19 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -10

உயர்தரம் என்ற உயர்கல்விப்படிப்பின் போது உள்ளமும் ,உடலிய்ற்கூற்றின் உருவம் இல்லாத காதல் உணர்வை ஊற்றெடுக்க வைக்கின்றது !

உண்மையில் வடக்கில் உக்கிர மோதலுக்குப் பயந்து ஊர் தொலைந்து உறவுகள் பிரிந்து ஊரைவிட்டு ஊரு வந்து .

பதுளையில் உன்போல அழகி யாரும் இல்லையடி .உனக்குத்தெரியுமா?" நான் உன்னை நினைப்பது "என்ற ஈழத்து மெல்லிசை போல உயிரை வாங்கும் உணர்வை முதன் முதலில் ஜீவனியிடம் பார்க்கின்றேன் .

உதவி செய்வாயா ?உண்மையான நண்பனாக ?
உயர் தரத்தில் நட்பில் உறவான ஈசனிடம் இதைப் பகிர்ந்தேன்.

ஈசன் முன்னம் சில தடவை யாழ் வந்து போனவன் .அப்பாவின் நண்பரின் மகன் என்ற அறிமுகத்தில் .

வடக்கிற்கும் தெற்குக்கும் A -9 பாதைகள் மூடப்பட முன்னர் நானும் அவனும் நல்ல நண்பர்களாக விளையாடியதுண்டு .

காலச்சக்கரம்  கபட அரசியலில் வடக்கு தெற்கு பாதைக்கதவுகள் இராணுவ படையெடுப்பின் முன்னேற்றம்  ,இந்திய இராணுவக் கட்டுப்பாடு என்ற கதவுகள் மூலம் முகம் பார்க்க முடியாத சிறைக்கூடம் போல நாடு இரண்டு பட்ட சில வருடத்தின் பின் !

இப்போது முன்னால் காதாநாயகன் சில வருடம் ஒதுங்கிவிட்டு மீண்டும் நடிக்க வந்தது போல ஒரே வர்த்தகப்பிரிவு வகுப்பில் பள்ளியில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம் சூரியன் சந்திரன் போல !

என்னடா சொல்லுகின்றாய் மச்சான் ?இன்னும் உயர்த்தரத்தில் பொருளியல் பாடமும் ,பொருளாதார ஜாதிமும் புரியவில்லை கணக்கியல் கேள்விச் சமன் பாடு கண்டுகொள்ளவில்லை .நீ அதுக்குள் காதலில் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்றால் எப்படி மச்சான்? இங்க நீ வந்து ஒரு மாதமும் ஆகவில்லை இந்த ஊர் முழுமையாக நீ அறியாய முதல் பேச்சு சிங்களத்தில் முதற் காலை வணக்கம் சொல்லத் தெரியாது .


என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது .ஏன் தெரியுமா?? ஜீவனி இப்ப முதல் முறையாக சினிமாப்பட அறிமுக காதாநாயகி போல  இந்தப்பள்ளிக்கு உயர்தரம் படிக்க வந்திருக்கின்றாள் .


முதல்பட நாயகிக்கு நடிக்க முன்னமே காதல் என்றால் எப்படி அவளின் அடுத்த படம் பாதிக்குமோ அது போல அவளின் எதிர்கால கனவும் தீயில் பஞ்சு போல பொசிங்கி விடும்..

ஜீவனி முன்னம் வேற பள்ளியில் சாதாரண தரம் படித்தவள் !

இன்னும் சொல்லவா ஜீவனி...

12 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

இனியும் சுவாரஸ்யம் தான்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் எழுத்து நடை வித்தியாசமாகவும் சுவையாகவும் உள்ளது .
வாழ்த்துக்கள். தொடர்கிறேன்

Subramaniam Yogarasa said...

சிங்களத்தில் காலை வணக்கம் கூட சொல்லத் தெரியாது!///காதலுக்கு கண் மட்டுமில்ல,பாஷையும் தேவையில்லை!ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

இனியும் சுவாரஸ்யம் தான்...//ஹீ வாங்க தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்கள் எழுத்து நடை வித்தியாசமாகவும் சுவையாகவும் உள்ளது .
வாழ்த்துக்கள். தொடர்கிறேன்

19 March 2014 17:40 Delete//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிங்களத்தில் காலை வணக்கம் கூட சொல்லத் தெரியாது!///காதலுக்கு கண் மட்டுமில்ல,பாஷையும் தேவையில்லை!ஹ!ஹ!!ஹா!!!//ஆஹா நான் காத்ல் அறியேன் யோகா ஐயா நல்ல பிள்ளையாக்கும்!ஹீ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

மாதேவி said...

ஹா....ஹா... ரசனை.

Anonymous said...

ஜீவனோ ....

Anonymous said...

சிங்களத்தில் காலை வணக்கம் கூட சொல்லத் தெரியாது!///காதலுக்கு கண் மட்டுமில்ல,பாஷையும் தேவையில்லை!ஹ!ஹ!!ஹா!!!///இதுலாம் உங்களுக்கு தெரியாது மாமா ...வயசான காலத்துல ஓரமா ந்ன்னு வேடிக்கை பாருங்க

தனிமரம் said...

ஹா....ஹா... ரசனை.!! ந்ன்றி மாதேவி முத்ல் என் தள வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஜீவனோ ....//சீச்சீ அந்த ]பாத்திரம் இங்கு இல்லை வாத்து.இது வேற் ஏரியா.

தனிமரம் said...

சிங்களத்தில் காலை வணக்கம் கூட சொல்லத் தெரியாது!///காதலுக்கு கண் மட்டுமில்ல,பாஷையும் தேவையில்லை!ஹ!ஹ!!ஹா!!!///இதுலாம் உங்களுக்கு தெரியாது மாமா ...வயசான காலத்துல ஓரமா ந்ன்னு வேடிக்கை பாருங்க//ஹீ நான் வரல ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்