23 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-31

ஆட்சியும் அதிகாரமும் என்ற மாயமான்கள் எப்போதும் நிரந்தரம் இல்லை. இந்த உலகில் ஆட்சி கையில் இருக்கும் போது நல்லதுகள் செய்யும் நினைப்பு வராவிட்டாலும்!

 கெட்டது செய்யமட்டும் பலர் பின் நிற்பது இல்லை நண்பா!

 ஒரு காலத்தில் ஜீவனியின் அப்பா தன் அரசியல் அதிகாரத்தையும், இனவாத பொலிஸ் உதவியையும் கொண்டு என் ஐயாவிடம் மிரட்டல்பாணி வன்முறையினால் இந்த ஊரைவிட்டு என்னையும், என் காதலையும் கொழுந்து பறிப்பது போல பறித்ததும் நிஜம். ஒரு புறம் மகன்மீதான பாசம் இன்னொரு பக்கம் மகன் உயிர் என்ற ஆதங்கத்தில் ஐயாவையும் இந்த ஊரில் இருந்து விரட்டியது ஜீவனியின் அப்பாவின் இராஜதந்திரம் .


கோழை போல ஓடவைப்பதில் என்னை இடம்பெயர்த்துவதில் ஜீவனியின் அப்பா வெற்றி பெற்று இருக்காலம் ஒரே கல்லில் இரு மாங்காய் போல .


காதல் என்றாலே கவலைதானா?? ஊரைவிட்டு ஒதுங்குவதுதான் பொக்கிஷ்ம் என்பது போல என் ஐயாவும் என்னை இங்கு இருந்து புலம்பெயர வைத்தாலும் நெஞ்சில் ஜீவனி மீது பூத்த காதல் ரோஜா இன்னும் கொய்யாமலே என் இதயத்தில் இன்றும்  இருக்கு.


 இடையில் இந்த மிரட்டல் பற்றி என் ஐயா தொலைபேசியில் சொல்லியதுண்டு! ஆனாலும் புலம்பெயர்ந்தபின் எனக்கு என்று ஒரு தகமையை .தகுதியை. உருவாக்க வேண்டும் என்ற வேட்கை. என்னை ஜீவனியிடம் முதலில் எதையும் சொல்லும் வரம் கிடைக்கவில்லை.

 என் ஆசைக் காதலுக்கு வழிகாட்டவேண்டிய நண்பன் நீ ஒரு வார்த்தையும் ஜீவனியிடம் எனக்காக பரிந்து பேசலையே ??

பிரச்சார அரசியலில் நீயும் புதைந்து போனாயா ?

அவள் மனதில் என்நிலை என்ன என்று ஒரு வார்த்தை நான் அகதியாக் வெளிநாட்டுக்கு  தாய் தேசத்தில் எல்லா  வசதி இருந்தும் ஏதிலியாக  புலம்பெய்ர்ந்த பின்!


 ஒரு பொய்யாவது சொல் கண்ணே நண்பனுக்கு என்று கேட்டாயா ??என் காதல் கடிததுக்கு என்ன பதில் என்றுகூடத்தெரியாமல் தான் நானும்

!உயிரை இங்குவிட்டுவிட்டு உடல்கொண்டு மட்டும் புலம்பெயர்தேன்.


 அதனால்தான் பிரெஞ்சில் எவளைப் பார்த்தும் மருகவும்மில்லை, உருகவும்மில்லை . என் நண்பன் ஜீனுக்கும், எனக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்குடா ஈசன்.

 என் இன்னொரு நட்பு ஜீவன் உன் பார்வையில் வெட்டிப்பயலாக இருக்கலாம்! உனக்கு முக்கியத்துவம் தரவில்லை முகநூலில் காத்து இருப்பது இல்லை என்பதுக்காக அவனை நீ நிந்திப்பதை நான் விரும்பமாட்டேன்!

 எனக்கு நீயும், அவனும் இருகண்கள் போல நல்ல நட்புக்கள் எந்த ஒழிவு மறைவும் இருக்கக்கூடாது. அப்பத்தான் எதிலும் சேர்ந்தே பயணிக்கலாம்.

 இது அரசியல் அல்ல வெற்றி பெற்றதன் பின் கைகழுவிட   ஈசன் .!

எனக்கு இங்கு நிற்கும் நாட்கள் எண்ணிக்கையில் குறைவு!இடையில் நடந்தவை எதையும் புலனாய்வு போல விசாரிக்க எனக்கு விருப்பமில்லை, தேவையும் இல்லை மச்சான் .

நான் ஜீவனியின் குடும்பத்துடன் பேசப்போறன் அவங்கள் முகவரிக்கு என்னைக்கூட்டிச் செல்வாயா ?

அவர்கள் வீட்டில் சொல்லமறந்த கதைபடம் போல செருப்படி விழுந்தாலும், இல்லை வானத்தைப்போல அவமரியாதை செய்தாலும்!

 நீ மெளனம் காக்க வேண்டும் என் நட்புக்காக!

 நான் ஜீவனியிடம் பேசுறன் மச்சான் ! எனக்கு உதவி செய்வாயா? எனக்கு அரசியலில் தான் ஜீவனி அப்பாவைப்பிடிக்காது  பரதன்.

