04 May 2015

முகம் காண ஆசையுடன் -9

முதலில் இங்கே--முகம் காண ஆசையுடன் -8


இனி....


இலங்கை அரசியளில் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை  கோமாளி வேசம் போட வந்தவர்கள் எல்லாம் அடுத்த சந்ததியின் வாழ்க்கையை  இனவாதம் வெற்றி என்று ஆட்சிக்காக  பணயம் வைத்து ஆடிய கபட நாடகத்தில் காணமல் போனோர் பற்றியும். கைதியாக  சேது பட ஹீரோ போல  நடைப்பிணம் போல  வாழ்வோர் பற்றியும் பொதுமேடையில் பேசாமல்!


 இன்னும் அடுத்த தேர்தல் முறை  மாற்றம் வேண்டாம் என்று வாக்காலத்து ஜால்ரா மூலம் மீண்டும்  ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஆசையில் ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் போல  ஒரு குடும்பம் !

இன்னொரு பக்கம்!

 என் பக்கம்  இப்போது தனிப்படை தமிழ் மாகாண சபை  என்ற கோதாவில் முன்னால் முதல்வர்  நடிகை போல தன் கடமை மறந்து   இன்னொரு நாட்டு இரத்தக்கறை படிந்த  பிரதமருக்கு  இரந்து எழுதும் கடிதம் என்றும் !

இன்னும்  அமைதியாக ஆமை போல வீடு புகுந்து தேசங்களை  சீரழிக்க நினைக்கும் வல்லரசுகளுக்கும்  சாமரம் வீசி ஆவது என்ன என்று யாரும் சிந்திக்கும் நிலையில்லை !


 தாய்நாடு பொருளாதாரம் .சமூகம். அரசியலில்  மதம் இனம் என தரம் தாழ்ந்து போகும் நிலைக்கு  தெளிந்த பார்வையில்லாத மக்களும்   ஒரு வகையில் காரணம் என்பதை  உணர்ந்து எந்த வாக்களிப்பின் போது சிந்திக்கப் போறம்!


இதை எல்லாம் சுதந்திரமாக எந்த   ஊடக  மாமாக்கள்  எழுதப் போறர்கள்,  இன்னொரு கட்சியில் போட்டியிடலாம் என்று  ஆரூடம் எழுதும் உத்தமர்களும்  ,

இன்று த்ரிஷாவுக்கு  பிறந்தநாள் என்று எழுதும்  ஈழத்து புலம்பெயர்  புதிய தலை முறை முகட்டுத்  திறனாய்வாளர்களும்,


 என்று உள்ளம் திறந்து ஈழத்தின்  இன்னொரு முகம் காண ஆசையுடன் என்று சிறைச்சாலையில் வாடும்!

 தேசத்துக்காய் இரத்தம் சிந்தி இனவாத பார்வையில்  இன்னும் வெளியில் வராத தேச புதல்வர்கள்/புதல்விகள் பற்றி யார்  வலையிலும் ,யார் முகநூலிலும் யார்   துணிந்து பொதுவில் எழுதுவார்கள் .

எல்லாருக்கும் பொழுது போக்கு அவசியம் தான் ஆனாலும் சுமா இலங்கையில் இருக்கும் ஒரு ஊடகவாதி  என் வலைப்பகிர்வின்  பதிவுகள் பற்றி உடனுக்குடன் முகநூலில் தனிமையில் கருத்துச் சொல்லும் ஒரு வாசகிகளில் முக்கிய துணை முதல்வர் போல ஆனால் இப்ப சில நாட்கள் எந்த தொடர்பும் இல்லை!

 இன்னொரு நண்பி நிவேதா  தன் தோழி சுமாவுக்கு வெளிவராத நாளை எங்கள் கலியாணம் தமிழப்படம்   போல   அவளுக்கு கலியாணம் என்று என்னோடு கருத்துப்  பகிர்கின்றாள் !

இனி யாரை தேடிப்போவேன் என் தேவதை  பூஜா  முகம் காணும் ஆசையுடன்!

 புலம்பெயர் தேசத்தில் அடுப்பிள்  செம்மறி ஆடுபோல!இன்னும்  நெருப்பிள் வேகும் என் நிலை யார் அறிவார்கள் ??

என்ற சிந்தனையில் நடிகன் வலைப்பதிவாளர் வெட்டிப்பயல் அசுரன்!

முகம் காண ஆசையுடன் .......

9 comments :

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

சிந்தனைக்கு உரிய பதிவு நண்பரே
Verification Code ஐ நீக்கிவிடுங்கள் நண்பரே

S.P. Senthil Kumar said...

சிந்திக்க வைக்கும் பதிவு!

mageswari balachandran said...

ஆழம் நிறைந் கருத்துக்கள், நன்றி.

ரூபன் said...

வணக்கம்
ஒவ்வொன்றையும்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். மிகவிரைவில் காலம் பதில் சொல்லும் த.ம +1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஊமைக்கனவுகள். said...

பலகோணப் பார்வையும் தகவலும்...
தொடர்கிறேன்.

நன்றி.

ஊமைக்கனவுகள். said...

த ம 5

தனிமரம் said...

பின்னூட்டக் கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள்.