலம் போட அதன் பின் இனவாத யுத்தம் என்ன செய்தது? என்பதை இந்தத்தொடர் அலசியது 

.இந்தத் தொடருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை .என்றாலும் சில கவிதைகள் தோன்ற சுகியும் ஒரு காரணம் .அதை உள்வாங்க ரகுவின் அன்பும் ஒரு  காரணம் .இந்த இருவரும் என்னை அதிகம் அறியாதவர்கள் .

அதுவும் தனிமரம் என்ற வலையில் இதைப்பதிவு செய்வதை ரகு அறிந்தாலும் ,சுகி என்றாவது ஒருநாள் அறியலாம் என்ற நட்பாசை இந்த நொடிவரை இருக்கின்றது.!

 காரணம் இன்னும் ரகு பாத்திரம் தனிமரமாக வாழ்கின்றான் என்பதில் தனிமரம் நேசனின் அன்பும், நட்பும் அவனுக்கு எப்போதும் தொடரும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையிருக்கு.

 எல்லாம் அவன் செயல் !

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வந்த முதல் வாசகர் திண்டுக்கல் தனபாலன் சார் அவருக்கு என் நன்றிகள் முதன் கண் .

பின் தொடர்ந்தவர் யோகா ஐயா அவரைத் தொடர்ந்து கவியாழி கண்ணதாசன்,கவிஞர் பாரதிதாசன்,இவர்களோடு வலையுலகில் நான் பிரமிப்பாக நோக்கும் தொடர் படைக்கும் செங்கோவி ஐயா,மின்னல்வரிகள் கணேஸ் அண்ணா ,தளிர் சுரேஸ் போன்றோரின் ஊக்கிவிப்பு இந்த தொடரை நிதனமாக எழுதக்காரணம் ..

அவர்களைத்தொடர்ந்து அஞ்சலின் ,அதிரா,இளமதி,சீனி,முத்தரசு,மாத்தியோசிமணி,ரெவெரி அம்பாளடியாள்,பூவிழி,பூந்தளிர்,போன்றோரின் ஆதரவு ,மகேந்திரன் ,நாஞ்சில் மனோ,ராச்,நெற்கொழுதாசன் ,பூங்கோதைச் செல்வன்,ஆத்மா, T.M.முரளிதரன் ,ஆதிரா,அருணா செல்வம்,ராச்,கரந்தை ஜெயக்குமார்,போன்றவர்களின் பின்னூட்ட ஊக்கம் இந்த விழியில் வலியை வலையில் ஏற்ற உந்து சக்தி என்றால் !

இந்த தொடரை தொடங்க முதல்க்கருவி ரகுவின் நட்பும் .அவனின் வழிகாட்டல் தடத்துக்கு தனிமரம் எழுத்தாணியாகினேன். இந்த எழுத்தாணி விடும் எழுத்துப்பிழைகளை திருத்திய என் தாய்க்கும், என் மனைவிக்கும் நன்றிகள்.

நான் வேண்டிய வண்ணம் இந்த காட்சிப்படம் வரைந்த நிகழ்வுகள் கந்தசாமிக்கும் என் நன்றிகள்  .

என் தொடருக்கு முகநூலில் விளம்பரம் செய்த நண்பர்கள் தளத்தின் பதிவாளர் ராஜ்க்கும் இந்த தொடரினை முகநூலில் விரும்பி லைக் செய்த உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

அத்தனை  உறவுகளின்  ஒத்துழைப்பும் ஊக்கமும் தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த இந்தத் தொடர்.!

மிகவும் ரசித்து ஒரு காதல் கதையை எழுத ஆதரவு தந்த ரகுவுக்கும், உங்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

எனக்குப்பிடித்த பாடல்களை தந்து உதவிய யூட்டியூப் சமுகதளத்திற்கும் ஒருகோடி நன்றிகள்.:))) 

என்னோடு விழியில் வலி தந்து என்னையும் இதுநாள் வரை  பிரியாத  இந்த ஐபோனுக்கு மொத்த நன்றிகள் இத்தனை உறவுகள் இவள் மூலமே :)))

அவள் கேட்கும் பாட்டு  இதுவோ???:))))

....

