26 April 2015

முகம் காண ஆசையுடன் - 8

http://www.thanimaram.org/2015/04/7.html

இனி!!!!

புலிச் சந்தேகம் என்ற  போர்வையில் இன்னும் சிறையில் வாடும் தமிழர் ஒருபுறம் என்றால்!

 புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சிங்களவர்கள் கூட இன்னும் சிறையில் இருப்பதை இந்த உலகம் மறந்து தன் தலைவன் உத்தமபுத்திரன் என்பது போல பாராளுமன்றத்தில் தூங்கும் கூட்டம் எல்லாம் வாக்கு வாங்கிய மக்களை மறந்த ஆடும் ஆட்டம் எல்லாம் என்று தோற்க்கும்.

 இனியும் விடியல் வருமா ?,என்று சாமானிய மக்கள்  சிறைப்பறவையானவர்கள் எல்லாம் இனியும் வெளியுலகு கானுவது எப்போது,?

எந்த வல்லரசு இவர்களின் விடுதலை பற்றிப் பொதுவில் பேசும்!

 இல்லை எந்த நடிகன் பேசுவான்?

 இல்லை இனியும் எவர் வாக்கு வேட்டைக்காக  தமிழர் என்று போலி உணர்ச்சியை தூண்டி  தீக்குளிப்போர்  யார் ?,

என்று எல்லாம் இனி வரும் காலம் சொல்லும் என்றாலும் இந்த சிறைவாழ்க்கை மட்டும் அரசியல்வாதிகளுக்கு பஞ்சு மெத்தை .

அப்பாவி மக்களின் சிறைவாழ்க்கை பற்றி தொடராக எழுதும் ஆசையில் பத்திரிக்கை ஆசிரியரை நாடிய போது!

 அவர் சொன்னது" என்னம்மா நீ பிரபல்யமான விசயம் என்றால் நம் பத்திரிக்கையும் விற்பனை அதிகமாகும். வாசகர் வட்டமும்  சினிமா நடிகையின் பின் போகும் தொழில் அதிபர் போல எகிரி வீசும் அதை விடுத்து அடுத்த வேளை என்ன சாப்பாடு போடுவார்கள் என்று அறியாத இருட்டில் வாழும் சிறையில் இருப்போர் பற்றி எழுத  என்னிடம் அனுமதி கேட்டு வந்து என் நேரத்தையும் வீனாக்கிக்கொண்டு"

 ஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்!
 இல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை!


  பத்திரிக்கையில் வலையில் வாசிக்காத  தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்!

 இல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.

 இப்ப தொழில்நுட்பம் வளந்துவிட்டது சுமா .


நீ போகலாம் என்று பிரதம ஆசிரியர் சொன்ன நிலையில் ஆட்சியில் மதிப்பிளந்து போன மந்திரி போல வெளியேறிய சுமாவின் மனதில் அசுரன் நினைப்பு வந்தது  அவசர போலீஸ் 100  போல!

 அசுரனிடம்  இந்தவிடயம் பற்றி எப்படியாவது பேசனும் உடனடியாக அவன் இப்ப  பாரிசில்!நடண விடுதியில் உல்லாச வாழ்க்கையில் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே  என்று இருப்பானோ ?,

இல்லை பிரெஞ்சு பெண்கள் பின் சிகப்பு ரோஜா கமல் போல அலைவானா ,,

இல்லை  பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று இருப்பானோ?,இப்படித்தான் இலங்கையில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் பேசும் போது இலங்கை  பெண்கள் கற்பனை!!!


 ஆனால்  பாரிஸ்   நிலையோ அடுத்த சாப்பாடு என்ன என்று ஆஹா பட டெல்லி கனேஷ்  போல வாழும் நிலை யார் அறிவார் என்று சிந்தனையில் அசுரன்  சாப்பாடு தயார் செய்தான்!

முகம் காண ஆசையுடன்....

11 comments :

yathavan nambi said...

ஏதாவது சினிமா கிசுகிசு இல்லை, அரசியல்வாதியின் அந்தரங்கம்!
இல்லை மதவாதம் என்று நெருப்பான விடயத்தை பத்தவை!


பத்திரிக்கையில் வலையில் வாசிக்காத தொடராக இடம் ஒதுக்க சொல்லுகின்றேன்!

இல்லையோ உனக்கு என்று ஒரு உலகை உருவாக்கு.
உண்மையை உரித்தெடுக்கும் சித்திரை மாதத்து வெய்யிலினும் கொடிய அக்னி வார்த்தைகள்
சிந்திக்க வைத்த சிறப்பு பதிவு நண்பரே!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

உங்களுக்கு என்று ஒரு உலகை உருவாக்குங்கள்
நன்றி நண்பரே
தம +1

ரூபன் said...

வணக்கம்
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்..அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...


காலம் ஒருநாள் மாறும் நண்பரே காத்திருப்போம்.

KILLERGEE Devakottai said...


தமிழ் மணம் 5

yathavan nambi said...


அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சீராளன் said...

தனிமரம் இல்லை நீ
கனிமரம்
உனக்கான உலகு
மிகப் பெரியது
இந்தச் சிறிய தேசத்தில்
உன் சிந்தனைகளுக்கு
இடமில்லை
இது விற்பனை உலகு
விளம்பரங்களுக்கு
உள்ள முக்கியத்துவம்
வேதனைகளுக்கு இல்லை
ஆதலால்
அமைதிகொள்
அடுத்தவேளை உணவின்றி
பட்டினியாய்
இருந்தபோதும்
பாருக்கு பசியைப் போக்கும்
மாக்சியத்தை எழுதினான்
" கார்ல்மாக்ஸ் "
நீயும் ஒரு சிந்தனையாளன்
உனக்கான பரந்த உலகம்
எங்கோ எதிர்பார்த்திருக்கும்
தேடிக் கொண்டே இரு
தேடல் தெய்வத்துக்கும் உண்டு
திரும்பி நீ பார்க்காதே
உன்னைத் திரும்பி
ஊரே பார்க்கும்வரை
ஓடிக்கொண்டே இரு
ஊரோடு உலகும்
உன்னைத் தேடிவரும்
அப்போது
நின்று நிதானமாய் சொல்
நான் தனிமரம் இல்லை
' கனிமரம் ' என்று !


அருமையா இருக்கு சகோ ! தங்கள் ஆதங்கம் கலையட்டும் தேடல் திருப்தி தரட்டும் வாழ்த்துக்கள்

Saratha J said...

அருமையான பதிவு. என்னுடைய வலைப்பூவுக்கும் வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.

தனிமரம் said...

பின்னூட்டக் கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள்.

ஊமைக்கனவுகள். said...

தாமதத்தைப் பொறுத்தாற்றுங்கள்..

கவிஞர் சீராளன் சொன்னதைவிட ஒரு பின்னூட்டத்தை நான் இட்டுவிட முடியாது.
அவர் கருத்தை வழிமொழிகிறேன்.


த ம கூடுதல் 1