02 June 2013

ராஜாவுக்கு ஒரு வாழ்த்து மாலை!!!

  ஒரு இசை மேதைக்கு இன்று இன்னொரு ஆயுள் கூடப்போகிறது.அவருக்குத்தான் ஆயுள் கூடுதே தவிர அவரின் இசைத் திறமைக்கு ஆயுள்  அனுபவம் அதிகம்  ஆம் இன்று(2/6/43)இந்திய இசைமேதை என்று மட்டுமல்லாது உலகில் பீத்தேவனின் இசைக்கு அடுத்த இடம் எங்கள் ராகதேவன் இசையானிக்கு இன்று பிறந்த நாள்!

வானவில்லைப் பார்பது போல் ஒரு ரசிகனாக அவரை வியர்ந்து பார்க்கிறேன் பண்ணைபுரத்து ராசையா இளையராஜாவாக அன்னக்கிளி முதல் அடி  எடுத்து வந்து இன்று அழகர்சாமி குதிரை வரை என்னை தன் இசையால் ஒரு தந்தை போல் ,நண்பன் போல் ,குருவாக இருந்து என்னை ஆளுகின்றார். அவரை இன்நாளில் வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலால் ஒரு குருவைப் போல் வணங்குகின்றேன்!நீண்டகாலம் வாழ்ந்து இசைத்தொண்டு ஆற்றனும் என்று!

அவருக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இசையமைப் பாளர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள் ஆனாலும் என் முதல் தெரிவு எப்போதும் அன்னை போன்ற ராஜாவின் இசைதான்.
"காதல் ஓவியம் ஒலிக்கும்" இக்கணங்களில் அவரின் குரல் ஊடாக நான் என் தொலைந்து போன அழகிய அமைதியான கிராமத்தின் வயல்களில் ரயர் சில்லுவண்டி ஓட்டும் ஒரு சிறுவனாக்  கரைந்து போகின்றேன்.

 அன்நாளில் இவரின் இசையை காற்றலையில் கொண்டு வந்தது இலங்கை ஒலிபரப்பின் மத்திய/சிற்றலை வரிசைகளும் ,திருச்சிராப்பள்ளி வானொலியின் திரைகடல் ஆடிவரும் தென்றலுமே!

இன்று பலதடங்கள் தாண்டி ராஜாவும் வந்துவிட்டார் நானும் புலம் பெயர்ந்து தடம் மாறிப் போனாலும் அவரின் இசையை கேட்கும் ரசனையை   மாற்ற முடியவில்லை என்னால்!

ராஜாவை இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி நல்ல பாடல் ஆசிரியர், பாடகர், எழுத்தாளர் என்று பல்கலைஞர்  இவரின் பாட்டுத்திறமைக்கு உதாரணம் பல அதில் இதயக்கோயில் படத்தில் எழுதி இசையமைத்துப் பாடிய "இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்""""வரிகளின் ஊடே இரு அடிகள் ""நீயும் நானும் போவது காதல் என்ற பாதை சேரும் நேரம் ..வந்தது மீதித்தூரம் வரிகளில் கற்பனையின் உச்சம் ஆத்மராகம் ஒன்றில் ஆடும் உயிர்கள் இரண்டு என்ற வரிகளில் படத்தின் மையப்புள்ளியை சுட்டி அற்புதமான வார்த்தையை கோத்திருப் பார்.

அதிகமான பாடல் எழுதி மெட்டமைத்துப் பாடியவர் ராஜா ஒருவரே!ஆண்பாவத்தில் அவர் போட்ட காதல் கசக்குதய்யா பாடல் என்றும் நிலைத்து நிற்கும் கவிவரிகள் காதலர்களின் பிரிவில் இப்பாடல் என்றும் ஒலிக்கும்!

 ஆற்றுப்படுத்தும் வரிகள் என்று நண்பர் கானாபிரபா. சில நல்ல பாடல்களை  குறிப்பிட்டிருந்தார் அவற்றில் எனக்குப் பிடித்தது .பின்வரும் பாடல்"" பூம்பாறையில் பொட்டுவைத்த பூங்குருவி ""என்ற பாடல் எழுதி மெட்டுப் போட்டு பாடியிருந்தார்!

பலபாடல்களை ஒலி/ஒளியேற்ற போதிய கால நேரங்களை புலம் பெயர் தேசம் வழங்க மறுக்கிறது!

