09 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-18

சாதியத்தின் உட்பூசல் எப்படி இருக்கும் என்பதைச்சொல்லிச் செல்வது பஞ்சமர் நாவல்! அதில் டானியலின் நடுநிலை எல்லாம் எவ்வாறு  அன் நாட்களில் வாரப்பத்திரிக்கையில் சந்தி எங்கும் சிரித்த கதை எல்லாம் ஈழத்து எழுத்தார்கள் மட்டுமல்ல ,வாசகர்களும் அறிவார்கள் .

என்னதான்  பின் வைரமுத்து "சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்கள் செஞ்ச மோசம் "என்று பாட்டு எழுதினாலும் பதுளையிலும் இருக்கும் பூசல்கள் நீ அறியாயோ நண்பா ?? 

புதிய பாதை போடுகின்றேன் என்று வெளிக்கிட்ட ஜோடிகளின் கதை எல்லாம் படித்ததில்லை !

நல்லா ஜோசி மச்சான் பாபு.

 மிரூனா மனசில் நீ இருக்கின்றாயா தெரியாது?

அவள் சின்ன வயதில் இருந்து மனதில் உறுதி வேண்டும்  பட சுகாசினி போல தாதி வேலையில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்றகனவில் இருந்தவள் .தன் தாய்க்கு போதிய முதல் உதவி கிடைக்காமல் தான் தோட்டத்து மருத்துவ நிலையத்தில் உயிர்பிரிந்த அந்த சின்னவயது துயர் நிலையை என்றும் மறக்காதவள்.


 அதை இப்போது  நடைமுறைப்படுத்துவது  போல அரச தாதியர் கல்லூரியில் படித்துக்கொண்டு கடமையும் புரிகின்றாள். 

இந்தநேரத்தில் அவள் கனவில் காதல் தீ வைக்கப்போறியா? அவளின் கனவுக்கு ,கற்பனைக்கு உன்னால் சித்திரம் தீட்ட முடியுமா மச்சான்?

சும்மா ஒருத்தி மீது காதல் வந்தவுடன் வீட்டை விட்டு ஓடிப்போக  சினிமாவுக்கு ஒத்து வரும் நிஜத்தில்?  அவள் வசதியாக இருந்தவளை கூட்டியந்து உன்னால் சந்தோஸமாக வைத்து இருக்கமுடியுமா ?

இது என்ன இயக்குனர் மகளின் பருவ  உடல்க்கவர்ச்சியா ?உண்மையான அன்பு இருந்தால் காதலுக்கு மரியாதை போல அவர்கள் வீட்டுச் சம்மததுடன் கை கோர்த்தால்  இந்த உலகம் போற்றும்.

 சும்மா ஊடகத்துக்கு பரபரப்புக்கு எதையும் செய்ய இந்தக்காதல் ஒன்றும் விளையாட்டு அல்ல. உன்னை நம்பி உன்  வீட்டில் பொறுப்பு இருக்கு .அது எல்லாம் புரியலயா மச்சான் பாபு ?என்றான் கடல்க்கரையை பார்த்த வண்ணம் சேகர்!

 மச்சான் நீ என்ன சொல்ல வாரா ?என் ஜாதி வேற அவள் ஜாதி வேறஅப்படித்தானே! 

இல்லை மச்சான் ஜாதி மாற்றம் வந்து கொண்டே இருக்கு .ஆனால் உனக்கு பொறுப்பு  இருக்கு அதை தட்டிக்கழித்து விட்டு இன்னொருத்தியின் முந்தானையில் வீழ்ந்து போகநான் விரும்பவில்லை ! 

'காதல் வேதம் கற்றுக்கவா ;காதல் பெரிதா வேதம் பெரிதா என்று வேதம் ஓத நான் ஒன்றும் புதுமைப்பித்தன் இல்லை ' எனக்கு உன் குடும்பமும் ஒன்று தான், மீருனா குடும்பமும் ஒன்றுதான் .

ஆனால் எப்போதும் தனிவழியில் போக வேண்டும் நம் கடமையில். சுயமாக ;சுதந்திரமாக இருக்க வேண்டும் .காதலுக்காக கடமையை தட்டிக்கழிக்காத .

முதலில் கடமை அப்புறம் தான் காதல் பாபு.

சேகர் நான் இப்பவே மீருனாவை கைபிடிக்கப்போவதில்லை .கொஞ்சக்காலம் சந்தோஸமாக பேசுவம், ஊர் கொஞ்சம் சுற்றுவம். பின் நல்ல நாளில் நம் பொறுப்புக்கள் தீர்ந்த பின் ஒன்று சேர்வோம் என்று தான் கனவு காண்கிறேன்! 


நிச்சயம் அவளுக்கு என்னைப்பிடிக்கும் மச்சான் ஒரு வாட்டி நீ பேசு உன்னிடம் அவளுக்கு மரியாதை இருக்கு .

அப்படி முடியாதென்றால் நானே பேசிக்கொள்கின்றேன் .நாளை ஞாயிறு அவளுக்கு விடுமுறை நாள் !

எப்போதும் போல கொச்சிக்கடை அந்தோனியாரிடம் பிரார்த்தனைக்கு வருவாள்  மதம் வேற என்றாலும் அவள் அந்தோனியாரிடம் விசுவாசம்மிக்கவள்.

அதன் பின் கோல்பேஸ் கடல்க்கரை வருவாள் . அங்க பேசிக்கின்றேன் உனக்கு தொல்லை வேண்டாம் மச்சான்! 

அது வந்து ...

நீ எதுவும் பேசாத சேகர்..

அப்ப கடல் பொங்கி விட்டது இனி  கரைகண்டுதான் நிற்குமோ??ஹீ கொஞ்சம் இரு பாபு என் மேல் அதிகாரி அழைப்பில் வருகின்றார் .
ஓ அப்ப ஐராங்கனி மேட்டர் போல!!!

 கொஞ்சம் இருடா !
ஹலோ  மாலை வணக்கம் பண்டார சேர்!
மறுமுனையில் அவர் சொல்லிய விடயம் கேட்டு அதிர்ந்தான் சேகர்.

 தொடரும்......

4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

முதலில் கடமை அப்புறம் தான் காதல்
எத்தனை பேருக்கு இது புரிகிறது

athira said...

தொடர் அழகாக நகர்கிறது. எங்கிருந்துதான் இத்தனை படங்கள் எடுக்கிறீங்களோ.. அத்தனையும் பார்க்க நன்றாக இருக்கு.. இலங்கைப் படங்கள்.

பாடலும் நன்று ரசித்தேன்.

தனிமரம் said...

முதலில் கடமை அப்புறம் தான் காதல்
எத்தனை பேருக்கு இது புரிகிறது//வாங்க கரந்தை ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நிஜம் தான் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர் அழகாக நகர்கிறது. எங்கிருந்துதான் இத்தனை படங்கள் எடுக்கிறீங்களோ.. அத்தனையும் பார்க்க நன்றாக இருக்கு.. இலங்கைப் படங்கள்.

பாடலும் நன்று ரசித்தேன்.//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.