24 May 2015

இன்னும் நினைவில்!!!!

தேடலும் பாடலும் ஒரு கலை போல நெஞ்சைத்தொடும் நிகழ்ச்சி வானொலியில் நிகழ்ச்சி செய்யும் சில அறிவிப்பாளர்/ளிகளுக்கு  .

ஆனால் அதக்கான நேரகாலம் அமையாது அவசர உதவி நாடி இன்னொரு மூத்த  அறிவிப்பாளர்களை/ளி தேடி ஓடியது  சிலரின் இலங்கை வானொலி அனுபவமகாக கடந்து வந்த பாதை ஒரு சாகாபதம் படம் போல நம்பிக்கை நட்சத்திரம் போல இல்லை என்றாலும் அறிவுப்பு என்பது ஒரு பாரிய கலகலப்பான சேவை எனலாம் .


பலரையும் சந்தோஷப்படுத்துவது என்பது சினிமாவில் நகைச்சுவை நடிகர்/கை போல இன்று வரை கடினமான பணி!


வானொலி என்றால் என்ன அதன் பாரிய சேவை என்ன என்று அறியாது இருந்த பலருக்கும் பொன்னியின் செல்வன்  போல  குருவாக இருந்து   பயிற்றுவித்து  வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று  அறிமுகம் செய்த இலங்கை வானொலிக்குயில் மறைந்த  அம்மா இராஜேஸ்வரி சண்முகம் போட்ட பிச்சை இலங்கையில் மட்டும்மல்லாது புலம்பெயர் தேசத்தில்  பலரை வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று  இன்றும் முகவரியுடன் வாழும் பலருக்கு .

இன்று புதிய நவீன பாணி டீஜே என்ற அறிவிப்பாளர்  அறியாத செய்தி!

 என்றாலும் ஒரு பாடலை எப்படி எந்த நிகழ்ச்சியில் எப்படி ஒலிக்க விடவேண்டும் அதுக்கு நேயர்கள் என்னமாதிரி கருத்தினை இன்றைய முகநூல் லைக் போல அன்றே நேயர்கடிதம்  அஞ்சல் பெட்டி 574 என்று தம் மன உளைச்சளை  திட்டி எழுதிய  கருத்துக்கள் பொதுவில் வாசிக்கப்படாமல்  போனாலும் இன்றைய வலையில் தொடர்கதை போல  இலங்கை வானொலியில் ஒரு நிகழ்ச்சி இருந்தும் கடந்த கால சந்திரிக்கா ஆட்சி போல இலங்கை  வரலாறு !இது எல்லாம் இன்றைய கூத்து அரசியல்  கடந்து வந்த வானொலி நேயர் வரிசையில் நானும் ஒருவன் ! நானும் காத்து இருக்கின்றேன் நாளை நல்லது இலங்கையில் நடக்கட்டும் என்று!ஆனாலும் இன்னும் எனக்கும் வேலையில்லை !ம்ம் இன்னும் பாடல் காதில்!

21 comments :

ரூபன் said...

வணக்கம்

அனைத்து தகவலும் தனிச்சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அனைவரையுமே சந்தோஷப் படுத்தவது என்பது இயலாத காரியம்தான்
நன்றி நண்பரே
தம +1

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

கார்த்திக் சரவணன் said...

ராஜேஸ்வரி அம்மாவின் குரல்... ஒரு காலத்தில் நிறைய கேட்டிருக்கிறேன்....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்...

வலிப்போக்கன் - said...

இனிமையான தகவலுடன் இனிமையான பாடல்கள்..

S.P. Senthil Kumar said...

என் மனம் கவர்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம். சிறுவயதில் அவர் குரல் கேட்காத நாளே இல்லை. கம்பீரமான குரலில் நிதானமாக தெளிவாக உச்சரிக்கும் பாணி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஒரு அற்புதமான அறிவிப்பாளரை நினைக்க வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
த ம 6

வை.கோபாலகிருஷ்ணன் said...

