13 February 2014

பார்த்தாலே பரவசம்.

இது காதல் மாதம் என்று காலையிலே முகநூலில் வணக்கம் சொல்லும் பதிவுலக நட்புக்களின்  காதல் போட்டோ பகிர்வைப் பார்க்கும் போதெல்லாம் காதல், காதலன் ,காதலி ,காதலே நிம்மதி ,காதல் கடிதம் ,காதல் பரிசு ,காதலுடன் என்று கற்பனையும் கலந்து பார்த்தாலே பரவசம் அவள் .

போஸ் என்றும் நான் அவன் இல்லை என்றாலும் சிரிப்பழகி   நீ வசிகரா போல மனது விரும்புகின்றேன் என்று சொல்லுவதில் எத்தனை ஆனந்தம்  ஆனாலும்.!


உன்னுடன் ,காதலா காதலா ,என்றென்றும்  ,விரும்புகின்றேன் ,உன்னை நினைத்து .என்று எல்லாம் துள்ளித்திரிந்தது ஒரு காலம் .

.நெஞ்சம் மறப்பதில்லை என்பது போல நெஞ்சமெல்லாம் ,நினைவெல்லாம் நித்யா நீதானே என் பொன்வசந்தம் என்றும் அன்புடன் என் குலமகள் ராதை சின்னா போல இல்லை நீ ஒரு ஜீவநதி என்று காதல் கடிதம் எழுதும் ஆசையில் நானும் இந்த ஊருச்சிப்பாய்  என்னைத்தெரியுமா எங்கள்  ஊர் பாட்டுக்காரன் என்று என்னவளே அவளுக்கு ஆசையில் ஓர் கடிதம் தீட்டினேன்
.

அவளோ ஏழைஜாதி, நீ ஒரு காதல்க்கிறுக்கன் ,இரவுப்பாடகன் ,காதல் சுகமனது ,என்னென்றும் புன்னகையில்  நீ போக்கிரி, புன்னகைதேசம் என்றெல்லாம் ரயில்ப்பயணங்களில் வசந்தவாசல் .அவள் வருவாளா ? நினைவிருக்கும் வரை பத்ரி போல காதல் சொல்வது உதடுகள் அல்ல  இதயத்திருடன் . "எங்கிருந்து வந்தாய்டா  ,"எனதுயிரே என்துயிரே எனக்கனவே  பிறந்தவன் "இவனோ என்று என்னுள்ளே ஒரு மாற்றம் வரவேண்டும் .

மனசுக்குள் வரலாமா விளக்கேற்ற? பார்த்தீபன் கனவு  போல இதயத்திருடன் என் ஆசைக்காதலன் என்று பார்த்தாலே பரவசம் வரவேண்டும் .


அப்போதுதான் காதல் ஜோதி காதல் ஜோதி  காதலா காதலா காலமெல்லாம் காதல் வாழ்க காதல் வைபோவமே என்று எல்லாம் பாடமுடியும் .

அதை விடுத்து இப்படி காதல் கசக்குத்ய்யா என்று எல்லாம் வர்ணஜாலம் காட்டாதே !  தென்மாங்குப்பாட்டுக்காரன் ,தேசிங்கு ராஜா ,நீயில்லை நிழல் இல்லை என்று வாலி போல இன்னொருவன் பொருள் மீது ஆசைப்படாதே இப்போது பிரசன்னா காதல்கலியாணம் செய்தாலும் .

2009 இல்  அன்று மலேசியாவில் கிளாங் நகரில் செந்தோஸா திரையரங்கில் பார்த்தாலே பரவசம் படம் பாத்தபோதில் இருந்து இந்தப் பைத்தியம் தெளியவில்லை சினிமா மோகம் மனசெல்லாம் இனிது இனிது என்றும்  நீ ஒரு வசந்த கீதம் காதல் வாழ்த்துக்கள் சொல்லும் ஆசையில்  இவன்  ஆட்டோக்கிராப் .


அதுக்குள்ள பெப்ரவரி -14 வந்துவிட்டதே இப்படியே இப்படியே இருந்துவிடக்கூடாதா ??இடையில் அருமையான டீச்சர் பாத்திரத்தில்  வந்தாய்.

இடையில்   ஏன் தொலைந்தாய் உருகின்றேன் இந்தப்பாடல் கேட்டவாரே!!
யாவும் கற்பனையே.

6 comments :

Rupan com said...

வணக்கம்
தங்களின் கற்பனை நன்று..... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு ஈர்ப்பு... வாழ்த்துக்கள்...

எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம்... உயிர் தொடக்கம்...
என் எல்லா உணர்வுகளும்...
என் எல்லா உணர்வுகளும் - நீ தொடக்கம்... நீ தொடக்கம்...
காதலே ஜெயம்...!

காதலே ஜெயம் அது கடவுளின் குணம்...!
என் மரியாதைக்கு உரியவளே... மனதிற்கு இனியவளே...
காலையும் நீயே... மாலையும் நீயே...
கனவிலும் நீயே... கனவிலும் நீயே...

Subramaniam Yogarasa said...

நன்று!காதலர் தினப் பதிவு/பகிர்வு கவிதை போல்.................!

தனிமரம் said...

வணக்கம்
தங்களின் கற்பனை நன்று..... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்னவொரு ஈர்ப்பு... வாழ்த்துக்கள்...

எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம்... உயிர் தொடக்கம்...
என் எல்லா உணர்வுகளும்...
என் எல்லா உணர்வுகளும் - நீ தொடக்கம்... நீ தொடக்கம்...
காதலே ஜெயம்...!

காதலே ஜெயம் அது கடவுளின் குணம்...!
என் மரியாதைக்கு உரியவளே... மனதிற்கு இனியவளே...
காலையும் நீயே... மாலையும் நீயே...
கனவிலும் நீயே... கனவிலும் நீயே...//ஹீ நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நன்று!காதலர் தினப் பதிவு/பகிர்வு கவிதை போல்.........//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.