16 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-22


நேசிக்கின்றேன் ,விரும்புகின்றேன் ,காதலின்கின்றேன்,உருகின்றேன் மருகின்றேன் ,என்றெல்லாம் தமிழில் அழகாக காதல் பற்றிய உணர்வினைச் சொல்லும் வசதிபோல வேற்று மொழியில் உண்டா ?என்பதை ஆய்வு செய்தால் அதில் எத்தனை விகிதம் காதல்  ஈர்ப்புடன் சொல்லப்படும் என்று நான் அறியேன் !

அதுபோலத்தான் பாபு மீது எனக்கும் நீண்டகாலமாக ஒருவித ஈர்ப்பு இருக்கு அண்ணா .

ஆனால் இந்த அப்பாவினுடையதும் ,,என்னுடைய கடமையும் என் எதிர்கால கனவும் எங்கு பாதிக்குமோ ??என்ற பயம் இன்னொரு புறம் ,இனவாத சந்தேகம் சாதாரண அப்பாவி மக்களையும் சிறைப்படுத்துவது போல என் மனதையும் காதல் சிறைப்படுத்துகின்றது!

இதில் தோற்பேனா இல்லை ,தேறுவேனா என்று எனக்கு ஒண்ணும் புரியல நீங்கள் தான் உதவணும் சேகர் அண்ணா.


இத்தனை நாளாக இந்த கொழும்பில் தங்கும் வசதிக்கு எல்லாம் நீங்களும் ஒரு உதவித்தொகை தருவது என் பாட்டி மட்டும் அறியும் .

என்ன மிரூனா நான் இந்த உதவி செய்வது என் கடமை ஒரே நாட்டை நல்ல வழியில் வழிநடத்த வேண்டியது நல்ல ஜனாதிபதியின் முதல் கடமை அதுபோல

கடந்த காலத்தில் என்னை வளர்த்தவர்கள் என் கைச்செலவுக்கு பணம் தராத போது யாரும் அறியாமல் உங்க பாட்டி தன் கைச்செலவை பேராண்டி என்று பாசத்தோடு தந்த கணக்குகள் மீளக்கொடுக்கும் ஒரு சந்தர்ப்பம் தான் உனக்கு செலவு செய்யும் தொகை.

எப்போதும் உங்க பாட்டி என் மதிப்புக்கு உரியவங்க.

 ஆனால் உன் காதல் முடிவு உன் இஸ்ரம் என்று திரையரங்கில் இருந்து மிரூனாவிடம் பேசிக்கொண்டு இருந்தான் சேகர் .

மதியக்காட்சி தொடங்கும் முன் அவன் முன்கூட்டியே வந்தது பாபுவுக்கு முடிவைத்தெரிந்து கூறவேண்டியதன் நட்புக்காக.

என்ன சேகர் அண்ணா என் பக்கமே எல்லாத்தையும் முடிவில் விட்டாள் மிரூனா காதல் தேர்வில் மட்டும் தான் யாரும்  அரச தேர்வுப் பரீட்சையில் குதிரை ஓடுவது போல மற்றவர்கள் புகமுடியாது .

அது அவர் அவர்கள் வாழ்க்கை நட்பு என்பது வாசல் கடந்து  உள்வீடுவரை வரலாம் கட்டில் வரை வரமுடியாது .

நல்லா ஜோசித்து சொல்லு இன்று இரவு நான் பண்டாரவளை போகின்றேன் .இனி மாதம் ஒரு தடவைதான் கொழும்பு வரமுடியும் .தற்காலிகமாக .

ஆமா நீ தெளிவா இருக்கின்றாய் தானே உன் போகும் பாதையில் தாதி என்ற அந்தப்பாதையில் தன்நலம் விட பொதுநலம் சேவை நலம் எப்போதும் இருக்க வேண்டும் அந்த தோட்டத்தி தாதிச்சேவைக் கஸ்ரம் இனியும் பலருக்கு வரக்கூடாது .

நல்லா ஜோசித்து சொல்லு இன்று இரவு நான் பண்டாரவளை போகின்றேன்.

 இனி மாதம் ஒரு தடவைதான் இங்கு வரமுடியும் தற்காலிகமாக .

உன் வழியில் ஒளியேற்றும் ஒரு துணைவனாக நிச்சயம் பாபு வருவான்

என்பது என் கணிப்பு மிரூனா அந்த நம்பிக்கை எப்போதும் காப்பாற்றுவான் அவன் .

இன்னொன்று  மிரூனா இந்த திரையரங்கில் பின் சீட்டில் பாபு இருக்கின்றான் வேற நண்பனுடன் சரி படம் தொடங்கப்போகின்றது படத்தோடு இணைவோம் !

தொடரும்!

7 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
நலமா??
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இணையம் வருகை...

MANO நாஞ்சில் மனோ said...

நேசிக்கின்றேன் ,விரும்புகின்றேன் ,காதலின்கின்றேன்,உருகின்றேன் மருகின்றேன் ,என்றெல்லாம் தமிழில் அழகாக காதல் பற்றிய உணர்வினைச் சொல்லும் வசதிபோல வேற்று மொழியில் உண்டா //

மலையாளத்தில் ரசிக்கும்படியான அன்பின் பேச்சுகள் சில ரொம்ப ரசிப்பவையாக இருக்கும் நேசன்...!

மாத்தியோசி மணி மணி said...

காதல், சோகம், பாடல் என உணர்வுகளின் தொகுப்பாய் இன்றும் உங்கள் தொடர் அண்ணா!!

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
நலமா??
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இணையம் வருகை...

16 August 2013 16:25 Delete//வணக்கம் மகி அண்ணா நீண்ட காலத்தின் பின் இணையத்தில் கான்பதில் மட்டற்ற மகிழ்ச்சி நலம் தானே வீட்டில் எல்லோரும்!?நன்றி வருகைக்கு.

தனிமரம் said...

நேசிக்கின்றேன் ,விரும்புகின்றேன் ,காதலின்கின்றேன்,உருகின்றேன் மருகின்றேன் ,என்றெல்லாம் தமிழில் அழகாக காதல் பற்றிய உணர்வினைச் சொல்லும் வசதிபோல வேற்று மொழியில் உண்டா //

மலையாளத்தில் ரசிக்கும்படியான அன்பின் பேச்சுகள் சில ரொம்ப ரசிப்பவையாக இருக்கும் நேசன்...!

16 August 2013 20:12 Delete//அப்படியா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மனோ அண்ணாச்சி.

தனிமரம் said...

காதல், சோகம், பாடல் என உணர்வுகளின் தொகுப்பாய் இன்றும் உங்கள் தொடர் அண்ணா!!

17 August 2013 03:02 Delete//நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Subramaniam Yogarasa said...

அழகாகத் தொடர்கிறது,தொடர்!மிரூனா பதிலுக்காக(பாபு) வெயிட்டிங்!