18 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -9

இலங்கை என்ற தேசத்தில் இரு இனங்களுக்கிடையில் இனத் துவேசம் வர முன்னர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் வியாபாரிகள் மட்டுமல்ல !

அறிவுசார் புலமையில் மெத்தபடித்த பலர் பல உயர் பதவியில் மேலான்மை தெற்கில் செய்தது இன்னும் வரலாற்றில் வாழ்தலில் பதிவாகி இருக்கின்றது .

வடக்கில் பிறந்த சேனாதி ராஜாவும் தன கணக்கியல் வித்தையில் கல்வித்தகமை பெற்றதில் !

பெருந்தோட்டகம்பனியில் ஒன்றானா  ஊவா பிளாண்டேசன் என்று இன்று அழைக்கும் அன்றைய  மடுல்சீமை பிளான் டேசன் கோனக்கல் தோட்டத்தின் பிராதான கணக்காய்வாராக பதுளைக்கு குடி பெயர்ந்தது 1978 இல் .


.இலங்கையில் தோன்றிய மறக்கமுடியாத  இன்வெறியான 1983 இல் மீண்டும் தன் பூர்வ பூமி வடக்கே தன் ஊரான் தீவுக்கு அகதியாக திருகோணமலையில் இருந்து இலங்கா ராணி என்ற கப்பலில் பயணித்தும் மனதில் பதிந்த வடுக்கள்!


 காணக்காய்வாளரா   இந்திய நாட்டின்  கவர்னர் பதவி போல உத்தியோத்தில் இருந்தாலும் .

 பதுளையில் தனித்தவில் வாசித்தவருக்கு பகவாத்தியம் சேர்க்கும் மேளக்கூட்டம் போல துணைவியாக  சேர்ந்தது  பரிமளா என்ற பாவை . .


சேனாதி ராஜா தாய் வழி உறவில் மச்சாள் வழி வந்தவள். பரிமளா! தனிக்குடித்தனம் தந்த பதுளையில் சேனாதிராஜாவுக்கு சீமந்த  இரட்டை வாரிசா துளிர்த்த ஜீவன்களில் ஒருவன்  தான் பரதன் .


மற்றவன் ராஜன் !

இருவரையும் ஒரு கொடியில் இரு மலர்கள் போல தோலில் சுமந்து உடுத் உடையுடன் தீவுக்கு  அகதியாக் போனவர் மீண்டும் 1984 இல் ஒற்றை வண்டியா தன் தொழிலை பதுளையில்  படர்விட்டார்...இனவாத யுத்தம் வடக்கை மரணங்கள் மலிந்த பூமியாக்கிய போது 1996 இல் மரணதுக்கு அஞ்சி மலையகம் புகுந்த வீடாக பூந்தார்கள் பரிமளாவும் ,பாசப்பிறப்புக்களான ஒரு கொடியில் பூத்த இருவரில் ஒருவன்  பரதனுடன்.!பாசத்தில் பாட்டியிடம் போராட்ட பூமியில் ஒருவனையும்,அடுத்தவனை கையில் பிடித்து வந்த பரிமளம் தன்கணவர் போல அடுத்த வரிசை படிக்கச்சொல்லி சேர்த்த பள்ளியில் பகிடிவதை பண்பாக வரவேற்றது பனங்கொட்டையான் என்று!


பரதனும் உயர்தரம் முதல் ஆண்டு படிக்க உள்நுழைந்தது 1998 (A/L) அப்போதுதான் இதே பாடசாலையில் இன்னொரு முகம் இவன் .

எனக்கு அறிமுகம் .பகிடி வதையில் என்னை மீட்ட போது!


நானும் எண்ணி இருந்தேன் இவனும் இந்த ஊரவன் என்று!
பின் ஒரு பேட்டியில் இருவரும் இரு முகாம் ஆகி கவிதையில் போட்டி போட்ட போது இடக்குறியில் தான் நானே வியந்தேன் இவன் பேச்சை!கவிதையில் ,பாடலில் இவன் ஒரு வானொலிப்பிரியன் என்று !ஒரு பாட்டுக்கு அவனின் வர்ணணை இன்னும் மறக்க முடியாது!
அந்த நண்பன் !

இன்னும்  பேசலாம் ...............

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

வானொலிப்பிரியருக்கு வாழ்த்துக்கள்...

Subramaniam Yogarasa said...

ம்......ம்.......நன்றாகப் போகிறது தொடர்!அப்பப்போ குட்டுகளும் நன்று!

MANO நாஞ்சில் மனோ said...

உங்க பதிவுகள் சில மனதை ரணமாக்கி விடுகிறதே நேசன்...!

தனிமரம் said...

வானொலிப்பிரியருக்கு வாழ்த்துக்கள்..// வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தனபாலன் சார் .

தனிமரம் said...

ம்......ம்.......நன்றாகப் போகிறது தொடர்!அப்பப்போ குட்டுகளும் நன்று!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்க பதிவுகள் சில மனதை ரணமாக்கி விடுகிறதே நேசன்...!//தொடரில் பேச வேண்டியதை பேசும் போது அவ்வாறு நிகழ்ந்து விடுகின்றது மனோ அண்ணாச்சி.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.