15 June 2014

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --38

புதுமைப்பெண் ,புதியபாதை புரட்ச்சிப் பெண் என்று தேர்தல் பிரச்சாரம் போல மேடையில் பேசுவதுடன் வார்த்தைகளும் வாழ்க்கையும் ஒரு போதும் முடிவதில்லை ஜீவனி! ஒவ்வொருத்தரும் தம் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை தாம் தான் எடுக்க வேண்டும்! உறவுகளும் ,சமூகமும் இல்லை ! இந்த நாட்டில் மறுதார வாழ்க்கை ஒன்றும்புதுசும் இல்லை ,புரட்சியும் இல்லை ,இரண்டாம் தாரம் முடித்தவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே பயணிக்கும் காவியங்கள் கண்டவர்கள் கதையை எழுத ஏனோ முன்வரவில்லை தன்குடும்பம்,தன்ஜாதி ,தன்சமூகம் என்ற மேதாவி எண்ணாத்தால்!! என்றாலும் மூத்தவர் இவரின் வாழ்க்கையில் பலதாரம் இருப்பதையும் நீ அறிவாய்!


. என் தெளிந்த சிந்தனையோடு சொல்லுகின்றேன்!

 நான் உன்னை எப்போதும் நேசிக்கின்றேன் இதயபூர்வமாக இப்பவும் சேர்ந்து வாழகாத்து இருக்கின்றேன். உடல்தேவை நோக்கம் இன்றி! 

என்னோடு வாழ்க்கையில் மூச்சுக்காற்றுப்போல நீ வரவேண்டும் இல்லறத்தில் ! நீயே தீபம் ஏற்றவேண்டும்! விரைந்து ஒரு நல்ல முடிவு சொல்லு இப்ப ரயிலுக்கு நேரமாச்சுபோல எனக்கு விடுமுறை முடிந்து போகின்றது.


 மீண்டும் பாரிஸ் போக வேண்டும் இடையில் என் பூர்வீகத்தில் என் வாழ்க்கை இருண்டு போனதாக எண்ணிப்ப்புலம்பும் என் தாய் முகத்தை பார்க்க வேண்டும்!

 உன்னைநினைத்து என்று கதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி உன்னை கரம்பிடிக்கும் ஆவல் இருக்கு !


யுத்தகால அவசரமாக இராணுவஆலோசனைக்க்கூட்டம் போல இந்த தீர்மானத்தை நீ எடுக்க வேண்டாம் நாளை மீண்டும் விரைந்து வருவேன்!

 நல்ல பதில் சொல்வாயா ?தாலியோடு நீ தனிமரம் இல்லை தயங்காத ஜீவனி!

 சமூகம் நம்மை கவனிப்பதால் எண்ணி  உன் சந்தோஸ வாழ்க்கையை காலம் எல்லாம் காத்திருப்பேன் தனிமரம் போல என்று கைநழுவி விடாத.!!


 நாளை வாரன் என்று பரதன் விரைந்து  சென்ற வழியையே விழியில் வலி தந்தவன் இவனோ என்ற ஏக்கத்துடன் நின்ற வேளையில்!


 பிரசாந்தி உள்ளே நுழைந்தாள் தொலைக்காட்சி  இடைவேளை விளம்பரம் போல!


 ஜீவனீ நான் இப்ப உன் செயளாராக பேசவில்லை! சகதோழி. ஒரு குடும்பத்தலைவி போல பேசுகின்றேன் .

பரதன் என்ன பேசி இருப்பான் என்பதை அவன் நண்பன் ஈசன் வெளியில் சொல்லிவிட்டான்! வீணாக உன் பிடிவாத நிலையில் உன் வாழ்க்கையை தொலைக்காத பலர் தொலைத்த நாட்குறிப்பு போல!
 நான் சொல்வது ஒன்றுதான் உனக்கு பாரிசில் இனிது இனிது என்று இன்பமாக உன் கஸ்ரம் போய் !நல்லாக வாழும் நிலையைப்பார்
 !


இது ஆலோசனை மட்டும் அல்ல அன்பான் கட்டளையும் !நாளைப்பொழுது உன் விடியல் நோக்கி இனியும் தொடர் போல தொடராதே உன்  தனிமரம் வாழ்க்கை முடிவு காண வேண்டி நானும் பிரார்த்திக்கின்றேன்!!!!!!!!!!!!!!!!!!

////////////////////////////////////

தொடரும்....

4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பிடிவாதம் மிகப்பெரிய "வாதம்"...

ரூபன் said...

வணக்கம்

பதிவில் எல்லோரையும் சிந்திக்கும் படி நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

jonysha jony said...

சிந்திக்க வேண்டிய தகவல்....

Dr B Jambulingam said...

வலைச்சரத்தில் தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
www.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in