இவரின் கற்பனைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு நாடோடித் தென்றல்   படத்தில் அவரின் கைவண்ணத்தில் எழுதிய பாடல் தான்" ஒருக்கணம் ஒரு யுகமாக  .. ஏன் தோன்ற வேண்டுமோ என்ற பாடலின் காதலின்  தவிப்பை இவர் போல வடம் பிடிக்க முடியுமா?? என பலதடவை ஜோசிப்பேன்!

 தேர்ந்த வார்த்தைகள் அச்சரமாக வந்து போகும் " பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில்  நீதனம்மா ! என்ற வரிகளை பின்னிரவுப் பொழுதில் கேட்டாள் இசையைத்தாண்டி அவரின் குரலில் வரும் பாவத்தை காதலில் சோக ரசத்தை பிழிந்து கொடுத்திருப்பார்!துரதிஸ்டவசம் இப்பாடல் இறுவட்டில் மட்டுமே பதிவானது படத்தில் பாரதிராஜா சதிசெய்துவிட்டார் சேர்கவில்லை!

பிரபல்யமான நடிகர் எல்லாருக்கும் பின்னனிபாடியிருக்கிறார் இவரின் இசை தமிழ்.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என்று பலமொழியில் இசைக்கின்றார்.இதுவரை 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்கிறது விக்மீடியா!

மேத்தா சொல்வதுபோல பக்கம் பார்த்துப் பேசுகிறேன் எனில் இந்திப் பாடல்களை உச்சரித்த வாய்கள் எல்லாம் மண்வாசனைப் பாடல்களை ஒயாமல் உச்சரித்து கிராமத்துக் காதலை பட்டிதொட்டியில் கொண்டு சேர்த்து ஹிந்தியின் ஆதிக்கத்தை ஒர் இரவில் யுத்தம் இன்றி இசையாள் தமிழ் பக்கம் தலையசைக்க வழி செய்தவர் ராஜா என்று!


இசைஞானம்,இலக்கிய ஞானம், கவிஞானம் அமையப்பெற்ற ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே என்று அறுதியிட்டு கூறுகிறார் கவிஞர் முத்துலிங்கம்!

இளையராஜா இசைமட்டும் அல்ல நல்ல கவிஞர்  தமிழ்த்திரையில்  வெண்பாக்கள் எழுதத் தெரிந்த  வித்தகர்! இலக்கியத்தில் இவரின் பால்நிலாப் பாதையில்
" என்னைப் பெற்ற போது இழந்த சுமையை-தாயே உன்னை இழந்த போது என்மீது ஏற்றிவைத்துச் சென்றாயோ?"என்று தாயின் அன்பை பாடுகிறார்!

என் நரம்பு வீணை  ஞானகங்கா,வழித்துணை, இளையராஜாவின் படைப்புக்கள்   என இதுவரை 8 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

இவரின் இன்னொரு முகம் மூர்க்காம்பிகையின் மீதான பக்தி அதனால்தான் ரமணமகரிஸின் போதனையை பின்பற்றி   ஆன்மீகத்தில் தன் புகழ் எதுவென்று தெரிந்தும் ஒரு ஞானி போல் பற்று இன்றிய அவரின் பார்வையை  என் நரம்பு வீணை  என்ற வெண்பா நூலில்

""காற்றில் பிறக்கும் இசைபோல் எனதுள்ளில்
ஊற்றாய்ச் சுரந்திடும் உன்கருணைத் தேன்கண்டு போற்றுதலே பூண்டொழுகி நின்றேன்! பிறவிமலச்
சேற்றினும் செம்மலரே செப்பு! என்று தன்னடக்கம் காட்ட முடிகிறது!

இளையராஜாவின் மீது அதிகமான விமர்சனங்கள் உண்டு வைரமுத்துவின் மலர்கணைகள் வசைமொழியாக அன்நாட்களில் சில பத்திரிக்கைகள் களம் கொடுத்து தங்கள் தலித்விரோத போக்கை எள்ளி நகைத்தது .மீளமுடியாது என்றார்கள் காதலுக்கு மரியாதை மீண்டும் ஒரு முதல் மரியாதை போல பட்டிதொட்டி எங்கும் வீறுகொண்ட யானை போல் எல்லாவற்றுக்கும் இசையாள் பதில் சொன்னார்!

