16 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-28

"இந்த ஊருக்கு ஒரு நாள் வருவேன் அதுதான் எனக்கு திருநாள் "என்ற மாவை வரோதயம் பாடல் அவர் இன்று இவ்வுலகில் இல்லை என்றாலும்!

 ஈழத்து மெல்லிசையில் என்றும் உயிர் வாழும் !அது போல இந்த ஊரில் இருந்து என் தந்தை விலகிச்சென்றாலும் இன்னும் நெஞ்சில் ஞாபகபங்கள்  மெல்லிசை இன்று துள்ளிசையில் மீள்கலவை போல சுருதி மீட்டும். முன்னர் பார்த்த நகரா இது,?, என்பது போல இன்று இந்த நகரம் அதிக அடிப்படை இயல்பை புதிய நிர்மான கட்டிடங்கள்,பல்பொருள் அங்காடிகள் என்று பதுளையும் நவீன திரையரங்குபோல் பளபளத்தாலும்! இன்னும் மக்களின் மனதில் தோட்டத்தொழில் மட்டும் மாற்றம் காணாத நிலயை என்ன சொல்வது? 

எப்போதும் புதிய  ஊருக்குப் போகும் போது விடுதியில் தங்கும் நடைமுறையை வெளிநாட்டு வாழ்க்கை தந்து இருக்கு !

அதுவும் தனித்துவத்தைப் பேணா உதவும் காரணியாக அமைந்துவிடுகின்றது.

 இந்த ஊரில் பல நட்புக்களின் வீட்டில் தங்கும் வசதி வாய்ப்பு நிச்சயம் எப்போதும் இருக்கும்
 ஆனால் என் தனிப்பட்ட விடயத்தினால்  யாருக்கும் எந்த அசெளரியங்களும் வரக்கூடாது என்பதே என் ஆசை.!


 நான் வணங்கும் என் குருவே.!

 எனக்கு வழித்துணை வரவேண்டும். பதுளையில் இருந்து பண்டாரவளை போகும் வீதியில் இருக்கும் வாடிவீட்டில் தங்கும் வசதியை ஏற்படுத்திவிட்டு கையோடு எடுத்து வந்திருந்த அன்பளிப்புடன் ஈசன் இருக்கும் புதிய வீடு பதுளைப்பிட்டி என்ற முகவரியைத்தேடி நடந்தான் பரதன் .

கருணாநிதியின் மனிதசங்கிலி பேரணி போல  முன்னர் இந்த இடங்கள் அறிந்தபடியால் நடைப்பயணமாக வீல்ஸ்பார்க ஊடாக நடந்தான் பரதன்!

 மீண்டும் நீயா?, ஊருக்குள் வந்துவிட்டாயா??
 என்று கேட்பது போல இருந்தது தேவனின் கோவில் நிலைத்தூண்!

 காலமாற்றத்தில் கோவில் நவீன மாற்றங்களையும், புதிய முகங்களையும் காணக்கூடியதாக இருந்தாலும்!

 இந்த ஊருக்கு இன்று ஒருநாள் முதல்வன் போல புதியவன் என்ற எண்ணத்தோடு விரைந்தவன் பயணத்தின் வேகத்தை அறிந்த இயற்கையும் அவனோடு வேகமாய் நேரத்தினை ராமராஜனின் பட சிலம்படிச்சண்டை போல சூழற்றியது !

இந்த வீதியில் இருந்த கல்லூரியில் தான் முன்னர் பலரின் வாழ்வில் பட்டதாரிகள் என்ற கனவையும் ஒரு மதவாதத்தீ எரித்த கதை எல்லாம் என் நண்பன் சொல்லியது இன்னும் ஞாபகத்தில்
! ஒரு கல்லூரியின் கதை போல !

இந்த கல்லூரி வாசல் கடந்து போன பைங்கிளிகளின் வாழ்க்கைப்படகு புலம் பெயர்தேசங்களிலும் இன்னும் பள்ளிக்கூடம் போல ஆட்டோக்கிராப் என்று மனதில் ஒரு பூஞ்சோலை தான்! 


ஒவ்வொருத்தரும் தங்களின் கதையை மீட்டினால் பாலச்சந்தரின்  ரயில் சினேஹம் நாடகம்  போலத்தான்..


 தேடிய முகவரி எதிரில் என்பதை உணர்ந்தவன் ஈசனின் வீட்டு வெளிவாசல் அழைப்பு மணியினை அழுத்தினான்! 

இன்னும் தவிக்கின்றேன் இப்படி!4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் கதையை மீட்டினால்... ஆட்டோகிராப் தான்...

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் நண்பரே
தொடர்ந்து வருகிறோம்

தனிமரம் said...

தங்களின் கதையை மீட்டினால்... ஆட்டோகிராப் தான்...//வாங்க தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும்.

தனிமரம் said...

தொடருங்கள் நண்பரே
தொடர்ந்து வருகிறோம்//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.