 இப்ப அவர் பல்லுப்புடிங்கியபாம்பு போல நாளைக்கு காலையில் அவர்களின் வீட்டை போவோம் எங்க வீட்டில் இப்ப ஏதும் பேசாத சரி மச்சான்!
.......

விரைந்து தவிக்கின்றேன்....

15 comments :

Anonymous said...

வணக்கம்
நேசன்

ஒவ்வொரு தொடரும் நன்றாக உள்ளது... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பிரச்சார அரசியலில் நீயும் புதைந்து போனாயா ?//
அற்புதமான கவித்துஅ வரிகள்.
நல்ல சொல்லோட்டத்தால் மனதை ஈர்க்கவும் செய்கிறது. ஈரமாக்கவும் செய்கிறது

அம்பாளடியாள் வலைத்தளம் said...

முதல் படம் இன்னும் கண்ணுக்க நிற்குது சகோதரா :))) கரு ஏன்ரா செல்லா
உன்னைய வச்சு எல்லாரும் காமடியா கழுவி ஊத்துறாக !:))))))அது போகட்டும் இந்தக் காதல் ஜோடி விரைவில் ஒன்று சேர வாழ்த்துச் சொல்கிறேன் .தனி மரம் சோகப் பாடல் ஒன்று காத்திருக்கு உங்களுக்குத் தானே சோகம் என்றால் அதிகமாகப் பிடிக்கும் ?...அதனால ஓடி வந்து படியுங்கள் ஒரு வேளை லைக் போட மறந்தால் கொம்பு முளைக்கும் அதையும் மறக்க வேண்டாம் :))

Subramaniam Yogarasa said...

ஹூம்........பேசிப் பாருங்கள்.ஒத்து வரும்!

Subramaniam Yogarasa said...

அம்பாளடியாள் வலைத்தளம் said...லைக் போட மறந்தால் கொம்பு முளைக்கும் அதையும் மறக்க வேண்டாம் :))////அடடே!!!!!!!!இப்படியெல்லாம் மிரட்டி ஓட்டு வாங்கணுமா,பதிவு எழுதினால்?தப்பிச்சேன்.(நான்,ஆரம்பித்த ப்ளாக் காணோம்,ஹ!ஹ!!ஹா!!!)

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சில் ஜீவனி மீது பூத்த காதல் ரோஜா இன்னும் கொய்யாமலே என் இதயத்தில் இன்றும் இருக்கு.//

மரண பரியந்தம் இந்த காதல் வலி என்பது மாறாதது !

Mathu S said...

கதை ஓட்டம் நல்லா இருக்கு
http://www.malartharu.org/2013/08/blog-post.html

தனிமரம் said...

வணக்கம்
நேசன்

ஒவ்வொரு தொடரும் நன்றாக உள்ளது... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக.நன்றி வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும் ரூபன்..

தனிமரம் said...

பிரச்சார அரசியலில் நீயும் புதைந்து போனாயா ?//
அற்புதமான கவித்துஅ வரிகள்.
நல்ல சொல்லோட்டத்தால் மனதை ஈர்க்கவும் செய்கிறது. ஈரமாக்கவும் செய்கிறது//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

முதல் படம் இன்னும் கண்ணுக்க நிற்குது சகோதரா :))) கரு ஏன்ரா செல்லா
உன்னைய வச்சு எல்லாரும் காமடியா கழுவி ஊத்துறாக !:))))))அது போகட்டும் இந்தக் காதல் ஜோடி விரைவில் ஒன்று சேர வாழ்த்துச் சொல்கிறேன் .தனி மரம் சோகப் பாடல் ஒன்று காத்திருக்கு உங்களுக்குத் தானே சோகம் என்றால் அதிகமாகப் பிடிக்கும் ?...அதனால ஓடி வந்து படியுங்கள் ஒரு வேளை லைக் போட மறந்தால் கொம்பு முளைக்கும் அதையும் மறக்க வேண்டாம் :))

23 May 2014 22:21 Delete//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹூம்........பேசிப் பாருங்கள்.ஒத்து வரும்!// ஆஹா நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அம்பாளடியாள் வலைத்தளம் said...லைக் போட மறந்தால் கொம்பு முளைக்கும் அதையும் மறக்க வேண்டாம் :))////அடடே!!!!!!!!இப்படியெல்லாம் மிரட்டி ஓட்டு வாங்கணுமா,பதிவு எழுதினால்?தப்பிச்சேன்.(நான்,ஆரம்பித்த ப்ளாக் காணோம்,ஹ!ஹ!!ஹா!!!)//ஹீ !ம்ம்

தனிமரம் said...

நெஞ்சில் ஜீவனி மீது பூத்த காதல் ரோஜா இன்னும் கொய்யாமலே என் இதயத்தில் இன்றும் இருக்கு.//

மரண பரியந்தம் இந்த காதல் வலி என்பது மாறாதது !//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

கதை ஓட்டம் நல்லா இருக்கு
http://www.malartharu.org/2013/08/blog-post.html//நன்றி மது வருகைக்கும் கருத்துரைக்கும்.