நான் கடவுள் இசையில் சாயி +ஜெயமோகன்  மோதல்கள் ஊரறிந்தது!
காய்த்த மரம் கல்லடி படும் என்பதற்கு பல இடங்களில் ராகதேவன் மீது பொறாமை நெஞ்சங்கள்  தலைகணம் பொருந்தியவன் அனுசரிக்கத் தெரியாதவன் என்று தரம்தாழ்த்தியவர்களுக்கு  ஞானியின் மெளனம் தான் பதிலாகியது .அது சிம்பனியில் திருவாசகமாக உலகிற்கு கிடைத்தது.

 திரையில் ஒரு படத்தினை தன் பின்ணணி இசையால் காவியாம் ஆக்கும் வித்தை தெரிந்தவர் .சிந்துபைரவி,முதல் மரியாதை, சலங்கை ஒலி,பிதாமகன், சேது.அழகி  என அடுக்கலாம் அணிச்சிறப்புக்கள்.

 விஜய் அண்டானி சொல்வது போல் இளையராஜா என்ற யானை     தின்று போட்ட சக்கையை வைத்துத்தான் நாம் இசைக்கிறோம் என்று வார இதழ் ஒன்றில் கூறியிருந்தார்!

 இளைஜராஜாவின் இலக்கியத்தை அழகாக கவிஞர்  கருணாநிதி இளையராஜாவின் படைப்புக்கள் என்ற நூலாக வெளியிட்டுள்ளார்!

 கம்பனின் புகழ் பாடும் கம்பவாதிரி ஜெயராஜ போல பேசும் கலை தெரியாத   இந்த பாமர இசை ரசிகனும் ராகதேவன்  இசையை குருடன் தடவிப் பார்த்த யானையைப் போல் நானும் சிலதை அசைபோடுகிறேன்!
இன்று பிறந்த நாளை இசைக்குடும்பமாக கார்த்திக்ராஜா,யுவன் சங்கர்ராஜா,பவதாரினி  காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா என்று இசையாள் நிறைந்திருக்கிறது!


13 comments :

Subramaniam Yogarasa said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?///இசையில் முத்திரை பதித்தவர் ராஜா.துளி சந்தேகமும் இல்லை,எனினும் சக கலைஞர்களை எந்த அளவுக்கு அவர் மதிக்கிறார் என்பது.......................வேண்டாம்,விட்டு விடலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

மாலையை அழகாக தொடுத்துள்ளீர்கள்... இசைஞானிக்கு(ம்) வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

நானும் ஒரு வாழ்த்தைப் போட்டிட்டு எஸ் ஆகிடுறேன்

Anonymous said...

வணக்கம்

இசைஞானி பற்றி அருமையன விளக்கம் வாழ்த்துக்கள் தனிமரம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

இசை ஞானிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அய்யா. நன்றி

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?///இசையில் முத்திரை பதித்தவர் ராஜா.துளி சந்தேகமும் இல்லை,எனினும் சக கலைஞர்களை எந்த அளவுக்கு அவர் மதிக்கிறார் என்பது.......................வேண்டாம்,விட்டு விடலாம்!

2 June 2013 13:14 //வணக்கம் யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மாலையை அழகாக தொடுத்துள்ளீர்கள்... இசைஞானிக்கு(ம்) வாழ்த்துக்கள்...

2 June 2013 18:22 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நானும் ஒரு வாழ்த்தைப் போட்டிட்டு எஸ் ஆகிடுறேன்

2 June 2013 18:36 //நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம்

இசைஞானி பற்றி அருமையன விளக்கம் வாழ்த்துக்கள் தனிமரம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வணக்கம் ரூபன் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

இசை ஞானிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அய்யா. நன்றி

3 June 2013 07:00 //நன்றி கரந்தை யெயக்குமார் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

athira said...

வாவ்வ் சூப்பர்.. அன்றுதான் எங்கள் அப்பாவின் பிறந்ததினமும்.

athira said...

Subramaniam Yogarasa said...
இரவு வணக்கம்,நேசன்!நலமா?/


..வேண்டாம்,விட்டு விடலாம்!///

ஹையோ யோகா அண்ணனுக்கு நேசனில் பால்கோப்பி வாணாமோ?:)

ரெ வெரி said...

நலமா நேசரே...

அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்...

சமீபத்தில் ஆனந்த விகடன் யூ டியூப் சானலில் அவரின் சில பாடல்கள் காப்பி என்று வந்தது சற்றே நெருடலாய் உள்ளது...

புதுக்கணினி நடை அழகு...

மறுபடி சந்திப்போம்...