19 comments :

MANO நாஞ்சில் மனோ said...

ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பின் வரும் காலங்களில் ஏனோ தடம் புரண்ட ரயிலைப்போல மாறிவிடுகின்றது.//

மனதிற்கு வலி தரும் சத்தியமான வார்த்தை இது....!

நெற்கொழுதாசன் said...

நேரமும் காலமும் செய்ததடைகளால் சில இடங்களில் கருத்துக்களை பதிய முடியாமல் போய் விட்டது. மீண்டும் ஒரு தொடருடன் உங்களை எதிர்பார்க்கிறேன். அத்துடன் வலைச்சரத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

ரகுவும் சுகியும் என்றாவது ஒருநாள் காலம் சேர்த்து வைக்கலாம்... தொடர் முழுக்க வரும் பாடல்களை (காணொளி பாடல்களும்) தொகுத்து வெளியிடலாம்... நல்ல பாடல்கள்... தொடரின் வலியை கூட மறக்க வைத்தது சில பாடல்கள்... மீண்டும் ஒரு சிறந்த தொடரை தொடர வாழ்த்துக்கள்...

/// சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்...
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்...
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்... ///

நன்றிகள் பல...

Subramaniam Yogarasa said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///என்பெயர் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.ஏதோ என்னால் முடிந்தது.இதில் ஒரு திருட்டுத் தனமும் கூட!என்னுடைய நேரம் போக்குதலுக்கு உங்கள் தளமும்,ஹ!ஹ!!ஹா!!!தொடரட்டும் எழுத்துப் பணி!!!!

இளமதி said...
This comment has been removed by the author.
இளமதி said...

நேசன் நலமா?
உங்களின் அழகிய பதிவுகளை அவ்வப்போதே வாசித்தாலும் நல்ல பின்னூட்டத்தை தரவேண்டுமென மறுபடி வருவதற்குள் வேறு ஏதாவது வந்துவிட அது அப்படியே விடுபட்ட சந்தற்பங்களே எனக்கு.
அதற்காக மனம் மிகவருந்துகின்றேன்.
அப்படி இருந்தும் இங்கு என்னையும் நினைவுகூர்ந்தமைக்கு என் நன்றிகள்.

வருங்காலங்களில் என் கருத்துப்பகிர்வினை இங்கு கட்டயம் தருவேன்.

தொடருங்கள்....

K.s.s.Rajh said...

தொடர்ந்து பல சிறந்த பதிவுகளை தரவாழ்த்துக்கள் பாஸ்

ரெ வெரி said...

நேசரே நலமா?

பால் கோப்பி குடித்து நாளாகிவிட்டது...சொந்தங்களுடன் கதைத்தும்...

நிறைய எழுதுங்கள்...ஐ போன்ல இவ்வளவு சாதித்த ஒரே ஆள் நீங்க தான்...இன்னும் அதில் தமிழில் கமெண்ட் கூட எழுத முடியாமல் தான் இருக்கிறேன்...

ஒரு பதிவு எழுதுங்களேன்...அது பற்றி...

பிறகு சந்திக்கலாம்....

யோகா அய்யா நலமா?

poovizi said...

நன்றி சகோ நினைவில் நின்றதற்கும் அருமையான கவிதை போன்று வலிமிகுந்த வண்ண தொடரை கொடுத்தற்கு உண்மை காதல் என்றும் வாழும் உங்கள் காதபாத்திரங்களுக்கும்

தனிமரம் said...

ஒவ்வொரு எதிர்பார்ப்பும் பின் வரும் காலங்களில் ஏனோ தடம் புரண்ட ரயிலைப்போல மாறிவிடுகின்றது.//

மனதிற்கு வலி தரும் சத்தியமான வார்த்தை இது....!

21 April 2013 17:23//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும்.

தனிமரம் said...

