24 July 2015

முகம் காண ஆசையுடன் -14


முகம் முன்னே இங்கேl
தனிப்பட்ட சந்தோஷம் ;தனிப்பட்ட ஓய்வுக்கு; என்று செலவழிக்கும் நேரத்தை எத்தனைபேர் ஆன்மீக, கலை, கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு சில நிமிடத்தை ஒதுக்கின்றோம்!!

ஆனால் ஒரு சினிமா நடிகன்/நடிகைக்கு எத்தனை ஆவல் கொடுக்கின்றோம்!!!!!!!!!!!


 ஊர் மூலையில் இருக்கும் கோவில் விபரம் புரதாண வரலாறு தெரியாது ?,,ஆனால் புரட்சிதளபதியின் புதிய படப்பூசை படம் தெரியும் :!

புதிய நாயகி பெயர் வாயில் வராது !ஆனால் புதிய புரோபையில் ஏற்றிவைப்போம்.

 இதுதான் பொழுது போக்கு. கேட்டாள் முகநூல்/வலை மேய்வது நேரம் போக்க. ஆனால் தேசத்துக்காய்  கொட்டும் மழை என்றாலும், கொதிக்கும் வெயில் என்றாலும் தன் சுயம் தொலைத்து தேசத்துக்காய் தூங்காத கண்மணிகள் பலர் 2009 இன் பின் இன்னும் தேடாதோர் நிலை?, போல சிறைக்கூடங்களில்  உயிரோடு நடைப்பிணம் சேது போல வாழ்வோர் நிலை பற்றி எந்த ஈழத்து அரசியல் பலர் வியாபாரிகள் /இந்திய நடுவன் அரசின் ஜால்ராக்கள்  பலர் என்றாலும்!

 இறுதியில் ஈழத்தாயின் கழுத்தில் நஞ்சு ஏற்றிய  சமாதான விபச்சாரி எரிக்சொல்ஹைம்  போல  வந்து போன அரசியல்தொற்று நோய்கள் ஏன்?,, ஏன் ?,,ஏன் ????


இன்னும் ஈழக்காற்றுக்கு மூச்சுக்கொடுத்து முகம் தொலைந்து இன்றும் இலங்கையின் சிறையில் சந்தேகக்குற்றச்சாட்டில் கைதியாக இருப்போர் பற்றி இன்னும் வாய் திறக்காமல் இருப்பது ??


இதுதான் ஏகலைவன் குருதட்சனையா??

இல்லை இன்னும் செத்துப்போங்க அனாதைகளா என்று வக்கிர பார்வையா ??,


இது ஈழத்து தமிழர் பார்வையிள் எழுதும் பதிவாளர் நிலை என்றாள் !


இன்னும் மேலதிகமாக சகோதரமொழி சிங்களம் அறிந்தவன் பார்வை இன்னொரு உலகம் பேசும்.


 அரசியல் வாதிக்கு உடல்நிலை ஆபத்து என்றால் உடனே நட்சத்திர வைத்தியசாலையில் உடனே அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உடனே தீர்ப்பு எழுதும் போகலாம் என்று !

ஆனால் என்றோ புலிகளுக்கு உதவினார்கள் என்ற போலிக்குற்றச்சாட்டில் இன்னும் சிறையில் வாழும்அப்பாவி  சிங்களவன் உறுதி மொழி எல்லாம் முகநூலில் எவனும் பேசமாட்டோம்!


கேட்டால் ?,,jஇங்கே வெட்டியாக யாரோ ஒரு ஹீரோவின் ஜால்ரா !!


அதுவும் ஒரு பிரபல்ய வலை/முகநூல்/பதிவர்!

 அவர் உனக்கு நட்பு ஏன் அவர் இது பற்றி எழுதினால் சிறைக்கு போய்விடுவாரோ,,,  ,,????????????? முகநூலில் வேஷம் ப்போடும் அவரும் ஒருக்கால் போகம்பரை சிறைக்கு போய் வந்தால் எனக்கும்   வரும் அவசர் தமிழ்க்கொலை பற்றி புரியாமல் மேட்டுக்குடி என்று  அவர் நொங்கு வகுப்பு எடுக்கும்  நிலையும் இல்லாமல் போகும்[[[[[[[[[[[[[[[ இல்லை ஹிட்சு கிடைக்காதோ சுமா!


