08 April 2014

ரகசியத்தின் நாக்குகள் வெளியீட்டு விழா!

ஈழத்து இலக்கிய உலகிற்கு இன்னொரு அணிகலன் போல இந்த வாரம் பாரிசில் இரண்டாவது வெளியீடு கண்டது .நெற்கொழுதாசனின் கவிதைத் தொகுப்பான


முதல் வெளியீடு யாழிலும் ,இரண்டாவது வெளியீட்டு விழா  பாரிஸ் தேசத்திலும் வெளியாகி அச்சில் வராத இன்னொரு புதுமையான இந்தக்கவிதைத் தொகுப்பு இலக்கிய நம்பிக்கைத் தூண்டல் என்றால் மிகையில்லை!


இதுவரை இணையத்திலும் ,இதழ்களிலும் ,அறிப்பட்ட நெற்கொழுதாசன் இப்போது நூல் ஆசிரியர் என்ற இன்னொரு மகுடம் சூட்டும் விழா கடந்த வாரம் பாரிசில் மூத்த படைப்பாளிகள் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.


மூத்த படைப்பாளிகள் கவிஞரின் நூல்த்தொகுதியை கையில் பெற்று கண்டு வியந்த கவிகளின் மன உணர்வை மாண்புடன் மடைதிறந்தார்கள் மதியர்கள் கூடிய சபையில் .

மனதுக்கு இலக்கியம் எப்போதும் தன் நிலை மறக்கவைக்கும் !அதை இந்த நூலும் இன்னும் தன் நிலையை அதிகம் உருக வைக்கின்றது.

கவிதைத்தொகுதியில் 37 கவிதைகள் நெற்கொழுதாசன் என்ற கவிஞர் தன் தனிமனித இருப்பையும் ,தன் தேசம் கடந்து வந்த ஏக்க நிகழ்வையும் ,எதிர்கால தாய்நாட்டின் எதிர்ப்பையும் ! அச்சு ஏட்டில் சொற்சுவையில் புதிதான பாணியில் அதிகம் புடம் போட்ட தங்கம் போல புனைந்த கவிகளின் ஆழம் இன்னும் இன்னும் பேசப்படும் இனிவரும் இலக்கிய `மேடைகளில் .

வார்த்தைகள் கவிஞரிடம் இயல்பாக வசப்பட்ட தன் உந்துதழில் இன்றைய ஈழ வதையை தீப்பிழம்பாக வடித்து இருக்கின்றார் !

 கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கது!

உதாரணமாக நான் இல்லாத என் அறையில்,ரகசியத்தின் நாக்குகள், வேலிகள் இழந்த பின் , முடிவே தலைப்பு, வாசித்தாலென்ன விட்டாலென்ன, ,பகிரப்படாத  அல்லது பகிரமுடியாத. கனத்த மனதின் ஒரு பக்கம்,, என கவிஞரின் கற்பனை நீளம் அதிகம் ஈழத்து அகதி போல!

80 பக்கம் கொண்ட இந்த நூலினை கறுப்புப்பிரதிகள் பதிகம் வெளீயீடு செய்து இருக்கின்று .நிலாந்தன் முன்னுரையும். அணிந்துரை வா.ஐ.சு ஜெயபாலனும் வழங்கிய இந்த தொகுதிக்கு சிறப்புச் சேர்த்து இருக்கின்றார்கள்.இந்த நூலை பலரும் வாங்கிப் படிப்பதுடன் முகநூல் நண்பர்களும் ,முக்கிய ஊடக நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தால் !அது ஈழத்து இலக்கிய வாசகர்களுக்கு செய்யும் இன்னொரு நம்பிக்கை ஒளி .

இந்த நூலினைப் போல் இன்னும் பல நூல் நெற்கொழுதாசன் படைக்க இது ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதே சபையில் கூடிய பலரின் ஊக்கிவிப்பு வாதமாக இருந்தது .

அதையே தனிமரமும் வலையில் மீண்டும் வழிமொழிகின்றேன் .கவிதைக்கு பொழிப்பு எழுதி பதிவை நீளமாக்கிவிடும் எண்ணம் இல்லை. கவிதையை  வாசிப்பதன் ஊடாகத்தான் உணர்ந்து கொள்ள முடியும் அதன் உணர்ச்சிப் பிரவாகத்தை.

