14 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-21

"யாரோ யார் யார் யாரோ? யாரோடு யார் அறிவாரோ ?என்ற பாடல் போலத்தான் சேகர் மிரூனாவிடம் பேச வந்த விடயத்திற்கு இடையில் ஐராங்கனி பண்டாரவளை போன விடயம் அவன் அறியாத செய்தி .

சில  கேள்விக்கு பதில்கள் சில நேரங்களில் உடன் கிடைப்பது இல்லை  சந்திரிக்காவின் ஆட்சியில் பட்டலந்த முகாம் விசாரணை படலம் போல முடிவு /அல்லது பதில் கிடைப்பது. ?? 

என்ன சேகர் அண்ணா ஜோசனை பலமாக இருக்கு ?இல்ல மிரூனா உன் எதிர்கால ஆசைகள் என்ன அதைச்சொல்லு?

 ஏன் அண்ணா? என்னை சின்ன வயதில் இருந்து  நீங்க சிறைக்கைதி போல  இருந்த உங்க மாமா சுருட்டுக்கடையில் எங்க பாட்டி சமைக்க வரும் போது என்னையும் உங்க  சுருட்டுக்கடைடைக்கு தூக்கி வந்த காலம் உங்களுக்கு தெரியும் தானே ?

என் இலட்சியம், கனவு, எல்லாம் நான் பிறந்த ஊரில் நல்ல ஒரு தாதியாக அர்ப்பணிப்புடன் செயல்படணும் என்பதே !


 அரசின் அலட்சியமும், போதிய நிபிணத்துவமும் கிடைக்காது இந்த தோட்டத்து அப்பாவி ஜனங்களின் மருத்துவதேவைகள் சரியாக வழிகாட்டப்படாமல், போதிய சேவைகள் பொறுத்த நேரத்தில் கிடைக்காமல், மரணிக்கும் மக்களின் நிலையை கொஞ்சம் சரி மாற்ற நாம்!


 நமக்குத் தெரிந்த இந்த ஊரில் பாடு படவேண்டும் .என் தாயை இழந்து நான் தவித்தது போல இன்னொரு மிரூனா இருகக்கூடாது .இந்த சேவைக்கு வரவேண்டும் என்பதுதான் என் தந்தையின் ஆசையும், கனவும் ,அதை நான் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் .


ஒரு மனைவி இருக்கவே இன்னொருத்தியோடு கட்டிலைப்பகிரும்  இந்த மாய உலகில் என் தாய் இறந்ததும்  இன்னொருத்தியை எனக்கு சித்தி என்று தேடமல். இன்றும் என்னையும் .என் பாட்டியையும் சுற்றியே வாழ்ந்து கொண்டு இருக்கும் என் அப்பா சந்தோஸம்  முக்கியம் !


ஆமா ஏன் திடீர் என்று இப்படி ஒரு கேள்வி தொலைக்காட்சியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்து கொண்ட தேர்தல் நேரடி விவாதத்தில் இனப்பிரச்சனை இந்தநாட்டில் இருக்கா ?இல்லையா ?என்று கேள்விக்கணை தொடுத்த அறிவிப்பாளர் போல இருக்கே ,

ஓ அப்படியா மிரூனா !

இல்ல இந்த!பாபு இருக்கின்றானே !

யாரு ?நம்ம தோட்டத்து புகைப்படபிடிப்பாளர் பாலுமகேந்திரா போல இருக்கும் கேவிந்தன்சாமி மகன் தானே ?
உங்கள்கூடவே இருக்கின்றார் .அதுவும் தெரியும் !

ஆமா அதுக்கு என்ன ?

இல்ல அவன் வந்து  உன்னை உயிரோடு உயிராகப்போல அந்தமான் காதலி நீயே ,என் காதல் சாம்ராஜ்சியம் என்கின்றான் !

இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று சொல்லத்துடிக்குது மனசு போல இணைந்தகைகள் என்னையும் தூது போ செல்லக்கிளி போல தூது போடா நண்பனே என்று என் தூக்கத்தையும் கெடுத்து ,துக்கத்தையும் சேர்த்துவிட்டான் .

