13 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---37

அதிகாரிகளின் கடமை ஆட்சியின் நிறுவாக விடயங்களை நிஜமான ஆர்பணிப்புடன் மக்களிடம் தெளிவு படுத்த வேண்டியது. ஆனால் ஆட்சியாளரிடம் ஒரு முகமும். மக்கள் குழுவிடம் இன்னொரு முகம் காட்டியதன் இருண்ட பக்கம் எல்லாம் இன்னும் தொடரும் நாடகம் போல !


இவர்களும், நடிகர்கள்தான் ஈழத்தின் அவலத்தில் .


இப்ப சொல்லு ஜீவனி என்ன சட்ட திட்டங்கள் தத்து எடுக்க ?

உன் மெளனத்தைக்கலை தயவு செய்து.  கொஞ்சம் மனம்விட்டு பேசு ஜீவனி.


 நீங்க பேசுங்க நாம் வெளியில் இருக்கின்றோம் என்று பிரசாந்தினியும் ஈசனும் வெளியில் செல்ல இருவரும் அந்த அறையில் இருந்தனர் பொலிஸ் அதிகாரியின் முன் இருக்கும் குற்றவாளி போல .

 ஏன் பரதன் இங்க வந்தாய்?? இத்தனை வருடம் நான் எப்படி இருக்கின்றேன் என்று ஒரு கணம் சிந்தித்து இருப்பாயா ? 

என் சிந்தனை எப்போதும்  உன்னைவிட்டு என்றும் பிரிந்ததில்லை ரயிலைத் தாங்கும் தண்டவாளம் போல என்றாலும் என்  ஐயாவின் பிடிவாதம் நாட்டைவிட்டுப் போகவேண்டிய கட்டாயம்.


 நடந்தது நடந்து போச்சு இனி நடப்பதைப் பேசத்தான் வந்தேன்! ஆமா என்னாச்சு உன் வாழ்க்கை?,

 நல்ல பையன் தானே ராம்குமார். ஏன் 5 வருட இல்லறம் இடையில் தடம்பிரண்ட  ரயில்ப்பெட்டி போல ஆச்சு?

அது ஒரு கொடுமையான சிறைக்கூடம். எங்கப்பா நல்ல வரதட்சணை,வீடு  என  பல சொத்துக்கள்  கொடுத்து கட்டி வைத்த அப்பாவுக்கு எங்களின் வாழ்க்கை இப்படி சந்தி சிரிக்கும் என்று முதலில் தெரியாது.


 கலியாணம் முடிச்சு முதல் இரண்டு வருடம் சந்தோஸமாகத்தான் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்தது .ஆனால் திடீர் திருப்பங்களும், திசைமாற்றும் பேச்சுக்களும் தானே எல்லாத்தையும் தீர்மானிக்கின்றது.

 வம்சம் வரவில்லை என்ற அத்தையின் முதல்க்குரல்  எங்கள் இருவருக்கும் இடையில் இடிமின்னல் போல முதலில் தோன்றிய வாக்கு வாதம் இலங்கை  சமாதான பேச்சுவார்த்தை போலகிவிட்டது

.  இதில் யாருக்கு குறை என்ற ஒரு தலைப்பட்ச முடிவு என்று அத்தை வீட்டில்  ஆடிய காவடி எனக்கு மனநிம்மதி போச்சு!

 இந்த உலகில் கொடுமையிலும் கொடுமை எது தெரியுமா?? மலடி என்று பட்டம் சுமக்குக்கும் மருமகள்தான்.

 மாப்பிள்ளை சிங்கம் என்று சொல்லும் ஊர்கள் மாப்பிள்ளை திருநங்கை என்று சொல்வதில்லை.

 விதி எழுதும் கதையில் சிலரும் கன்னிப்பருவத்திலே ராஜேஸ் போலத்தான் தினமும் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதை விட காலம் எல்லாம் வாழ்வெட்டியாக இருந்துவிடும் முடிவில் தான் விவாகரத்து வாங்கினேன்!

ஊருக்குள் குடியும். கூத்தியாளுடணும் திரியும் ராம்குமார் அரசியலில் பிரச்சாரத்தில் இப்போது பெரியமனுசன் ஆனால் அப்பா என்று சொல்லும் தகுதியை காலம் கொடுக்கட்டும்! .

