01 June 2015

இன்னும் உன்னோடுதான்!!

இசை  என்னும் ஜீவநதியே
இளையராஜா என்னும் அரசே!இசையாழ்மீட்டி எத்தனை ஆயிரம்
இணையில்லா கீதம் படைத்தாய்!
இந்திய சினிமாவில் நீ ஒரு
இமயம் என்று இன்னும் சிலர்
இன்றும் கொண்டாவில்லை!
இந்திய தமிழன் நீ  என்று போலும்
இருந்தாலும் நீ போட்ட
இன்னிசை கலையை
இருட்டில் திருடியோர் இங்கு பலர்!இணையப்பரப்பிள் இன்றும் பல
இணைய வானொலிகள்
இனிதாய் உன் கீதம் பல
இரவில் தாலாட்டும்.

இசையாசிக்கும்
இந்த தனிமரமும்  உன்னை
இன்றைய நாளில் இனிதே
இதயம் நிறைய போற்றுகின்றேன்!இன்றைய நாள் உன் வாழ்வில் 2/6
இன்னொரு உதயம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசையானி இராகதேவன்
இளையராஜாவே!


இன்னும் உன் இசையில்
இவனும் உன்னோடு
இந்தக் காதல் போல!


இன்னும் பல பாடலுடன்
இன்னும் உன்னோடுதான்.
இப்படி நீ மெட்டுப் போட்டாலும்


இன்றும் உன் பாட்டுத்தான்
இதயத்தில்!

17 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இளையராஜா என்றும் ராஜாதான்
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமை! ராஜா...ராஜாதி ராஜன் இந்த ராஜா!

திண்டுக்கல் தனபாலன் said...

தாலாட்டும் இசை...

R.Umayal Gayathri said...

இசை - மருந்தாய் நமக்கு தரும் இவர் வாழ்க பல்லாண்டு
மெல்லிசை காதுகளைத் தழுவ உயிர் அழகாய் சிரிக்கிறது...நன்றி சகோ

வலிப்போக்கன் - said...


இசையானி இராகதேவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

yathavan nambi said...

இளையராஜாவுக்கு அணிவித்த
ரோஜாவாசமிகு கவிதை அழகு!

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் இசை ஞானிக்கு!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு

KILLERGEE Devakottai said...


இசையின் ராஜா இனையராஜாதான்
தமிழ் மணம் எங்கே...

ரூபன் said...

வணக்கம்
நாள் உணர்ந்து பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி இன்று இளையராஜாவின் பிறந்த தினம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

mageswari balachandran said...

காலம் அறிந்து பதிவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள் அவருக்கும் உங்கள் பதிவுக்கும். நன்றி.

yathavan nambi said...

அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

Yarlpavanan Kasirajalingam said...

இசையின் ராஐா இளையராஐா
அமைதியையும்/மௌனத்தையும்
இசையாக்கிய இளையராஐாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரர் தியாகராஜா சிவநேசன் (தனிமரம்) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் அடிக்கடி படிக்கும் வாய்ப்பு பெற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/13.html

தனிமரம் said...

அன்புள்ள சகோதரர் தியாகராஜா சிவநேசன் (தனிமரம்) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் அடிக்கடி படிக்கும் வாய்ப்பு பெற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/13.html// நன்றி இளங்கோ ஐயா தகவல் தந்தமைக்கு வலைச்சரத்தில் கோபு ஐயாவுக்கு நன்றி சொல்லிவிட்டேன் மீண்டும் மீண்டும் நன்றிகள் .

சீராளன் said...

வணக்கம் நேசன் !

இனிமையான வாழ்த்து இசையின் இமயத்திற்கு

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த அற்புத சாதனையாளர்.வாழ்த்துகள்

Anonymous said...

"இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் இசை இருக்கு....."