இந்த  மலையக உடன் பிறவாத என் தங்கச்சி படிச்சவ மிரூனா இதயத்தில் அவனுக்கு ஒர் இனிய உதயம் போல வருங்கால சிம்மாசனம் அல்லது நீதிபதி நீ தான் என் இதயக்கமலம் !நெஞ்சில் ஓர் ஆலயம் என்று சொல்வாயா ?

இல்லை ஒரு தலைராகம் போலவா ?இல்லை காத்திருக்க நேரமில்லை நான் ஒரு வழிப்பாதை ,  வாசலில் வெண்ணிலா பட அமலா போலவா! இல்லை கற்பூரமுல்லையா உன்னிடமே எல்லாம் !


உன் நாளைய தீர்ப்பை ஜோசித்து சொல்லு .இது உன் தனிப்பட்ட விடயம் நான் எப்போதும்  ஒரு மூன்றாம் நபர் தான் மிரூனா !

என்றுவிட்டு மூச்சுவாங்கினான் எதிர்க்காற்று கார்த்திக் போல சேகர் .சொல்லியது கேட்டு மெளமன் சம்மதம் போலவா? இல்லை நானே ராஜா நானே மந்திரி போலவா ,இல்லை நான் அடிமை இல்லை  !எங்கள் அண்ணா போல  ஏதும் சொல்லாத  என் அன்புத்தங்கையே என்று மிரூனாவிடம் நாளை மாலை 2.30 காட்சி கொட்டாஞ்சேனை கிஸ்சிலி சினிமா தியேட்டரில் மனம் விரும்புதே காட்சிக்கு நான் 5 டிக்கட் புக் பண்ணிவிட்டேன் ஏற்கனவே !


அதில் நீயும் ஒருத்தி நாளை சந்திப்போம்  என்று விடைபெற்றான் சேகர்! அப்போது சூரியன் பண்பலையில் நேற்றைய காற்றில் அன்பு அறிவிப்பாளர் வெள்ளையன் ஒலிக்க விட்ட பாடல் அவன் கையில் இருந்த் வானொலிப்பெட்டியை காதில் ஒலிக்கும்  வண்ணம் இயர் போனை மாட்டியவண்ணம் அவனோ ஜம்பட்டா வீதி நோக்கி அவசர அழைப்பில் எப்போதும் அவனை அறிந்த  நண்பன் அமரவின் ஆட்டோவில் அமர்ந்தான் சேகர்! ]போவோம் மச்சான் என் அறைக்கு! அங்கு சூரியன் fm பண்பலையோடு இணைந்து இருந்தான் பாபு... தொடரும்....

9 comments :

MANO நாஞ்சில் மனோ said...

தாதியாக அர்பணிப்புடன் செயல்படுவது என்பது எல்லாருக்கும் அந்த மனசு வராது, அந்த நல்ல மனசு அவங்ககிட்டே இருக்கே வாழ்த்துக்கள்....

செங்கோவி said...

அந்த அப்பா கேரக்டரும், அவருக்காக உருகும் பிள்ளையும் அருமை!

இரவின் புன்னகை said...

த. ம: இரண்டு

தனிமரம் said...

தாதியாக அர்பணிப்புடன் செயல்படுவது என்பது எல்லாருக்கும் அந்த மனசு வராது, அந்த நல்ல மனசு அவங்ககிட்டே இருக்கே வாழ்த்துக்கள்....

14 August 2013 20:09 Delete//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில். நன்றி வருகைக்கும் தோழிக்கு வாழ்த்துக்கூறியதுக்கும்.

தனிமரம் said...

அந்த அப்பா கேரக்டரும், அவருக்காக உருகும் பிள்ளையும் அருமை!

14 August 2013 22:00 Delete//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

த. ம: இரண்டு

14 August 2013 23:15 Delete//நன்றி இரவின் புன்னகை வருகைக்கும் கருத்துரைக்கும்.

athira said...

எனக்கும் ஒரு பால்ரீ தாங்கோ நேசன்.. நானும் தொடரின் பதிலுக்காக வெயிட்டிங்..

தனிமரம் said...

எனக்கும் ஒரு பால்ரீ தாங்கோ நேசன்.. நானும் தொடரின் பதிலுக்காக வெயிட்டிங்..//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

Subramaniam Yogarasa said...

தியாகங்கள் புரியும் அப்பாக்களும்,ஒரு சிலர் இந்த நவநாகரீக உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்!