21 July 2013

ஆடிப்பட்டம்!!!!!


ஆடியில் பறந்தது அழகான பட்டங்கள்
அந்தக்கால  ஊர் வாழ்வில்
அந்த ஆனந்த  ஆடிக்களிப்பில்!ஆட்சியாளர்கள் விட்டார்கள் இனவாத
ஆத்துமீறல் நூல்கள்
ஆயிரம்  
அதில் பல்லாயிரம் காடையர்கள்சேர்ந்ததில் 
அவர்களிடம் இருந்தது பல ஆயுதங்கள்
அடுத்தவர்கள் உயிர்குடிக்கும் அநியாய
அகோரங்கள் ஆடினார்கள் அந்த ஆடியில்!


அப்புத்தளையில் அத்தனையும் பார்த்தது
அத்தையின் மடியில் அமர்ந்து
அழத வண்ணம் அருகில் அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா ஆரத்தழுவினான் அன்பில்
அந்த நேரத்திலும்  !அப்போது
அவனோடு இருந்த என் பள்ளிப்பட்டம்
அவசரசமாக இடம் மாற்றி ஏற்றினார்கள்!


அழுதுபுலம்பி அகதியாக இடம்பெயர்ந்து
அத்தனை சொத்தும்
அழிந்த  பின் அறுந்து போன
அந்தப்பட்டங்களின் அவல 
அழகுரல் இன்னும் காதில்
அதுகடந்து ஆமர்ந்த தீவில்
அக்கினிச்சுவாலை என்று ஆமியின்
அத்துமீறல் அடியோடு விரட்டியது!


அகதியாக அந்த அம்மையாரின் ஆட்சியில்!


அதுகடந்து பட்டங்கள் பறக்காமல் சிக்கிய
அவலத்தை அறிந்த அனைத்துலக நாடுகள்
ஆருக்கும் சொல்லவில்லை போதனை
அடியோடு நிறுத்துங்கள்! இனவாத
ஆட்டம் என்றெல்லாம்!

ஆட்சியில் மாற்றம் வந்தபின் அன்பில்
அழைக்கின்றது அந்த ஊரைப்பார்க்க 
அன்பே வா !
அகதியாக அலைகடல்கடந்து
அடைக்கல நாட்டில் அடிப்படை உரிமையும்
அழகாய் உன் வாழ்க்கைப்பட்டமும்
ஆடிப்பற்றக்கின்றதே!


அது போல இழந்த அந்த சொத்துக்கள்
ஆளவிடமுடியாத அந்த உயிர்கள்
அலுப்புடன் சொல்லுகின்றேன்.
 அந்தப்பட்டத்துக்குப் பின் இருக்கும் அகதிப்பட்டம் அதுதரும் 
அழகான பட்டப்பறப்பு 
அனுபவதித்தால்தான் புரியும்!

அவலப்பட்டத்தை அடைந்து அது ஆடிப்பறக்கவும் அழகை நேரில்ப்பார்த்தால்
ஆட்சியாளர்கள் !
அதிகாரதோரனையில்
அலட்சியமாக அறுத்துவிட்ட நம் பட்டத்தை
ஆற்றுப்படுத்த வேண்டிய ,ஆணைக்குழுவும்,
அனைத்துலகசபையும்,
 ஆண்மையின்றி
ஆட்சியில் இருந்த அரக்கர்கள்
அறுத்த பட்டத்தின் வாழ்க்கைக்கு
அனுநீதிக்கு 
ஆட்சியாளருக்கு ஆர் தருவார்கள்
ஆயுள்சிறை ?

அதுவரை அந்தப்பட்டடமும்
அந்த உடல்கீறல்கழும்
அவலமாக
ஆடி என்றாலே பனையில் தொங்கும்
அகதியின் அடிமனசில் நினைவுகளாக
அந்தப்பனை அடிக்கடி வந்துபோகின்றது!
 அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா / சிங்கள மொழி  அப்புஹாமி அன்பான மாம்பழ் நண்பனே அழ வேண்டாம் என்றான் என்று பொருள் படும் தமிழில்!பால்ய நண்பன் என்பது அம்பஜாலுவ  என்று சொல்லுவது சிங்கள் மொழியில்!
அக்கினிச்சுவாலை -ஒரு  இராணுவ நடவடிக்கை!

14 comments :

Seeni said...

vethanaiyaana varikal/..

MANO நாஞ்சில் மனோ said...

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்ற பாடலே நினைவுக்கு வருகிறது...!

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தம் தரும் நினைவுகள்...

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கணக்கிறது

சீனு said...

எத்தனையோ துன்பங்களை சுமந்து நிற்கும் பூமி, நிஜமாகவே மனம் கணக்கிறது

இரவின் புன்னகை said...

வணக்கம் நண்பா...

தங்கள் படைப்பு அனைத்தும் அழகாக உள்ளது,ஆனால் அதில் பிற மொழி கலப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சிங்களக் கலப்பு. தமிழில் அந்த வார்த்தைகளை கூறினாலே அழகாய்த் தானே இருக்கும், இங்கே சிங்களத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை...

Subramaniam Yogarasa said...

அவலம் சுமந்த நினைவுகளுடன்.................

தனிமரம் said...

vethanaiyaana varikal/..//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்ற பாடலே நினைவுக்கு வருகிறது...!//நிஜம் தான் அண்ணாச்சி!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வருத்தம் தரும் நினைவுகள்...

21 July 2013 17:34 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மனம் கணக்கிறது//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எத்தனையோ துன்பங்களை சுமந்து நிற்கும் பூமி, நிஜமாகவே மனம் கணக்கிறது//ம்ம் என்ன் செய்ய்ன் முடியும் சீனு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

21 July 2013 21:45 Delete//

தனிமரம் said...

வணக்கம் நண்பா...

தங்கள் படைப்பு அனைத்தும் அழகாக உள்ளது,ஆனால் அதில் பிற மொழி கலப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சிங்களக் கலப்பு. தமிழில் அந்த வார்த்தைகளை கூறினாலே அழகாய்த் தானே இருக்கும்,/சில வார்த்தைக்கள் மோனைக்கு ஒத்து வருவதால் இணைக்கின்றேன் இனித்தவிர்க்கின்றேன் உங்கள் தமிழ் உணர்வுக்கு தலைசாய்க்கின்றேன்!இர்வின் புன்ன்கையாரே!


இங்கே சிங்களத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை...எல்லாருக்கும் இலங்கையின் பலபகுதியில் இருக்கும் சூழ்ல கிடைக்கவில்லை இந்தியா போல அதனால் வரும் நம்மவருக்கு ஆத்திர உணர்வினை தனிக்க நான் சிங்களத்தையும் புகுத்துகின்றேன் அப்படிச்சரி இனவாதம் மொழிவாதம் நீங்கினால் சகோதரத்துவம் இனியும் வாழும் என்ற நற்பாசைதான் சகோ காரண்ம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

21 July 2013 22:32 Delete

தனிமரம் said...

அவலம் சுமந்த நினைவுகளுடன்.................

22 July 2013 09:53 Delete//வணக்கம் யோகா ஐயா நலம்தானே?ம்ம் நினைவுகள் மறக்காது! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.