 பாரிஸ் வெளீயீட்டு நிகழ்வில் கவிஞரின் கவித்துவத்தில் தங்கத்தில் கலந்த செம்பினைப்போல சில களைகள் கண்டிக்கப்பட்டது காதில் விழுந்த ஒன்று!

இன்று  நம் ஈழ தேசத்துக் கவிஞர்கள் சிலர் பொதுநிலை மறந்து இனவுணர்ச்சிக்கு அடிமையாகி பக்கச்சார்ப்பாகி விடுகின்றார்கள் .

இது தணிக்கை . தீவிர இனவாத இராணுவ வல்லாதிக முன்னெடுப்பின் இன்னொரு பக்கப் பார்வை தவிர்க்க முடியாது.  என்றாலும்  புத்தன்( எங்கள் நிலத்தில் ..எந்த் போரிலும்  சிவன் பேரிலிலும் .புத்தன் பேரிலும் .அல்லாவின் பேரிலும் .யேசுவின் பேரிலும் கொல்வது மதவாத அரசியல்வாதிகள் .மற்றும் அவர்களை வழிநடத்தும் அமைப்புக்கள் அன்றி சாந்தி .சாமாதனம். அகிம்சை போதித்த. அந்த ஜோகிகள் அல்ல )புத்தன் ஒரு சமாதான்  விரும்பி மகாவம்சம் திணித்து, திரித்து எழுதியது பண்டிதர்கள் செயல் அது வரலாற்றில் இன்று வாழ்கின்றது!


இனிவரும் காலத்தில் நெற்கொழுதாசனும் நடுநிலையோடு கவி படைக்கவும் ,காத்திரமான தொடர்கதை எழுதவும்  போர்க்காலத்தின் அவலத் ததைச் சொல்லும் ஈழத்து நாவல் படைக்கவும் .ஈழத்து இலக்கியத்துக்கு இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமாக புதிய படைப்பாளிகளுக்கு முன் உதாரணமாக மிளிர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்திப்பதுடன்.!

 என்  இனிய வாழ்த்துக்களும்  இன்னும் பல நூல் வர வேண்டும் என்ற ஏதிர்பார்ப்புகளுடன்

என்றும்
வாசகன் தனிமரம்!
இந்த நூல் அச்சில் வெளிவர/வெளியீடுகாண செயல்பட்ட  முக்கிய செயல்வீரன் சோபாசக்திக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும் .வாழ்த்துக்களும் !

இன்னும் சில புகைப்பட காட்சிகள் தனிமரம் வாசகர்களுக்காக!

இவரும் ஒரு பதிவாளர்!சாய் பிரசாத்!

நூல் வெளீயீட்க்கு முன் ஒரு நிமிடம் முன் காட்டான் அருகில்!
நான்கு வருடம் வலை/முகநூல் என்று தனிமரத்துக்கும் முகம் காட்ட மறுத்த அண்ணாச்சி நெற்கொழுதாசன் ஐயாவுடன் முகம் பார்த்த அந்த ஒரு நிமிடம்!

9 comments :

நெற்கொழுதாசன் said...

நன்றி பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

நெற்கொழுதாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

Subramaniam Yogarasa said...

வாழ்த்துக்கள்,நெற்கொழுதாசன்! பகிர்ந்த நேசனுக்கு நன்றிகள்.

Anonymous said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்,நெற்கொழுதாசன்!

தனிமரம் said...

நன்றி பாஸ் //வருகைக்கு நன்றி நெற்கொழுதாசன் ஐயா.

தனிமரம் said...

நெற்கொழுதாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..//நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் தனபாலன் சார்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள்,நெற்கொழுதாசன்! பகிர்ந்த நேசனுக்கு நன்றிகள்.//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா.

தனிமரம் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்,நெற்கொழுதாசன்! //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

J.Jeyaseelan said...

ஈழத்து தமிழே தமிழ் தான்! வாழ்த்துகள்.. வெற்றி பெற..

http://pudhukaiseelan.blogspot.in/