21 October 2015

முகம் காணும் ஆசையுடன் -26

 முன்னம் இங்கே முகம் நோக்கி-
http://www.thanimaram.org/2015/10/25.html

பின்னம் இங்கே பார்வைக்கு-..!

அடைக்கலம் தேடி வரும் அப்பாவிகளையும் மனித நேயத்துடன் மறு வாழ்வு கொடுக்கும் அன்னிய தேசம் ஐரோப்பாவுக்கு இருக்கும் தனித்துவம் கூட அண்டை நாடு காந்தி தேசத்துக்கு  தமிழன் மீது இல்லை !ஒரு திபெத்திய அகதிக்கு இருக்கும் அடிப்படை உரிமை கூட ஈழத்து அகதிக்கு இன்று வரை  இல்லை !ஆனாலும் அந்த காந்திய வாதிகள் வேடதாரிகள்  இறுதியுத்தப் போரை மாய மான் போல நின்று  வழிநடத்திய போது அதன் ஆட்சிபீடத்தின் கழுத்தறுப்புக்கள் எல்லாம்  எல்லாம் மறந்து போவாம் தமிழன் என்பது   வரலாறு நினைத்தாலும் !


 உள்நாட்டு போரில் எஞ்சி  வாழும் சமூகம் எல்லாம் அதை மறவாது என்றும்!

  ஆனாலும் இன்று வேட்டி கட்டிய தமிழன் என்று  வந்து போவதன் பின் இனி வரும் நாட்கள் எல்லாம் இன்னும் பாலாறு ஓடும் என்று இந்து ராம் போல இங்கேயும் வலையில் ஈழத்தில் /இலங்கையில் நல்லாட்சி நடக்குது இனி எல்லோரும் இந்த ஊருக்கு வரலாம் ஆட்டோக்கிராப் போல  எழுதும் மகா பண்டித மணிகள் ஊடகத்தில் இருப்பது வியாபார  நோக்கம் அன்றி வேறில்லை மச்சான் அகிலன் !


அதை எல்லாம் பொது வெளியில் பொங்கி ஆருக்கு என்ன இல்லாபம்?, முகநூலில் யாழ்லில் சந்திப்பு செருப்பு வாங்கிய அமைச்சர் என்று கும்மவா,, இல்லை இவர் அயல்தேசத்தின் அதிகார வட்டம் என்றால் அவர்களின் சொல்லை பாதணி சுமக்கும் அரசியல் வாதிகள் ஆளும் பகுதியில் ஆபாய மண்சரிவு பூமிக்கு போய் ஆறுதல் சொல்லி களத்தில் நின்று ஒரு செல்பி போட்டிருந்தால் நாம் தமிழர் கட்சி க்கூட மாலை போட்டு முகநூலில் போராளி வேசம் போடும் நாம் இன்னும் உங்கள் பக்கம் என்று! ஆனால் இந்த சதிக்கூட்டம் எல்லாம் நம் சிறைப்பறவைகள் விடுதலை பற்றி என்ன சொல்வார்கள்?, ஒரு பற்றிக்காக தூக்கு மேடையில் இருப்போர் பற்றி ஆயிரம் சட்டச் சிக்கல் இ.பீ.கோ  சொல்லுவது போலத்தான் இன்றைய நல்லாட்சி அதிபரும் இனவாத பாதுகாப்பு சட்டம்  இந்த சட்டவிதி இதன் பிரகாரம் இதன் சட்டமா அதிபர் கூற்று இதன் பிரகாரம்  இனிவரும் வாரம் கைதிகள் பற்றி ஏதாவது சட்டச்சிக்கல் பற்றி ஓப்பாரி வைத்து அரசியல் வியாபாரிகளை இரங்க வைப்பதும் !


