26 September 2015

தேடாமல் தினம் தேடும்!

வானொலி என்பது  கடந்த தலைமுறையின் ஒரு உற்ற துணை. அது எப்போதும் புதிய நவீன காலக் காதல் போல பிறரை  மோகத்தில் வீட்டை விட்டு  தேடி ஓடிப் போகாத ஒரு வீட்டு உடமை போல !எப்போதும்  பாடிக்கொண்டே இருக்கும்  சிறை படப் படால் போல நான் பாடிக்கொண்டே இருப்பேன் பக்கத்துணையாக இருப்பேன் என்பது போல! ஆனால் நாம் கேட்கும் சூழல் மறந்து.  நம் நித்திரை /அல்லது இன்ன பிற  வேலையில் மூழ்கினாலும்!



 அந்தக்கால வானொலி வேலியில் ஒலித்த வண்ணம் இருக்கும் !http://www.thanimaram.org/2011/05/blog-post_3429.htm

இது இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்ற செய்திக்கு  எத்தனை பேர் தம் செயலை நிறுத்தி காது கொடுத்தார்கள் என்பதை தாண்டி, இது வர்த்தகசேவையில் நேயர் தபால் அட்டையில் இன்றைய  பொங்கும் பூம்புனல் என்று வரும் அன்றைய காற்றலைக் காதல்  யார் அறிவார் ?,
http://www.thanimaram.org/2011/06/blog-post_08.html,

அதுமட்டுமா  /சர்வதேச ஒலிபரப்பு  திருச்சி நேயர் விருப்பம் என்றாலும் இலங்கையின் . மலையக சேவை கண்டியில் இருந்து , வன்னி சேவை அனுராதபுரம் ஊடாக , யாழ்சேவை.பலாலி ஊடாக  என்று அதன் பன்முகசேவை பற்றிய அறிதல் ஏனோ இன்றைய தலைமுறைக்கு இல்லை !

என்றாலும் வரலாறு முக்கியம் என்பது போல இந்த வானொலி கேட்கும் ஆர்வம் என்னையும் ஏனோ தேடல் வரை  போய் பட்ட துயரம், அது சகோதர மொழி சிங்கள வானொலி சிரச வரை கவிதை போல  ஆசையில் கிறுக்கிய அலை இன்னும் கண்களில் ஈரம்!!http://www.thanimaram.org/2012/07/blog-post_27.html


 என்றாலும் ஏனோ இசையும், தேடலும் இன்னும் வாழ வைக்குது!
http://www.thanimaram.org/2011/06/blog-post_5454.html

 இணைய வானொலிகளில் நேயராக இன்றும்!
http://www.thanimaram.org/2012/03/blog-post_09.html
!

ஆனாலும் தனிமரமும் தேங்கிப் போய்விட்டேன் போல இப்போது எல்லாம் 80 பாடல்களுக்கு கவிதை எழுதிக்கொண்டேயிருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம்!


 இணைய வானொலியில்  முல்லை மண்ணில் இருந்து ,அவர்கள் வாசிக்கும் ஆசையில்  இலங்கையில் புதிய பாடல்கள் ஒலிக்கும் நேரம் பாரிசில்  தனிமரம்  தூங்குவதால்[[[.

 என் காதில் நல்ல  புதிய பாடல்கள் வரவில்லைப்போலும் அல்லது முகநூலில் முக்கிய  அரசியல் பேசுவதால், நம்நாட்டு புதிய வானொலிக் குயில்கள் இந்தப்பாட்டு கேட்டீங்களா அண்ணா என்று ஏனோ குத்தவில்லை மூக்கில் ))))
http://www.thanimaram.org/2015/09/blog-post_14.html

! ஆனாலும் விழியில் தொலைத்து அதன் பாதையில் தேடும் பலரின் துயரம் யார் பொதுவில் பேசப்போறம் ?,

பேசி கண்களில் ஈரம் என்றாலும் இந்த பாடல் என்னை இன்று ஒலிகாட்டுது நாளைய தேடலுக்கு பாடலை ரசியுங்கள்!


 இன்னொரு பதிவு இடலாம் தேடலும் பாடலும் வழியாக !




9 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் நண்பரே
வானொலி கடந்த கால தலை முறையின் உற்ற துணைவன்தான்
தம+1

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! வானொலி பற்றிய செய்தி உண்மைதான்! இப்ப அவ்வளவா யாரும் கேட்கறதில்லை!!

வலிப்போக்கன் - said...

அப்பவும்சரி..இப்பவும்சரி வானொலி கேட்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை நண்பரே.....

‘தளிர்’ சுரேஷ் said...

ஒரு காலத்தில் வானொலி, அதுவும் இலங்கை வானொலியின் ரசிகன் நான். ம்... இப்போதைய பாடல்களும் என்னுடைய தேடல்களும் அவற்றை தூரத்தள்ளி விட்டது!

Thulasidharan V Thillaiakathu said...

அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை வானொலியின் ரசிகர்கள்! அதே போன்று சில சமயங்களில் எங்களுக்கு இலங்கை சானல் ரூபவாஹினியும் கிடைக்கும். கிடைப்பதற்காகவே ஆன்டெனாவைத் திருப்பித் திருப்பி வைத்து கீழிருந்துஒருத்தர் பார்த்துக் கிடைச்சுருச்சு என்று சொல்லுவதெல்லாம் பொன்னான நாட்கள. வானொலி மிக மிக உற்ற நண்பன் என்பதில் ஐயமில்லை. இப்போதெல்லாம் நிறைய தனியார் வானொலி எஃப் எம் கள் வந்துவிட்டன...இணையத்திலும் கூட .....நிறைய இருக்கும் போது அது நமக்கு பெரிய விஷயமாகத் தெரியாதுதானே....என்றாலும் கேட்கின்றோம்தான்...

KILLERGEE Devakottai said...


இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கவில்லையே நண்பரே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை நான் என்சிறுவயதில் தினந்தோறும் கேட்டு மகிழ்வேன்...

சென்னை பித்தன் said...

மிகச் சிறந்த் ஒரு ஊடகம்! காட்சி ஊடகங்களின் தாக்கத்தில் மறைந்து கொண்டிருக்கிறதோ!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு