17 April 2014

பாதம் பருப்பு கேக்.


முகநூல் நண்பன் உள்ளடப்பில் வந்து  புது வருடத்திற்கு வீட்டில் என்ன ஈஸ்பெஷல் என்று  பகிடி விட நானும் கையில் இருந்த  ஒரு படத்தினை பகிர்ந்து இருந்தேன் ..

இதைச் சுவைத்துப்பார் என்று!

என்றாலும் கேக் வெட்டி எல்லாம் புதுவருடம் கொண்டாட தனிமரம் ஓய்வில் இல்லை புலம்பெயர் தேசத்தில்.
வேலை நாளில் என்ன செய்ய !

புது வருடம் என்றால் சம்பளதுடன் விடுப்பும் .மேல்போனஸ் என குதுகலித்த காலம் எல்லாம் கடல் கடந்துவிட்டது:)))

வாங்க கேக் செய்வோம்!
தேவையான பொருட்கள்
சீனி -250 கிராம்
கோதுமை மா-300 கிராம்
கோழி முட்டை - 4
பட்டர் -250 கிராம்
அப்பச்சோடா-10 கிராம்
பால்-100மி.லீ
உப்புத்தூள்-10 கிராம்.
பாதம் ப்ருப்பு தூள்-100 கிராம்.
சிறு பாத்திரம்-2
தட்டையான /சதுரமான அலுமினிய தட்டம்-1
மின்னடுப்பு/அல்லது விறகு மூலம் சூடாக்கும் வெதுப்பகம் .

இனி- செய்ல முறைகள்

செய்முறை-1
கோதுமை மாவையும் சீனியையும் முதலில் ஒன்றாக கலக்கவும் பாஜகா தேதிமுக கூட்டணி பேரம் போல :))

பின் அத்துடன்  பாதம் பருப்பையும் சேர்த்து நிலையான கூட்டணி என்ற பின் !ஹீ

அப்பச்சோடாவையும் ,உப்பினையும் சேர்த்து கலக்கவும் பாமாகா இணைந்தது போல:))

செய்முறை-2 ஒரு சிறு பாத்திரத்தில் பட்டரினை வைத்து இதமான சுட்டில் இளகவைத்து எண்ணைப்பதம் போல ஆக்கவும் (அல்லது மிக்ரோனில் இரண்டு நிமிடம் சூடாக்கினால் நேரம் மிச்சம்)

 பாலுடன் முட்டையைச் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு முள்கரண்டியினால் /அகப்பையினால் நுறைவரும் வரை கடையுங்கள்  பின் அதில் எண்ணையைப்போல் இருக்கும் பட்டரினையும் சேருங்கள். பால் ,முட்டை, பட்டர் மூன்றும் சேர்த்தால் தேசிய ஜன்நாயக்கூட்டணி போல தாமரையிலையில் தண்ணீர் போல இருக்கும் !

பின்

செய்முறை -1 உடன் (கல்க்கிய் கோதுமைமா,சீனி ,அப்பச்சோடா,உப்புத்தூள் )
செய்முறை -2யும் சேர்க்கவும்( இளகிய பட்டர், பால் ,முட்டை)

செய்முறை-1+ செய்முறை -2 =
இப்போது எல்லாத்தையும் பாத்திரத்தில் ஒன்றாக்கி மெதுவாக ஒரு அகப்பையாள் கடையுங்கள் வலுவான  தேர்தல் கூட்டணி போல்:)))

பின் கழி போல ஆன பாதார்த்தங்கள் எல்லாவற்றையும் ஒரு சதுர வடிவான/செவ்வக/நீள் / அலுமினித்தட்டில் மெதுவாக அதன் அரை வாசிக்கு  வார்க்கவும் தேர்தலுக்கு கொடுக்கும் டாஸ்மார்க்ப்போல:)))

அலுமினியத்தட்டில் வார்த்த கலவையை மின்னடுப்பில் 45 நிமிடம் 180 பாகை வெப்பத்தில் சூடாக் வைத்துவிட்டு  நீங்கள்

சூப்பர் சிங்கரோ ,நம்ம வீட்டுக் கல்யாணமோ, இல்லை நமக்குப் பிடித்த பதிவுகளையோ  பார்வையிடலாம்.ஹீஈஈஈஈஈஈஈஈ!

 45 நிமிடத்தின் பின் கேக் தயார்!பால்க்கோப்பியுடன் இதைச்சுவைத்தால்  மோடி பிரதமர் என்ற இனிப்பான செய்தி போல இருக்கும்!

கேக் நன்றாக வந்தால் தேர்தலில் ஜெயித்த தலைவருக்கு விழா எடுப்பதுக்கு நிதி சேர்ப்பது போல தனிமரத்துக்கும் நிதி அனுப்பிவிடவும் .ஹீ!

செய்முறையை நன்கு கவனிக்கா விட்டால் பொருள் இழப்புக்கு எல்லாம் தளபதி போல ஆரம்பத்தில் நஸ்ரப்பட்ட இயக்குனர்களுக்கு பணம் கொடுப்பது போல எல்லாம் தனிமரத்தினால் கொடுக்க முடியாது:)))

என்னிடம் இருப்பது பாடல் தொகுப்பு மட்டுமே இதோ-ஹீ


4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அட....! செய்து பார்ப்போம்... சூப்பர் சிங்கரை பார்த்து விட்டு... ஹிஹி...

Subramaniam Yogarasa said...

நல்ல சுவையான(!)பகிர்வு!!!///கேக் நெடி அடிக்கிறதோ,இல்லையோ...........அரசியல் நெடி தூக்கல்,ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

அட....! செய்து பார்ப்போம்... சூப்பர் சிங்கரை பார்த்து விட்டு... ஹிஹி...// வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல சுவையான(!)பகிர்வு!!!///கேக் நெடி அடிக்கிறதோ,இல்லையோ...........அரசியல் நெடி தூக்கல்,ஹ!ஹ!!ஹா!!!//அப்படியா யோகா ஐயா!அரசியலும் ஒரு கேக்தான்! ந்ன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.