கம்பீரமான குரலில் நிதானமாக தெளிவாக உச்சரிக்கும் எல்லோர் மனமும் கவர்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களைப்பற்றிய நினைவாஞ்சலி ஆக்கம் மிக அருமை.

அதுபோல இங்கு இந்திய வானொலியில் தமிழ் ஒலிபரப்பில் அன்று தங்களுக்கு என்று ஒரு தனிபாணியை அமைத்துக்கொண்டு தங்களின் கம்பீரமான குரலுடன் கொடிகட்டிப்பறந்து புகழ்பெற்றவர்கள் ’விஜயம்’ + ’சரோஜ் நாராயணசாமி’ ஆகியோர்.

அவர்களின் மறைவு வானொலி கேட்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் உலுக்கி விட்டது என்பதே உண்மை.

பகிர்வுக்கு நன்றிகள்.

KILLERGEE Devakottai said...


தெளிவான குயில்க் குரல்.

KILLERGEE Devakottai said...


தமிழ் மணத்தில் நுழைக்க 7

Yarlpavanan Kasirajalingam said...

இன்னும் நினைவில்!!!!
ஆம்
ராஜேஸ்வரி அம்மாவின் குரல்.
பலரைக் கட்டிப் போட்ட குரல்.
நல்ல நினைவூட்டல்

Yarlpavanan Kasirajalingam said...

இன்னும் நினைவில்!!!!
ஆம்
ராஜேஸ்வரி அம்மாவின் குரல்.
பலரைக் கட்டிப் போட்ட குரல்.
நல்ல நினைவூட்டல்

ஊமைக்கனவுகள். said...

கேட்டதில்லை எனினும் உங்கள் பதிவு வழி அறிந்தேன்.

பகிர்விற்கு நன்றி.

த ம கூடுதல் 1

புலவர் இராமாநுசம் said...

மலரும் நினைவுகள்!

சென்னை பித்தன் said...

இனிய நினைவுகள்.நல்லதே நடக்கட்டும்

சீராளன் said...

எல்லாம் சரிதான் நேசன் அதென்ன கடைசியில் சந்திரிக்கா ஆட்சி போல ,...எங்கேயோ இடிக்குதே ...! உங்கள் கனவுகள் நனவாகட்டும்
வாழ்த்துக்கள் த ம கூடுதல் 1

Thulasidharan V Thillaiakathu said...

ராஜேஸ்வரி சண்முகம்.....என் மனம் கவர்ந்தவர். நான் கொழும்புவில்தான் 3 ஆம் வகுப்பு வரை படித்தேன். நாங்கள் இருந்தது ஜிந்துபிட்டி முருகன் கோவில், மாரியம்மன் கோயில் அருகில், வுல்ஃபென்டா பள்ளியில் படித்தேன். அப்போது எங்கள் வீட்டிற்கு எதிர்த்தார் போல் தான் ராஜேஸ்வரி அம்மா குடியிருந்தார்கள். அவர்கள் என்னை வானொலியில் கதை, பாடல் எல்லாம் பாட வைத்தார்கள். அவர்கள் மடியில் அமர்ந்து விளையாடி இருக்கின்றேன். திரு மயில்வாகனன் அவர்களுடனும் விளையாடி இருக்கின்றேன். 1970ல் ஈழப் பிரச்சனை கொஞ்சம் அதிகமானதால் நாங்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டோம். சில காலம் அம்மாவுடன் தொடர்பிருந்தது. பின்னர் இல்லாமல் ஆகிவிட்டது. இங்கு வந்த பிறகும் இலங்கை வானொலிதான் எங்களுக்கு நல்லதொரு பொழுது போக்கு. அத்தனை தரமான நிகழ்சிகள்..இலங்கை தமிழ் வானொலிக்கு நிகர் இன்றும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அருமையான தமிழ் தொகுப்பாளர்கள்!

- கீதா