அது கேட்டு நாட்டாமை  போல பதவிக்கு ஆலவட்டம் பிடிக்கும் நம்மவர்கள் வெளிவேஷம் இனி வரும் நாட்களில் ஊடகத்தில் காணலாம் மச்சான் அகிலன்!  அதை நான் விரும்பல ஆனால் அரசு இறுதி யுத்தத்தில் அடைக்காலம் தருகின்றோம் நம்பி வாருங்கள் என்று நயவஞ்சகத்துடன் வரச்சொல்லிவிட்டு !

நம்பி வந்தோரை நடு வீதியில் படுகொலை செய்ததும் ,மற்றவர்களை புனர்வாழ்வு என்ற பேரிலில் புலணாய்வு வீரர்களின் உடல் அரிப்பு போக்கிடம் வடிகால் வாய்க்கால்  போல  செய்த சித்திரவதை சிறப்பு முகாங்கள் பற்றியும் !நடுநிலையுடன் மெனிங்கேம் யூத வரலாறு  போல நம்நாட்டு வவுனியா மெனிங்கேம்  வரலாறு  எல்லாம்  பொதுவில் எழுதனும் !அதுக்கு உடந்தையாக இருந்த உள்நாட்டு அரசியல்வாதிகள் முதல் சர்வதேச நாட்டமைகள்வரை நம்மை ஏமாற்றிய கதை ஆயிரம் இருக்கு  நம் ஈழத்து இனப்போரில்! ஆனாலும் அகிலன் !

அசுரன் பிரெஞ்சுப் பதிவர்  !என் காதலியை தேடி என் பிரெஞ்சு குடிவரவு குடியகல்வு  அமைச்சின் தொழில்வாய்ப்பு விசாவில்  பிரெஞ்சில் இருப்பதால் இலங்கை நோக்கி போக தயார்!


 அங்கே என் உயிருக்கு ஆபத்து என்றால் அதை பிரெஞ்சு அரசு மனித நேயத்துடன் நோக்கும் சிரியா அகதிகள் போல கவலை வேண்டாம்  அகிலன் இனி என் தேடல் இலங்கையில் !

இது தான் உன் முடிவா !இல்லை அகிலன் இது ஆரம்பம்! என் முகநூல் மூடிவிட்டேன் என் தோழி சுமா பற்றி அறிய வேண்டும் நிவேதா சொல்லாத செய்திகள் எது என்றாலும் என் காதலியை தேடி நீயா படம் போல நானே வருவேன் என்று சொன்னால் அசுரன் பதிவர்   தனிமரம் பதிவர் போல வெட்டியான் இல்லை மொக்கையாக சினேஹா படம் போட  !அசுரன் என்ன காதலியை   !தனிமரம்  அறியான்!அவன்  ஈழத்தில் ஜொல்லுப்பாட்டி என் நட்பு வட்டத்தில் அது இப்ப முக்கியம் இல்லை அவனை  பிரிந்து வலைப்போட்டியால்  இன்றும் அசுரன் பல ஹிட்சு  வலைக்கு இருக்கு  அது போதும்!
தொடரும்.........

//டிஸ்கி!


இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மீண்டும் சினேஹா மீது சத்தியம் [[[


 

7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் தேடல் வெல்லட்டும்
தம +1

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! ஒவ்வொரு வரியும் அவலத்தை சொல்கிறது! தேடல் சீக்ரம் நிறைவேறட்டும் சகோ!

புலவர் இராமாநுசம் said...

ஆறாத புண்தாண்!உங்கள் உள்ளத்தில்! தனிமரம்!அறிவேன்! தமிழகத்தில் நடப்பது எல்லாமே நாடகங்கள் தான்!

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் நண்பரே.. தங்களின் தேடுதலுக்காக...
தமிழ் மணம் 4

ரூபன் said...

வணக்கம்

சோகம் நிறைந்த அவலம் நிறைந்தவரிகள் வீடியோ அருமை இரசித்தேன் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

தம வாக்களித்துத் தொடர்கிறேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

தொடர்கிறேன்!