21 August 2015

நினைத்தாலே இனிக்கும்.

பயணம் என்பது  ஒரு தேடல் போல அதை ரசித்து பயணித்தால் போகும் தூரம் அதிகமில்லை.பயணத்தில் அருமையான பாடலும் சேர்ந்து கொண்டாள் அந்தப்பயணம் இனிமை இதோ இதோ என்று துள்ளிக் குதிக்கும் இவை எல்லாம் எனக்கு துள்ளித்திரிந்த காலம் போல கடந்த காலம் என்றாலும் நினைவில் இன்னும் மனதை தாலாட்டும் ஆனந்தப்பூங்காற்று!

 இனவாத யுத்தம் பலரை இலங்கையின் இயற்கையை இரசிக்க முடியாது திரைபோல சிறைவரை கொண்டு சென்ற கதைகள் பல  இணையத்தில் ஏறவில்லை என்றாலும்!

 இன்றைய ஆட்சி மாற்றம் இனநல்லாட்சிக்கான பாதையில்  தொடர்ந்தும் பயணிக்கும் என்று இன்றைய இலங்கைப்பிரதமர்  பதவி ஏற்பு உரை வெறும் உதட்டோடு நின்றுவிடாமல். இதயத்தில் இருந்து வெளிப்பட்டால் இன்னும் பலர் மகிழ்ச்சியடைவார்கள்.

இப்போது  தொடர்ந்து அரசியல் தூய்மை பேண முயற்சிக்கும் இவர் ஆட்சியில் முன்னர்  இனவாத சிந்தனையில் இலங்கையில் சந்தேகம் என்ற போர்வையில் சிறைவைத்து இருக்கும் பலரையும். !!

இறுதிப்போரில் இலங்கை இராணுவத்திடம்  சரண் புகுந்தவர்களை இன்னும் வெளியுலகு காணாமல் வதை முகாமில் இருப்போரையும் வெளியில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால் இந்த அரசு இன ஜக்கியத்தை  பேணும் ஆட்சி என்று வரலாறு  பதிவு செய்யும் !!

அதை செய்வதுக்கு இலங்கை மக்களும் இனவாத சிந்தனை நீங்கி இங்கே பலரும் சுற்றுலா வரலாம் இயற்கை காட்சி இரசிக்க இன்னும் பல இலங்கையில்  இருக்கு என்று  இலங்கை  குடியரசு  மக்கள் எப்போது வெளியுலக மக்களிடம்  தம் நன்மதிப்பை உயர்தப்போரார்கள்.?,

 புதிய சுற்றுலா அமைச்சர் இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டுக்கு என்ன புதிய திட்டம் செயல்படுத்துவார் ?,.

 மலையக மக்களின் விடிவுக்கு விரைவில் யார் தீர்வு தருவார்கள் . ?,,மலையகத்தில் பல இயற்கை சுற்றுலா மையங்கள் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது!

வாருங்கள் ரசிக்க இப்படி நம்நாட்டிலும் இருக்கு என்று !!!
  எனக்கும் ஆசைதான்.!!

ஆனாலும் ஜென்சி போல ஒரு குரல் இன்னும் நவீன தமிழ் சினிமா தரவில்லை!!
12 comments :

Avargal Unmaigal said...

உங்களின் ஆசைகள் ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும் பொறுத்திருங்கள். இனவாத போர் நடந்துமுடிந்து இருந்தாலும் கூட அந்த நாடு இன்னும் ஒரு அழகிய நாடாகத்தான் இருக்கிறது என்பதை பல செய்திகள் மற்றும் போட்டோக்கள் மூலம் அறிந்தேன்......

மீன் கொடி என்ற பாடலை நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் கேட்க வாய்ப்புகள் உங்களால் கிடைத்தன

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய ஆட்சி மாற்றம் இனநல்லாட்சிக்கான பாதையில் தொடர்ந்தும் பயணிக்கும் என்று இன்றைய இலங்கைப்பிரதமர் பதவி ஏற்பு உரை வெறும் உதட்டோடு நின்றுவிடாமல். இதயத்தில் இருந்தே வெளிப்பட்டது என்று நம்புவோம்
நல்லதே நடக்கட்டும்
நன்றிநண்பரே
தம +1

இளமதி said...

அருமையான ரசனையான எதிர்பார்ப்புகள் நிறைந்த நினைத்தாலே இனிக்கும்!

நாமும் எதிர்பார்ப்பவை ஏராளம். காலம் பதில் சொல்லும்!
வாழ்த்துக்கள் சகோ!

த ம 3

KILLERGEE Devakottai said...


நல்லதே நடக்கும் என நம்புவோம் நண்பரே...
காணொளி பாடல் நீண்ட காலங்களுக்குப் பிறகு கேட்கிறேன் அருமையான பாடல்
தமிழ் மணம் 4

Dr B Jambulingam said...

நல்லதொரு மாற்றம் அமையுமென நம்புவோம்.

‘தளிர்’ சுரேஷ் said...

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற வாக்கியம் இனியாவது மாறட்டும்! உங்களின் ஏக்கங்கள் தீரட்டும்!

ரூபன் said...

வணக்கம்
அண்ணா.
காலந்தான் பதில்சொல்லும் அதுவரை காத்திருப்போம் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வலிப்போக்கன் - said...

பொருத்திருந்து பார்ப்போம்..

S.P. Senthil Kumar said...

நல்லதே என்றும் நடக்கட்டும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

காத்திருப்போம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்!!!

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதே நடக்குமென நம்புவோம். நீங்களும் அழகான தங்களின் நாட்டைச் சென்றடைவீர்கள்..மீன் கொடித் தேரில்பாட்டு கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன...தங்களின் மூலம் கேட்கும் வாய்ப்பு...----துளசி, கீதா

நானும் இலங்கையில் இருந்திருந்ததால் நன்றாக நினைவிருக்கிறது அருமையான இயற்கைவளமும், காட்சிகளும் நிறைந்த நாடு...

கீதா

Geetha Ravi said...

ஏக்கங்களைப் புதைத்துக் கொண்ட இயந்திரங்களாக புலம்பெயர் நாட்டில் நாமனைவரும்... அருமையான பாடல்.. ஜென்சியம்மாவின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. நன்றி தம்பி!