10 May 2015

முகம் காண ஆசையுடன் -10

இதுவரை.http://www.thanimaram.org/2015/05/9.html இனி .....
பொது மன்னிப்பு, கருனை விடுதலை  என்றெல்லாம்  மேதகு ஜனாதிபதியின் செயலைப் பாராட்டும் பலரும்!

 தேசத்துக்காக இன விடுதலைப்பாதையில் போய் இன்றும் விடுதலை வெளிச்சம் கானாது இருட்டில் தம் தியாக  விதியின் செய்லை நினைத்து மருகி சிறையில் வாழும்  நம் உறவுகள்  பற்றி எந்தக்கட்சியும் இன்னும் தீர்வு சொல்லாமல்.

 அடுத்த தேர்தலுக்கு வாக்குப்பலம் சேர்க்கும் வட்டமேசை மாநாடு போல நாளாந்தம் விடும் முதலைக்கண்ணீர்  அறிக்கை எல்லாம் எந்தக் குப்பையில் போடுவது ,,??

 பத்திரிக்கைக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதுக்காக நாளேட்டில்  எல்லாத்தையும் அச்சாக்கும்  பிரதம ஆசிரியர்.

 இருண்ட மக்களின் வாழ்வு பற்றி எழுத இடம் தராத நிலைதான் ஜனநாயக அரசியல் போலும் !

என்ற சிந்தனையில் சொல்ல முடியாத மனக்குழப்பத்தில் கிராண்ட்பாஸ் வீதியில் பயணித்தாள் சுமா .

 அசுரனுடன் நேரடியாக இன்று எப்படியும் பேசிவிட வேண்டும்.   என் கலியாணம் பற்றியும் சொல்ல வேண்டும் . தயக்கம் இனியும் கூடாது .என் பத்திரிக்கை அனுபவத்தை அடுத்த சந்ததிக்கும் சொல்லி வைக்க வேண்டும் என்றால் நல்ல ஒரு நம்பிக்கையான ஒருவன் உதவி தேவை.


 அதுவும் அசுரன் புலம்பெயர் தேசத்தில் இருப்பவன் அவனால் நிச்சயம் நான் எதிர்பார்க்கும் செய்திகளை  வெளிக் கொண்டர முடியும் .

 அவன் கருனை வைத்தால் நான் இங்கு துணிந்து எழுத முடியாத செய்தியை எல்லாம் சுதந்திர ஊடகவாதி போல அசுரன் தளத்தில் பகிர்ந்தால் விகடனில் வலை பாயுது போல பலரின் பார்வைக்கு சிறைக் கதைகள் வெளியில் வரலாம்!

அசுரனின் ஸ்கைப்பிக்கு தனியார் கொமினிக்கேசனில் இருந்து அழைப்பினை எடுத்தால் சுமா!


 கைபேசியில்  உள் வரும் அழைப்பிணை எல்லா நேரத்திலும் உள்வாங்க முடியாத சூழ்நிலை சமையல் வேலையின் சாபம் என்பதை பலர் அறியாமல் எங்கே  ஊத்திக்கிட்டு இப்போது படுத்திருக்கின்றானோ என்பதுதான் சிலரின் உடனடி  தீர்மானமாக இருக்கும் .
 
 முகம் காண ஆசையுடன்........

6 comments :

ரூபன் said...

வணக்கம்
ஒவ்வொரு தகவலும் மிக அருமையாக உள்ளது பாடலை இரசித்தேன் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்...

ஊமைக்கனவுகள். said...

தொடர்கிறேன்...

த ம 5

Yarlpavanan Kasirajalingam said...


"அடுத்த தேர்தலுக்கு வாக்குப்பலம் சேர்க்கும் வட்டமேசை மாநாடு போல நாளாந்தம் விடும் முதலைக்கண்ணீர் அறிக்கை எல்லாம் எந்தக் குப்பையில் போடுவது,,,??" என
அழகாக ஒப்பீடு செய்துள்ளீர்கள்.

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

KILLERGEE Devakottai said...

அருமையான பதிவும், பாடலும்.
தமிழ் மணம் காலையிலேயே 3

Thulasidharan V Thillaiakathu said...

கதையும் நன்றாகவே செல்கின்றது! பாடலும் அருமை!