22 May 2013

என் உயிரே நீ என்னுள் இருந்து விலகும் நொடி-2


பாரிஸ் தேசத்தில் எல்லோரும் சொந்த மாடிவீடோ அல்லது தனி வீடோ அதிகம் சிலர் வாங்க நினைக்க மாட்டார்கள்  .என்றாலும் ஒரு தொடர் மாடியில் ஒரு வீட்டுச் சொந்தக்காரணில் ஒருவன் தான் இந்த அஜய்.

அவன் தான் இந்த அறைக்குச் சொந்தக்காரன் அடுப்படியில் வேலை என்பதால் அதிகாலையில் எழம்ப மாட்டான். எனக்கோ அங்காடியில் அதிகாலை வேலை .

அதிகாலை 4 மணிக்கு  சினேஹா நடிகை போல என் பாரிஸ் காதலி நினைவில் கட்டிலில் புரளும் அந்த நேரத்தில் இந்த அழைப்பு வந்து ஆப்புவைத்துவிட்டதே !

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கும் ஆசை இனி வராது .என்னடா கைபேசியில் அடுத்த அழைப்பா ??போய் எடு அடுத்த மாதம் இன்னொரு அறைபார்த்துப் போய்விடு .

எந்தூக்கத்தை தொலைக்காத மச்சான். சரிடா. இந்த நேரத்தில் யாரோ ?எதுக்கும் கைபேசியில் வரும் அழைப்பினை நோட்டம் இட்டான் .அது ஸ்கைப் அழைப்பு .என்ன ?யாரு ,எங்க இருந்து ,என்று என்னைக்கேள்வி கேட்கமுன்,

 இந்த அஜய் பக்கம் கடந்து அடுப்படிக்கு எழுந்து போனான் சேகர்.

 மறுமுனையில்  அங்கிருந்து   அழைத்தது அன்பு நண்பன் பாபு!

 மச்சான்  சேகர் சாரிடா தூக்கத்தை குழப்பிவிட்டேனே? எனக்கு ஒரு பிரச்சனை மச்சான். என் நேரம் சரியில்லை .சொத்திடலாம் போல இருக்கு !


உன்னைவிட்டாள் எனக்கு இப்ப யார் உதவுவார்கள்?,,

 நாம் அப்படியா  தொழிலில் பழகினோம்?,, கொஞ்சம் இருடா! என்னாச்சு பாபு?? எது என்றாலும் கொஞ்சம் சாயந்திரம் பேசுவம் .

நான் வேலைக்கு கிளம்பும் நேரமாகுது .செத்துப்போவேன் என்றுமட்டும் என்னோட பேசாத .உனக்கு எது வந்தாலும் நான் மிருனாவுக்கு பதில் சொல்லவேண்டியவன் .

மறந்திடாத கவ்வாத்திக்கத்தியை தீட்ட வைக்காத !!ஆமாடா காதலில் வெட்டுப்படுவதை விட அந்தக்கத்தி மேல் !

சரி நீ வேலைக்கு கிளம்பு நான் பிறகு பேசுறன்..

மச்சான் டென்சன் வேண்டாம் .இப்ப நீ எங்க இருக்கின்றாய்? 
பதுளையில் தான்


. ஏண்டா இழவு பிடிச்சவனே !அங்க யார் போகச்சொன்னது உன்னை,  ?

நான்  வேலைக்கு இறங்கும் நேரம் .சாயந்திரம் வேலையாள் வந்து   பேசுறன் இன்னும் ஒரு 10
மணித்தியாலம் பொறு.!

***அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!''

என்னடா இஸ்கைப்பில் எனக்குப்புரியக்கூடாது என்று சிங்களத்தில் கதைக்கின்றாயா  சேகர்??


உனக்கு என்ன தெரியும் சகோதமொழி சிங்களம் பற்றி ,எந்த சிங்களம் பேசும் இலங்கை குடிமகன் வெட்ட வேண்டும்.கொத்தவேண்டும் .சுற்றுலா போனால் வேட்டி உருவி வீதியில் அடிக்க வேண்டும் .இது தானே உன் அரசியல் சித்தாந்தம் ,?அதுவும் புத்த பிக்கு எல்லாம் இனவாதி உன் பார்வையில் போடா .உன் நாடும் ,உன் தேசமும் ,உன் வெறியும்.

 நான் தனியாள்  எனக்கு அரசியில் ஒரு வெட்டு ஜால்ரா !விசில் ஊதும் சினிமா  ரசிகன் போல இல்லை நான். காலையில் என்னை சூடாக்காத அஜய்! நான் கோப்பி குடிக்கும் சுடுதண்ணி! ம்ம் உன்ர லைக்கா போன் தாடா அஜய் .

இந்தா!