நேரமும் காலமும் செய்ததடைகளால் சில இடங்களில் கருத்துக்களை பதிய முடியாமல் போய் விட்டது. மீண்டும் ஒரு தொடருடன் உங்களை எதிர்பார்க்கிறேன். அத்துடன் வலைச்சரத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகப்படுத்தியமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா//நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

21 April 2013 17:32

தனிமரம் said...

ரகுவும் சுகியும் என்றாவது ஒருநாள் காலம் சேர்த்து வைக்கலாம்... தொடர் முழுக்க வரும் பாடல்களை (காணொளி பாடல்களும்) தொகுத்து வெளியிடலாம்... நல்ல பாடல்கள்... தொடரின் வலியை கூட மறக்க வைத்தது சில பாடல்கள்... மீண்டும் ஒரு சிறந்த தொடரை தொடர வாழ்த்துக்கள்...

/// சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்...
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்...
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்... ///

நன்றிகள் பல...//நன்றிகள் தனபாலன் சார் வருகைக்கும் விரிவான பின்னூட்டப்பாடலுக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///என்பெயர் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.ஏதோ என்னால் முடிந்தது.இதில் ஒரு திருட்டுத் தனமும் கூட!என்னுடைய நேரம் போக்குதலுக்கு உங்கள் தளமும்,ஹ!ஹ!!ஹா!!!தொடரட்டும் எழுத்துப் பணி!!!!

21 April 2013 21:58 //மாலை வணக்கம் யோகா ஐயா.நாம் நலம் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன் நலமா?
உங்களின் அழகிய பதிவுகளை அவ்வப்போதே வாசித்தாலும் நல்ல பின்னூட்டத்தை தரவேண்டுமென மறுபடி வருவதற்குள் வேறு ஏதாவது வந்துவிட அது அப்படியே விடுபட்ட சந்தற்பங்களே எனக்கு.
அதற்காக மனம் மிகவருந்துகின்றேன்.
அப்படி இருந்தும் இங்கு என்னையும் நினைவுகூர்ந்தமைக்கு என் நன்றிகள்.

வருங்காலங்களில் என் கருத்துப்பகிர்வினை இங்கு கட்டயம் தருவேன்.

தொடருங்கள்....//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்ந்து பல சிறந்த பதிவுகளை தரவாழ்த்துக்கள் பாஸ்//!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ராஜ்!

தனிமரம் said...

நேசரே நலமா?நலம் ரெவெரி அண்ணாச்சி.

பால் கோப்பி குடித்து நாளாகிவிட்டது...சொந்தங்களுடன் கதைத்தும்...!!ம்ம்

நிறைய எழுதுங்கள்...ஐ போன்ல இவ்வளவு சாதித்த ஒரே ஆள் நீங்க தான்...இன்னும் அதில் தமிழில் கமெண்ட் கூட எழுத முடியாமல் தான் இருக்கிறேன்...

ஒரு பதிவு எழுதுங்களேன்...அது பற்றி...

பிறகு சந்திக்கலாம்..!மீண்டும் சந்திப்போம்...

யோகா அய்யா நலமா? யோகா ஐயா நலமாக இருக்கின்றார்..நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சகோ நினைவில் நின்றதற்கும் அருமையான கவிதை போன்று வலிமிகுந்த வண்ண தொடரை கொடுத்தற்கு உண்மை காதல் என்றும் வாழும் உங்கள் காதபாத்திரங்களுக்கும்

22 April 2013 08:11 //நன்றி பூவிழி வருகைக்கும் கருத்துரைக்கும்.

athira said...

அச்சச்சோ தொடர் முடிஞ்சுதோ? கவலையாக்கிடக்கு. என் பெயரையும் சேர்த்திருக்கிறீங்க.. ஆனா இடையில ஒபாமா அங்கிளுக்காக அண்டாட்டிக்கா போனதால என்னல பல பதிவுகளுக்கு சமூகமளிக்க முடியாமையிட்டு வருந்துகிறேன்ன் + மன்னிக்கவும்.

athira said...

சூப்பர் பாடல். இதில அவ மெல்லிசா இருக்கிறா...:).