 அசுரன் நான் உன்னிடம் இந்த விடயம் பேசவந்தது நீ யாருக்கும் ஜால்ரா போடாது உன் பார்வையிள்  நீ துணிந்து எழுதுவாய் என்ற நம்பிக்கையில்.


மற்றவர் பற்றி நான் ஜோசிக்கும் நிலையில்  இல்லை!

ஆனால் நான் சேகரிச்ச விடயம் பொதுவெளியில் பலரிடம் உன்னால் போக முடியும் என்ற நம்பிக்கை இருக்கு அசுரன்!

ஓ அப்ப நான் இன்றைய ஜனாதிபதி போல சிறைக்கைதியா[[[[[[[[[[[[[[[[[[[[[[ இல்லை! அது உள்வீட்டு /அயல்நாட்டு/ சர்வதேச அரசியல்  .

அதை குப்பையில் போடு அது  இலங்கைவிடயம் .

நமக்கு நம்விடயம் முக்கியம்!!

  நீ நான் தரும் விடயத்தை பொதுவில்  எழுது! நடப்பது சாமாணியர்கள் வாழ்க்கை நிலை

! உனக்கு கேவலம்பிளாக்  ஹிட்சு தேவை என்றால்  என்னுடன்
எதுவும் தொடர்பு கொள்ளாதே !

நானும் என் பாதையில் போறன்!

 ஓ தனிக்குடித்தனமா சுமா?,


 இல்லை தனி வழியா,,  ??????????????

நீ எதனை எழுத நினைக்கின்றாய் என்று நான் அறியேன் ஆனால் சொல்ல வருவதை ஆதாரத்துடன் அனுப்பு !நடிகன் பதிவாளர் நாடு கடந்து ஈழம் வரை தேடலில் வாசிப்போரிடம் போவேன்!

 இது தனித்துவம் அல்ல  தன்நம்பிக்கை!   ,,,,,,,,,,,தொடரும்

9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

ஆனால் ஒரு சினிமா நடிகன்/நடிகைக்கு எத்தனை ஆவல் கொடுக்கின்றோம்!!!!!!!!!!!
வேதனையான உண்மை நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

நட்பு எனும் ஹிட்சு தான் என்றும் தேவை...

தொடர்கிறேன்...

வலிப்போக்கன் - said...

நடிகனை நாடாளவிட்ட மன்னர்கள் அல்லாவா தமிழர்கள். அவ்கள் வழிவந்தவர்களுக்கு அந்த சிந்தனைதான் இருக்கும்

ஊமைக்கனவுகள். said...

நம் நாட்டில் நிழலுக்கு எப்போதுமே மதிப்பிருக்கிறது.

நிஜங்கள் ஏனோ விரும்பப்படுவதில்லை.

தொடர்கிறேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

நிஜத்தை விட நிழலுக்கு மதிப்பு அதிகம் இருப்பது உண்மைதான்! தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu said...


தனிப்பட்ட சந்தோஷம் ;தனிப்பட்ட ஓய்வுக்கு; என்று செலவழிக்கும் நேரத்தை எத்தனைபேர் ஆன்மீக, கலை, கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு சில நிமிடத்தை ஒதுக்கின்றோம்!!

ஆனால் ஒரு சினிமா நடிகன்/நடிகைக்கு எத்தனை ஆவல் கொடுக்கின்றோம்!!!!!!!!!!!

ஊர் மூலையில் இருக்கும் கோவில் விபரம் புரதாண வரலாறு தெரியாது ?,,ஆனால் புரட்சிதளபதியின் புதிய படப்பூசை படம் தெரியும் :!// ஆம் மிகவும் உண்மை! இதுதான் இப்போதைய உலகம்....நிஜங்கள் என்றுமே கசப்புதான்...நிழல்கள் தான் இனிக்கின்றன....

ரூபன் said...

வணக்கம்
அண்ணா

எல்லாம் இரட்டைமுகம்... கபட நாடகம்.. நன்றாக சொல்லியுள்ளீர்கள் த.ம+1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மாய பிம்பங்கள் கவர்ந்து விடுகின்றன.
நியாயமான ஆதங்கங்கள்

Yarlpavanan Kasirajalingam said...

முகம் காண ஆசையுடன்
இனிதே தொடருகிறதே
தொடருங்கள்

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/