 மறுநிமிடத்தில் பதுளையில் இருக்கும் குனாவிற்கு அழைத்தான் சேகர். ஹலோ மச்சான் நான் சேகர் நம்ம பாபு ஏதோ சிக்கலில் இருக்கின்றான் .ஒருக்கா போய்ப்பாரு நான் இன்னும் 10'மணித்தியாளத்தில் பேசுரன். ஓக்கேடா இப்போதே போறன் அவனிடம்!

என்ன சேகர் அப்ப இந்தமுறை சீட்டும் ,பிரெஞ்சுக்காரியுடன் டூயட்டும் பாட உன்னால் முடியாது போல :)))உனக்கு நக்கல்  அஜய் சரி நான் வேலைக்குப் போறன். நீ தூங்கு என்னைப்போல நீயும் ஒரு காலத்தில் 7 நாளும் வேலை செய்யும் போது அப்ப பாரு நான் தூங்குவேன் டூயட் பாடிக்கொண்டு!!!
-----
தொடரும்.....

***அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!''--கண்டிப்பாக மாலை நான் கதைப்பேன் கஸ்ரம் இல்லைத்தானே ,?,என்று பொருள்படும் சகோதரமொழி சிங்களத்தில்!

முந்தைய் பதிவு இங்கே--http://www.thanimaram.org/2013/05/1.html

12 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

சீனு said...

//கவ்வாத்திக்கத்தியை // அப்படினா என்ன ?

//அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!// ஊ சிங்களம் இப்படி தான் இருக்குமா, எங்க கீதை சமஸ்கிருதம்ன்னு போயிடீங்கலூன்னு நினைச்சே

Subramaniam Yogarasa said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///ஆட்டம் ஆரம்பம்!தொடருங்கள்,தொடர்கிறேன்!!!

Subramaniam Yogarasa said...

சீனு said...
//கவ்வாத்திக்கத்தியை // அப்படினா என்ன ?////அது,தேயிலை/இறப்பர் தோட்டங்களில் பாவிக்கும் ஒரு வகைக் கத்தி.(KNIFE)

ரெ வெரி said...

நலமா நேசரே..

அதிகாலை 4 மணிக்கு சினேஹா நடிகை போல என் பாரிஸ் காதலி நினைவில் கட்டிலில் புரளும்...

12+ -:)

சுவாரஸ்யம்... தொடருங்கள்...தொடர்கிறேன்...

யோகா அய்யா கருவாச்சி எல்லாம் FACEBOOKல போல..

யோகா அய்யா.. கருவாச்சி நலமா?

Subramaniam Yogarasa said...

வணக்கம் ரெ வரி!நலமா?நாங்க பேச்சு புக்க விவாகரத்து பண்ணுறதா முடிவு பண்ணியிருக்கோம்.சீக்கிரத்தில கிடைச்சிடும்!!!

தனிமரம் said...

தொடர்கிறேன்...//வாங்க தனபாலன் சார் முதல் பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கவ்வாத்திக்கத்தியை // அப்படினா என்ன ?
//
/கவ்வாத்திக்கத்தியை // அப்படினா என்ன ?////அது,தேயிலை/இறப்பர் தோட்டங்களில் பாவிக்கும் ஒரு வகைக் கத்தி.(KNIFE)
//ம்ம்
//அனுவாரமே ஹந்தவ மம கத்தக்கரனவா அவுலக்நானே!// ஊ சிங்களம் இப்படி தான் இருக்குமா, //எங்க கீதை சமஸ்கிருதம்ன்னு போயிடீங்கலூன்னு நினைச்சே//ம்ம்ம் நன்றி சீனு வருகைக்கும் கருத்துரைக்கும்.

22 May 2013 20:16

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///ஆட்டம் ஆரம்பம்!தொடருங்கள்,தொடர்கிறேன்!!!

22 May 2013 23:11 //வணக்கம் யோகா ஐயா.நீங்கள் நலம் நாதானே! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

சீனு said...
//கவ்வாத்திக்கத்தியை // அப்படினா என்ன ?////அது,தேயிலை/இறப்பர் தோட்டங்களில் பாவிக்கும் ஒரு வகைக் கத்தி.(KNIFE)//நன்றி யோகா ஐயா கருத்தினை விளக்கியத்துக்கு.

தனிமரம் said...

நலமா நேசரே..

அதிகாலை 4 மணிக்கு சினேஹா நடிகை போல என் பாரிஸ் காதலி நினைவில் கட்டிலில் புரளும்...

12+ -:)//ம்ம் கொஞ்சம் அவசரம்.ஹீ

சுவாரஸ்யம்... தொடருங்கள்...தொடர்கிறேன்../ஹீ நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்..

யோகா அய்யா கருவாச்சி எல்லாம் FACEBOOKல போல..//ஹீ நானே இப்போது அதிகம் போவதில்லை!ம்ம்

யோகா அய்யா.. கருவாச்சி நலமா?அவர்கள் நலம் கொஞ்சம் தனிப்பட்ட வேலை அதிகம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ரெவெரி!

23 May 2013 06:19

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்