விவாகரத்து வாங்கி நான் திமிர்பிடித்த பெண் . வாழத் தெரியாதவள்  என்று பலரும் பல குத்தல் பேசக்கேட்டு  இப்ப என் மனசு எதையும் தாங்கும் இதயம் போல.

 இந்த மழலைகள் காப்பகத்தில் என் ஜீவன் ஒன்றாகிவிட்டது இனி இதுதான் என் பாதை? 

பாதைகள் எங்கு முடியும் என்று யாரும் அறியார்  ஆண்டவன் அன்றி ஜீவனி!

 உன் வலிகளும் வேதனைகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது
என்றாலும் உனக்கு என்றும் ஒரு வாழ்க்கை  நிச்சயம் தேவை உடல் சுகத்துக்கு இல்லை உன் பின்னடி வாழ்க்கைக்கு!


இன்னும் தவிக்கின்றேன்........

15 comments :

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் மனதில் வலி, வாழ்க்கை ஓட்டம் மனிதர்களை எப்படி எல்லாமோ மாற்றி விடுகின்றன !

ரூபன் said...

வணக்கம்
தாங்கள் சொல்வது சரிதான்.. இரண்டு பக்கங்கள்தான்.உள்ளத்தில் இருந்து எழும் எழுச்சி மிக்க வரிகள் அந்த வரிகளுக்கு விடை கிடைக்கும் காலம் விரைவில்.தொடருங்கள் அடுத்த கட்டத்தை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நமக்கென ஒரு பாதையை உருவாகிக் கொள்ள வேண்டியது தான்...

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்க்கை மனிதர்களை மாற்றி விடுகிறது
தம +1

KILLERGEE Devakottai said...

உண்மைதான் நண்பரே... மலடி என்ற வார்த்தையைவிட கொடுமை வேறொன்றில்லை.
Killergee
www.killergee.blogspot.com

Subramaniam Yogarasa said...

சிலருக்கு,தாங்களும் பெண் தான் என்ற நல்லெண்ணம் இருப்பதே இல்லை!///இரண்டு ஆண்டுகளிலேயேவா?அத்தைக்கு வேறு ஏதோ.......................!

Subramaniam Yogarasa said...

மின்னூல் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

ம்ம்ம் மனதில் வலி, வாழ்க்கை ஓட்டம் மனிதர்களை எப்படி எல்லாமோ மாற்றி விடுகின்றன !//வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம்
தாங்கள் சொல்வது சரிதான்.. இரண்டு பக்கங்கள்தான்.உள்ளத்தில் இருந்து எழும் எழுச்சி மிக்க வரிகள் அந்த வரிகளுக்கு விடை கிடைக்கும் காலம் விரைவில்.தொடருங்கள் அடுத்த கட்டத்தை.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நமக்கென ஒரு பாதையை உருவாகிக் கொள்ள வேண்டியது தான்...
//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்க்கை மனிதர்களை மாற்றி விடுகிறது
தம +1//நன்றி வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் கரந்தை ஐயா.

தனிமரம் said...

உண்மைதான் நண்பரே... மலடி என்ற வார்த்தையைவிட கொடுமை வேறொன்றில்லை.
Killergee
www.killergee.blogspot.com//நன்றி கில்லர்கிரி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

சிலருக்கு,தாங்களும் பெண் தான் என்ற நல்லெண்ணம் இருப்பதே இல்லை!//
நிஜம் தான் யோகா ஐயா

/இரண்டு ஆண்டுகளிலேயேவா?ம்ம்ம்

அத்தைக்கு வேறு ஏதோ.......................!யாருக்குத்தெரியும்! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

14 June 2014 13:21 Delete//

தனிமரம் said...

மின்னூல் வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!// வாழ்த்துக்கு நன்றிகள்

Chokkan Subramanian said...

செல்வத்திற்குள் எல்லாம் பெருஞ்ச் செல்வம் – குழந்தைச் செல்வம் அந்த செல்வம் இல்லையென்றால் மனதில் தோன்றும் வலி பெரும் வலி தான்