18 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18

பூகோல அரசியல் மாற்றம் போல உயர்தரதில்  ஒவ்வொரு காலாண்டு நேரத்திலும் படிப்பின் ஆர்வத்தில் நிலை மாற்றம் வந்து சேரும் கணக்கியலுக்கும் ,பொருளியலுக்கும் இடையில் மூளையும், இதயமும் முரண்பாடு கொள்ளும்!

 அரசியலில் ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி போல ஆனாலும் தயக்கம் ,மயக்கம், புரிந்து கொள்ள முடியாத பொருளாதார விதிமுறைகள் .அரசியல் கோட்பாடுகள் .அபிவிருத்தி என்றெல்லாம் படிப்பில் ஒவ்வொரு  விடயமும் மாமலைகள். அரசியல் சட்டம் போல இதைக்கடந்து போனால்த்தான் பரீட்சையில் நிலையான ஆட்சி போல நல்ல பெறுபேறினை எடுக்க முடியும் எதிர்காலத்தில் !


உயர்தரத்தில் ஒவ்வொரு காலாண்டுப் பரீட்சையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு போர்க்களம் தான் !


அதுவும் காதலில் விழுந்தவர்களின் நிலை அனுமான் இலங்காபுரியில் பார்த்த வானரப்படை போலத்தான்!

 ஜீவனியும் சாதகமான பதில் தருவாளா என்ற ஏக்கத்திலேயே ??பரதனும் கணக்கியலில் தெரிந்த நிஜமங்களின் குறியீடுகளையும் குறிக்க மறந்தான்!

 பொருளாதார சந்தையை புடம் போட்ட தங்கம் போல ஒப்பிவிக்காத நிலையில் சந்தை நிலவரம் சீழிந்த பொருளாதார நாடுகள் போல  தேர்வின் தாள்கள் சிவப்புக்கோட்டில் நின்ற நிலையில்!


 உயர்தரத்திற்கு பொறுப்பான ஆசிரியர் வெற்றிவேல் வகுப்பில் வந்து இருந்து காதாப்பிரசங்கம் தொடங்கினார்!


 உயர்தரத்தின் கணக்கியல் படிப்பும் காதல் போலத்தான் ஒரு ஈர்ப்பில் உந்தி வாரீங்க காலமாற்றத்தில் காதல் புரியா புதிர் போலத்தான்! பாடங்களிலும் சிலர் அசட்டையீனம் அறிந்து, தெளிந்து. பதில் கொடுக்காத நிலை ஒரு குழப்ப அரசியல் தான் .


பாராளுமன்றத்தில் நிதி அறிக்கை போலத்தான் இந்த இடைக்கால தேர்வு அறிக்கைக்களும் .

இதில் உங்களின் முன்னேற்றம் ,வீழ்ச்சி. மந்த நிலை .எல்லாம் மதிப்பாய்வு போல இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு நீங்களே உங்களை கேள்வி கேட்களாம்?,

 என் திறமை எப்படி இருக்கு; இந்த ஆட்சி தொடரணுமா?? இல்லை இது சிறந்த ஆட்சியா?? எப்படி இன்னும் முன்னேற்றம் காணுவது?

 இல்லை இந்த நாட்டைப்போல இப்படியே சீழிவதா??

 எல்லாம் இது உங்கள் கையில்.  பின் வாங்கில் இருந்த பரதன் மனதில் முதலில் உயர்தரத்தில்  பொறுப்பான் வாத்தியாரை! முதலில் !

 தேர்வு அறிக்கையை தருவதைவிடுத்து அரசியலுல், அறிவுரைகளும் சொல்லிக்கொண்டு !

என்ன பரதன் தம்பி உங்க வீட்டிலையும்உன்னையும் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?, கோயில்க்காளை போல !

இதுரை இந்தக்கல்லூரில் படித்த  வடக்கில் இருந்து வந்த மாணவ/மாணவிகள் நல்ல பெயர் எடுத்து ,பெருமை சேர்த்துக்கொடுத்து இருக்கின்றார்கள்.

 அதில் சிலர் புலம்பெய்ர் தேசத்திலும் நம் கல்லூரி பெயர் சொல்லி வாழ்கின்றார்கள்.

 நீ பெயர் எடுத்துத் தராவிடாலும் பருவாயில்லை .அரச பரீட்சையில் பெயில்விட்டு எங்கள் வேலை சரியில்லை  என்று பெயரைக் கெடுக்காத!

 இதோ ஜீவனி எல்லாப்பாடதிலும் சிறப்பாக திறமையாக பரீட்சை செய்து நல்ல பெறு பெறுபேறு பெற்று இருக்கின்றாள்!


வாத்திமார் படிப்பிப்பது விளங்கவில்லை என்றால்! சக மாணவர்கள் /மாணவிகளிடம் கேட்டுப்படியுங்க .அப்ப சரி இன்னும் அதிக மார்க்கு வாங்க முடியும் !

இல்லையோ கணக்கியல் விடுத்து கலைத்துறைக்கு மாறும் நிலை பற்றி சிந்தியுங்கோ !அங்கே நூலகத்தில் குப்பை கொட்ட ஒரு வேலை கிடைக்கும்!


என்றுவிட்டு வாத்தியார் வெற்றிவேல் வெளியேறினார். /!

முதல்க்காலாண்டுக்கான விடுமுறைவிடும் இன்றைய நாள் வரை என் காதல் கடிதத்துக்கு பதில் சொல்லாத  ஜீவனி மீது பாராளமன்றத்தில்  ஜனாதிபதி மீதுதான நம்பிக்கையில்லாப் பிரேரனை மூஸ்தீபு போல!

 இனி என்ன செய்யலாம் என்ற நிலையில் இருந்த பரதனை நோக்கி தன் வகுப்புத்தோழி விமலாவுடன்  பரதனை நோக்கி சிந்து நதிப்பூப்போல நடந்து வந்தாள் ஜீவனி!


இன்னும் தொடரும்....

7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

வானரப்படை போல...! அட...!

"சாதகமான" பதில் வந்ததா...?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பொருளாதார சந்தையை புடம் போட்ட தங்கம் போல ஒப்பிவிக்காத நிலையில் சந்தை நிலவரம் சீழிந்த பொருளாதார நாடுகள் போல தேர்வின் தாள்கள் சிவப்புக்கோட்டில் நின்ற நிலையில்//
வித்தியாசமான வர்ணனைகள் மற்றும் எழுத்து நடை வியக்க வைக்கிறது.

Subramaniam Yogarasa said...

ம்.........ம்..............என்னமோ,பரீட்சை சித்தியை விட எதிர்கால 'வாழ்க்கை' சித்தி முக்கியம் போல,ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

வானரப்படை போல...! அட...!

"சாதகமான" பதில் வந்ததா...?//வாங்க தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!காத்து இருங்க !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

//பொருளாதார சந்தையை புடம் போட்ட தங்கம் போல ஒப்பிவிக்காத நிலையில் சந்தை நிலவரம் சீழிந்த பொருளாதார நாடுகள் போல தேர்வின் தாள்கள் சிவப்புக்கோட்டில் நின்ற நிலையில்//
வித்தியாசமான வர்ணனைகள் மற்றும் எழுத்து நடை வியக்க வைக்கிறது//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ம்.........ம்..............என்னமோ,பரீட்சை சித்தியை விட எதிர்கால 'வாழ்க்கை' சித்தி முக்கியம் போல,ஹ!ஹ!!ஹா!!!// ஆஹா எனக்கு தெரியாது யோகா ஐயா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Muruganandan M.K. said...

வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்
பாராட்டுக்கள்